வெகுநேரமாகியும் கணவர் வீட்டுக்கு வராததால் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி லதா, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தன் மகன் கண்ணனை எழுப்பி அப்பாவைக் கூட்டி வரச் சொல்லி அனுப்பியுள்ளார். கழிவுநீர் தொட்டி அருகில் சென்ற அவரும் விஷவாயு தாக்கி அங்கேயே மயக்கமுற்று இறந்துவிட்டார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, தீயணைப்பு படையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி, ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி ராஜேஷ் கண்ணா ஆகியோர் விசாரணை செய்து வருகிறார்கள்.