அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
தொடர்ச்சி....

தொகுப்பாளர்: உங்கள் வெற்றியின் ரகசியம் என்னபுதிதாக தொழில் புரிய விரும்புபவர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?

மற்ற மூவரும் தங்களின் எண்ணங்களை சொல்லமணியின் முறை வந்தது.

மணி"உண்மைய சொல்லனும்னாஇந்த கேள்விக்கு என்கிட்ட பதில் இல்லை!! என்று நிறுத்தியவன் சிரிக்கஇந்த அரங்கத்திலும் சிரிப்பொலி.

"எங்க நாலு பேர்ல, Mr.மான்ஜீத் தவிர்த்துமீதி மூணு பேருமேமூன்றாவது அல்லது நான்காவது தலைமுறை தொழில் முனைவோர்கள்!! நான் தொழிலில்ல ஈடுபட ஆரம்பிச்சப்பவேவலுவான அடித்தளத்தோடவழிகாட்ட சரியான ஆட்கள் எனக்கு துணையா இருந்தாங்க!!. அதனாலமற்ற இரண்டு பேரும் தப்பா எடுத்துக்கலானஇந்தக் கேள்விக்கு Mr.மான்ஜீத்தான்பதில் சொல்றதுக்கு தகுதியானவர்னு நான் நம்புறேன்!!" 

மணி சொல்லமீண்டும் அரங்கத்தில் பலத்த கைதட்டல்கைத்தட்டல் அடங்கியதும் தொடர்ந்தான்மணி.

"உழைப்பு!!. ஒரு செயல்லநாம இறங்குறப்பஅது கேக்குறஉழைப்பை நாம குடுக்கணும்!! ரொம்ப கிளிசேவான பதிலா இருந்தாலும்வெற்றிக்கான அத்தனை ரகசியமும் கிளிசேவாகத்தான் இருக்கும்னு நான் நம்புறேன்!!மீண்டும் அரங்கத்தில் கைதட்டல்.

தொகுப்பாளர்: "இந்த கருத்தரங்கத்தின் நிறைவாகஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்துஒரு புகைப்படம் காட்டப்படும்!!அதைப் பற்றிய உங்களது நினைவுகளை பகிர்ந்து கொள்ளலாம்!!என்று சொன்னதும் அங்கிருந்த திரையில் ஒன்றன் பின் ஒன்றாக புகைப்படங்கள் காட்டப்பட்டது

இந்தியாவில்இதுபோன்ற சென்டிமெண்டலான சடங்குகளைஎந்த துறையைச் சார்ந்தவர்களாலும் தவிர்க்க முடியாதுசினிமா கிசுகிசு போன்ற ஒரு அரிப்பு அதுமற்ற மூவரும் தங்களுக்கு காட்டப்பட்ட புகைப்படத்தை பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளகடைசியாக மணியின் முறையும் வந்ததுதிரையில் காட்டப்பட்ட படத்தை பார்த்ததும் மணி அதிர்ந்தான்.

தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து ஒரு புகைப்படம் பகிரப்படும் என்பதும்அது பற்றிய கருத்துக் கூற வேண்டும் என்பதும் முன்பே அவனுக்கு சொல்லப்பட்டது தான்மணியும் அவன் மலை இறங்கும் ஒரு புகைப்படத்தைத் தான் இந்த கருத்தரங்கில் பகிர்வதற்காக கொடுத்திருந்தான்ஆனால் திரையில் காட்டப்பட்டதோகையில் நாலு இன்ச் வெற்றிக் கோப்பையுடன்கழுத்தில் மெடலுமாக19வயது மணிசிரித்துக்கொண்டிருந்தான்அதுவரை இலகுவாக இருந்தது மணியின் உடலின் மயிர்களெல்லாம் விடைத்து நின்றதுஉடல் சிலிர்த்துக் கொள்ளமனது இறுக்கமானதுஆறு வருடங்களுக்கு முன்வரைமது எப்படி அவன் வாழ்க்கையில் நீக்கமற நிறைந்திருந்தாளோஅதேபோலத்தான் டென்னிஸ்ம்சொல்லப்போனால்அன்புகக்காகஅரவணைப்புக்காக ஏங்கிக் கிடந்தவனுக்கு தேவைப்பட்ட அங்கீகாரத்தையும்வெளிச்சத்தையும்அவனுக்கு முதன் முதலில் கொடுத்தது டென்னிஸ் தான்மதுவைக் கொடுத்ததே டென்னிஸ் தான்மதுவை இழந்ததற்குமணியின் தவறொடுமற்றவர்களின் தவறும் காரணமாக இருந்திருந்தாலும்அவன் டென்னிஸை இழந்ததற்கானமொத்த காரணமும் அவன் மட்டுமேமணிமீண்டும்ஒரு இழப்பின் வலியை உணர்ந்தான்.

"சோ யு அர் அ டென்னிஸ் பிளேயர்?" தொகுப்பாளரின் கேள்வி அவனை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்ததுதலையை மட்டும் அமோதிப்பாக ஆட்டினான்முகத்தில் வெளிப்பட்ட உணர்வுகளை அவனால் மறைக்க இயலவில்லை.

"இன்னும் சர்ப்ரைஸ் முடியல?" மர்மமாக புன்னகைத்தபடிதொகுப்பாளர் திரையை நோக்கமணியின் பார்வையும் திரையை நோக்கி சென்றது

திறையில் இருந்த புகைப்படம் விரிவடைந்ததுசற்றுமுன் வெற்றிக் கோப்பையுடன் காணப்பட்ட மணியின் அருகேஅவனிடம் தோற்ற எதிராளி இருந்தான்மணியிடம் தோற்ற எதிராளியின் புகைப்படம் காட்டப்பட்டதும்அந்த கருத்தரங்கு கூட்டத்தில்ஒரு சிறு சலசலப்புஆச்சரியத்தை வெளிப்படுத்தும் மனித சப்தங்கள்.

"உங்க ஆப்போனெண்ட் யாருன்னு தெரியுமா?" தொகுப்பாளர் கேட்ட கேள்விக்குதெரியாது என்பது போல் தலையசைத்தான்

"என்னோட ஞாபகம் சரியா இருந்தாhe is Spanish!!" என்றான் மணிபெரிதாக ஏதோ ஒன்று வந்து விழப்போகிறது என்ற பதட்டம் அவன் மனதில்முதன் முதலாக பதட்டப்படுபவனின் மன நிலையில் இருந்தான்

"உங்கள்ல யாருக்காவது தெரியுமா?" தொகுப்பாளர்கூட்டத்தைப் பார்த்து கேட்க

"felino munez" என்று கோரசாகசத்தம் வந்தது.

"த்ரீ டைம்ஸ் கிராண்ட்ஸ்லாம் சேம்பியன்!!" தொகுப்பாளர் சொல்லஅரங்கத்தில் பலத்த கைதட்டல்

நம்பமுடியாமல்இடதும் வலதுமாக தலையை அசைத்துக் கொண்டடிருந்த மணியின் வாயிலிருந்து "வாவ்!! வாவ்!!" என்ற வார்த்தைகள்அவனது கட்டுப்பாடில்லாமல் வந்து கொண்டிருந்தது.

சொல்ல முடியாத உணர்வுகள் மனதை நிறைத்திருக்கபல வருடங்களுக்குப் பின்முதல் முறையாக மூளையின் கட்டுப்பாட்டில் இருந்த மணியைமொத்தமாக தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதுஅவனது மனதுகைத்தட்டல் அடங்க வெகுநேரம் ஆனதுகைதட்டல் அடங்கிய பின்னும் நம்பமுடியாத மணியின் தலையசைப்பு நிற்கவில்லைஒருவாராக சுதாகரித்துக் கொண்ட பின்.

"இந்த மேட்ச் விளையாடும்போதுஅவருக்கு பதினாறு அல்ல பதினேழு வயசுதான் இருக்கும்!! என்ன விட மூணு வயசு கம்மி!! அந்த ஏஜ்ல பிசிகல் க்ரோத் பெரிய அட்வண்டேஜ்!! ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் ஜெயிச்சேன் ஞாபகம்சொற்கள் அவன் சொல்லுக்கு கட்டுப்படாமல் போகஉலறினான்தன் தாடையை தடவ ஆரம்பித்தான்.

"இல்ல!!, நீங்க அந்த மேட்ச்லஸ்டிரேட் செட்ல ஜெயிச்சிருக்கிங்க!!" தொகுப்பாளர் மணியின் கூற்றை திருத்தவிரக்தியாக சிரித்தான்தீடிர் என்று கிடைத்த இந்த அங்கீகாரம்அவன் மூளையை முடக்கியதுஏதாவது சொல்லிஇந்த அங்கீகாரத்தை தட்டிக்கழிக்க வேண்டும் என்று சிந்தித்தான்

"லோக்கல் டோர்னமேண்டலரஞ்சிலசச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை நிறைய பேர் எடுத்திருக்கலாம்!! அதுக்காகஅவர் விக்கெட் எடுத்த எல்லாரும்அவரை விட திறமைசாலினு சொல்ல முடியாதுஇல்லையாஅந்த மாதிரிதான் இதுவும்!! தயவு செய்துஇந்த மாதிரி ஏதாவது போட்டோஸ் இருந்தாடெலீட் பண்ணிடுங்க!!. It's not fair for a champion!!" வலிந்து சிரித்தவாறே சொல்லி முடித்ததும்சிரிப்பலை அந்த அரங்கத்தில்அதைத் தொடர்ந்துகைதட்டல் ஒலிஅந்த அரங்கத்தை நிறைத்ததுஎனோ அந்த கைதட்டல்அவன் உள்ளத்தின் படபடப்பை மேலும் கூட்டியது

"அந்த டைம்லஎன் வாழ்க்கையே......" ஆரம்பித்தவன்தீடிர் என்று நிறுத்தினான்ஒரு நிமிடம் கண்களை மூடி பெருமூச்சு விட்டுவிட்டுதொடர்ந்தான்.

"அந்த டைம்ல என் வாழ்க்கையே அந்த மேட்ச்சோடா முடிவுல தான் இருந்துச்சின்னு நம்பினேன்!!. Loosing was not an option for me!!. ஜெயிச்சே ஆகனும்ற கட்டாயம்!! நான் கடைசியா விளையாண்ட டென்னிஸ் மேட்ச்ம்அதுதான்!! அந்தப் படத்துல இருக்குற கப்அந்த டோர்னமேண்ட் பிரைஸ் மணி-செக்னு எல்லாத்தையுமேமும்பை ஏர்போர்டில் தொலைச்சிட்டேன்!!" மீண்டும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள பேச்சை நிறுத்தினான்.

"எதுக்காகஅந்த டர்ணமெண்ட்ல ஆடுனேனோஅதமொத்தமா தொலைச்சிட்டேன்!! அதுக்காக எத்தனையோ நாள் கண்ணீர்விட்டு அழுதிருக்கேன்!! ஆனா இப்ப யோசிச்சுப் பார்த்தா, I don't deserve it!! அதனாலதான்அது என் கையை விட்டுப் போச்சு புரியுது!!" கண்களில் தெரிந்த வலியை மறைத்துக் கொண்டுவிரக்தியாக சிரித்தான்பெரும் மன பாரம் இறங்கியதைப் போல இருந்தது அவனுக்கு

"வெற்றியோட ரகசியம் என்ன கேட்டீங்கல்ல!! I'm a right hand player!! அந்த மேட்ச் முடிஞ்சு கொஞ்ச நாளிலேஒரு ஆக்சிடெண்ட்!! வலது கையில்உள்ளங்கையிளையும்விரல்கள்ளையும்ஏழு எழும்பு முறிவு!! டென்னிஸ் ராக்கெட்டை சரியா பிடிக்கிறதுக்குஆறு மாசம் தேவைப்பட்டிருக்கும்!! இதுதான் வாழ்க்கை என்று நம்பியிருந்த ஒன்ன என்னோட தவறால் இழந்துவிட்டேன்!! அந்த இழப்பை ஈடுகட்டத்தான்இப்ப வரைக்கும் முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன்!! என்னோட பிரண்டு ஒருத்தங்க சொன்னாங்க, that I am an early bloomer!! அவங்க சொன்ன போதுசும்மா சொல்றாங்கன்னு நெனச்சேன்!! யோசிச்சுப் பார்த்தாஅவங்க சொன்னது எல்லாம் உண்மைதான்னு தோணுது!! இந்த தடவை அந்த early bloomமை இன்னும் கொஞ்ச நாள் தக்கவச்சுக்கணும்னு உழைச்சுக்கிட்டு இருக்கேன்மணியின் உதடுகளில்ஒரு சிறு புன்னகைமீண்டும் அந்த அரங்கத்தில் கைதட்டல்

அந்த மேடையில் இருந்து இறங்கிய மணிக்கு வெளிக்காற்று வாங்க வேண்டும் என்று தோன்றியதுஅவனது கண்கள்அவனது உதவியாளர்களை தேடியதுசில நொடிகள் அவனது தேடலை உணர்ந்துஅவனை நோக்கி வந்தனர்மணி, exit எங்கே என்று கேட்கஅவனை அழைத்துச் சென்றனர்வெளிக்க காற்றை சுவாசிக்கஅவனது மனதின் படபடப்பு கொஞ்சம் அடங்கியது

"ஹலோ!! மிஸ்டர் மணிகண்டன்!!" என்ற சத்தம் கேட்க திரும்பி பார்த்தான்.

தலையில் டர்பனும்முகத்தில் முக்கால்வாசி தாடியுமாகஅந்தக் கருத்தரங்கில் இவன் பாராட்டிப் பேசிய, 35 வயதுமான்ஜீத் சிங்இவனை நோக்கி கை நிட்டினார்அருகிலேயே டர்பனும்தாடியுமாகஇன்னொருவன்கை கொடுததான்மணியின் உதவியாளர்கள்கொஞ்சம் தள்ளிச்சென்று நின்றார்கள்

"மை பிரதர்பல்விந்தர்!!" அருகில் இருந்தவனைஅறிமுகப் படுத்தினார்மணிஅவனுடனும் கைகுலுக்கினான்.

"தேங்க்ஸ்!!" என்ற பல்விந்தரைகேள்வியாக பார்த்தான் மணி.

"For your compliments!!" (என் அண்ணனை பாராட்டி பேசியதற்காக), அவன் சொன்னதும்சிரித்தான்மணி

"It's purely business Balvinder!!.... I have 18% stake in your brothers company!!,.... marketing strategy!! (அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை!! இது வியாபார தந்திரம் பல்விந்தர்!!, உங்க அண்ணன் கம்பெனில முதலீடு பண்ணி இருக்கேன்!! 18 சதவிகிதம்)!!" என்று சிரித்தவாறே கண்ணடித்தான் மணிசம்பந்தமே இல்லாமல் கேளிக்கையான ஒரு மூடில் இருந்தான்அண்ணன்தம்பி இருவரது முகத்திலும் ஈயாடவில்லை.

"Just kidding!! your brother deserves all the praise and more!! (சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்!! அத்தனை வார்த்தைகளும் தகுதியானவர் உங்க அண்ணன்!!)" என்று சொல்லி மீண்டும் கண்ணடித்தான்

அண்ணன்தம்பி இருவரும் சிரிக்கமான்ஜீத் சிங்கிடம்பொதுவாக பேச ஆரம்பித்தான்இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுதுபல்விந்தரின் மொபைலுக்கு தொடர்ந்து அழைப்பு வந்துகொண்டே இருந்ததுஅதுஒவ்வோரு முறை அடிக்கும்போதும்அழைப்பைத் துண்டித்துவிட்டுஇவர்களின் கலந்துரையாடலில்கலந்து கொள்ளவே முற்பட்டான்ஆனால் விடாமல்மீண்டும் அவனது தொலைபேசிக்கு அழைப்பு வந்ததுஎதேச்சையாக அவனது மொபைலின் தொடுதரையை பார்த்த மணியின் கண்களில் "wifey" என்று பட,

"Come on, attend the call!!" என்றான் மணிஅழைப்பை எடுத்த பல்விந்தர்அதை காதுக்கு கொடுத்தஇரண்டு நொடியில்

"பானு!!" என்றவன் முகத்தில் பரபரப்புஇவர்களை நோக்கி திரும்பியவன்தான் போகவேண்டும்அவசரம் என்று கை காட்டியவாறுஹோட்டலினுள் நடக்க ஆரம்பித்தான்

"பானு!!...என்ன ஆச்சு?" ஆந்த பஞ்சாபியிடம்தமிழ்க் கேட்டதும்எங்கோ சற்றென்று இடித்தது மணிக்கு.

"வாட் இஸ் யுவர் பிரதர்ஸ்நேம்!!" தெரிந்து கொண்டே கேட்டான்

"பல்வீந்தர் ரஞ்சித் சிங்!! வீ கால் ஹிம் ரஞ்சூ!! Why?" என்று கேட்ட மான்ஜீத் சிங்கிடம்ஒன்றும் இல்லை என்று தலையசைத்தவன்தன் கிளம்ப வேண்டும் என்று அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு வேகமாக நடந்தான்.

"Get me in a car!!, இப்போவே டெல்லியில் இருந்து கிளம்பறோம்!!" என்று சங்கரபாணியிடம் சொல்லிவன்அருகிலிருந்த வந்த உதவியாளரிடம் சிகரெட்டை கேட்டான்.

சங்கரபாணிமணி இட்ட பணியை செய்து முடிக்க கிளம்பினார்பொறுமை இல்லாமல்பார்க்கிங் நோக்கி நடக்கஅருகிலிரந்த உதவியாளர் 

"சார்லாபி இந்த பக்கம்!!” என்று கை காட்டினான்உதவியாளர் கை காட்டிய திசையில் வேகமாக நடக்க ஆரம்பித்தான்அவன் லாபியை அடைந்த சில நொடிகளுக்குள் கார் வந்துவிடமுப்பது நொடி கழித்துஅவன் அமர்ந்திருந்த கார்அந்த ஹோட்டலின் கேட்டைத் தாண்டியதும்தான்இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சைவிட்டான் மணிஇன்னும் அவனது பதட்டம் தனியவில்லைமொபைலை எடுத்தவன்நேத்ராவுக்கு அழைத்தான்காதுக்கு அழைபேசியைக் கொடுத்திருந்தவன்அந்த அழைப்பு எடுக்கப்பட்டதும்

மது யுஸ்ல இருக்கானு சொன்ன?”

அதுக்கு இப்போ என்ன?” 

"அவஇங்கடெல்லில இருக்கா!! இப்போ!!” என்றவன் எதிர்முனையில் பேசியவரின் பதிலை எதிர்பார்க்காமல்அழைப்பை தூண்டித்தான்

"லைட்டர்என்று கேட்டவாறு சீகிரெட்டைஉதடுகளுக்கு கொடுக்கஅதன் நுனி பற்றவைக்கப்பட்டது

ஐந்து வருடங்களுக்குப் பிறகுமீண்டும் சீகிரெட்டை புகையை உள்ளிலுத்தான்உள்ளிலுத்த புகையைமூக்கின் வழியேவெளியேற்றியவாரேகாரின் கண்ணாடியை இறக்கினான்

************

அதே நேரம்அந்த கருத்தரங்கு நடந்த ஹாலில்

"வாட்?” என்ற பல்வீந்தர் ரஞ்சித் சிங்கின் முகத்தில் விவரிக்க முடியாத அதிர்ச்சி

அவனுக்கு எதிரேதுடைக்கதுடைக்கநிற்காமல் வலிந்து கொண்டிருக்கும் கண்ணீருடன் மதுஇருகைகளாலும் முகத்தை மூடி அழுந்த துடைத்தவன்

“the tennis guy?” என்றான்பதில் தெரிந்திருந்து நம்ப முடியாமல் மீண்டும் கேட்டான்

கீழ் உதடுகளை பற்களால் கடித்தவாரேமேலும் கிலுமாக தலையசைத்தவளிடம் இருந்துவிசும்பலின் சத்தம்

P.S

தொழிலைப் பற்றியும், அவனுது டென்னிஸ் வாழ்வின் இழப்பைப் பற்றி பேசுவது போல், மனம்விட்டு யாரிடமும் கூறக் கூட முடியாத, அவனது காதலையும், அதன் இழப்பையும், அதன் வலியையும் மணி கூற, அவன் பேசியதன் மொத்த அர்த்தத்தையும் புரிந்து கொள்ள கூடிய, ஒரே உயிர், அதே அரங்கத்தில் தான் இருந்த்து என்று அவன் அறிந்திருக்கவில்லை.
[+] 4 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 28-01-2021, 12:23 AM



Users browsing this thread: 23 Guest(s)