Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
பொதுவாக, டி20 போட்டியின் முடிவுகள் எட்டாவது ஓவரிலேயே முடிவுசெய்யப்படுவதில்லை. ஆனால், ஹெட்மயர்  ரன் அவுட்டாகி பெவிலியின் திரும்பியபோதே, ஆர்.சி.பி-க்கு முடிவுரை எழுதப்பட்டு விட்டது. அதற்குப் பின் நடந்ததெல்லாம் வெறும் சம்பிரதாயம். ஜட்டு பந்தில் கிரந்தோம் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்தபோது 'ரைட்டு... எல்லாம் முடிந்துவிட்டது' என்ற நிலைக்கு வந்துவிட்டனர் ஆர்.சி.பி-யன்ஸ். அவர்களை, `உங்களுக்கு இதென்ன புதுசா...’ என சி.எஸ்.கே-யன்ஸ் அப்போதே கேலி செய்யத் தொடங்கிவிட்டனர். 
சென்னை அணியின் பிளேயிங் லெவனில் ஹர்பஜன் பெயரைப் பலரும் எதிர்பார்க்கவில்லை. கடந்த சீசனில் 12 போட்டிகளில் 7 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார். பிப்ரவரி வரை ஒன்பது மாதங்களாக எந்தவிதமான போட்டிகளிலும் ஆடவில்லை.  ஆடிய ஒன்றிரண்டு டொமஸ்டிக் போட்டிகளிலும் பெரிதாக சோபிக்கவில்லை. அப்படி இருந்தும்  ஹர்பஜனை ஏன் தேர்வு செய்தார் என்ற கேள்வி எழாமல் இல்லை. பரிசளிப்பின்போது சஞ்சய் மஞ்ச்ரேக்கர்கூட  `ஹர்பஜனுக்கு வைல்ட் கார்ட் என்ட்ரியா’என தோனியிடம் கிண்டலாக கேட்டார்.  இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஹர்பஜனை விட்டே பதில் சொல்ல வைத்தார் தோனி. 
[Image: CSk_(6)_02231.jpg]
ஸ்லோ பிட்ச். ரன் எடுப்பது சிரமம். எனவே, பவர்பிளேவில் ரன்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற சென்னை அணியின் கேம் பிளானை பக்காவாக நிறைவேற்றினார் ஹர்பஜன். கிட்டத்தட்ட ஒரே லென்த். பெரும்பாலான பந்துகள் குட் அண்ட் ஃபுல் லென்த்தில் ஒரே இடத்தில் பிட்சானது. மூன்றே மூன்று பந்துகள் மட்டுமே ஷார்ட் லென்த்தில் விழுந்தது. அந்த மூன்று பந்துகளிலும் விக்கெட். விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் என்ற பெரு முதலைகளை ஹர்பஜன் பிடித்து விட, எஞ்சிய மீன்களை ஜடேஜா, இம்ரான் தாஹிர், தீபக் சாஹர் பார்த்துக் கொண்டனர். சென்னையின் வெற்றி எளிதானது.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 24-03-2019, 12:53 PM



Users browsing this thread: 79 Guest(s)