அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 67

காதுக்கு மொபைலை கொடுத்தவாறு வீட்டுக்குள் நுழைந்தவன், காதில் இருந்தா மொபைலை எடுத்துவிட்டு, அப்படியே நின்றான். அவன் கண்கள் மூடியிருந்தன, முகபாவனைகள் எப்பொழுதும் போல, எந்த உணர்வையும் காட்டவில்லை. தலையை பின்னால் சரித்தவன், சில நொடிகள் சிலைபோல் நின்றான். பின், சோர்வாக நடந்து வந்தவன், சோபாவில் பொத்தென்று விழுந்தான். மணி, வீட்டினுள் நுழைந்ததில் இருந்து, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள், சுமா. கடந்த இரண்டு வருடமாக, இப்படித்தான், தன் மகனை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள். சுமாவின் ஏக்க பார்வைக்கு, இன்றுவரை பதில் அளித்ததில்லை, அவன். தேவைபபட்டால் பேசுவான், சொற்களிலோ, பார்வையிலோ கணிவெண்பது சிறிதும் இருக்காது. எந்திரம் போல் வருவான், செல்வான்.

ஆனால் இன்று, அவனது நடத்தையால், ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று உறுத்தியது சுமாவுக்கு. அவனின் அசைவுகளை கடந்த இரண்டு வருடங்களில் அவ்வளவு புரிந்து வைத்திருந்தாள், அவள். அதை பற்றி அவனிடம் விவாதிக்க வேண்டும், தேவைப்பட்டால் ஆறுதல் அளிக்க வேண்டும், அரவணைக்க வேண்டும் என்று உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருந்தாள். நெருங்கவே விடாதவன், உணர்வுகள் அற்ற, உயிரை உறைய செய்யும் பார்வையில், மன்னிப்பை கூட கேட்க விடாதவன், உணர்வுகளையா வெளிப்படுத்தி விட போகிறான் என்று, தன்னைத்தானே நொந்து கொண்டாள், சுமா. சிறிது நேரம் சென்ற பின்தான், யாரோ அருகில் இருப்பதை, உணர்ந்த மணி, நிமிர்ந்து பார்த்தான். சுமா, சோர்வடைந்த அவன் கண்களை பார்த்தாள், நொடியில் சுதாரித்து கொண்டவன், மொபைலை எடுத்து, அவன் செக்கரட்டரிக்கு அழைத்தான்.

"டாக்குமெண்ட் ரெடி ஆயிடுச்சா?"

"மதியத்துக்கு மேல வர்றேன்!!" பேசியவன், அழைப்பை தூண்டித்துவிட்டு, சோபாவில் இருந்து எழுந்தான்.

"அந்த கிரீன்பவர் டேக்-ஓவர் டாக்குமெண்ட், ரெடியாயிடுச்சுனா!! அதை எடுத்துக்கிட்டு!! தாத்தா, பழனிக்கு வரச்சொன்னார்!! பூஜை பண்றதுக்கு!!" அறைக்கு செல்ல எழுந்தவனிடம் சொன்னாள், சுமா.

ஏனோ அவனிடம் எதுவும் பேசாமல், அறைக்குச் செல்ல அனுமதிக்க அவளால் முடியவில்லை. இதுவரை, அவள் பார்த்திராத, மகனின் சோர்வான நடையும், கண்களும் அவளை உறுத்தியது.

"நாளைக்கு காலைல போலாமா?" அவளுக்கு பழக்கப்பட்ட, உணர்வுகளற்ற பார்வையும், சொற்களும். சரி என்று தலையாட்டினாள், அவன் அங்கிருந்து அகன்றான்.

*************

தனது அறையின் பாத்ரூம் கதவு இடுக்கில், மூன்று விரல்களை வைத்து, கதவை கைகளால் எழுத்து அடைக்க முயன்று கொண்டிருந்தான், மணி. மனவலிமை குறைந்து விட்டதோ? அல்லது உடலின் உணர்வு நரம்புகள் உயிர் பெற்று விட்டதோ? தெரியவில்லை, கதவை அடைத்து, தன்னை காயப் படுத்த முடியவில்லை. வாயில் இருந்த துண்டை பற்களில் கடித்துக்கொண்டு "" வென்று கத்தியவன், வாயில் இருந்த துண்டை எடுத்து முகத்தை மொத்தமாக மூடிக்கொண்டு, பெரிதாக மூச்சுவிட்டுக் கொண்டிருந்தான். கதவு திறக்கப்படும் சத்தம் கேட்க, அவன் திரும்பிய வேகத்தில், முகத்தை மூடியிருந்த துண்டு, கீழே விழுந்தது. சட்டென கதவிடுக்கில் இருந்து, கையை எடுத்துக் கொண்டவன், துண்டை எடுத்துக்கொண்டு பாத்ரூமில் நுழைந்தான்.

அவன் அடைத்துவிட்டு சென்ற கதவையே, அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள், சுமா. ஹாலில் அமர்ந்திருந்தவளுக்கு உறுத்திக்கொண்டே இருந்தது. சரி, வருவது வரட்டும் என்று துணிந்தவள், இரண்டு வருடங்களில், முதல்முறையாக தன் மகனின் அறைக் கதவைத் திறந்தவள், மகனின் இந்த செயலை எதிர் பார்த்திருக்கவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக, அடிக்கடி மணியின் விரல்களில், காயம் எப்படி ஏற்பட்டது என்று உணர்ந்தவள், துடித்துப்போனாள். ஏற்கனவே, குற்ற உணர்ச்சியில் உழண்டு கொண்டிருந்தவளுக்கு, இரண்டு வருடங்களாக, தன் மகன், தன்னையே காயப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்பதை ஜீரணிக்க முடியவில்லை, அவளால். கண்களில் இருந்து கண்ணீர், நிற்காமல் வழிந்தோடியது. இத்தனைநாள், அவன் மன்னிப்புக்காக காத்திருந்தது எவ்வளவு தவறு என்பதை உணர்ந்தாள். இருந்தும், என்ன செய்வதென்று புரியவில்லை அவளுக்கு.

************

பாத்ரூம் கதவை அடைத்தவன், ஷவரை திறந்து அதனடியில் நின்றான். வீட்டிற்குள் நுழையும்முன் நேத்ராவிடம் பேசிய, உரையாடல், அவன் மனதில் ஓடியது.

காலை எஸ்டேட்டில் இருந்து கிளம்பியதிலிருந்து, மதுவும் அவனும், மாலையோடு இருக்கும் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். கார், அவனது வீட்டின் சுற்றுச் சுவருக்குள் நுழையும் போதுதான், ஏதோ தோன்ற, காரில் இருந்து இறங்கும் பொழுது, நேத்துராவுக்கு அழைத்தான்,

"உங்கிட்ட பேசறது எனக்கு விருப்பமில்லை!!" எடுத்தவுடனேயே வெடித்தால் நேத்ரா.

"இந்த ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணு!! அதுக்கப்புறம் சாத்தியமா, உன்ன தொந்தரவு பண்ண மாட்டேன்.......... ப்ராமிஸ்!!" தாழ்ந்த குரலில் கெஞ்சினான், மணி.

"...…….........." எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள், நேத்ரா.

"அவ மாலையோடு இருக்கிற மாதிரி, ஒரே ஒரு போட்டோ மட்டும் அனுப்பி வை!! ப்ளீஸ்!!" மூன்று நாட்களுக்கு முன், தட்டையான, ஏற்றம், இறக்கமில்லாத குரலில் பேசியவன், இன்று தாழ்ந்து பேசியது, நேத்ராவை வெறுப்பேற்றியது.

"நார்த் இண்டியன் மேரேஜ்ல மாலை போடுவாங்களானு எனக்கு தெரியாது!! ஆனால என்ன? செஞ்சது தப்புன்னு, எப்படியும் ஒரு நாலஞ்சு நாள்ல, அவளுக்குப் புரியும்!! அப்படி, புரிஞ்சா அவ என்ன முடிவெடுப்பானு, உனக்கும் தெரியும்!! எனக்கும் தெரியும்!! அப்ப, ரெண்டு பேரும் சேர்ந்து போய், அவளுக்கு மாலை போட்டு, கண்குளிர பாத்துட்டு வரலாம்!! தயவு செய்து இனிமேல் எனக்கு போன் பண்ணாத!!" என்றவள், அழைப்பை துண்டித்து விட்டாள்.

மது, அப்படி முட்டாள்தனமாக எதுவும் செய்ய மாட்டாள் என்று, மூளை அவனுக்கு உணர்த்தினாலும், மனம் நிலையில்லாமல் அலைந்து கொண்டிருந்தது. உடனே அவளைத் தேடிப் போவோம் என்ற மனதை தண்டிக்கவே, கதவிடுக்கில் விரல் வைத்தான். ஆனால், சுமா அப்படி, கதவைத் திறந்து கொண்டு வருவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. மது அப்படிச் செய்ய மாட்டாள், என்ற மூளையின் கட்டுக்குள், மனதை கொண்டு வந்தவன், குளித்து முடித்தான். அறைக்குள் நுழைந்தவன், தன் தாயை கொண்டு கொள்ளாமல், டிரஸ்ஸிங் ரூமுக்குள் நுழைந்து, உடைகளை அணிந்து கொண்டான். மீண்டும், சங்கரபாணிக்கு அழைத்தான். உடனே அந்த கிரீன்பவர் டேக் ஓவர் டாக்குமெண்டை, எடுத்துக் கொண்டு வரும்படி, கட்டளையிட்டான்

"ஒன் ஹவர்ல டாக்குமெண்ட் வந்துரும்!! வந்ததும் பழனி கிளம்பலாம்!!" வழக்கம் போல தன் தாயை, அருகே நெருங்க விடாதவன் முன், அறையிலிருந்து வெளியேறினான்.

****************

அன்று மாலை,

தன் பெரியப்பாவின் சமாதியை வெறித்துக் கொண்டிருந்தான், மணி. எனோ, அவன் மனதில் பரிதாபம், அது அவன் பெரியப்பாவின் மீதா? தன் மீதா? என்பதை, அவன் மட்டும்தான் அறிவான். ஏனோ, அவர் ஏன் செத்தார் என்று அவன் கேட்டதற்கு, இதுவரை, இதுவரை யாருமே சரியான பதிலை சொல்லவில்லை என்பது நினைவுக்கு வந்தது. மீண்டும் அவர், தன்னைப் போலவே ஒரு வாழ்வு வாழ்ந்து இருப்பார் என்று தோன்றியது, அவனுக்கு. ஏனோ அதுவரை, அவனுக்கு சொல்லப்பட்ட, அவரின் மறு பிறப்பு, தான் என்பது உண்மை என்று தோன்றியது. சாமாதியாகும், அவருக்கு, மணி விட ஏழெட்டு வயது அதிகம் இருக்கலாம். மறுபிறப்பில், அந்த ஆயுள் கூட உனக்கு இல்லை என்று தன் பெரியப்பாவை சமாதியைப் பார்த்து நினைத்துக் கொண்டான். ஏனோ, அந்த சமாதியை கட்டிப் பிடிக்க வேண்டும் என்று தோன்றியது.

"என்ன சாமி சந்தோசமா இருக்கீங்க போல!!" என்ற சத்தம், அவன் உணர்வுகளில் இருந்து வெளியே இழுத்து வந்தது. நிமிர்ந்து பார்த்தான், அதே பிச்சைக்காரசாமியார், இவனைப் பார்த்து, சினேகமாக சிரித்தார். அவரைப் பார்த்து விரக்தியாக கூட சிரிக்க முடியவில்லை, மணியால்.

"உலகத்தையே ஜெயிச்ச வெற்றிகளை தெரியுதே, மூஞ்சில!!" என்றார், சிரித்தவாறே. எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். அங்கிருந்து செல்ல வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு, ஆனாலும் இது எங்கள் இடம், நான் எதற்கு செல்ல வேண்டும் என்ற கேள்வி அவனை அங்கேயே அமர வைத்தது. ஏனோ, இந்த முறை அவருக்கு பணம் கொடுக்கக் கூடாது என்று மனதில் நிறுவிக் கொண்டான்.

"என்ன சாமி!! சந்தோசமா இருக்கிங்க போல!! சரிதானே!!" என்றவர், அவன் அருகில் வந்து நின்றார். காவி வேட்டி, கருப்பு சட்டை, சிகை அலங்காரத்தில், எந்த மாற்றமும் இல்லை. அவரை வெறுப்பாக பார்த்தான், வழக்கமான இருக்கிறதா? இல்லையா? என்று தெரியாத சிரிப்பு, அவனது உதடுகளில்.

"சாமி!!, ஒரு பத்தாயிரம் ரூபா கொடுங்களேன்?" கொடுத்து வைத்தவர், போல கேட்டார். இல்லை, என்று மறுப்பாக தலையசைத்தான். அவர் முகத்தில் இருந்த, சிரிப்பின் சசினேகம் கூடியது. அது மணியை உசுப்பேற்றியது, பெரும் தொழில் முதலைகளுடன் அதிகார போர் புரிந்தவன், இன்று, இவர்தான் தனக்கு, இரை என்று நினைத்தான்.

"பகல்ல ஒரே வேக்காடு!!, இப்ப காத்து சிலு சிலுனு அடிக்குது!! மழை வரும் போல!!" மணியிடம் இருந்து, இரண்டடி தள்ளி, அமர்ந்தவர், சட்டையை கழற்றினர்.

"வெள்ளை சட்டை மாதிரிதான், கருப்பு சட்டையும்!! அழுக்குப் பிடிச்ச பளிச்சுனு தெரியும்!!" அவன் கவனிக்கவில்லை என்று தெரிந்தும், தன் செயலுக்கான காரணத்தை சொன்னவர், சட்டையை கழட்டி, மடித்து வைத்தார். அவர் வெற்றுடம்பை பார்த்த மணி, முகம் சுளித்தான்.

"என்ன சாமி!! அருவருப்பா இருக்க?!!" முகத்தில், அதே சினேக, சிரிப்புடன் கேட்டவர், தன் உடலெங்கும் இருந்த, அம்மைக் கட்டிகளை பார்த்துக் கொண்டார். சிறிதும், பெரிதுமாக கட்டிகளும், கட்டிகள் இல்லா இடத்தில், எறும்பு கடித்தது போல் கருப்பு கருப்பாக, வீங்கி விகாரமாக இருந்தது, அவரது உடலில்.

"சாமி!! எனக்கு விவரம் தெரிஞ்சு, என் உடம்பு இப்படித்தான் இருக்கு!! உடம்ப, நாம, கேட்டா வாங்கிட்டு வர முடியும்?!!" என்றவர், விரக்தியாக சிரித்தார்.

"நான் சாமியார் எல்லாம் இல்லை!! இங்கேயும்!! இங்கேயும்!!.... உடம்புல இருக்குற விட பெருசா ரெண்டு கட்டி இருக்கு!! அதுக்குத்தான் தாடி!!" தன் கழுத்தின் இருபக்கமும் விரல் வைத்து காட்டியவர் முகத்தில் மீண்டும் அந்த சினேக சிரிப்பு.

"மன்னிச்சுடுங்க!!" ஏனோ வழக்கம்போல சாரி என்று ஆங்கிலத்தில் வருத்தப்படாமல், மன்னிப்பை வேண்டினான், மணி. சில நொடிக்களுக்கு முன் இரையாக பார்த்தவரிடம்.

"சாமி, நம்மள, நாமதான்!! மன்னிக்கணும்!!" அவர் கைகளை விரித்து உடம்பை முறுக்கினார்.

"சாமி!! நம்மள பாத்து நாமலே அசிங்கப்பட்ட!! இப்படி காத்து வாங்கி, ரசிக்க முடியுமா?" என்று சிரித்தவர்,

"சாமி!! ஒருத்தன் இருந்தான்!! இந்த உடம்ப பார்த்தாலே அவனுக்கு அருவருப்பு!! இந்த உடம்பை கரிச்சுக் கொட்டிக்கிட்டே இருப்பான்!! ஆனால், கூடவே இருப்பான், விலகவும் மாட்டான்!!" என்றவர், நிமிர்ந்து மணியைப் பார்த்தார். ஏனோ இப்பொழுது, அவர் உடம்பில் இருக்கும் கட்டிகள், அவனுக்கு விகாரமாக தெரியவில்லை.

"அது யாருன்னு கேளுங்க சாமி?!!" என்றவரைப் பார்த்து, லேசாக உதடுவிரித்து சிரித்தான்.

"நான்தான்!!" என்றவர், பெரிதாக சிரித்தார்.

தனது வேலட்டை திறந்து பார்த்தான். அதில் வெறும் 5,000 ரூபாய்களே இருந்தது. ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி, கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள், ஆகிறது. இப்பொழுது இருக்கும் பணம் கூட, எப்பொழுது வைத்தான் என்பது நினைவில் இல்லை.

"இவ்வளவு தான் இருக்கு!!" அவரிடம் நீட்டினான். அதை வாங்கி, தலைக்கு மேல், இரண்டு கையையும் எடுத்து கும்பிட்டுவர், மடித்து வைத்த சட்டைப்பையில் அதை வைத்தார்.

"சாமி!! இந்த டிவில, பாட்டு போட்டி வைக்கிறாகல!! அதுல கலந்துக்கலாம்னு இருக்கேன்!! புதுசா ரெண்டு சட்ட துணியும், போட்டிக்கு மதுரையில் ஆள் எடுக்காங்கலாம்!! அங்க போகணும், அதுக்கு தான்!!" செலவுக்கான கணக்கு கொடுத்தார், அந்த பிச்சைக்கார சாமியார்.

"மன்னிச்சிடுங்க!!" எழுந்தவன், மீண்டும் அவரிடம் மன்னிப்பு கேட்டான்.

"சாமி, நம்மள நாமதான்!! மன்னிக்கணும்!!" என்றவர், சத்தமிட்டு சிரித்தார் வெள்ளந்தியாக.

வாயிலை நோக்கி நடந்த மணியின் மனதை, அவர் சொன்னதை காட்டிலும், அந்த பிச்சைக்கார சாமியாரின், அம்மை கட்டிகளும், அதைத் தாண்டிய சினேகமான சிரிப்புமே நிறைத்திருந்தது.

*************

ஆழிப் பெருஞ்சுழி போல், அகோரப் பசியுடன், அவனை உண்டு கொண்டு இருந்தது, அந்தப் பார்வை. கண்ணாடியின் முன்னால் இருந்த டேபிளில், கைகளை ஊன்றிக் கொண்டு, தனது பிம்பத்தின் கண்களில், பார்வையைப் பதித்து இருந்தான், மணி. இரண்டு வருடங்களில் முதல்முறையாக, அவன் கண்களின், பசி தீர்க்கும் இரை, தான்தான் என்பதை உணர்ந்தான்.

ஊத்துல பொங்கினாலும்!!
உப்பாக் கரிச்சா?!!
தேனா இணிச்சாலும்!!
குட்டையில தேங்கினா?!!
தண்ணிய!!,
அள்ளிக் குடிக்க முடியுமா?
அப்படி..
நீ குடிச்சாலும்!!
ஆறா தாகம்.. தீருமா?

அவன் ரோட்டை அடையும் போது, அந்தப் பிச்சைக்கார சாமியார், பாடிய பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது, அவன் மனதில்.

ஆறாத் தாகம் தீர்க்க துணிந்தான்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 09-01-2021, 06:54 PM



Users browsing this thread: 4 Guest(s)