24-03-2019, 11:58 AM
ந்த பிம்பத்தை பார்த்ததுமே ஆதிராவின் நாடித்துடிப்பு படக்படக்கென எகிற ஆரம்பித்தது.. அவளது இமைகள் அகலமாக விரிந்துகொள்ள, விடாமல் அந்த பாத்திரத்துக்குள் வெறித்தாள்..!! அவளது இருதயம் தறிகெட்டு அடித்துக்கொண்டது.. உடம்பு சில்லிட்டுப் போயிருந்தது.. மார்புக்கூட்டுக்குள் ஒருவித இறுக்கம்.. நாசியில் ஏறிய மகிழம்பூவின் வாசனையால், மூளைக்குள் ஒருமாதிரி கிறுகிறுப்பு..!!
அப்போதுதான் அவளது காதோரமாய் அந்த குரல் ஒலித்தது.. கிசுகிசுப்பாக.. ஏக்கமாக.. அமானுஷ்யமாக..!! அவள் தங்கை தாமிராவின் குரல்..!!!!
"அக்காஆஆஆ..!!!"
அவ்வளவுதான்..!!!! ஆதிரா அப்படியே மிரண்டு போனாள்.. குறிஞ்சியை எதிர்பார்த்து காத்திருந்தவள், தங்கையின் குரலை சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை..!! நாடிநரம்பெல்லாம் ஜிவ்வென்று ஒரு சிலிர்ப்பெடுக்க.. நாற்காலியில் இருந்து படக்கென எழுந்தாள்..!! அவள் எழுந்த வேகத்தில் நாற்காலி தரையில் சரிந்து ஓடியது.. ஆதிரா தடுமாறிப்போய் கீழே விழுந்தாள்.. மரமேஜை கடகடவென ஆடியது.. பளிங்கு பாத்திரம் புரண்டு 'ச்சலீர்ர்ர்' என்று சப்தம் கிளப்பியது.. சுதாரித்துக்கொண்ட செம்பியன் அதிக சேதாரமில்லாமல் அந்த பாத்திரத்தை பற்றினார்..!! அவசரமாய் ஓடிவந்து ஆதிராவை தூக்கினார்..!!
"எ..என்னம்மா ஆதிரா.. என்னாச்சு..??" பதற்றமாக கேட்டார்.
"தா..தாமிரா.. தாமிரா.." அதிர்ச்சியில் வார்த்தை வராமல் திணறினாள் ஆதிரா.
"தாமிரா..??"
"தா..தாமிராவோட குரல்.."
"என்னது..??"
"தா..தாமிரா.. தாமிரா எங்கிட்ட பேசினா அங்கிள்..!!" ஒருவழியாக ஆதிரா சொல்லிமுடிக்க,
"தாமிராவா..????"
செம்பியன் குழப்பமும், திகைப்புமாய் பார்த்தார்..!! அவருக்கு எதுவும் புரியவில்லை.. அவரது முகம் ஒருமாதிரி வெளிறிப்போய் வெறுமையாக காட்சியளித்தது..!!
'இந்த ரூமை இப்போ யாரும் யூஸ் பண்றது இல்ல.. தாமிராதான் அப்பப்போ இங்க வந்து அடைஞ்சுப்பா..'
சற்றுமுன்பு தணிகைநம்பி சொன்னது நினைவுக்கு வர.. அந்த அறைக்குள் ஆங்காங்கே சிதறிக்கிடந்த தாமிரா சம்பந்தப்பட்ட பொருட்களையே, ஒருவித மிரட்சியுடன் பார்த்தார் செம்பியன்..!! என்ன நடந்திருக்கக்கூடும் என்று ஓரளவு அவருக்கு பிடிபட்டது.. ஆனால் அதுவும் முழுதாக தெளிவுபடவில்லை..!! தனது தங்கை ஆவியாக வந்து தன்னை அணுகியிருக்கிறாள் என்பது ஆதிராவுக்கு தெளிவாக புரிந்திருந்தது.. அதேநேரம்.. பளிங்குப் பாத்திரத்துக்குள் தோன்றிய அந்த சிவப்பு அங்கி உருவத்தை நினைத்து அவளது சிந்தனையில் ஒரு குழப்பம்..!!
அந்த அறையின் தட்பவெட்பம் இப்போது பட்டென மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியிருந்தது.. மகிழம்பூ வாசனை காணாமல் போயிருந்தது.. காற்றின் ஈரப்பதம் வற்றிப் போயிருந்தது.. அறைக்குள் மறுபடியும் அந்த அனல் காற்றும், புழுங்கல் நெடியும்..!!
ஆதிராவும் செம்பியனும் அந்த ரகசிய அறையைவிட்டு வெளியே வந்தனர்..!! இன்றே இன்னொருமுறை ஆவியை வரவழைப்பது சாத்தியமில்லாத காரியம் என்றார் செம்பியன்.. முடிந்தால் நாளை இன்னொருமுறை முயற்சி செய்து பார்க்கலாம் என்றுவிட்டு, அங்கிருந்து கிளம்பிச்சென்றார்..!! அவர் போனபிறகு.. உள்ளே நடந்த விஷயங்களை மற்றவர்களுக்கு சுருக்கமாக சொல்லிமுடித்தாள் ஆதிரா.. அவள் சொன்னதையெல்லாம் அதிர்ச்சியாகவும், நம்பமுடியாமலும் கேட்டுக்கொண்டிருந்தனர் தணிகைநம்பியும், வனக்கொடியும்..!!
அறைக்குள் நேர்ந்த நிகழ்வினால் ஆதிரா மிகவுமே தளர்ந்து போயிருந்தாள்.. அப்படியே சோபாவில் வீழ்ந்து எங்கேயோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்..!! வனக்கொடியும் தணிகைநம்பியும் ஆளுக்கொரு மூலையில் சோகமாக உறைந்திருந்தனர்..!!