நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#48
மாலை பள்ளி முடிந்து அனைவரும் சென்றுவிட்டனர்.பூம்பொழில் பிளஸ் 2 க்கு ஸ்பெஷல் கிளாஸ் எடுத்து கொண்டிருந்தாள்.நான் கிளாஸ்க்கு வெளியே நின்று அவளையே பார்த்து கொண்டிருந்தேன்.அவள் அடிக்கடி என்னை பார்த்து உதட்டோரம் சிரித்தபடி பாடம் நடத்திகொண்டிருந்தாள்.

சரியாக 5:45 மணிக்கு கிளாஸ் முடிந்தது"ஸ்டூடண்ட்ஸ் நாளைக்கு first essay test எல்லாரும் படிச்சிட்டு வந்துடுங்க.ஏதாவது டவுட் இருந்தா சொல்லுங்க".

"நோ மிஸ்"என்றனர் கோரஸாக.

"ஓகே,ஸ்டூடண்ட்ஸ் நாளைக்கு மறக்காம படிச்சிட்டு வந்துடுங்க"என்று கூறி வெளியே வந்தாள்.

"ரொம்ப நேரம் வெயிட் பண்ண வெச்சுட்டேனா.உன்னை பஸ் ஸ்டாப்பில்தானே இருக்க சொன்னேன்."என்றாள்.

"இ...இல்ல,அப்படியெல்லாம் பஸ் ஸ்டாப்பில் இருக்கிறத விட இங்க நின்னு உன்னையே பார்த்து கிட்டு இருக்கனும் போல இருந்துச்சு."என்றேன்.

"ஏன்"என்றாள்."நீ ரொம்ப அழகா இருக்கே உன்னை எனக்கு பிடிச்சிருக்கு"என்றேன்.

அவள் என்னை பார்த்து தலை சாய்த்து சிரித்துவிட்டு என் கையை வெடுக்கென கிள்ளி "பொய் சொல்லாதடா" என்றாள்.

"நீ எப்படி ஒரு மணி நேரத்துல இப்படி மாறினே"என்றேன்.

"என்ன மாறிட்டேன்"என்றாள்.

"மதியம் வரைக்கும் என்னை பார்த்தாளே எரிஞ்சு எரிஞ்சு விழுந்தே இப்ப நீயே வெயிட் பண்ண சொல்றே,நீயே வந்து பேசறே"என்றேன்.

அவள் என்னை மீண்டும் ஒரு முறை தலை சாய்த்து பார்த்து சிரித்தாள்."உன்கிட்ட பேசனும் போல இருக்கு அதான்"என்றாள்.

அவள் அப்படி சொன்னதும என் இதயம் வெளியே தலையை நீட்டி வெளியே பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே இழுத்து கொண்டது.
Like Reply


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 27-03-2019, 06:01 PM



Users browsing this thread: 6 Guest(s)