அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
தொடர்ச்சி......

**************

ஒரு சனிக்கிழமை மாலை நேரம்ஒரு திருமண வரவேற்பில் அமர்ந்து இருந்தான்

மேடையில் சந்தோஷமாக சிரித்துக் கொண்டுபுகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் ஜினாலி ஜெயின்அருகிலேயேமறுநாள் அவளுக்கு கணவனாகப் போகும் மார்வாடி பையன்சற்றுமுன்பரிசுப் பொருளைக் கொடுத்து விட்டுகிளம்பி விடலாம் என்று இருந்தவனைமுக்கியமான ஒரு விஷயம் பேச வேண்டும் என்று வலுக்கட்டாயமாககாத்திருக்க சொல்லியிருந்தாள்ஜினாலிமணிமொபைலை நோண்டி கொண்டிருந்தான்

"வெயிட் பண்ணதுக்கு தேங்க்ஸ்!!" என்ற ஜினாலியின் குரல் கேட்கநிமிர்ந்து பார்த்தான்

சிரித்துக்கண்டிருந்தாள்அருகிலேயே அவளது வருங்கால கணவனும்மணிபதிலுக்கு இருவரையும் பார்த்து சிரித்தான்.

"இவர்யாருன்னு தெரியும்ல?" வருங்கால கணவனிடம் கேட்டாள்ஜினாலிஅவனும்தெரியும் என்பது போல் தலையசைத்தான்.

"சரி!! எனக்கு ப்ரொபோஸ் பண்ணு!!" ஜினாலிமணியைப் பார்த்துதிடீர் என்று கூற ஆண்கள் இருவரும் திகைத்தனர்

"வாட் இஸ் திஸ்?!!" ஆண்கள் இருவரும் ஒரே போல் குரல் எழுப்ப

வாட்?” என்று திருப்பிக்கக்கேட்டவள்

"எனக்கு ரூட் போட!!, என் பின்னால கொஞ்சநாள் சுத்துன இல்ல?" வருங்கால கணவனின் அதிர்ச்சியை கண்டுகொள்ளாமல்மணியைப் பார்த்து சீரியஸாக கேட்டாள்மணிஆமோதிப்பாக தலையாட்டினான்.

"அப்ப ப்ரொபோஸ் பண்ணு!!" ஜினாலியின் சிரிப்பு கொடுத்த தைரியத்தில்அவளுக்கு ப்ரபோஸ் செய்தான்மணிமணி புரோபோஸ் செய்ததும்தன் வருங்கால கணவனிடம் திரும்பிய ஜினாலி

"பாத்துக்க!! உனக்காகஇவன வேண்டாம்னு சொல்றேன்!! அதுக்கேத்த மாதிரிஎன்ன பார்த்துக்கணும்!! பார்த்துக்குவியா?" அருகிலிருந்தவனை மிரட்டினாள்நீண்ட நாட்களுக்குப் பிறகு எளிருகள் தெரிய சிரித்தான்மணி.

"இப்ப சரின்னு சொல்லிட்டு!!, அப்புறம் ஏதாவது ப்ராப்ளம் பண்ணுன........." மீண்டும் மிரட்டியவள்மணியிடம் திரும்பி

"நான் எப்ப வந்தாலும் என்ன அக்சப்ட் பண்ணிப்ப!! இல்ல?" என்று கேட்கசிரித்தவாறே அதற்கும் ஆமோதிப்பாக தலையாட்டினான்மணிஇருவரையும் மாறி மாறிப் பார்த்தான் மைதாமாவிடம் சிக்கி சீர் அழியப்போக்கும் அந்த அப்பாவிசிரித்தவள்மணியிடம் தேங்க்ஸ் என்றாள்இருவரிடமும் கை கொடுத்துவிட்டுஅங்கிருந்து கிளம்பினான்மணிகாரில் ஏறியதுமேஅவனது முகம் இருண்டதுஅவன் முகத்தைப் பார்த்தவர்கள்சற்றுமுன் எளிருகள் தெரிய சிரித்துக் கொண்டிருந்தான் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்

அரை மணி நேரம் கழித்துரெசிடென்சி ஹோட்டலின்அறை எண் 303ல்சோபாவில் அமர்ந்தவாறுஅருகில் இருந்த டேபிளில்அவனும்மதுவும்மாலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெறித்துக் கொண்டிருந்தான்மனம் விட்டுச் சிரித்தால்நொடியே அவனது குற்ற உணர்ச்சியும்அவன் மனதின் ஏக்கமும்அவன் உயிரைப் பிடித்து குலுக்க ஆரம்பித்துவிடும்மது இல்லாமல் தன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதைஅவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையாஅல்லது அவள் இல்லாத மகிழ்ச்சி உலகத்துக்காக அவன் போடும் வேடமாஎன்பதை அவன் மட்டுமே அறிவான்.

*************

மணியின் இருபத்தி ஐந்தாவது பிறந்தநாள்.

குலதெய்வம் கோவிலிலும்அவனது  பெரியப்பாவின் சமாதியிலும்வணங்கிவிட்டுபழனி வீட்டில் இருந்தனர்அனைவரும்எப்பொழுதும் தனது பெரியப்பாவின் சமாதிக்குச் சென்றால்தனியாக இருந்து விட்டுவரும்மணிக்குஇன்று அப்படி இருக்க தோன்றவில்லைமொபைலை எடுத்துநோண்டிக்கொண்டிருந்தான்ஒரு மனிதனின்முழு வாழ்க்கைக்குமான அனுபவங்களைகடந்த ஏழு வருடங்களில் அவனுக்கு கிடைத்து விட்டதைப் போல தோன்றியதுஅவனுக்குமுன்புபோல் மனம் அலைபாய வில்லைஒருவாராகவாழ்க்கையின் நிதர்சனத்தை உணர்ந்து இருந்தான்இருந்தும் ஒரு சின்ன எதிர்பார்ப்புமதுவிடம் இருந்து ஒரு வாழ்த்து செய்தியோஒரு அழைப்போவந்து விடாதா என்றுஅப்படி வந்தால்அதன் பின் அவர்களுக்குள்ளான உறவுஎப்படி இருக்கும் என்பதைப் பற்றியெல்லாம்அவன் யோசிக்க விரும்பவில்லைதானே மதுவுக்கு அழைத்து பேசலாமாஎன்றுகூடஒரு நொடி யோசித்துபின் அந்த யோசனையை அரைநொடியில்நிராகரித்தான்அலைபேசியின் தொடுதிரையில்கழுத்தில் மாலையுடன்அவனும்மதுவும் இருக்கும் புகைப்படத்தை பார்த்தவனின் உதடுகளில்இதுபோதும் வாழ்க்கைக்கு என்பது போல்ஒரு திருப்தியான புன்னகைகண்களை சில நொடிகள் மூடிமூச்சுவிட்டவன்மீண்டும் ஒருமுறைஅந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டுதொடுதிரையை அனைத்து வைத்தான்.

அம்மாதாத்தாஆச்சீ என்று மூவருடன்இரவு உணவை உண்டு முடித்தவன்சிறிது நேரம் அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டுஎழுந்துஅவனது அறைக்கு வந்தான்கட்டிலில் படுத்திருந்தவன் மனது முழுவதும்அவனது பதினெட்டாவது பிறந்தநாளின் நினைவுகள்அது அவனுக்கு மகிழ்ச்சியை கொடுத்த அதே அளவு ஏக்கத்தையும் கொடுத்ததுஎதேனும் ஒரு அதிசியம் நிகழ்ந்துகாலையில் விழித்து எழும் பொழுதுமதுவை ஆனத்துக் கொண்டுபதினெட்டு வயது மணியாகரெஸிடெனஸியின்அறை என் 303 ல் விழிக்க மாட்டோமா என்று அவன் மனம் எங்கித்தவித்துசுத்தமாக தூக்கம் வரவில்லைஇன்று தூக்க மாத்திரை உதவியுடன் தூங்குவதில்லை என்றுஉறுதியாக இருந்தான்கதவு திறக்கும்சத்தம் கேட்டு திரும்பசுமா அவனைப் பார்த்து சிரித்தவாறு வந்தாள்.

"இன்னும் தூங்கலையா மா?" மகனைஅம்மா என்று அழைக்கத் தொடங்கியிருந்தாள்சிரித்தான்

சுமாவின் மனதில்மகனின் கல்யாணத்தைக் குறித்து பேசவேண்டும் என்ற எண்ணம்அவன் கால்மாட்டில் உட்காரதனது காலை நகர்த்திஅவளுக்கு இடம் கொடுத்தான்.

"அதுக்குள்ள உனக்கு 25 வயசு ஆயிடுச்சு!!" என்று சொன்னவள்மகனைப் பார்த்து சிரித்தாள்.

தனது தாய் தன்னிடம் எதோ பேச விரும்புகிறாள் என்று உணர்ந்தவன்எழுந்து அமர்ந்தான்ஏற்கனவே மகனின் கல்யாணத்தைக் குறித்துதனது தந்தையிடம் பேசி இருந்தாள்அதற்கு அவர்இன்னும் இரண்டு வருடம் போகட்டும் என்று சொல்லஅதில் உடன்பாடு இல்லை சுமாவுக்குஇனியாவதுஒரு தாயாக முடிந்த மட்டிலும் தன் மகனுக்கு செய்யவேண்டியதை சரியாக செய்துவிட வேண்டும் என்ற ஏக்கம் ஆவல் மனதில்ஆனால்அவளைக் காட்டிலும்மணியை சரியாக புரிந்து வைத்திருந்தார்அவனது தாத்தாஇருவரின் மனதிலும் ஏக்கம்சுமாவுக்கு மகனின் மானவாழ்வு குறித்த ஏக்கம் என்றால்அவனுக்கோஅவனது பதினெட்டாவது பிறந்த நாளின் நினைவுகள் ஒருபுறம் என்றால்சுமா அந்த அறைக்குள் நுழைந்ததில் இருந்தது அவனது மனதில்இதே போன்றதொரு இரவில் தூக்கத்தில் தவறிப்போன அவனது பெரிய ஆச்சீயின் நினைவுகள்மதுவும்அவனது பெரிய அச்சீயும் அவனது வாழ்வில் ஏற்படுத்திய வெற்றிடம்அந்த வெற்றிடம் கொடுத்திருந்த ஏக்கம்அந்த ஏக்கம் அன்னையின் மடியை வேண்டியதுதன் தாயின் மடியில் படுக்க வேண்டும் என்ற ஏக்கம்கண்டிப்பாக மறுக்க மாட்டாள் என்று அவன் உணர்ந்து இருந்தாலும்ஏனோ தயங்கினான்பின் என்ன நினைத்தானோசுமாவின் மடியில்அவளுக்கு முதுகு காட்டிதலை வைத்துப் படுத்தான்கடந்த சில மாதங்களாக ஒருவருக்கொருவர் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தாலும்தாய்க்கும்பிள்ளைக்குமானமுதல் நெருக்கம்இதுநெக்குருகிப் போனால் சுமாஅவள் பேசவேண்டும் என்று நினைத்தது  எல்லாம்மொத்தமாக மறந்து போயிருந்ததுஅனைத்தையும் மறந்தவள்மகனை தட்டிக்கொடுக்க ஆரம்பித்தாள்.

***************

இன்றிலிருந்து ஐந்து மாதங்களுக்கு முன்நாக்பூரி ஒரு நட்சத்திர விடுதியில் அமர்ந்து இருந்தான்மணி

"சார்!! எல்லாரும் வெயிட் பண்றாங்க!!" என்று அவனது உதவியாளர் சொல்லஎழுந்து அறையை விட்டு வெளியேறினான்.

அன்று காலைநிறுவனத்தின் சார்பில்இரண்டாவது சோலார் பவர் பிளான்ட்க்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்து முடிந்திருந்ததுமகாராஷ்டிராவின்வடகிழக்குப் பகுதி விதர்பாதனி மாநிலம் கோரிக்கையின் பொருட்டுஅவ்வப்போது போராட்டங்கள் வெடிப்பது வழக்கம்அடிக்கல் நாட்டு விழாவின் போதுஅப்படி செயல்பட்ட அமைப்பு ஒன்றுபெரிய அளவில் போராட்டத்தைஅடிக்கல் நாட்டுவிழா நடந்த இடத்தில்நடத்தியதுஅது சம்பந்தமாக பேசுவதற்கு தான்அந்த விழா நடத்தும் பொறுப்பேற்று நடத்திய ஆட்களைகூட சொல்லியிருந்தான்அவன் அறைக்குள் நுழைந்ததுமே அதுவரை இருந்த சலசலப்புகள் அடங்கியதுகாலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தவுடன்இன்று நடந்த விழாவிற்கு பொறுப்பானவர்களைஒருமுறை சுற்றி நோக்கினான்.

"சார்!! ஒரு வாரத்துக்கு முன்னாடியேஅவங்ககிட்ட பேசிகாம்பரமைஸ் பண்ணியாச்சு!!கைநீட்டி காசும் வாங்கிட்டாங்க!!"  

"மூணு மாசத்துல ஆசெம்ப்லி எலக்சன்மூணு டிஸ்ட்ரிக்ட்லஎப்படியும் ஒரு பத்து தொகுதிகளில்அந்த அமைப்புரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு!! அவங்கள கொஞ்சம் கவனமாததான் ஹாண்டில் பண்ணனும்!!" 

"கூப்பிட்டு மறுபடியும் பேசலாம்!!"

"இந்த எலக்சன்லஎதிர்க்கட்சி ஜெய்க்கிறதுக்குத் தான் அதிகமா வாய்ப்பு இருக்கு!!,  ஆனால் இந்த தடவை கலெக்ஷன் பண்டஸ்எதிர்க்கட்சிக்கு அதிகமாக கொடுத்து!!, ஜெயிச்சதும் இவங்களா ஆஃப் பண்ணிரலாம்!!" என்று ஆளாளுக்குஅவர்களுக்கு தோன்றிய யோசனைகளைச் சொன்னார்கள்.

"ஒருவேளை இந்த அமைப்பு ஒரு பத்து இடத்துல ஜெயிச்சா?" பொதுவாக கேட்டான் மணி

"ஜெய்ச்சதுக்கு அப்புறம் அவங்களுக்குகாசு கொடுக்கலாம்!!" என்று ஒருவர் சொல்ல அவரை பார்த்து சிரித்தான்.

"எதிர்க்கட்சிக்கு ஃபண்ட் அதிகமா  கொடுங்கஅந்த அமைப்பு ஒரு இடத்தில் கூட ஜெயிக்க கூடாது!!" என்றான் மணி.

"ஒருவேளை அதையும் மீறி அவங்க ஜெயிச்சாரொம்ப பிராப்ளம் பண்ணுவாங்க!!" தனது கருத்தை தெரிவித்தார் ஒருவர்.

"அப்ப அவங்க ஜெயிக்காம இருக்குறதுக்குஎன்னலாம் பண்ணுனுமோஅத்தனையும் பண்ணுங்க!! காசு வாங்கிட்டு நாணயம் இல்லாம செயல் படுறவாங்ககொள்கைனு வந்தாலும் நாணயம் இல்லாமத்தான் செயல் படுவாங்க!!" என்றான்

தொழில் விஷயங்களில் அவனுக்குள் இருந்த நெருப்பின் கணல்சிறிதும் குறையாமல் இருந்தது.

*************

இரண்டு மாதம் கழித்துநேத்ராவின் வீட்டில்நீண்ட நாட்களாகஇருவரும் மணியைஅவர்களது வீட்டுக்கு வரச் சொல்லி அழைத்துக் கொண்டிருக்கஒருவழியாக இன்றுதான் முதன்முதலாக அவர்களது வீட்டிற்கு வந்திருந்தான்ஞாயிறு மதிய உணவை முடித்துக் கொண்டுமூவரும் கதையை அடித்துக் கொண்டிருந்தனர்.

"டீ குடிக்கிறியா?" என்று கேட்ட,

நேத்ராவைப் பார்த்துகுடிக்கிறேன் என்று தலையசைத்தான்மணிஅவள் எழுந்து சென்றதும்மணி பார்த்து சிரித்த பிரதீப்பின்மணியை கூர்மையாக பார்த்தவாறு,

"நான்!!, ஒன்னு கேட்டா!! தப்பாஎடுத்துக்க மாட்டியே?" கேள்வியுடன் நிறுத்தியவன்பின் 

"மன்னிக்க முடியாத தப்புனு!!, ஒன்னு இருக்கா டா?" சீரியஸாகவே கேட்டான் பிரதீப்அதற்கும் சிரித்தான்மணி.

"இல்ல!!, எவ்வளவு பெரிய தப்பா இருந்தாலும்!! உன்ன அவளோஇல்லஅவள நீயோமன்னிக்க முடியாத தப்புனு ஒன்னு இருக்காஎன்ன?" மீண்டும் கேட்டான் பிரதீப்இந்த முறைகொஞ்சம் சத்தமாகவே சிரித்தான்மணிஅவனின் சிரிப்பின் போலித்தனத்தை உணர்ந்த பிரதீப்பும் விரத்தியாக சிரித்தான்

"பண்ற அயோக்கியத்தனம் எல்லாம் பண்ணிட்டு!! இப்ப திருந்திட்டேன்னு சொல்லிட்டா!!, அந்த அயோக்கியன்யோக்கியமாககிட முடியுமா?" என்று மணியின் சிரிப்பில் இருந்த வலிபிரதீப்பை அதற்கு மேலும்அதைப்பற்றி பேச விடவில்லை.

யாரு யோக்கியன்யாரு அயோக்கியன்?” என்று கேட்டவாறு வந்த நெத்ராவிடம்ஜினாலியின் திருமானதிற்கு சென்ற கதையைச் சொல்லஅவளும் விழுந்து விழுந்து சிரித்தாள்

*********

"எப்படி இருக்கா?" வீட்டை விட்டு வெளியேறிஅவனது காரின் அருகில் சென்றதும்திரும்பி வழியனுப்பவந்த நேத்ராவைப் பார்த்து கேட்டான்.

"நல்லா இருக்காயூஸ்ல இருக்கா!!"

"பேசினியா?" மதுவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் கேட்டான்.

"பேஸ்புக்கில் போட்டோ பார்த்தேன்!! நானும் அவகிட்ட பேசி வருஷம் ஆச்சு!! கடைசியா அவ கல்யாணத் தன்னைக்கு பேசினாது தான்அவளும்அதுக்கப்புறம் பேசலநான் ஒரு கோவத்துல விட்டுட்டேன்!!" 

"முடிஞ்சா, எனக்காக ஒரு தடவை பேசு!!" என்றவனிடம் 

"சரி நான் அவகிட்ட பேசுறேன்!! மாயா யாரு? அன்னைக்கு, நான், உன் ஆபீஸ் வந்தப்ப!!, கதவை திறந்திட்டு வந்தாளே, ஒரு பொண்ணு!!, அவதான் மாயா வா? என்று கேட்ட நேத்ராவிடம் இல்லை என்று தலையசைத்தவன்

"அவ பேரு ஸ்ரீ!!" சிரித்தான்

"யார் அந்த பொண்ணு?" கண்களை குறுக்கி மணியைப் பார்த்து கேட்டாள், நேத்ரா.

"அது ஒரு பெரிய கதை!!, இன்னொரு நாள் சொல்றேன்!!' என்று சிரித்தான்.

"அப்ப மாயா?" குழப்பமாக கேட்டாள்

"நேரம் வரும்போது கண்டிப்பா அவள காட்டுறேன்!! சிரித்தவன், அவளிடமிருந்து விடை பெற்றுச் சென்றான்.

****************

நீகழ் காலம்

மணியின் பெயர் அழைக்கப்படகலந்தாய்வு மேடையில் எறியதும்பலத்த கைதட்டல்சரித்தவன்ஏற்கனவே அமர்ந்திருந்த இருவரிடம் கைகுலுக்கிவிட்டுதனக்கான இருக்கையில் அமர்ந்தான்

இரண்டு மணி நேரம் கழித்துகாரில் பயணித்துக் கொண்டிருந்தான்பதட்டமாக இருந்தான்மணிகாதுக்கு அழைபேசியைக் கொடுத்திருந்தவன்அந்த அழைப்பு எடுக்கப்பட்டதும்

மது யுஸ்ல இருக்கானு சொன்ன?”

அதுக்கு இப்போ என்ன?”

"அவ இங்க டெல்லில இருக்கா!! இப்போ!!” என்றவன் எதிர்முனையில் பேசியவரின் பதிலை எதிர்பார்க்காமல்அழைப்பை தூண்டித்தான்

ஐந்து வருடங்களுக்குப் பிறகுமீண்டும் சீகிரெட்டை எடுத்துப் பத்த வைத்தவன்புகையை உள்ளிலுத்தான்மூக்கின் வழியேஉள்ளிலுத்த புகையை வெளியேற்றினான்

மதுமீண்டும் அவன் வாழ்வில் வந்தாள்

*************
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 18-01-2021, 08:44 PM



Users browsing this thread: 5 Guest(s)