screw driver ஸ்டோரீஸ்
வாங்க அங்கிள்.. உள்ள வாங்க.."

"ஹாஹா.. என்னம்மா இது..?? எங்க இழுத்துட்டுப்போற என்னை.??"

"வாங்க அங்கிள்.. வந்து இவகிட்ட சொல்லுங்க.. நம்ப மாட்டேன்றா..!!"

"என்ன சொல்லணும்..??"

"உள்ள நீங்க அப்பாட்ட பேசிட்டு இருந்திங்கல்ல.. அதைப்பத்தி சொல்லுங்க..!!"

"ஹாஹா.. ஆதிராவோட கல்யாண விஷயமா..??"

"ஆமாம்..!! நான் சொன்னா நம்ப மாட்டேன்றா.. நீங்க சொல்லுங்க..!!" தாமிரா அவ்வாறு சொன்னதும், திரவியம் இப்போது ஆதிராவின் பக்கமாக திரும்பினார்.

"ஹ்ஹ்ம்ம்ம்..!! உன் தங்கச்சி சொல்றது உண்மைதான்மா.. உன் கல்யாணம் விஷயமாத்தான் பேசிட்டு இருந்தோம்..!! உனக்கும் சிபிக்கும் அடுத்த மாசமே முடிச்சிறலாம்னு முடிவு பண்ணிருக்கோம்..!!" என்றவர்,

"என்னம்மா.. கரெக்டா சொல்லிட்டனா..??" என்று தாமிராவிடம் கேட்டார்.

"பெர்ஃபக்ட் அங்கிள்..!!" விரல்களை மடக்கி கண்களை சிமிட்டி சொன்னாள் தாமிரா.

"ஹாஹாஹாஹா..!! ம்ம்ம்.. கல்யாணத்தை நாலு மாசம் கழிச்சு வச்சுக்கலாம்னுதான் இருந்தோம்..!! ஜோசியர்தான்.. 'அடுத்த மாசத்துலயே முடிச்சுட்டா நல்லது, இல்லைன்னா ஒரு வருஷம் தள்ளிப் போகும்'னு சொன்னாரு.. யோசிச்சு பாத்து நாங்களும் சரின்னுட்டோம்..!!"

"ஓ..!!"

"உனக்கு சம்மதந்தானம்மா ஆதிரா..??"

அன்பும் அக்கறையுமாக திரவியம் கேட்ட கேள்விக்கு, ஆனந்த அதிர்ச்சியும், அடங்காத வெட்கமுமாக, ஆதிரா பதில் சொல்லமுடியாமல் உறைந்துபோய் நின்றிருந்தாள்.. தாமிராவே கேலியான குரலில் அவருக்கு பதில் சொன்னாள்..!!

"ம்க்கும்.. நல்ல கேட்டிங்க போங்க..!! அவளே எப்போ எப்போன்னு இருக்குறா.. நீங்க வேற..!!"

"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!" தாமிரா சொன்னதை கேட்டு, திரவியம் பெரிதாக சிரித்தார்.

"ஏய்.. லூசு..!!!! சும்மா இருடி..!!!!" ஆதிரா தங்கையை முறைத்தாள்.

"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!"

அவளது கோபம் திரவியத்தின் சிரிப்பை இன்னுமே அதிகமாக்கியது..!! இப்போது திரவியத்திடம் திரும்பிய ஆதிரா, திடீரென பூத்துக்கொண்ட ஒரு வெட்கத்துடன் தடுமாற்றமாக கேட்டாள்..!!

"அ..அவரு.. அவர்ட்ட கேட்டாச்சா அங்கிள்..??"

"சிபிட்டயா..??"

"ம்ம்..!!"

"அவன்ட்ட இன்னும் பேசலம்மா.. செல்ஃபோன் ரீச் ஆகல.. அவன் ஆபீஸ்க்குத்தான் ஃபோன் பண்ணி கேட்டோம்.. மடிக்கேரி ஃபாரஸ்ட்க்குள்ள இருக்கானாம்.. நாளைக்கு காலைலதான் மைசூர் வர்றதா சொன்னாங்க..!! உன் அப்பாவும் நாளைக்கே அவன்ட்ட பேசிடுறதா சொல்லிட்டு இருந்தான்..!!"

"ஓ..!!"

"ஹாஹா.. அதெல்லாம் நெனைச்சு ஏன்மா கவலைப்படுற..?? சிபி என்ன வேணாம்னா சொல்லப்போறன்..?? சின்ன வயசுல இருந்தே அவனை தூக்கி வளர்த்தது உன் அப்பன்.. மாமா மேல அவனுக்கும் அவ்வளவு மரியாதை.. மாமா பொண்ணு வேற நல்லா மகாலட்சுமி மாதிரி இருக்க.. கட்டிக்க கசக்குதா என்ன அவனுக்கு..?? ஹாஹாஹாஹா..!!" கேட்டுவிட்டு திரவியம் சிரிக்க, ஆதிரா நாணத்தில் முகம் சிவந்து போனாள்.

"ஹையோ.. போங்க அங்கிள்..!!"

"ஹாஹாஹாஹா..!!"

"அப்படி சொல்லுங்க அங்கிள்.. என் அக்காவை கட்டிக்க அத்தான் ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்..!!" தாமிரா பெருமிதமாக சொல்லியவாறே ஆதிராவின் தோளில் கைபோட்டு அணைத்துக்கொள்ள, அவளோ தங்கையை இப்போது ஒரு ஸ்நேஹப் பார்வை பார்த்தாள்.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 26-03-2019, 11:16 AM



Users browsing this thread: 10 Guest(s)