நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#46
த்தியாயம்:11





நாட்கள் பல நகர்ந்தன. ஒருநாள் காலை உற்சாகமாக எழுந்தேன்.பல்துலக்கி ,குளித்து விட்டு,அம்மா தந்த இட்லியை புட்டு வாயில் போட்டு கொண்டு தங்கையிடம் பேனாவை இரவல் வாங்கி கொண்டு "அண்ணா பேனாவை பத்திரமா திருப்பி கொடுண்ணா அது எனக்கு ராசியான பேனா"என அவள் கூறீயதை பொருட்படுத்தாமல்"பாக்கலாம் பாக்கலாம்"என்றேன்."உனக்கு பேனா குடுக்கவே கூடாதுடா"என அவள் திட்டியதை காதில் வாங்கிகொண்டு வீட்டை விட்டு பேருந்து நிலையம் வந்து பேருந்தில் ஏறி அமர்ந்து பெருமூச்சு விட்டேன்.பூம்பொழில் இன்று சீக்கிரம் வந்துவிடுவாள்.பூம்பொழில் என் வாழ்வில் ஒரு புதிய சந்தொசத்தை ஏற்படுத்தி கொடுத்தவள்.அவளோடு இருக்கும் நேரங்கள் என் வாழ்வில் பொன் எழுத்துக்களால் பொறிக்க படவேண்டியவை.அவளுக்கும் என் மீது ஒரு ஈர்ப்பு இருப்பதை அன்றுதான் நான் உணர்ந்தேன் அன்று ஆம் அன்று அவளுக்கு சாப்பாடு கொண்டு போய் கொடுக்க போன போது,,என்னுயிர் நண்பன் "டேய்!மச்சி அது காலி பாக்ஸ் டா" என எனக்குஆப்பு வைத்த போது, நான் வேகமாக ஸ்டாப் ரூமை நோக்கி ஓடி கதவில் கைவைக்கும் போதுதான் யோசித்தேன்.அவளை சாப்பிட சொல்லி எவ்வளவு பாடு படுத்தினோம்.இப்ப அவமுன்னாடி போய் நின்னா அசிங்க படுத்த மாட்டா,இல்ல போக கூடாது இப்ப போனா அவ பயங்கர கோபமா வேற இருப்பா.இன்னொரு தடவை பார்த்து முத்தம் குடுத்து சரிபண்ணலாம் என எண்ணி திரும்ப கிளாஸ் ரூமிற்கு சென்றேன்.

வினோத்"என் டிபன் பாக்ஸ் எங்கடா அவ்ளோ வேகமா போன என்ன தூக்கி குப்ப தொட்டில போட்டுட்டாளா"என கேட்டான். 
"மச்சி நான் அப்புறமா உன் பாக்ஸ வாங்கி தரேன்டா.இப்ப போய் கேட்டா அவ காறி துப்பிடுவாடா"என்றேன்.

"அப்ப நீ இன்னும் போய் கேக்கவே இல்லையா" 

"எப்படிடா கேட்பேன் அவள சாப்பிட சொல்லி எவ்வளோ டார்ச்சர் பண்ணிட்டு வந்தேன் தெரியுமா" 

பேசிகொண்டிருக்கும் போதே PHYSICS சார் வந்தார்.

அனைவரும் எழுந்து நின்று "குட் ஆப்டர் நூன் சார் காட் பிளஸ் யூ " என்றோம் கோரஸாக,அவர் தனது கரகரப்பான குரலில் "காட் பிளஸ் யூ" என கூறிவிட்டு தனது தடிமனான ரெபரன்ஸ் புக்கை திறந்த படியே"ஜெய் உன்ன P.B மிஸ் ஸ்டாப் ரூமுக்கு வர சொன்னாங்க்என்ன ஏதாவது தப்பு பண்ணியா"என்றார். நான் மனதுகுள் "ஏதாவது தப்பா பண்ணுனேன் ஏடா கூடமான தப்புதான் பண்ணேன் இன்னைக்கு தூக்கு மாட்டிக்கிற மாதிரி கேள்வி கேட்க போறா "என நினைத்தபடி "நோ,சார் நான் எந்த தப்பும் பண்ணல"என்று தனுஷ் ஸ்டைலில் கூறினேன். 

அவர் "சரி சரி போய் என்னவென்று கேட்டுட்டு வா"என்றார். "போச்சுடா,சரி சமாளிப்போம் என நினைத்துகொண்டு ஸ்டாப் ரூம் நோக்கி நடந்தேன்.உள்ளே அவள் அமர்ந்திருந்தாள் அவள் முன்னால் டேபிளில் நான் கொடுத்த காலி டிபன் பாக்ஸ் கம்பீரமாய் அமர்ந்திருந்தது.அவள்"வாங்க சார்! வாங்க!வெறும் டப்பாவ கொடுத்துட்டு போகதான் இவ்வளோ சீன் போட்டிங்களா சார்"என்றாள்.

என்னால் எதுவும் கூற முடியவில்லை.அவள் மேலும் தொடர்ந்தாள்.

"சாரி,நீ சாப்பிடாம இருக்கும் போது இதெல்லாம் என் கண்ணுல படல.உன்னை எப்படியாவது சாப்பிட வைக்கனும் நினைச்சுத்தான் கிஸ் பண்னேன்"என்றேன். 

"உனக்கு என்னை கிஸ் பண்ண எவ்வளோ தைரியம்டா"

"நீ என்னை திட்டாதே.நீ திட்டும் போது எனக்கு கோபம் வந்துதான் நான் அப்படி செஞ்சிடறேன்" 

"அப்படின்னா தினமும் உன்னை திட்டுற எல்லாரையும் நீ கிஸ் பண்ணி விட்டிடுவியா"என கேட்டாள் 
"மாட்டேன்"என்றேன் தலை குனிந்தபடியே
Like Reply


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 27-03-2019, 05:59 PM



Users browsing this thread: 3 Guest(s)