அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 71 

இருகைகளையும் மடக்கி தலைக்கு கொடுத்து, மல்லார்ந்து படுத்தவாறு, கடந்த அரைமணி நேரமாக விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான், மணி. இன்று அதிகாலையில் தான் கோவை வந்து சேர்ந்திருந்தான். அவனுக்கு தெரியும், தன் செயலுக்கு மன்னிப்பு கேட்பதே தரம் தாழ்ந்த செயல் என்று. அந்த அளவுக்கு, அவன் என்றுமே தரம் தாழ்ந்து போகப்வதில்லை. ஆனால், தன் செயலுக்காக தான் வருந்துகிறேன் என்பதை, அவளிடம் நேரடியாக கூறவே முடியாது என்பதையும் அவன் அறிந்திருந்தான். பயணக் களைப்போ?? அல்லது சில வருடங்களாக தன் மனதில் தூக்கி சுமந்த பாராத்தை இறக்கி வைத்த நிறைவோ?? அல்லது தன் ஈனச் செயலுக்கு மன்னிப்பு இல்லை என்று தெரிந்திருந்தாலும், அவள் முகம் பார்த்து சொல்லமுடியாத, தன் செயலுக்காக "நான், உயிர் உள்ளவரை வருந்துவேன்" என்பதை, காலம் தன் மீது இறக்கப்பட்டு, இப்படி ஒரு சந்தரப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க, தன் வலியை அவளிடம் பகிர்ந்து கொண்ட நிம்மதியா?? என்று தெரியவில்லை. நேற்று இரவு, படுத்த சில நிமிடங்களிலேயே உறங்கியவன், மதியம் ஒரு மணிக்குத்தான் விழித்தான். நாள்பட்ட புண்ணின் அரிப்பு போல், முன்தின நிகழ்வு அரிக்க, மதுவின் நினைவுகளை சொரிந்து கொண்டு, சுகமாய் படுத்திருந்தான். வாழக்கை எப்பொழுதும் இப்படித்தான், விடைதெரியாத கேள்வியை கேட்டுவிட்டு, நம்மை சுற்றலில் விடும். அழைந்து, திரிந்து, அடிபட்டு, அது கேட்ட விடையை தெரிந்து கொண்டு வரும்பொழுது, விடையளிக்க வாய்ப்பளிக்காது, மற்றொரு, விடை தெரியாத கேள்வியைக் கேட்டுவிட்டு நம்மைப் பார்த்து சிரிக்கும்.

கருத்தரங்கில் கலந்து கொண்ட நோக்கம் நிறைவேறாமல் போனாலும், அவன் வாழ்வின் பெரும் சுமையை, இறக்கி வைக்க, அந்த கருத்தரிக்க உதவும் என்று அவன், கற்பனையிலும் நினைத்துப் பார்த்ததில்லை. மண்ணோடு மண்ணாக, தான் நொதிந்து போகும் வேளையில் தான், தன் மனபாரம், தன்னை விட்டு நீங்கும் என்று நினைத்தவனுக்கு, வாழ்க்கை அவன் எதிர்பாராத ஆறுதலை தந்துவிட, வார்த்தைகளில் விளக்க முடியாத, ஒரு மனநிலையில் படுத்துக் கிடந்தான், மணி. மதுவே, தன்னை மன்னித்து, ஏற்றுக் கொள்ள வந்த பொழுது, அதை தவிர்த்ததில், அவனுக்கு கொஞ்சமும் வருத்தம் இல்லை. அவர்களது உறவே இந்த சமூக மதிப்பீட்டிற்கு முரணானது!!, ஏற்றுக்கொள்ள முடியாதது!! என்பதை, அவள் இல்லாத வாழக்கை, அவனுக்கு புரிய வைத்திருந்தது. மது சொன்னபோது விளங்காத அவளின் பயம், அதன்பின் விளங்கியது. வயது வித்தியாசம் ஒரு சமூகம் முரண் என்றாலும் அதைக் கடந்து விடுவது எளிது. ஆனால் தங்கள் உறவு, நட்பு என்னும் புள்ளியில் ஆரம்பித்திருந்தாலும், சிறிது காலத்திலேயே, அவர்களது குடும்பமும், அவர்களை அக்கா-தம்பியாக பார்க்க ஆரம்பித்திருந்தது. ஏன், அவர்களே, அவர்களை அவ்வாறு தான், கருதிக் கொண்டார்கள்.

பருவ ஹார்மோன்களின் தூண்டுதலா?? அல்லது உண்மையான உள்ளத்தின் வேட்கையா?? காலத்தின் இயல்பானம் மாற்றமா?? அல்லது முன் சொன்ன எல்லாமும் சேர்ந்தா?? என்று தெரியாமல், மீண்டும் அக்கா-தம்பி என்ற உறவு, நட்பாக மாறியது. பருவ மோகத்தில், மணி பெண்களை நாட ஆரம்பித்த காலங்களில், அவன், ஒருமுறை கூட மதுவை, தப்பாக அல்லது தன் இணையாக பார்த்தது இல்லை. இந்த சமூகத்தால் வரையறுக்கப்பட்ட, அத்தனை உறவுகளையும் தாண்டியது அல்லது உள்ளடக்கியது, அவனுக்கும், அவளுக்குமான உறவு. அதனால்தானோ?? என்னவோ?? மது, அவனை விரும்புகிறேன், நீயும் என்னை விரும்பித்தான் ஆகவேண்டும் என்று சொன்ன பொழுது, அது வற்புறுத்தலாக தோன்றாமல், கொஞ்சம் தயக்கத்துடன், நிறைய இயல்புடன், அவர்களது உறவு அடுத்த கட்டத்திற்கு சென்றது. பருவத்தின் வேட்கையால், உடலின் தேவையால், கணவன் மனைவி போல, அவர்கள் உறவு மாறி இருந்தாலும், எப்பொழுதும், அவர்களுக்குள்ளான அன்பின், காதலின் வெளிப்பாடாக, பரிமாற்றமாக, நீட்சியாகத்தான், அவர்களின் கூடல் இருந்தது. கூடுதலின் போது, காதலைக் காட்டிலும், காமத்தின் மோகத்தின் கணம், சில சமயம் கூடியிருந்தாலும், அந்தக் கூடலின் முடிவில் காதல் மட்டுமே எஞ்சியிருக்கும்.

மன்னித்து ஏற்றுக்கொள்ள, அவள் தயாராக இருந்த பொழுது, மணி, மதுவை மறுதலிக்க அதுதான் காரணம். அவனது முதல் கூடல் மோகத்தின் தூண்டுதலால், வேறு எவருடனும் நடந்திருந்தால், எவ்வளவு குற்ற உணர்வு இருந்தாலும், உடலுறவு என்பதை உடலின் பசி என்று, அவனால் கடந்து சென்று இருக்க முடியும். காலம் இருவருக்கும், அதற்கு தேவையான, நேரத்தை வழங்கியிருந்தது. அதையும்தாண்டி, அவள் அறியாத ஒரு உண்மை, அவளிடம் சொல்ல முடியாத ஒரு உண்மை, அவனுக்கு தெரியும். மதுவின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டு, அவளை திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தால், அதை தடுப்பதற்கு யாருமில்லை, சிவகாமி உட்பட, என்று அவனுக்கு தெரிந்து இருந்தாலும், அவளுடன் ஒரு சமரசம் செய்துகொண்ட வாழ்வைத் தான், அவனால் வாழ்ந்திருக்க முடியும். அந்த சமரசத்திற்கு, அவள் தயாராக இருந்தாலும், அப்படி ஒரு வாழ்வை, அவளுடன் வாழ, அவன் தயாராக இல்லை. ஏனென்றால், அவனைப் பொறுத்தவரை, மது, அவனைக்காட்டிலும் ஆயிரமாயிரம் மடங்கு மேன்மையானவள். அவன் தேவதை. ஏங்கிக்கிடந்தவனை, இரக்கத்தால், பாசத்தால், காதலால், இட்டு நிரப்பியவள்.

இப்படியான எண்ணங்களில் மூழ்கியிருந்தவனுக்கு, தன் செய்த அத்தனை தவறுகளும், ஒருவகையில், மதுவின் நல்வாழ்விற்கே என்று முதல் முறையாக தோன்றியது. இருந்தும், மனதின் ஓரத்தில் ஒரு சின்ன வலி, விரக்தியாக விட்டத்தைப் பார்த்து சிரித்தவனை, அறைக்கதவு திறக்கப்படும் ஓசை மீட்டெடுத்தது. மணியின் அம்மாதான், கதவை திறந்தாள்,

"இன்னும் நீ பெட்ட விட்டே எழுந்திருக்கலையா?" பாசமாக அவனைப் பார்த்து சிரித்தாள். மணியும் சரிதான்.

"டைம் ஆகுது மா!! இன்னும் நீ பிரேக்ஃபாஸ்ட் கூட, சாப்பிடல!!" அவள் கட்டில் அருகே நடந்து வர, எழுந்து அமர்ந்தான். தன் அம்மாவின், அன்பான வார்த்தைகளும், செயலும், அந்த பொழுது, அவனுக்கு மிகவும் தேவையாக இருந்தது. மீண்டும் அவளைப் பார்த்து சிரித்தவன், கட்டிலில் இருந்து இறங்கி,

"அரை மணி நேரம், குளிச்சிட்டு வந்துடுறேன்!!" என்றவன், பாத்ரூம் நோக்கி சென்றான்.

***************

அரைமணி நேரம் கழித்து,

குளித்து முடித்து வந்த மணி, உணவருந்திக் கொண்டிருந்தான். மகன் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அருகே வந்து அமர்ந்தாள், சுமா. அவனிடம், அவளது மொபைலை காட்டினாள். தன் தாயின் மொபைலின் தொடுதிரையைப் பார்த்தவனின் உதடுகளில் ஒரு விரகதியான சிரிப்பு.

"காலைல இருந்து, நிறைய மெசேஜ்ஸ்!! நிறைய போன் கால்ஸ்!!" அவளது உள்ளத்தின் மகிழ்ச்சி கண்களில் தெரிந்தது. நிறைவாக, பெருமிதமாக, மகனை பார்த்தாள்.

"The Deep fall, Despair and an Unbelievable Rise!!" என்ற தலைப்பில், பிரபலமான நாளிதழில் அவனைப் பற்றிய கட்டுரை வெளிவந்திருந்தது. ஐந்தாறு வரிகளை படித்தவனுக்கு, மீதி கட்டுரையில் என்ன எழுதி இருக்கப்பட்ட இருக்கும் என்று புரிந்தது. அவன் நிம்மதி இழந்து, நம்பிக்கை இழந்து, தவித்த காலத்தை, ஓரளவு புரிந்து வைத்திருந்தவள், சுமா. தன் தாயைப் பார்த்து சிரித்தவன், ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், அவன் மனதின் ஓரத்தில் இருந்த வலியின் கணம் கொஞ்சம் கூடியது. சாப்பிட்டு முடித்துவிட்டு வந்து சோபாவில் அமர, மணியின் தாத்தாவும் வந்தார். முன்தினம் நடந்த கலந்துரையாடலில் மணி பேசியதையும், இன்று நாளிதழ்களில் அதைப் பற்றி வெளி வந்திருந்த செய்திகளையும் பற்றி, பெருமை பொங்க பேசினார். அவருடன் பேசிக் கொண்டிருக்க, பேசிக் கொண்டிருக்க அவனது மன வலி கூடிக்கொண்டே இருந்தது. அதிலிருந்து விடுபடும் பொருட்டு, தனக்கு அசதியாக இருக்கிறது என்று சொல்லி, மீண்டும் தன் அறையில் வந்து படுத்துக்கொண்டான். யாரிடமும் பேசும், சந்திக்கும் மனநிலையில் அவன் இல்லை. சிறிது நேரத்தில் உறங்கியும் போனான்

தொழிலில் பெரும் வெற்றி அவனை பெரிதாக எப்பொழுதும் பாதித்ததில்லை. அதேபோல தொழில் இவன் பெற்ற வெற்றிகளால் அம்மாவோ, தாத்தாவோ, ஆச்சியோ மகிழும் பொழுது, அவர்களின் மகிழ்ச்சி மணியையும் சிறிது சந்தோஷம் கொள்ளச் செய்யும். ஆனால் வாழ்க்கை என்று வருகிற பொழுது, தானோ, தன்னை வைத்து, தன்னைச் சார்ந்தவர்கள் மகிழ்வது இதுதான் முதல்முறை. எனோ அவனால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

**************

மணியின் பார்வையில்.

சற்றுமுன் நடந்த எதையுமே என்னால் நம்ப முடியவில்லை............. என்னை ஒருத்தி காதலிக்கிறாள்.............நீ என்னதான் காதலித்தே ஆகவேண்டும் என்று மிரட்டுகிறாள்.............
முதல் முறையாக ஒருத்தியால் முத்தமிடப்பட்டேன்..............அந்த ஒருத்தி மது..... என்று நினைக்கையில், என் உள்ளமும் உடலும் சிலிர்த்துக்கொண்டது. அவளுக்காக அல்லது அவளால், நிறைய முறை அழுதிருக்கிறேன்.முதன்முதலாக மது அழுது, நான் பார்க்கிறேன். அதைக்காட்டிலும், அந்த அழுகை எனக்கானது என்பதை, எப்படி எடுத்துக் கொள்வது என்பது கூட தெரியவில்லை. அவளின் அழுகை எனக்கு வலியைக் கொடுப்பதற்கு பதில், ஆனந்தத்தைக் கொடுக்கிறது. அனீஸ் தொடங்கி சுமேஷ், ஏன், இன்று காலை பிரதீப் வரை, அவளை அணுகும் சமவயது ஆண்களால், பெரிதும் கலவரத்துக்கு உள்ளாயிருக்கிறேன். அவள் வாழ்வின் முதன்மையான ஆண் என்ற இடத்தை இழந்து விடுவேனோ என்று எத்தனையோ முறை தவித்திருக்கிறேன். கேட்காத வரத்தை, கடவுளே, தேடி வந்து கொடுக்கும் பொழுது, அதிர்ச்சியும் குழப்பமும் மிஞ்சும். அப்படி ஒரு வரம் கிடைத்த, குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் தான் அமர்ந்து இருந்தேன்.

அவள் சில நிமிடங்களுக்கு முன் என்னை முத்தமிட்டாள், என்னிடம் அவள் காதலைச் சொல்லி அழுதாள். மது, என் மது, இனி அவள் எனக்கே எனக்கு என்று நினைக்கையில், பெரும் போதையில் மிதப்பது போல் தோன்றியது. "ச்செ!!, திரும்ப முத்தமிட்ட இருக்கலாமே!!" "நான் உம்மாஞ்சி மாதிரி இருந்ததை லைஃப் புல்லா சொல்லிக் காட்டுவாளே!!" என்று நினைக்கையில், எங்கிருந்தோ வந்த வெட்கம், என்னை பூசிக் கொண்டது. நேற்று இரவு, "ட்ரெயின்ல இருந்தோமே!! அதே மாதிரி!! உன் பாப்பாவா இருக்கணும்!!” என்று கேட்ட பொழுது யாருடைய தொந்தரவும் இன்றி, அவளுடன் மட்டும் நேரம் செலவழிக்க வேண்டும் என்றுதான் தோன்றியது. ட்ரெய்னில் இருந்ததுபோல கட்டிக்கொண்டு படுப்பது, எங்கள் வயதுக்கு சரியாக இருக்காது என்ற எண்ணம் இருந்தாலும், உண்மையிலேயே அவளின் அணைப்பில் இருக்க வேண்டும் என்று ஒரு சிறுவன் போல ஏங்கினேன். இனி அப்படி ஏங்க தேவை இல்லை. அவளுக்கு நானும், எனக்கு அவளும். அவள் மடியிலேயே புதைந்து கிடக்கலாம், கட்டிக்கொண்டு தூங்கலாம், முத்தமிடலாம் என்று நினைக்கையில், அடக்கமாட்டாத சந்தோஷம் என் உள்ளத்தில். இந்த கோயம்புத்தூரையே கத்தி எழுப்பவேண்டும் போல் தோன்றியது.

மெதுவாக நிமிர்ந்து, அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று பார்த்தேன். எனக்கு முதுகைக் காட்டியவாறு, அவள் மேலாடையை கலட்ட, சற்றென்று தலையைக் கவிழ்த்துக் கொண்டேன். நான் பார்ப்பதற்கு வாய்ப்பு இருந்தும், அதை பற்றிக் கவலைப்படமால் உடை மாற்றி, அவள் மேல், எனக்கு உள்ள உரிமையை, சொல்லாமல் சொன்னாள். ஓடிச் சென்று அவளைக் கட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்த, என் மனதை கட்டுப்படுத்திக் கொண்டேன். பார்க்காதே!! பார்க்காதே!! என்று ஒரு மனமும், பார்!!, பார்!! என்று இன்னொரு மனமும் போட்டி போட்டு என்னை அலைக்கழிக்க, மீண்டும் லேசாக நிமிர்ந்து பார்த்தேன், முழு நிர்வாணமாய் இருந்தாள், ஒரு நொடி கூட இருக்காது, மீண்டும் தலையை குனிந்து கொண்டேன். ஆனால் ஆடை இல்லாத அவளது உருவம், என் கண்களுக்குள் அப்படியே இருந்தது. என் வயிற்றுக்குள் கையை நுழைத்து, யாரோ கிச்சு கிச்சு மூட்டுவது போல் தோன்றியது. அடுத்து என்ன நடக்கலாம் என்று எண்ணுகையில், அந்த எண்ணம் கொடுத்த சாத்தியங்களை நினைக்க, கண்களை முடிக்கொண்டேன். மோகம் இல்லை, தாபம் இல்லை, காமம் இல்லை, உண்மையிலேயே சிரித்தேன். குதியாட்டம் போட்டுக்கொண்டிருந்த மனதை ஒருநிலைப் படுத்தினேன். "அவ பொண்ணு!! நீதான் கட்டுப்பாடா இருக்கணும்!! தப்பா எதுவும் பண்ணக்கூடாது!! தனியா படுத்துக்கணும்!! இல்ல!! இல்ல!! கட்டுக்கிட்டு படுத்துக்கலாம்!! கிஸ் பண்ணக் கூடாது!! இல்ல!! இல்ல!! கண்ணத்துல, நெத்தில ஓகே!! அதுக்கு மேல எதுவும் பண்ணக்கூடாது!!” என்று எதைப் பண்ணலாம், எதைப் பண்ணக்கூடாது என்று ஒரு அட்டவணையை தயாரித்து என்னிடம் கொடுத்தது என் மூளை. உடனே அவளிடம் செல்ல வேண்டும் போல் இருந்தது, பாத்ரூமில் இருந்து எழுந்து தலையைத் துவட்ட ஆரம்பித்தேன்.

திடுக்கிட்டு விழித்தேன். எனது மொபைல், சிறிது நேரம் அலறிவிட்டு அமைதியானது.

************

ஏழு வருட உறக்கத்திலிருந்து எழுந்தது போல் ஒரு உணர்வு. சில நிமிடம் என் மூளையும் உடலும் இயங்க மறுத்தது. கடந்த நொடிதான் அந்த பாத்டப்பிற்குள் இருந்து எழுந்ததுபோல் உணர்ந்தேன். கனவு என்று புரிந்தாலும், அது என் மன கற்பனையல்ல. இனி எனக்கு வேண்டாம் என்று, என் நினைவு அடுக்குகளில் புதைத்து வைத்த என் வாழ்வின் எச்சம், என் இன்பத்தின் உச்சம். கனவில் இருந்த சிலிர்ப்பு காணாமல் போயிருந்தது, சொல்லப்போனால் என் உடலும், உள்ளமும் வெலவெலத்துப் போயிருந்தது. எழுந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்தேன். என் கடந்த கால நினைவுகள் கொடுத்த அழுத்தத்தை தாங்க முடியவில்லை. மூச்சு விட சிரமப் பட்டேன், தேகம் சில்லிட்டது, உடல் வியர்க்க ஆரம்பித்தது, கண்கள் இருட்டிக்கொண்டு வருவது போல தோன்ற, தலையை உதறி என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்று, தோற்றேன். இதுவே ஒன்றரை வருடத்திற்கு முன் என்றால், நீலகிரி மலையின் கிழக்குச் சரிவில், அந்தப் பள்ளத்தாக்கில் என்னை தொலைத்து கொள்ள, கிளம்பி இருப்பேன். அந்த பள்ளத்தாக்கில் நான் மொத்தமாக தொலைந்து போனால், அதனால் ஏற்படும் இழப்பும், அந்த இழப்பினால் என்னைச் சார்ந்தவர்களுக்கு ஏற்படும் வலியையும், என் பொறுப்பையும் உணர்ந்திருந்தேன். இந்த ஒன்றரை வருடங்களில், இப்படியான சூழ்நிலைகளில் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள பழகியிருந்தேன்

ஆனால் இன்று அது முடியாது என்று தோன்றியது. எழுந்து, டிராவிலிருந்து மாத்திரையை எடுத்து போட்டுக் கொண்டேன். உடைகளை கலைந்தேன், பாத்ரூமுக்குள் நுழைந்து ஷவரை திறந்து அதனடியில் நின்று கொண்டேன். கால்களில் வலு குறைவது போல தோன்றியது, அப்படியே தரையில் அமர்ந்தேன். தண்ணீரின் குளிர்ச்சி ஏற்கனவே சில்லிட்டிருந்த உடலை, நடுக்கமுற செய்தது. தண்ணீரின் வெப்பத்தை அதிகரித்தேன். என் கண்களில் பாத்ரூமில் இருந்த "பாத்டப்" பட்டது, சூடு பட்டதைப் போல, சட்டென அதற்கு முதுகு காட்டி திரும்பி அமர்ந்து கொண்டேன், மீண்டும் தண்ணீரின் வெப்பத்தை அதிகரித்தேன், தண்ணீரின் வெப்பம் தாளாமல் என் தோல் எரிய ஆரம்பித்தது. அந்த எரிச்சல், ஏனோ எனக்கு கொஞ்சம் ஆறுதலாய், தேவையாய் இருந்தது. கண்களை மூடி அமர்ந்திருந்தேன், எவ்வளவு நேரம் என்று தெரியாது, வெந்நீரின் வெப்பத்தை தாங்க முடியாத அளவுக்கு தோல் எரிய ஆரம்பித்ததும், ஷவரை அணைத்து விட்டு வெளியேறினேன். உடை மாற்றிவிட்டு, கண்ணாடியில் என் கண்களைப் பார்க்கும் தைரியம் இல்லாமல், கண்ணாடி பார்க்காமல் தலைவாரி விட்டு சோபாவில் அமர்ந்தேன். தோல்லில் எரிச்சல் அப்படியே இருந்தது. கண்களை மூடி சோபாவில் தலை சரித்தேன், தூக்கம் வரும் என்று தோன்றவில்லை. மீண்டும் ஒரு மாத்திரையை எடுத்து விழுங்கினேன். "எனக்கு அசதியாக இருக்கிறது, இரவு உணவு வேண்டாம்" என்று அம்மாவிற்கு மெசேஜ் அனுப்பி விட்டு, படுத்துக்கொண்டேன். மாத்திரையின் உதவியால் தூங்கிப்போனேன்.

*********

துக்கம் கலைந்து எழுந்த போது, மணி பத்து என்று காட்டியது. மத்திரை, நான்கு மணி நேரத்திற்கு மேல் தாக்குக்குபிடிக்கவில்லை. உடல் எல்லாம் எரிவது போல் இருந்தது. எழுந்து முகம் கழுவிட்டு கண்ணாடி முன் நின்று, அணிந்திருந்த டி-ஷர்ட்டை கழட்டினேன். மேல் உடலெல்லாம் கன்னிப்போய் இருந்தது, ஆங்காங்கே கருஞ்சிவப்பாக இரத்தம் கட்டியிது போல் இருந்தது, இரண்டொரு இடங்களில் தோல் வெடித்திருந்தது. சுடுநீர் உடம்பில் பட்டதன் தாக்கம். தன் தாயைப் பற்றிக் கொண்ட குரங்குகுட்டி போல, என் மனம் இன்னும் அந்த நினைவுகளை பற்றிக் கொண்டு இருந்தது. மீண்டும் மனதில் அழுத்தம் கூட, டி-ஷர்ட் அணிந்து கொண்டு, அறையை விட்டு வெளியேறி, மொட்டை மாடிக்கு சென்றேன். மனதின் அழுத்தமும், உடலின் எரிசலும், என்னை ஓரிடத்தில் நிற்க விடாமல் அங்கும் இங்கும் அலையச் செய்தது. டி-ஷர்ட்டை கலட்டிவிட்டு நீச்சல் குளத்தில் விழுந்தேன். உடலின் எரிச்சலுக்கு, குளிர்ந்த தண்ணீர் இதமாக இருந்தது. நீச்சல் குளத்தில் நீளவாக்கில், நீந்த ஆரம்பித்தேன். தண்ணீர் கொடுத்த இதம், இரண்டு நிமிடம்கூட நீடிக்க வில்லை. கைகளும் கால்களும் வலுவிழப்பது போல் தோன்றியது. நீச்சல் குளத்தில் இருந்து எழுந்தேன், அருகிலிருந்த ஜிம்முக்கு நுழைந்து டிரெட்மில்லில் ஓட ஆரம்பித்தேன். சில நிமிடங்களுக்குப் பின் சுவிட்சை ஆப் செய்து விட்டு, இறங்கி வாய்விட்டு கத்தினேன். உள்ளத்தின் அலைக்கழிப்பால், என்னால் எதிலுமே முழுமையாக ஈடுபட முடியவில்லை.

இதேபோன்றதொரு இரவில், மனநிலையில் தான், என் வாழ்வை தொலைத்தது நினைவில் வந்தது. இழப்பதற்கு எதுவும் இல்லை என்றாலும், கொடுப்பதற்கு நிறைய இருந்தது. வாழ்க்கை எனக்களித்த இரண்டாவது வாய்ப்பை தவறவிட்டு, நான் செய்த பாவத்திற்காக, என்னைச் சார்ந்தவர்களையும் தண்டிக்கக் கூடாது என்று எண்ணினேன். வலி, வலி என்று என் சிந்தனையில் ஓட, வலி, அதுதான் இது போன்ற சமயங்களில் என்னை மீட்டெடுத்து. சுற்றும் முற்றும் பார்த்தேன். நான் தேடியது கிட்டியது. நான் வழக்கமாக தூக்குவதைக் காட்டிலும், பத்து கிலோ கூடுதல் போட்டு, பலு தூக்கினேன். இடுப்பு ஒடிந்து விடுவதுபோல் வலி வரும்வரை, திரும்பத் திரும்ப தூக்கினேன். இதற்கு மேலும் முடியாது என்று தோன்றிய பின், இடுப்பின் இரு புறமும் கை வைத்துக்கொண்டு, ஜிம்மில் இருந்து வெளியேறி, அதன் வாசலில் அமர்ந்தேன். க்லோவேஸ் அணியாமல் எடை தூக்கியதால் கை எரிந்தது, வியர்வையில் வழிந்திருந்த உடலில் வெளிக்காற்று பட, இதமாக இருந்தது. நீந்துவதை, ஓடுவதைப் போல அல்ல பலு தூக்குதல். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும், உடலின் வடிவம் கெடாமல் இருக்க வேண்டும். பலுதூக்க தேவைப்பட்ட கவணத்தாலோ அல்லது தேவையான வலியை, எனக்கு நானே கொடுத்துக் கொண்டதாலோ என்னவோ, மனம் கொஞ்சம் மட்டுப்பட்டது.

அலையாவிட்ட பார்வையில், எனக்கென்று எங்கள் வீட்டு மாடியிலேயே அமைக்கப்பட்ட டெண்ணிஸ் கோர்ட் கண்ணில் பட்டது. எழுந்து சென்று, அதன் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன், பல வருடங்கள் கழித்து. அழுக்குப் படிந்து குப்பை குளம் போல் காட்சியளித்தது, நான் பயிற்சி செய்ய பயன்படுத்திய பௌலிங் மெஷின், கண்ணில் படவே அதை நோக்கிச் சென்றேன். பௌலிங் மேஷினிற்கான பொத்தானை தட்டியதும், மெஷின் உயிர் பெற்றதை நம்ப முடியவில்லை, புன்னகையில் விரிந்தது என் உதடுகள். கீழே கிடந்த இரண்டு பந்துகளை கையிலெடுக்க, அதிலிருந்து அழுக்கு அத்தனையும் என் கையில் ஒட்டிக்கொண்டது. பந்தை பௌலிங் மெஷினில் போட்டுவிட்டு, பொத்தானை தட்ட, "டப்" என்ற ஓசையுடன், பந்து அந்த மெஷினிலிருந்து பறந்தது. "டப்" என்ற ஓசை, என் நாடி, நரம்புகளை எல்லாம் சிலிர்க்கச் செய்தது. பௌலிங் மெஷினில் இருந்து பறந்து சென்ற பந்து, தொங்கிக்கொண்டிருந்த வலையில் பட்டதும், மூன்று நான்கு துண்டுகளாக, அது அறுந்து விழுந்தது. அறுந்து விழுந்த டெண்ணிஸ் வலை, எனக்கு ஏதோ ஒரு செய்தியை சொல்வது போல் தோன்ற, விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறினேன். அறைக்கு வந்து மீண்டும் ஒரு மாத்திரையை எடுத்து விழுங்கிவிட்டு, கண்களை இறுக்க மூடி, படுத்துக்கொண்டேன்.

************
தொடர்ச்சி........
[+] 2 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 02-02-2021, 08:33 PM



Users browsing this thread: 5 Guest(s)