Adultery ஒரு மனைவியின் தவிப்பு
#75
அன்று வீடு திரும்பின பின் நான் அவினாஷிற்கு ஒரு பாட்டிலில் பால் கொடுத்துவிட்டு அவனை படுக்க போட்டேன். எனக்கும் என் மஹேஷுக்கும் ஒன்னும் பெரிதாக எந்த உரையாடலும் இல்லை. அவர் முகத்தை பார்த்து அவர் எண்ணங்களை புரிந்துகொள்ள முடியவில்லை. நான் என்னை சாதாரணமான நிலையில் இருப்பதுபோல் காண்பிக்க நினைத்தேன் அனால் என்னை மீறி அவரை ஏக்கத்தோடு பலமுறை பார்க்க நேர்ந்தது. அனால் அவர் முகத்தில் எந்தவித எதிர்வினையும் தென்படவில்லை. நான் உணர்ச்சி கலக்கத்தில் இருப்பதை அவர் கண்டும் காணாமல் இருக்கிறாரா அல்லது உண்மையில் கவனிக்க தவறினாரா என்று என்னால் யூகிக்க முடியவில்லை. இத்தனை நாளுக்கு பிறகு இன்று தான்  நான் அவருடன் பேசவேண்டும் என்று துடித்தேன். அனால் அவர் நடந்துகொள்வதை பார்த்தால் அதே நிலையில் அவர் இல்லை என்று தோன்றியது. அன்று அவர் எனக்கு துரோகம் செய்வதை  முதல் முறை நான் பார்த்த போது வந்த வலி இப்போதும் என் உள்ளத்தில் வந்தது. அனால் இந்த வலிக்கு நானே முழுக்க முழுக்க பொறுப்பு. முதல் முறையாக என் மணவாழ்வின் எதிர்காலத்தை பற்றி பயம் வந்ததது.

என் மூர்க்கத்தனமான செய்கைகள் எங்கள் மணவாழ்க்கையை சரி செய்ய முடியாத படி ஆகிவிட்டது என்ற பயம். அந்த அச்சத்தில் என் முதுகெலும்பில் குளிர் நடுக்கம் உண்டானது. அன்று நாங்கள் உறங்கிய போது (அவர் மட்டும் தான் உறங்கினர், நான் அவர் முகத்தை பார்த்தபடி படுத்திருந்தேன்) சமீப காலத்தில் என் உள்ளத்தில் புதைந்து இருந்த அவர் மேல் உள்ள என் காதல், என் பாசம் எல்லாம் பொங்கி வந்தது. என் முட்டாள்தனத்தால் என் வாழ்க்கையில் உள்ள உண்மையான சந்தோசத்தை இழக்கும் செய்கைகளை செய்ய  துணிந்துவிட்டேனே. அவர் நெஞ்சின் மேல் என் கை ஒன்றை தயக்கத்துடன் வைத்தின். அவர் அதை உதறிவிடுவார் என்ற பயம். அவர் அவ்வாறு செய்தல் என்னால் தாங்க முடியாது. அனால் அவர் தொடர்ந்து உறங்கிக்கொண்டு இருந்தார்.

என் கை அவர் உடலை ஸ்பரிசித்த போது என் மனதில் தோன்றிய ஆறுதல் வார்த்தையால் வர்ணிக்க முடியாது. இந்த வாழ்க்கையை இழக்காமல் இருக்க நான் தான் இனி முழு முயற்சி எடுக்க வேண்டும். நான் வெற்றி பெற்றால் நான் பெரும் இன்பத்துக்கு அளவே இருக்காது. அனால் தோல்வியுற்றால் அந்த துன்பத்தை சகித்து கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் அந்த துன்பத்துக்கு நானே பொறுப்பு. இந்த எண்ணங்கள் என் மனதில் ஓட நான் எப்போது உறங்கினேன் என்று எனக்கு தெரியாது. மறுநாள் காலையில் அவருக்கு காலை உணவு எடுத்து வைத்தேன். அவர் முகத்தை பார்த்து தயக்கத்துடன் புன்னகைத்தேன். அவரும் பதிலுக்கு சிறு புன்னகை செய்தார். அந்த சிறு புன்னகை என் உள்ளத்தை இந்த அளவுக்கு சந்தோஷத்தில் ஆழ்த்த முடிவதை நினைத்து வியந்தேன். இந்த நேரம் பார்த்து என் கை தொலைபேசி சினுங்கியது. 

அது அந்த பாவி சிவா தான். அவர் முகம் சட்டென்று மாறியது. நான் கை தொலைபேசி கண்டுக் கொள்ளாமல் அலட்சியம் செய்தேன். சில வினாடிகளுக்கு பிறகு நின்று மறுபடியும் சிணுங்கியது. நான் எரிச்சலோடு அதை ஆப் செய்தேன். அனால் அவன் அந்த ஒரு செயலால் அமைதியான இருந்த சூழ்நிலையை சஞ்சலம் உள்ள சூழ்நிலையாக மாற்றி விட்டான்.
Like Reply


Messages In This Thread
RE: ஒரு மனைவியின் தவிப்பு - by game40it - 24-03-2019, 11:26 AM



Users browsing this thread: 5 Guest(s)