23-03-2019, 10:39 AM
(This post was last modified: 29-03-2019, 05:48 PM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
“அவ எதுக்கும்மா நம்ம வீடே கதின்னு கிடக்கிறா? நாம எங்கே போனாலும் உரிமையோட நம்மோடவே வந்து நிற்கிறா. பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க? இது நல்லதுக்கில்லை. அவ என்னமோ மனதில் திட்டத்தோடதான் நடந்துக்கிறா?”
அவர்தான் அவனை கையமர்த்தி வைக்க பாடுபடுவார்.
அவள் அந்த வீட்டுப் பெண் என்று மற்றவர்களுக்கு பறைசாற்றவதில் ஓரளவு வெற்றியும் கண்டுவிட்டாள் சாருலதா.
சாருலதாவை தெரியாதவர்கள் வனிதாமணியிடமே அவரது பையனுக்குப் பார்த்திருக்கும் பெண்ணா? என்று ஓரிருவர் கேட்டிருக்கின்றனர். அப்படி கேட்டதை அவர் இன்னும் யுகேந்திரனிடம் சொல்லவில்லை. இல்லை என்றால் அவன் கோபப்படுவான்.
அது முற்றிப்போவதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் மனதை சதா சிந்தனை அரித்துக்கொண்டிருக்கிறது.
இப்போது கூட தன் மன எரிச்சலை ஆற்றிக்கொள்ளத்தான் அவர் கிருஷ்ணவேணியை இந்த வரவேற்பு விழாவுக்கு அழைத்து வந்திருக்கிறார்.
அவளும் கூப்பிட்ட உடனே வர விரும்பவில்லை என்று அவளும் யுகேந்திரனும் பேசிக்கொண்டிருந்ததை கேட்க நேர்ந்தவருக்குப் புரிந்தது.
யுகேந்திரனுக்கு மற்றவர்களைக் கண்ட உடன் எடை போடும் திறன் இயற்கையிலேயே கைவந்திருந்தது. இந்த விசயத்தில் அவன் தன்னைப்போல் என்று அவர் மனதிற்குள் நிறைய நேரம் வியந்திருக்கிறார்.
அதனால்தான் கிருஷ்ணவேணியுடனான பழக்கத்தைப் பற்றி அவன் பேசும்போது அவர் தவறாக நினைக்கவில்லை.
மகேந்திரனும் ரவிச்சந்திரனும் பெரும்பாலும் தாமதமாகத்தான் வருவர். யுகேந்திரனோ எங்கு சுற்றினாலும் ஆறு மணி தாண்டியதில்லை. அதற்குள் வீட்டிற்கு வந்திருப்பான்.
இருவரும் வரும் வரைக்கும் இவர்கள் மட்டும்தான் இருப்பார்கள். அதனால் அவர்கள் வரும் வரைக்கும் அவன் தன் தாயாரோடு பேசிக்கொண்டிருப்பான்.
தனது கல்லூரியில் நடந்த கலாட்டாக்களை அவரிடம் சொல்லிச் சிரிப்பான்.
பள்ளியில் படிக்கும்போதிருந்தே அவனது பழக்கம் அது தான். இதனால் மகனைப்பற்றி அவரால் முழுதாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
கல்லூரியில் சேர்ந்த பிறகும் பள்ளிப்பையனைப் போலவே அங்கே நடந்ததை ஒப்பிப்பவன் சில நாட்கள் கழித்து அடிக்கடி ஒரு பொண்ணைப் பற்றியே பேசினான்.
அவருக்கு மகன் மேல் எந்த சந்தேகமும் வரவில்லை.
மனதில் கள்ளத்தனம் இருக்கிறவனால் இப்படி வெளிப்படையாகப்பேச முடியாது.
அவனது பேச்சைக்கேட்டு அவருக்குமே கிருஷ்ணவேணி மேல் ஒருவித பாசம் தோன்றிவிட்டது. அவளைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் எழுந்தது.
அவளை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது தான் கணித்ததில் தவறில்லை என்று அவருக்குப் புரிந்தது.
அதனால்தான் யுகேந்திரன் அவளை வீட்டிற்கு அழைத்து வரக்கேட்டபோது சந்தோசமாக சம்மதித்துவிட்டார்.
அதுவும் தனது விருப்பம் பற்றி சொல்லிவிட்டே அவளை தங்கள் வீட்டிற்கு அழைத்து வர சம்மதம் கேட்டான். அவனது விருப்பம் தவறானதாக அவருக்குத் தெரியவில்லை.
தன்னுடைய மருமகள் கிருஷ்ணவேணி போன்று நல்லவளாக அமைந்தால் அதில் என்ன தவறு இருக்க முடியும்? என்று அவருக்குத் தோன்றியது.
கணவரும் மூத்த மகனும்தான் என்ன சொல்வார்களோ என்று தயக்கமாய் இருந்தது.
அவள் இந்த வீட்டில் வந்து வாழப்போகிறாள் என்றால் வீட்டில் உள்ள இருவருக்கு மட்டும் பிடித்தவளாய் இருந்தால் போதுமா?
இப்போது ரவிச்சந்திரனுக்கும் அவளைப் பிடித்துப்போய்விட்டது என்று அவரது பேச்சிலேயே தெரிகிறது.
கடவுளே! என் மூத்த மகனுக்கும் அவளைப் பிடிக்க வேண்டும். இதுதான் அவரது இப்போதைய வேண்டுதல்.
“அம்மா! வாம்மா. சாப்பிடப்போகலாம். அப்பா காத்துக்கிட்டிருக்கிறார்.”
இளைய மகனின் அழைப்பு அவரை நினைவில் இருந்து மீட்டது.
அவர்கள் உணவுக்கூடத்துக்குச் சென்றனர்.
சாருலதாவும் அவர்களுடன் சேர்ந்துகொண்டாள் என்று சொல்லவும் வேண்டுமா?
சாப்பிட்டு முடித்த உடன் ரவிச்சந்திரன் கிளம்பிவிட்டார்.
“நான் போயிட்டு டிரைவரிடம் கார் கொடுத்து விடறேன்” என்றுவிட்டுச் சென்றுவிட்டார்.
அவர் போய்விட்டு டிரைவரை அனுப்ப எப்படியும் நேரமாகும். அதற்குள் சந்திக்க வேண்டியவர்களைப் பார்த்து பேசிவிடலாம் என்று கணக்குப் போட்டார்.
அப்போது “ஏய் வனி!” என்ற குதூகலக் குரல் அவரை திரும்பிப்பார்க்க வைத்தது.
யுகேந்திரனும் கிருஷ்ணவேணியும் கூட நின்றுவிட்டனர்.
எதிரில் நின்றிருந்த பெண்மணியை சட்டென அடையாளம் தெரியாமல் விழித்த வனிதாமணி அவரது அழைப்பை நினைவுகூர்ந்து முகம் மலர்ந்தார்.
“மணி…? மணிதானே?”
கேள்வியுடன் பார்த்தார்.