14-02-2021, 07:19 AM
காவ்யா:
அந்த நாட்களை கண்ணனால் மறக்க முடியவில்லை. நிஷா தன்னைத் தேடிவந்தது, கேன்டீனில் சாப்பிட்டது, அவள் பெயர் பொறித்த கர்ச்சீப்பை தான் வைத்திருப்பதைப் பார்த்து கண்கலங்கியது, அப்புறம் அன்று அனைவர் முன்னாடியும் தன்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதது....
நிஷாவை இழந்துவிட்டோமே என்று தூக்கமில்லாமல் கிடந்தார். எவனோ ஒருவன் புகுந்து என்னையும் என் மனைவியையும் பிரிக்கும் அளவுக்கு இடம் கொடுத்துவிட்டேனே
நினைத்து நினைத்து வருந்தினார். ஆனால் இப்படி நிஷாவையே நினைத்துக்கொண்டிருப்பது காவ்யாவுக்கு செய்யும் துரோகம் என்று நினைத்தார். தன்மேல் உயிரையே வைத்திருக்கும் காவ்யாவை நினைத்துப் பார்த்தார்.
நிஷாவின் நினைவுகளாக தெரிந்தோ தெரியாமலோ தன்னோடு கலந்துவிட்ட அனைத்தையும் அவாய்ட் பண்ணினார். அவள் பெயர் பொறித்த கர்ச்சீப்புகளை தூக்கிப் போட்டார். தன் வாரிசை ஆசையோடு சுமக்கும் காவ்யாவை நன்றாகப் பார்த்துக்கொண்டார். வாழ்க்கையில் தனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பை - தவறவிட்டுவிடக்கூடாது என்று, தன் அன்பையும் அக்கறையையும்... அள்ளிக்கொடுத்தார்.
ஒரு நல்ல வாழ்க்கைக்காக கனவு கண்டு, ஏங்கிக்கொண்டிருந்த காவ்யா, அவரோடு சந்தோஷமாக இருந்தாள். எல்லா விதத்திலும் அவருக்கு உறுதுணையாக இருந்தாள்.
நம்ம காவ்யாவா இது? பரவால்லயே நல்லா செட்டில் ஆகிட்டாளே
என்னடி சொல்ற? எண்ணெய் வழிஞ்ச முகத்தோட எவனும் சைட்டடிக்கக்கூட லாயக்கில்லாதவளா இருந்தாளே அந்த காவ்யாவா? அவளா சயன்டிஸ்ட் கண்ணனை கட்டியிருக்கா?
காவ்யா கர்ப்பமா இருக்காளா? பரவால்லடி அவ கும்பிட்ட கடவுள்கள் அவளை கைவிடல
என்னடி... இவலாம் எங்க தேறப்போறான்னு நெனச்சேன்... இப்போ செம மரியாதையோட வாழ்ந்திட்டிருக்கா. இந்த உலகத்துல எவ வாழ்க்கை எப்படிலாம் மாறும்னு கணிக்கவே முடியாது போல.
காவ்யாவுடன் கல்லூரியில் படித்த பணக்கார மாணவிகள் இப்படித்தான் பேசிக்கொண்டார்கள். அவளை மதிக்காத தோழிகள் அவளைப்பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.
லேபிலிருந்து வந்தபிறகும் - தனக்காக பார்த்துப் பார்த்து சமைக்கும் கண்ணனை - காவ்யா ரசிப்பாள். அவர் ஊட்டிவிடுவார் என்பதற்காகவே, ஆசையோடு காத்திருப்பாள். அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.