Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறது. 40 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டமன்றத் இடைத்தேர்தலிலும் களமிறங்கும் கமல்ஹாசன், கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அரசு வேலைகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு, 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலை, விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுகளுக்கு மேல் 100% லாபம் கிடைக்க நடவடிக்கை, மீனவர்களுக்கு நவீன கருவிகள், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான சூழல், ரேசன் பொருட்கள் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கப்படும், கல்லூரிகள், அரசு நிறுவனங்கள், பேருந்து நிலையங்களில் இலவச வைஃபை உள்ளிட்ட பல வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பிக்பாஸ் போல் குறும்படம் ஒன்றை பிரமாண்ட எல்.இ.டி. திரையில் போட்டுக் காட்டினார் கமல்ஹாசன்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவிட்டதாக குற்றம்சாட்டிய கமல்ஹாசன், அதை நடித்தும் காட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சாதனை தமிழக இளைஞர்கள் அனைவரையும் ட்விட்டருக்குக் கொண்டுவந்தது தான். சவ்கிதார் எனத் தன்னை சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி, ஏழைகளின் காவலர் அல்ல. பணக்காரர்களின் காவலர் என்றும் கமல் குற்றம்சாட்டினார்.

அதே கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன். நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 25-03-2019, 09:54 AM



Users browsing this thread: 95 Guest(s)