Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
நாடகமாடிய நடிகை ஸ்ரீரெட்டி; போலீசார் எச்சரிக்கை

[Image: NTLRG_20190323002024639992.jpg]


கோயம்பேடு: தயாரிப்பாளர் மற்றும் அவரது உறவினர், வீடு புகுந்து தன்னை தாக்கியதாக, நடிகை ஸ்ரீரெட்டி புகார் அளித்துள்ளார்.


தமிழ், தெலுங்கு திரையுலகில், பல நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறி, பரபரப்பை ஏற்படுத்தியவர், நடிகை ஸ்ரீரெட்டி. இவர், சென்னை, வளசரவாக்கத்தில் தங்கி, தமிழ் படங்களில் நடிக்க, கவனம் செலுத்தி வருகிறார். தற்போது, அவர் நடித்து வரும், ரெட்டி டைரி என்ற படத்தை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, 38, என்பவர், தயாரித்து வருகிறார்.


இந்நிலையில், சுப்பிரமணி மற்றும் அவரது உறவினர், வீடு புகுந்து, தன்னையும், மேலாளரையும் தாக்கினர் என, ஸ்ரீரெட்டி, கோயம்பேடு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் அளித்தார். இதில், தன் வீட்டில் இருந்த, 'சிசிடிவி' கேமரா இணைப்பை துண்டித்து, அதன் பின், தன்னை சரமாரியாக தாக்கியதாக, ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். இதையடுத்து, சுப்பிரமணி மற்றும் அவரது அக்கா மகன் கோபி, 23, ஆகிய இருவரிடம், கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மூன்று மாதங்களுக்கு முன், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் காவல் நிலையத்தில், சுப்பிரமணி மீது ஸ்ரீரெட்டி புகார் அளித்துள்ளார். இதில் கைது செய்யப்பட்ட சுப்பிரமணி, மூன்று மாதங்கள் சிறையில் இருந்து, சமீபத்தில் ஜாமினில் வந்தது குறிப்பிடத்தக்கது. இரு தரப்பினரிடமும் கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ஸ்ரீரெட்டி பொய் புகார் அளித்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 23-03-2019, 10:08 AM



Users browsing this thread: 2 Guest(s)