நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#47
“ஆமா. மணியேதான்.”

என்று சொன்ன அந்தப் பெண்மணி வனிதாமணியை அப்படியே அணைத்துக்கொண்டார்.
அதில் ஒருவித வாஞ்சை தெரிந்தது.
எத்தனை வருடங்களாச்சு உன்னைப் பார்த்து? எப்படி இருக்கே? எத்தனை பிள்ளைங்க? ….”

மூச்சு விடாமல் கேள்வி மேல் கேள்வியாக கேட்ட தன் பால்ய சிநேகிதி மணிமேகலையைப் பார்த்து “நீ மாறவேயில்லை” என்று சொல்லிவிட்டு கடகடவென சிரித்தார்.

அவர்கள் சாப்பிட்டு விட்டு ஒரு ஓரமாக கிடந்த நாற்கலிகளில் அமர்ந்திருந்தனர்.

பிள்ளைகள் இருவரும் வனிதாமணியை ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

அவரை அந்த அளவிற்கு சிரித்து சந்தோசத்தை வெளிப்படுத்தி பார்த்ததேயில்லை. ஒரு சின்ன புன்னகையோடு நிறுத்திக்கொள்வார். இப்போது சத்தம் போட்டு சிரிக்கிறார் என்றால்?

அவர்களின் ஆச்சர்யப் பார்வையைப் பார்த்த உடன் வனிதாமணிக்கு வெட்கம் வந்துவிட்டது.

“என்னடா அப்படி பார்க்கிறே?” என்று தன் சின்ன மகனின் முதுகில் செல்லமாய் தட்டினார்.

அவரது முகத்தில் கோபம் தெரியவில்லை. கண்களில் ஒருவித மயக்கம் தெரிந்தது. ஒருவேளை தனது சிறுவயது நினைவுகளில் அவர் ஆழ்ந்திருக்கலாம் என்று அவரைத் தொந்தரவு செய்யாமல் சிறியவர்கள் இருவரும் மற்ற இருவரையும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

இருவரும் இத்தனை வருடக்கதையையும் ஒரே நேரத்தில் பேசித்தீர்த்துவிடுவது போல பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தனர்.

திருமண வாழ்க்கை அவர்களின் நட்பிற்கு சிறிது இடைவெளி கொடுத்திருந்தது.

திருமணத்திற்குப் பின் தனது நட்பை தொடர்வது என்பது எல்லோருக்கும் சாத்தியப்படாது.
புது இடம் புதிய மனிதர்கள். அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டாம்.

நான் மாறவே இல்லைன்னு நீ சொல்றே? ஆனால் முதல்ல பார்த்தப்ப உயிர்த்தோழியான உனக்கே அடையாளம் தெரியாத அளவிற்கு நான் மாறித்தானே போயிட்டேன். ஆனால் நீ அப்படியே இருக்கே.”


மணிமேகலை தனது பெருத்த உடலைப் பார்த்து பெருமூச்சுவிட்டவாறே வனிதாமணியிடம் புலம்பினார்.

அவரை ஆறுதலுடன் அணைத்துக்கொண்டார் வனிதாமணி.

“நான் நீ மாறவேயில்லைன்னு சொன்னது உன் குணத்தைதான். அதே கோயில் மணி போல கலகலவென்ற பேச்சு. அது என்ன உடம்பு பெருத்துடுச்சுன்னு வருத்தப்படறே? கல்யாணத்திற்குப் பிறகு குழந்தைகள் பிறந்துவிட்டால் உடம்பில் மாற்றம் வருவது சகஜம்தானே? அதற்கு ஏன் வருத்தப்படறே?”

“நாம மட்டும் ஏன் இப்படி மாறிடுறோம்?” வருத்தமுடன் கேட்டார் மணிமேகலை.

“பெண்கள் தங்களைப் பற்றி அதிகம் யோசிப்பதேயில்லை. குடும்பம் குழந்தைகள்னு அவர்கள் உலகம் சுருங்கிப்போய்விடுவதில் தான், தன்னலம் என்ற எண்ணமும் பின்தங்கிவிடுகிறது. தன்னைக் கவனித்துக்கொள்ள வேண்டும். தனக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்று யோசிப்பதேயில்லை. அதற்கு நேரமும் கிடைப்பதில்லை. அப்படியே நேரம் கிடைத்தாலும் அதை வீட்டாருக்காக எப்படி செலவழிப்பது என்றுதான் யோசிக்க ஆரம்பிக்கிறாள். உடல்நிலை சரியில்லாமல் போய் படுக்கையில் விழும் நிலை வரும்போதுதான் அவளைப் பற்றிய சிந்தனை அவளுக்கும் அவளது குடும்பத்தாருக்கும் வருகிறது.”

என்று பெருமூச்சுடன் சொல்லி முடித்தார் வனிதாமணி.

அவர்கள் பேசி முடிக்கும் வரைக்கும் சிறியவர்கள் இருவரும் அவர்களை தொந்தரவு செய்யாமல் ஒதுங்கியிருந்து அவர்களை வேடிக்கை பார்த்து ரசித்தபடி இருந்தனர்.

அதன் பிறகுதான் அவர்களுக்கு சுற்றுப்புறம் ஞாபகத்திற்கு வந்தது.

“இது யாரு? உன் மகனா? ஆமா. உனக்கு இரண்டு பசங்கங்கிறது வரைக்கும் எனக்கு தெரியும். இது யாரு? உன் மருமகளா?”

“ஆமா. என் மருமகள்தான்.”

என்று சொன்ன வனிதாமணி கிருஷ்ணவேணியின் திகைத்த தோற்றத்தைப் பார்த்தவாறே

“என் அண்ணன் பொண்ணு எனக்கு மருமகள்தானே?”

என்றார்.

“உனக்குதான் அண்ணனே இல்லையே?”

“இது என்னோட ஒன்றுவிட்ட அண்ணன் பொண்ணு.” என்று மீண்டும் வனிதாமணி சொன்னார்.

மணிமேகலைக்கும் கிருஷ்ணவேணியைப் பார்த்த உடனே பிடித்துவிட்டது.

அவளை அருகில் அழைத்தார்.

அவரது அருகில் வந்த அவள் காலில் விழுந்தாள். அவளை ஆசிர்வதித்து உச்சி முகர்ந்த மணிமேகலை



“நல்லப் பொண்ணா இருக்கா. கோட்டை விட்டுடாதே.” என்று வனிதாமணியின் காதில் கிசுகிசுத்தார்.
அது பக்கத்தில் நின்றிருந்த யுகேந்திரனின் காதில் விழுந்தது.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 23-03-2019, 10:42 AM



Users browsing this thread: 31 Guest(s)