நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#54
சாப்பிட்டீங்களா சார்.”

“என்ன…?”
“சாப்பிட்டீஙகளான்னு கேட்டேன் சார்.”
அவன் இல்லையென தலையாட்டினான்.
“உட்காருங்க. எடுத்துவைக்கிறேன்.”
அவள் சொன்ன உடன் கையைக் கழுவிக்கொண்டு வந்து அமர்ந்தான்.
அவள் தட்டில் எடுத்து வைத்திருந்த சப்பாத்தியையும் குருமாவையும் அவன் எதிரே கொண்டு சென்று வைத்தாள்.
அவன் சாப்பிடத் தொடங்கினான். இதை எல்லாம் மௌனமாகப் பார்த்துக்கொண்டே தனது வேலையைத் தொடர்ந்தான் யுகேந்திரன். (சாப்பிடும் வேலையைத்தான்)
இருவருமே சாப்பிட்டு முடித்த உடன் தட்டை எடுத்து விலக்குவதற்கு எடுத்துப்போட்டாள்.
“கிருஷ். ரொம்ப நேரமாயிடுச்சு. சுத்தம் செய்யக் கிளம்பிடாதே. காலையில் எழுந்து பார்த்துக்கலாம்.”
அவள் சரி என்றாள்.
மகேந்திரனைப் பார்த்து தயங்கி நின்றவள் தயக்கத்தை விடுத்து மீண்டும் அவனிடம் கேட்டாள்.
“சார். பால் தரவா? இல்லை டீ போட்டு தரவா?”
அவன் ஏன் என்பது போல் பார்த்தான்.
“இல்லை. நீங்க மாடியில் இருந்து தலையைப் பிடித்தவாறே இறங்கி வந்தீங்க. அதான் கேட்டேன்.”
தயக்கத்துடன் சொன்னாள்.
“இப்ப பரவாயில்லை. பாலே குடிக்கிறேன்.”
அவன் சொன்ன உடன் பாலில் பனங்கல்கண்டு போட்டு ஆற்றி இளஞ்சூடாக இருவருக்கும் கொடுத்தாள்.
“கிருஷ். நீயும் குடி.”
அவளும் தனக்கு எடுத்துக்கொண்டாள். இங்கே வந்ததில் இருந்து வனிதாமணி பழக்கி வைத்தது.
மூவரும் தங்கள் அறைக்குத் திரும்பினர்.
அறைக்குத் திரும்பிய மகேந்திரனுக்கு தன் மன உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை.
தன்னைக் கண்ட உடனே தனக்குத் தலைவலி என்று கண்டுபிடித்துவிட்டாளே.
அம்மா மாதிரியே நான் பட்டினியோடு இருப்பது தெரிந்து சாப்பாடு எடுத்துவைத்துக்கொடுத்து சாப்பிட சொன்னவளை நினைத்துக்கொண்டான்.
என்னதான் அவன் அவளை விட்டு விலக வேண்டும் என்று நினைத்தாலும் அதை செயல்படுத்த விடாமல் எதுவோ தடுக்கிறது.
வரவேற்பில் மணமக்கள் இடத்தில் தங்களைக் கண்டுவிட்டு மனம் பதறி வேலை இருப்பதாக சொன்னவன் நேரே வீட்டிற்கு வந்து தனது படுக்கையில் படுத்துவிட்டான்.
உறங்க முடியவில்லை,
மனப்புழுக்கம் தாங்காமல் மாடியில் காற்று வாங்கப்போனான்.
கார் வந்து நிற்கும் சத்தம் கேட்ட பிறகுதான் கீழே இறங்கி வந்தான்.
தலைவலி நிற்கவில்லை. தண்ணீராவது குடித்துவிட்டு படுக்கலாம் என்றுதான் சமையல் அறைக்கு வந்ததே. ஆனால் அவர்களை அங்கே எதிர்பார்க்கவில்லை.
முதலில் மனவேதனையில் தலைவலிப்பது போல் அவனுக்குத் தோன்றியது. ஆனால் அவனுக்குப் பசியினால்தான் தலைவலியே உண்டாயிற்று.
அவள் அக்கறையோடு சாப்பாடு எடுத்து வைத்தபோது அவனால் மறுக்க முடியவில்லை.
சாப்பிட்ட உடன் தலைவலியும் போய் விட்டது.
அவளது அக்கறை மனதை நெகிழச்செய்தது.
ஆனால் அவளது “சார்” என்ற அழைப்பு மனதைக் குடைந்தது.
தம்பியை மட்டும் “யுகா” என்று செல்லமாக அழைப்பவள் தன்னை மட்டும் சார் என்று அழைத்து அந்நியப்படுத்துவது மனதை உறுத்தியது.
றுநாள் காலை.
யுகேந்திரன் கிளம்பி வந்து வெகு நேரமாகியும் கிருஷ்ணவேணி எழுந்து வந்திருக்கவில்லை.
வனிதாமணியும் அவனிடம் கேட்டுவிட்டார். கல்லூரிக்குச் செல்ல வேறு நேரமாகிவிட்டது. இத்தனை தாமதப்படுத்த மாட்டாளே என்று அவளது அறைக்கு ஓடினான்.
இன்னும் கதவு மூடியிருந்தது.
கதவைத் தட்டினான்.
அவனது சத்தத்தில அலுவலகத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்த மகேந்திரனும் எட்டிப்பார்த்தான்.  
உள்ளிருந்து எந்த பதிலும் இல்லை. பதட்டமானான். இன்னும் பலமாகத் தட்டியவன் அவளை அழைத்தான்.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 26-03-2019, 10:48 AM



Users browsing this thread: 12 Guest(s)