"ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க"
#80
ஏரியைச் சுத்தி அமைஞ்சிருக்கிற இந்த பகுதி அடர்த்தியான வனம் நிறைந்த மலைகளால் சூழப்பட்டு பாக்கிறப்போ ரொம்ப சூப்பரா இருக்கும். ப்ராணீகத்தின் படி ஒரே நேரத்துல ஏரியோட ஒன்பது கோனங்களையும் யாரால பாக்க முடியுதோ, அவர் மேக மண்டலத்தில் கரைஞ்சு. புண்ணையத்தை அடைஞ்சிடுவாங்க சொல்றாங்க.

“ஆமாங்க. மடிப்பு மடிப்பா மலைகளும், பச்சைப் பசேல்ன்னு சமவெளியும், பாக்க பாக்க ரொம்ப அழகா இருக்குங்க. ஆமா, வருஷம் பூரா இங்க மக்கள் கூட்டம் இருக்குமா?”

“ஆமாம் அர்ச்சனா. வருஷம் முழுவதும் இந்த இடம் கூட்டமாதான் இருக்கும். பலவித பறவைகளை கண்டு க்ளிக்க, ட்ரெக்கிங்க் செய்ய, பாரா கிளைடிங்க் செய்ய இங்க வசதி செஞ்சிருக்காங்க. ட்ரெக்கிங்கும், பாரா கிளைடிங்கும் போலாமா?”

“வேண்டாங்க. மீனாவ தனியா விட்டுட்டு வந்தது என்னவோ போல இருக்கு. அடுத்த இடத்துக்கு போலாம்.”

கார் இரானிகெட்டை வந்தடைந்தது.


“இதுதான் அர்ச்சனா இரானிகெட். அல்மோரா மாவட்டத்தின் மலைப் பிரதேசம். இராணுவப் பாசறை நகரம். இமயமலைத் தொடரின் அழகை நமது கண்களுக்கு விருந்தளிக்கும் இடம். அடர்த்தியான ஓங்கி உயர்ந்து வளர்ந்த பைன் மரங்களால சூழப் பட்டிருக்கிற இந்த மலை வாசஸ்தலம், நைனிடால்ல இருந்து 63 கிமீ தூரத்துல இருக்கு.”

“அவ்வளவு தூரமா வந்திருக்கோம்.”

“ஆமாம் அர்ச்சனா. இயற்கை அழகை ரசிச்சிகிட்டே வந்ததாலே, இவ்வளவு தூரம் வந்ததே தெரியல.”

“ஏங்க... இந்த இடத்தப் பத்தி சொல்லுங்களேன்.”

“.இராஜா சுதர்தேவ், அரசி இராணி பத்மினி மேல தீவிரமா காதல் கொண்ட இந்த இடத்த அரசியின் இருப்பிடமாகவே மாத்த முடிவு செஞ்சு உருவாக்கிய இடம்தான் இது.”

“ ம்...”

“இராணியின் இடம் என்ற பொருள் படும் வகையில் இதற்கு பின்னாளில் இராணிகெட் என்ற பெயர் வந்துள்ளதா புராணக் கதைகள் உண்டு. இங்கே மிகப் பெரிய போலோ மைதானம் இருக்கு. ஜூலா தேவி மந்திர் மற்றும் காளி தேவிகா மந்திர் என்ற இரண்டு ஆலயங்களால் இந்த இடம் பிரசித்தி பெற்றுள்ளது.”

“இராஜாவுக்கு அவ்வளவு லவ்வா ராணி மேலே?!!”




ஆமாம். நான் மட்டும் இராஜாவா இருந்திருந்தா, இந்த இடத்துக்கு ‘மீனாகெட்’ன்னு பேர் வச்சிருப்பேன்.”

“ம்.... அண்ணனைக் கேட்டா ‘அர்ச்சனாகெட்’ன்னு பேர் வச்சிருப்பேன்னு சொல்வார். அவங்க அவங்க தலையிலே என்ன எழுதி இருக்கோ அதுதாங்க நடக்கும். எனக்கு பசிக்குது. அங்க மீனா வேற தனியா இருப்பா. வாங்க போகலாம்.”

“மல் ரோட்டுக்கு போய்ட்டு திரும்ப இங்க வந்தா ரொம்ப லேட் ஆய்டும் அர்ச்சனா. அதனாலே இங்கேயே கிடைக்கிறதை சாப்டுட்டு, டிபன் டாப் பாத்துட்டு, கடைசியா நைனா சிகரத்த பாத்துட்டு ரூமுக்கு போய்டலாம்.”

“சரிங்க.”
Like Reply


Messages In This Thread
RE: "ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க" - by johnypowas - 24-03-2019, 12:42 PM



Users browsing this thread: 9 Guest(s)