அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
டிஸ்கி

(கதை சொல்லியின் தத்துவம்)

எச்சரிக்கை:

எப்பொழுது பதிப்பின் கடைசியாக, கொத்தமல்லி போல கொசுராக வரும் டிஸ்கி, வரலாற்றில், இரண்டாம் முறையாக(ஹி!!ஹி!!) முன்னறிவிப்பாக வருகிறது. இந்த பகுதியை படிக்காமல், பாகம் - 71யைப் படித்தாலும், கதையின் தொடர்ச்சியில் எந்தவித மாற்றமும் இருக்காது

Expressing Oneself. வெளிப்படுத்துதல். தன்னை வெளிப்படுத்துதல். தன் நிலையை வெளிப்படுத்துதல் அல்ல. தன்னை சரியாக வெளிப்படுத்துதல், ஒருவரை உணர்வுகளின் உச்சதிற்கு இட்டுச்செல்லும். உணர்வுகளின் உச்சம் என்பது இன்பமோ, துன்பமோ அல்ல. அது உள்ளத்தின் உவகை. உவக்கை கொண்ட உள்ளம் என்பது திருப்தி. திருப்தி என்பது போதும் என்ற மனநிலை அல்ல. திருப்தி என்பது இன்னும் எடுத்துக்கொள்ள அல்லது கொடுக்க எதுவும் இல்லை என்பதும் அல்ல. அது பகிர்தலின் முழுமை. தேடலின் நிறைவை மட்டும் தனக்கென்று வைத்துக் கொண்டு, கிட்டியதை அனைவருக்கும் பகிர்ந்தளிப்பது. சுயதேடலின் தன்னிறைவு, திருப்தி. ஆன்மிக வழக்கத்தில் கூறுவதென்றால், ஞானி, சித்தன், முக்தி

நிறம் மாறும் பச்சோந்தியைப் போல, வாழ்வின் தேவைக்கு ஏற்ப, நாம் ஒவ்வாறுவரும் நாம் குணத்தை மாற்றிககொள்கிறோம். வீட்டில் இருப்பது போல், அலுவலகத்தில் இருப்பதில்லை, வீட்டிலேயே குழந்தைகளிடம் இருப்பதைப் போல பெரியவர்களிடம் இருப்பதில்லை. நண்பர்கள் அனைவரிடமும் ஒரே போல் இருப்பதில்லை. இப்படி பல நகல்களை கொண்டிருக்கும், ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதுதான் "சிறந்த நான்" அல்லது என்னுடைய "சிறந்த நகல்" என்ற ஒரு தன்னிறைவு கொண்ட எண்ணம் இருக்கும். அந்த நான் அல்லது நகல் புற காரணங்களுக்காக என்றுமே மாறாதிருக்குமானால், அதுதான் சுயதேடலின் தன்னிறைவு.

பிழைத்து கிடத்தாலே வாழக்கை என்று இருக்கும் நமக்கு, விளையாட்டும், கலையும் சுயதேடலின் தன்னிறைவைக் கொடுக்கும். வெற்றி கடைசி நொடியில் தீர்மானிக்கப்படும் ஒரு விளையாட்டுப் போட்டியில், இரு அணியின் அதரவாளர்களுக்கும், எதிர் மறையான எண்ணங்கள் இருக்கும். ஆனால் அதே போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு, வெற்றிபெற்ற நொடிப்பழுதில் ஆதரவாளர்களின் மனநிலையில் இருந்தாலும், பின் அந்த விளையாட்டின் நுணுக்கங்களை ரசிக்கும் மனநிலையில் ஏற்படும் பொழுது, இரு அணி வீரர்களின் உணர்வுகளில் பெரிதாக வித்தியாசம் இருக்காது

வெற்றி, தோல்வி என்பதெல்லாம் புற காரணங்கள், ஒரு விளையாட்டின் நுணுக்கங்களை ரசிப்பவர்களுக்கு, அந்த ஆட்டத்தின் தரமே தேடல். இன்னும் எளிதாக சொல்ல வேண்டும் என்றால், கிரிக்கெட்டை எடுத்துக் கொள்வோம். பறக்கும் சிக்சரை, ஸ்டம்பை உடைக்கும் யார்கரை மறந்து விடுவோம். நமக்கு மிகவும் பிடித்த பௌலரரின் பந்தில் அடிக்கப் பட்ட அருமையான சிக்சரையோ, நமக்கு மிகவும் பிடித்த வீரர், அருமையாக வீசப்பட்ட யாக்கரில் விக்கெட் இழந்தாலோ, நம்மால் முழு மனதுடன் இன்புற முடியாது, காரணம் நம்முடைய திற்பிடித்தம். ஒரு பௌலர் பந்தை விசுகிறார், பேட்ஸ்மேன் அதை அடித்தும், தடுத்தும் ஆடாமல், கீப்பரிடம் விடுகிறார். ஸ்டம்பிற்கு மேலாக நூலிழையில் பந்து பறந்து சொல்கிறது. “" என்ற சப்தம் மொத்த அரங்கையும் நிறைக்கும் அல்லாவா? அனைவரது முகத்திலும் அச்சரியத்தின் சிரிப்பு இருக்கும் அல்லவா?. பௌலரால் திறமையாக வீசப்பட்ட பந்தை திறமையாக திறமையாக கணித்த பேட்ஸ்மேன் ஆடாமல் விடுகிறார். ஆதரவு நிலை இங்கே அறுந்து போகிறது. இருவரும் தங்கள் திறமையை முழுதாக வெளிப்படுத்தும் பொழுது, யாருக்கும் வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. இங்கு "" என்ற சப்தம் திருப்தியை குறிக்கும்.

மணியின் வாழ்வில் அப்படி ஒரு திருப்தியை கொடுத்தது, அவன் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டது, டென்னிஸ்தான். அவன் பேயாக ஆடிய போதும், அதன் வேட்கையில் மதுவிடம் அத்துமீறிய போதும், ஆட வேண்டும், தன்னை வெளிப்படுத்த வேண்டும் என்ற வேட்கைதான். வெற்றி என்பது அவனது இலக்கு அல்ல. தொழிலிலும் அதை வேட்கையுடன் அவன் செயல்பட்டிருந்தாலும், அதன் வெற்றியில் அவன் திருப்தி கொள்ளாததற்கு காரணமும் அதுதான். தொழிலில் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை அவனது வெளிப்படுத்துதல் அல்ல தேவை.

அப்படியான ஒரு திருப்தியை வாசகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற வேட்கை எனக்கு(No bad words pls).

P.S: எழுத்துப்பிழை கொண்டிருக்கிறேன் [i](நீக்கிய பின்பே எவ்வளவு எழுத்துப்பிழை?) [/i]பாகம்-71 வெகு விரைவில். 
[+] 2 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 02-02-2021, 05:29 PM



Users browsing this thread: 29 Guest(s)