Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
#8
5-வது வீரராக களம் இறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 34 ரன்கள் சேர்த்தார். கேப்டன் டிம் பெய்ன் 5 ரன்னிலும், பேட் கம்மின்ஸ் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

8-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் உடன் மிட்செல் ஸ்டார்க் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். ஆஸ்திரேலியா 88 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. டிராவிஸ் ஹெட் 61 ரன்னுடனும், ஸ்டார்க் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள்.

இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய ஸ்டார்க் 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஸ்டார்க் அவுட் ஆனதும், சிறிதுநேரம் மழை பெய்ததால் போட்டி பாதிக்கப்பட்டது. மழை விட்டதும் நிதானமாக ஆடிய ஹெட் சதத்தை நெருங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 72 ரன்கள் சேர்த்த நிலையில், அவரது விக்கெட்டை ஷமி கைப்பற்றினார். அடுத்த பந்தில் ஹேசில்வுட் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நாதன் லயன் 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் ட்ரெ�... - by johnypowas - 08-12-2018, 11:57 AM



Users browsing this thread: 13 Guest(s)