24-03-2019, 12:53 PM
சி.எஸ்.கே Vs ஆர்.சி.பி. தோனி வெர்சஸ் கோலி. இந்த சீசனின் முதல் மேட்ச். ரைவல்ரி எப்படி இருந்திருக்க வேண்டும். உப்பச் சப்பில்லாமல் முடிந்துவிட்டது. ஆர்.சி.பி-யில் பார்த்தீவ் படேல் தவிர்த்து யாரும் சிங்கிள் டிஜிட்டைத் தாண்டவில்லை. வெற்றி இலக்கான 71 ரன்களை அடிக்க 18-வது ஓவர் வரை உருட்டிக் கொண்டிருந்தது சி.எஸ்.கே. விக்டோரியா ஹாஸ்டல் ரோட்டில் இரவெல்லாம் காத்திருந்து டிக்கெட் வாங்கியவனும் சரி, அடித்துப்பிடித்து புக் மை ஷோவில் டிக்கெட் புக் பண்ணியவனும் சரி, புலம்பாத குறைதான். டிவி-யில் பார்த்தவர்களும் கொட்டாவி விட்டுக்கொண்டேதான் பார்த்திருப்பார்கள்.
ஏற்கெனவே சொன்னதுபோல, இந்த மேட்ச் முரண்களால் நிறைந்திருந்தது. பொதுவாக, எந்தப் போட்டியாக இருந்தாலும் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஹோம் கிரவுண்ட் என்பது உள்ளூர் அணிக்குச் சாதகமாகத்தான் இருக்கும். சென்னை பிட்ச் சுழலுக்குச் சாதகம் என்பது ஊரறிந்த விஷயம். இருந்தாலும், இவ்வளவு ஸ்லோவாக, பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கோலி, தோனி இருவருமே பிட்ச் மீது அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
`பிட்ச் இப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நேரம் செல்லச்செல்ல களத்தில் பனியின் தாக்கம் எதிரொலிக்கும் என்பதால், 140- 150 என்பது கெளரவமான ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தேன். பொதுவாக, டி-20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுக்க வேண்டும், அதை சேஸ் செய்ய வேண்டும் என்றுதான் இரு அணிகளும் விரும்பும். அதனால், இரு தரப்பும் இதுபோன்ற பிட்சில் விளையாடுவதை விரும்பாது என்றே நினைக்கிறேன்’’ என்றார் கோலி. அவராவது பட்டும்படாமல் சொன்னார். ஆனால், தோனி பட்டவர்த்தனமாகவே அதிருப்தி தெரிவித்து விட்டார்.
``இந்த பிட்ச் 2011 சாம்பியன்ஸ் லீக்கை நினைவுபடுத்துகிறது. அந்த சீசனில் ஐ.பி.எல் வென்றிருந்தோம். திரும்பிவந்தபோது பிட்ச் திருத்தி அமைக்கப்பட்டது. கணநேரத்தில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. அதேபோல, இந்தப் பிட்சின் தன்மை இப்படியே நீடித்தால் நாளை எங்களுக்கும் சிக்கல் ஏற்படும். அதிக ரன்கள் குவிக்கும் வகையில் பிட்சை தயார்படுத்த வேண்டும்’’ என்றார் தோனி. அவர் மட்டுமல்ல, `ரன் குவிப்பது கடினமாக இருந்தது. 4 நாள் ஆட்டம் (ரஞ்சி) ஆடுவது போல இருந்தது பிட்ச்’’ என்றார் அம்பதி ராயுடு. ஆக, தோனி சொன்னதை வேதவாக்காகக் கொண்டு, அடுத்த போட்டிகளில் பிட்சை தயார்படுத்த வேண்டியது பிட்ச் கியூரேட்டரின் கடமை. இல்லையெனில், கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக சி.எஸ்.கே ரொம்பவே திணறும்.