24-03-2019, 12:00 PM
அப்படியானால்..?? அப்படியானால்..?? நான் பார்த்த அந்த சிவப்பு அங்கி உருவம் தாமிராவா..?? ஏன் அவ்வாறு குறிஞ்சியின் அடையாளத்துடன்..?? அவள்தான் இத்தனை நாளாய் என்னை சீண்டிப் பார்த்ததா..?? சிறுவயது முதலே விளையாட்டுப் பெண்தானே அவள்.. ஆவியான பிறகு.. பறவை, விலங்குகளுடன் சேர்ந்துகொண்டு அக்காவுடன் விளையாடுகிறாளா..?? ஆனால் எதற்காகாக..?? என் மீது எதுவும் கோபமா..?? இல்லையே.. கோபமிருந்தால் மணிமாறனிடம் இருந்து என்னை ஏன் காப்பாற்ற வேண்டும்..?? என்னை காப்பாற்றியவள் ஏன் என் கணவரை தூக்கி செல்லவேண்டும்..?? ஒருவேளை.. என்னை காப்பாற்றியது மட்டுந்தான் தாமிராவோ.. என் கணவர் காணாமல் போனதற்கு வேறேதும் காரணம் இருக்குமோ..?? என்னிடம் ஏதாவது சொல்ல நினைக்கிறாளா அவள்..??'
சடசடவென மனதுக்குள் பொங்கிய கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்கும் முன்னரே.. அவள் மூளைக்குள் இப்போது இன்னொரு மின்னல் கீற்று..!! அந்த யோசனை சுருக்கென்று அவளது புத்தியை தைத்ததுமே.. மீண்டும் அவளிடம் ஒரு பரபரப்பு.. அவசரமாய் படிக்கட்டுக்கு ஓடினாள்.. படபடவென படியேறி அவர்களது அறைக்கு வந்தாள்..!!
கணவனின் லேப்டாப்பை கையில் எடுத்துக் கொண்டாள்.. பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்த மெமரிசிப்பை லேப்டாப்பில் பொருத்தினாள்.. ஃபைலை திறக்க பாஸ்வேர்ட் கேட்டபோது, சற்றும் யோசிக்காமல் சரசரவென டைப் செய்தாள்..!!
"கண்ணாமூச்சி ரே ரே..!!" - 'kannamoochirere' என்று ஆங்கிலத்தில் இடைவெளி இல்லாமல்.
படக்கென திறந்துகொண்டது அந்த ஃபைல்.. உள்ளிருந்த அந்த ஃபோல்டர் பார்வைக்கு வந்தது.. 'PRIVATE' என்கிற பெயருடன்..!! அவசரமாக அதை க்ளிக் செய்து திறந்து பார்த்தாள் ஆதிரா..!!
தாமிரா குறிஞ்சியை பற்றி செய்த ஆராய்ச்சியின் மொத்த வடிவமும் உள்ளிருந்தது.. நிறைய வேர்ட் டாகுமன்ட்கள், புகைப்படங்கள், ஒரு சில ஆடியோ ஃபைல்கள்..!! எல்லாமே.. தாமிராவின் ஆராய்ச்சி கட்டுரை, அதற்கான சான்றுகள், விளக்கப்படங்கள், முக்கியமான சிலரது வாக்குமூலங்கள்..!! புத்தகமாகவோ, தொடர் கட்டுரையாகவோ வெளியிடுவதற்கான எல்லா வேலைகளையும் பக்காவாக செய்து முடித்திருந்தாள் என்றுதான் சொல்லவேண்டும்..!!
ஆதிரா சிறிது நேரம் செலவழித்து.. தாமிராவின் ஆராய்ச்சி கட்டுரையை வாசித்து பார்த்தாள்..!! குறிஞ்சியைப் பற்றி தாமிரா மனமுருக பேசிய ஒரு ஆடியோவை ஹெட்ஃபோன் மாட்டி கேட்டாள்..!! வாசிக்க வாசிக்க.. பார்க்க பார்க்க.. கேட்க கேட்க.. ஆதிராவுக்கு தங்கையின் மீது ஒரு பெருமிதம் பொங்கியது.. குறிஞ்சியின் மீது ஒரு பரிதாபம் கொப்பளித்தது..!!
ஹெட்ஃபோனை கழட்டி வைத்த ஆதிரா.. சிறிது நேரம் அப்படியே செயலற்றுப்போய் அமர்ந்திருந்தாள்..!!
'இதைத்தான் தாமிரா என்னிடம் சொல்ல நினைத்தாளா..?? அந்த முயலை அனுப்பி மெமரி சிப்பை என்கையில் சிக்க வைத்தாளா..?? அவ்வப்போது 'கண்ணாமூச்சி ரே ரே' என்று எனக்கு நினைவுபடுத்தினாளா..?? தான் முடிக்காமல் விட்டதை.. ஆவியான பிறகு அக்காவின் துணைகொண்டு முடிக்க நினைத்தாளோ..?? என்ன செய்யலாம் இப்போது..??'
ஆதிரா நீண்ட நேரமெல்லாம் குழம்பவில்லை.. உடனடியாகவே ஒரு முடிவுக்கு வந்தாள்..!! கணவனின் செல்ஃபோனை எட்டி எடுத்தாள்.. அதிலிருந்த நாவரசுவின் நம்பருக்கு கால் செய்தாள்..!! சிபியைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தவரை சீக்கிரமே சமாளித்து.. தான் இப்போது கால் செய்திருப்பதன் காரணத்தை சொன்னாள்..!! அந்த ஆராய்ச்சிக்கட்டுரை எப்படியாவது அச்சில் ஏறவேண்டும் என்ற தன் ஆசையை சொன்னாள்.. அவரும் நிச்சயமாய் நிறைவேற்றி வைப்பதாக வாக்குறுதி தந்தார்..!!
ஆதிரா அவரிடம் ஈ-மெயில் முகவரி வாங்கிக்கொண்டு அழைப்பை துண்டித்தாள்.. ஆராய்ச்சி கட்டுரை மொத்தத்தையும் அப்படியே அந்த ஈ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைத்தாள்..!! என்னவென்று புரியாத ஒருவகை நிம்மதி, அவளது மனதுக்குள் இப்போது பரவ ஆரம்பித்ததை உணர்ந்தாள்..!!
திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய்.. தனது கைபேசியை எடுத்து முகிலனுக்கு கால் செய்தாள்..!! ரிங் சென்றது.. கால் பிக்கப் செய்யப்பட்டதுமே..
"ஹலோ..!!" என்றாள்.
"சொல்லு ஆதிரா..!! எ..என்ன.. இந்த நேரத்துல..??"
"ஒ..ஒன்னுல்ல.. அ..அந்த ஆராய்ச்சி கட்டுரையோட காப்பி எனக்கு கெடைச்சிடுச்சு அத்தான்..!!"
"ஓ..!!" - அடுத்தமுனையில் முகிலன் அதிர்ந்துபோவது அப்பட்டமாக தெரிந்தது.
"அதை மைசூருக்கு அனுப்பிருக்கேன்.. சீக்கிரமே பப்ளிஷ் ஆகப் போகுது..!!"
"எ..என்ன ஆதிரா இது.. என்ன காரியம் பண்ணிட்ட நீ..?? ந..நம்ம குடும்ப கௌரவத்தை பத்தி கொஞ்சமாவது.." முகிலன் ஏமாற்றமாக தடுமாறிக்கொண்டிருக்கும்போதே, அவனை இடைமறித்த ஆதிரா..
"படிக்கிறப்போவே நெஞ்சு பதர்ற ஒரு கொடுமையை.. பணத்திமிர்ல சூழ்ச்சியா செஞ்சுமுடிச்ச ஒரு அக்கிரமத்தை.. ஒரு அப்பாவிப் பொண்ணை, ஒரு ஊரே சேர்ந்து கொளுத்தின கொடூரத்தை.. அந்த உண்மையை இத்தனை நாளா மூடிமறைச்ச அநியாயத்தை.. குடும்ப கௌரவம் பாத்துக்கிட்டு இன்னும் மூடிமறைக்கிறது ரொம்ப ரொம்ப தப்பு அத்தான்..!!" என்று முன்பொருமுறை தாமிரா தனக்கு சொன்னதை, இப்போது அவனுக்கு சொன்னாள்.
"..........................." - அடுத்த முனையில் ஒரு இறுக்கமான மௌனம்.
"எனக்காக ஏதாவது செய்யனுமான்னு காலைல கேட்டிங்களே.. உண்மைலயே உங்களுக்கு என் மேல அன்பிருந்தா.. தயவு செஞ்சு இந்த ஆராய்ச்சிக்கட்டுரை நல்லபடியா வெளிய வரவிடுங்க அத்தான்.. எந்த பிரச்சினையும் பண்ணாதிங்க.. என் தங்கச்சியோட கடைசி ஆசை அத்தான்.. ப்ளீஸ்..!!!!"
கெஞ்சலாக சொல்லிவிட்டு, முகிலனின் பதிலைக்கூட எதிர்பாராமல் காலை கட் செய்தாள் ஆதிரா..!! பேசிமுடித்தவள் சிறிது நேரம் அப்படியே சிலைபோல உறைந்திருந்தாள்.. பரபரப்பாய் இருந்த மனதை இப்போது ஒரு வெறுமை வந்து நிறைத்திருக்க, என்ன செய்வதென்று எதுவும் தோன்றாதவளாய், அந்த லேப்டாப் திரையையே வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்..!!
அப்போதுதான் திடீரென அவளது பார்வையில் அது பட்டது.. அந்த 'PRIVATE' ஃபோல்டருக்குள் அடங்கிப் போயிருந்த இன்னொரு ஃபோல்டர்..!! அத்தனை நேரமாய் ஆதிரா அந்த ஃபோல்டரை கவனிக்கவில்லை.. இப்போது அதை பார்க்க நேர்ந்ததும் அவளுக்குள் மீண்டும் ஒரு பதட்டம்..!!