24-03-2019, 12:54 PM
குறை சொன்னாலும், பயிற்சி போட்டியில் இதே பிட்சில் ஆடியிருந்ததால், ஆடுகளத்தைப் புரிந்து அதற்கேற்ப பிளேயிங் லெவனைத் தேர்வு செய்தார் தோனி. ஆர்.சி.பியில் டாப் ஆர்டரில் பார்த்திவ் படேல், மொயின் அலி, ஹெட்மயர் என இடது கை பேட்ஸ்மேன் இருந்ததால், அவர்களை ஆஃப் ஸ்பின்னர்களை வைத்து மடக்க முடியும் என நம்பினார். அதனால், டு ப்ளெஸ்ஸி எனும் பேட்ஸ்மேனை தாரை வார்த்து, ஸ்பின்னர்கள் அதிகம் இருக்கும் வகையில் அணியைத் தேர்வு செய்தார். பவர் பிளேவில் ஹர்பஜனை கீ பிளேயராக பயன்படுத்தினார். ஹர்பஜன் விக்கெட் வீழ்த்தியதைப் பார்த்ததும், ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாகிர் இருவரையும் தங்கள் கோட்டாவை ஃபினிஷ் செய்யவைத்தார். ரெய்னாவும் தன் பங்குக்கு ஒரு ஓவர் போட்டார். இப்படி பிட்சின் தன்மைக்கேற்ப அணியைத் தேர்வு செய்திருந்தார் தோனி.
`இக்கட்டான சூழலில் சரியான முடிவுகள் எடுக்கத் தவறியதே நாங்கள் கோப்பை வெல்ல முடியாததற்குக் காரணமாக இருக்கலாம்’ என போட்டிக்கு முந்தைய பிரஸ் மீட்டில் கோலி சொல்லியிருந்தார். எத்தனை ஆண்டுகளாக இதையே சொல்லிக்கொண்டு இருப்பீர்கள் கோலி!
ஆனால், 'இந்தமுறை உள்ளூர் வீரர்களை அதிகம் பயன்படுத்தப் போகிறோம்' என்று சொல்லியிருந்த கோலி, பிளேயிங் லெவனை சரியாகத் தேர்வு செய்யவில்லை. சேப்பாக்கத்தை பற்றி அக்குவேறு ஆணிவேராகத் தெரிந்திருக்கும் வாஷிங்டன் சுந்தரை, அணியில் எடுத்திருக்கலாம். டி.என்.பி.எல் உள்பட உள்ளூர் போட்டிகளில் ஓப்பனராக சதம் அடித்திருக்கிறார். பவர்பிளேவில் ரன்களை கட்டுப்படுத்தியிருக்கிறார். அவரை சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியில் பெஞ்சில் உட்காரவைத்தது தவறு.
`இக்கட்டான சூழலில் சரியான முடிவுகள் எடுக்கத் தவறியதே நாங்கள் கோப்பை வெல்ல முடியாததற்குக் காரணமாக இருக்கலாம்’ என போட்டிக்கு முந்தைய பிரஸ் மீட்டில் கோலி சொல்லியிருந்தார். எத்தனை ஆண்டுகளாக இதையே சொல்லிக்கொண்டு இருப்பீர்கள் கோலி!