முள் குத்திய ரோஜா(completed)
#1
Heart 
முள் குத்திய ரோஜா
கதை ராஜா 
 ” ஹலோ.. என்னைத் தெரியல.. ?”

எனக் கேட்ட அந்தப் பெண்ணை நான் வியப்புடன் பார்த்தேன். அவள் கண்கள் என்னை ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தன. என்னுடன் அவள் பல நாட்கள் பழகியவள் போல.. என் முன்னால் எனக்கு நெருக்கமாக நின்று உதட்டில் தவழும் புன்னகையுடன் கேட்டாள்.. !!

நான் குழப்பத்துடன் அவளை உற்றுப் பார்த்தேன். அவள் முகத்தில்.. என்னிடம் அவளுக்கு இருக்கும் உரிமையை பறை சாற்றுவது போல.. அப்படி ஒரு மலர்ச்சியும்.. கனிந்த அன்பும் தெரிந்தது. ஆனால் எனக்குத்தான் அவள் யாரென்று தெரியாமல் மூளை குழம்ப யோசித்துக் கொண்டிருந்தேன்.. !!

” ஸ்ஸாரி…” எனத் தடுமாறியபடி அவள் கழுத்தில் அவளது அடையாளத்தை தேடினேன். ஒரே ஒரு தங்கச் சங்கிலி மட்டும்தான் இருந்தது. தாலி என்கிற அடையாளம் தென்படவில்லை.. !

” ம்ம்.. ! சரிதான்.. என்னையெல்லாம் உங்களுக்கு சுத்தமா நாபகமில்லேனு தெரியுது.. !” எனச் சிரித்த அவளின் ஈர இதழ்கள்.. கவர்ச்சியாய் இருந்தது. மெலிந்த அந்த இதழ்கள் மிகவும் க்யூட்டாக இருந்தன.

நீள் வட்ட முகம் கொண்ட இவ்வளவு அழகான ஒரு பெண்ணுக்கு என்னைத் தெரிந்திருக்கும் போது எனக்கு மட்டும் எப்படி இவளை தெரியாமல் போனது.. ?? என்னுடன் படித்தவளா. ? என் வகுப்பா..? இல்லை என் ஊர்.. உறவுக்காரியா.. ? சில நொடிகளில் எல்லா வகையிலும் யோசித்துக் குழப்பித் தவித்தேன்…!!

” மிஸ்.. உங்க நேம்.. ?”

” நிலாவினி.. !! ” வெகு இயல்பாக சிரித்துக் கொண்டே சொன்னாள்.

” நிலாவ்வினி.. ???? நைஸ் நேம்.. பட்… ”

” புரியுது. உங்களுக்கு என்னை அடையாளம் தெரியலேன்னு..! இட்ஸ் ஓகே. ரொம்ப போட்டு உங்க பிரெய்ன குழப்பிக்காதிங்க.. !!”

” ஸ்ஸாரி.. ! நெஜமா எனக்கு தெரியல. நீங்க யாருனு சொன்னிங்கனா.. ?”

” இட்ஸ் ஓகே. ! அதை இப்படி நின்னுட்டேதான் பேசணுமா. ? வாங்களேன் ஒரு காபி சாப்பிட்டே பேசலாம்..” என்றாள்.

இவ்வளவு தூரம் உரிமை உள்ளவளா..? யாராக இருக்கும்.. ? என் மனைவியின் தோழியோ.. ? இல்ல உறவுக் காரியோ.. ??

மெதுவாக தலையாட்டி விட்டு.. அவளுடன் இணைந்து நடந்தேன். மெரூன் கலரில் இருந்த அவளின் சுடிதார் துப்பட்டா அவள் நடக்கையில் என் மீது வந்து இயல்பாகப் பட்டு விலகியது.. !!

மாலை நேரம் என்றாலும் இன்னும் சூரியன் மறையவில்லை என்பதால்.. அந்த ரெஸ்டாரண்ட் கொஞ்சம் கூட்டம் குறைவாக இருந்தது. ஒரு ஓரமாகச் சென்று எதிரெதிரே அமர்ந்தோம். அவள் மீதிருந்த வியப்பு எனக்கு இன்னும் குறையவில்லை. இரண்டு காபிகளுக்கு மட்டும் ஆர்டர் கொடுத்து விட்டு நான் அவளைப் பார்த்தேன்.. !! பளிச்சென இருந்த அவள் முகம் அவ்வளவு அழகாக இருந்தது. அந்த முகத்தைப் பார்த்த போது.. என் மூளையில் அவள் முகம் எஙகோ ஒரு மூலையில் பதிவாகி இருப்பதை என்னாலும் உணர முடிந்தது. ஆனால்.. எங்கே என்றுதான் தெரியவில்லை.. !!
நிலாவினி.. !! பெயர் மட்டும் அல்ல.. அவளும் அழகாகத்தான் இருக்கிறாள்.. !! ஆனால் யாரிவள்.. ?? என்னை நன்றாக தெரிந்ததைப் போல பேசுகிறாள். பழகுகிறாள்.. !! ஆனால் எனக்கு இவளை சுத்தமாகத தெரியவில்லை.. !!
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
முள் குத்திய ரோஜா(completed) - by johnypowas - 08-12-2018, 11:53 AM



Users browsing this thread: 1 Guest(s)