03-01-2021, 08:29 PM
பாகம் - 63
அதே காலகட்டத்தில், டெல்லியில்,
தன் வாழ்வின் தூண்கள் என்று யாரை எண்ணியிருந்தாளோ, அவர்கள் தனக்கு இழைத்த துரோகத்தினை எண்ணி எண்ணி கண்ணீர்விட்டவளின் காயத்திற்கு, அவள் வடித்த கண்ணீரே மருந்தானது. காலத்திற்கும், கண்ணீருக்கும் ஆறாத காயங்கள் எது? தன் காதல் கொடுத்த கசப்பான நினைவுகளில் தேங்கிக் கிடந்தவள், அதிலிருந்து தன்னை மீட்டெடுக்க, மனிதத்தில், மனித சேவையில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டாள், மது.
இந்த நான்கு வருடங்களில் மதுவின் வாழக்கையை முன்நகர்த்தியா முக்கியமான சில நிகலவுகள்.
*************
கல்லூரி முடிந்து ஒருவருடம் கழித்து,
ரஞ்சித், Nero surgeon ஆகும் முனைப்பில், சிங்கப்பூர் சென்று படிப்பதற்க்கு முன் மதுவுக்கும், அவனுக்கும், நடந்த உரையாடல்.
"அப்புறம், அடுத்து என்ன பிளான்?" சிங்கப்பூர் செல்வதற்கு முன், ஒரு வாரம் சென்னையில் தங்கி விட்டுச் செல்லலாம் என்று, தனது மூட்டை முடிச்சுகளை கட்டிய ரஞ்சித், டாக்சிக்கு காத்திருந்த வேளையில், அருகிலிருந்த மதுவிடம் கேட்டான்.
"உனக்கு டாட்டா காட்டிட்டு, வீட்டுக்கு போகணும்!!" சிரித்தால் மது. சில நிமிட அமைதிக்குப் பின்
"ஐ லவ் யூ!!, மதி!!" மீண்டும் கடந்த ஒரு வருடமாக, மனதுக்குள் அடக்கி வைத்திருந்ததை கொட்டிவிட்டால் ரஞ்சித். ரஞ்சித் சொன்னதை நம்பமுடியாமல், வலதும் இடமுமாக தலையசைத்தாள்.
"உன்னை நான் வற்புறுத்துறேனு நினைக்காத!! ஜஸ்ட் சொல்லணும்னு தோணுச்சு, அவ்வளவுதான்!!" என்றவனை பார்த்து சிரித்தாள், மது.
"என்னை, எதுக்கு நீ மதினு கூப்பிடுற?" பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான், ரஞ்சித்.
"ரஞ்சித்!!" மது பெயர் சொல்லி அழைக்க, நிமிர்ந்து அவளை பார்த்தான் ரஞ்சித்.
"நீ, உன்னோட வெண்ணிலாவ, என்கிட்ட தேடுற, நீ சொல்றத ஒத்துக்கீட்டு, நாம கல்யாணம் பண்ணிக்கிட்டாகூட உன்னால சந்தோஷமா வாழ முடியாது!!. முதல்ல, அவளத்தாண்டி உன் வாழ்க்கைய பத்தி யோசி!!" நிறுத்தி நிதானமாகச் சொன்னாள் மது.
"உன்னால, அவனைத் தாண்டி யோசிக்க முடியுமா மது?" தன் மனதில் பட்டதை கேட்டான் ரஞ்சித்.
"தெரியல!! ஆனா, கண்டிப்பா முயற்சி பண்ணுவேன்!! வாழ்க்கையா வாழ்ந்தாகனும்ல!!" சிரித்தவள், சில நொடிகள் யோசித்துவிட்டு.
"ஆனா, கண்டிப்பா அவனோட பிம்பத்தை, என்னால, யார்கிட்டயும் பார்க்க முடியாது!!" தீர்க்கமாக சொன்ன மது, அவனிடம் விடைபெற்று சென்றாள்.
*************
"எனக்கு நீங்க தெய்வம் மாதிரி!!" நாற்பதுகளின் தொடக்கத்தில், தன்னைவிட பத்துப் பதினைந்து வயது மூத்த பெண்மணி, தன் கையை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு அழ, உணர்ச்சிக் கொந்தளிப்பில், சிரமப்பட்டால் மது.
12 வயது சிறுவன், கிரிக்கெட் விளையாடும் போது, தலையில் அடிபட்டு, பந்தின் தாக்கத்தால் அடி பட்டவுடனேயே சுருண்டு விழுந்திருந்தான். அவனை, ஹாஸ்பிடல் கொண்டு வரும்பொழுது, சுயநினைவை இழந்திருந்தான். அந்த சிறுவன் அனுமதிக்கப்பட்ட அன்று, trauma careல் மதுதான், டூட்டி டாக்டர். முதல்உதவி சிகிச்சை அளித்த பின், வழக்கமாக செய்யப்படும் சோதனைகள் முடிவுகளில், அந்தச் சிறுவனின், மண்டையோட்டின் பின்பகுதியில் சின்ன கிராக், அதுவும் போக பந்தின் தாக்கத்தால் concussion தான், மயக்கத்திற்கு காரணம் என்று அறியப்பட்டது. (கிரிக்கெட்டின் மீது ஈடுபாடு உள்ளவர்களுக்கு இதைப் பற்றி நன்றாகத் தெரிந்து இருக்கலாம். நுரையீரல் போல, மூளையும் பஞ்சு போல் மிருதுவானது(ஹி!! ஹி!!). ஒரு உயிரின் மொத்த செயல்பாட்டையும், கட்டுக்குள் வைத்திருக்கும் மூளை, உடலமைப்பில், இருப்பதிலேயே கடினமான எலும்பால் ஆனா, மண்டை ஓட்டினுள், தண்ணீர் போன்ற திரவத்தில், மிதந்து கொண்டிருக்கும். எதிர்பாராமல் நடக்கும் விபத்துகளில், தலையின் வேகமான அசைவு, அந்தத் திரவத்தின் பாதுகாப்பிலிருந்து மண்டை ஓட்டில் உட்புற சுவர்களில் மூளையானது மோதும் பொழுது, ரத்தக் கசிவோ அல்லது வீக்கமோ ஏற்பட்டு, நினைவு இழக்கும் பாதிப்புதான் இந்த concussion).
மூன்று நாட்களாகியும் நினைவு திரும்பாத சிறுவன், இனி பிழைப்பது கடினம் என்றே முடிவு செய்தது, சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த, மதுவும் அங்கமாக இருந்த, மருத்துவக் குழு. நான்காம் நாள் ஏற்பட்ட, ஒரு சின்ன முன்னேற்றம் கொடுத்த நம்பிக்கையில், சிகிச்சைகள் வேகம் எடுக்க, பத்து நாள் கழித்து கண்விழித்தான், அந்த சிறுவன். மருத்துவக் குழுவும் பெரிதாக சாதித்து விட்ட மகிழ்ச்சியில் திளைத்திருக்க, உயிர் பிழைத்த அந்தச் சிறுவனின் பெற்றோர், மருத்துவர்களை தெய்வமேன பார்த்தனர். அவர்கள் அந்த மருத்துவக் குழுவின் தலைவரான கோபால கிருஷ்ணனிடம், நன்றி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது தான், அவர், மதுதான், அவர்கள் மகன் பிழைப்பதற்கு முக்கிய காரணம் என்று கைகாட்டிவிட்டு சென்றிருந்தார். அதன் பின்னால் நடந்ததே, மதுவின் சிரமத்திற்கு காரணம்.
************
இரண்டு நாள் கழித்து,
மது வேளை பார்க்கும் மருத்துவமனையில், மருத்துவர்களுக்கான கேன்டினில், மதிய உணவு உண்டு கொண்டிருந்தாள், மது.
"நான் இங்க உட்காரலாமா!! மா??" சத்தம் வந்த திசையைப் பார்த்தாள், மது.
"ஐயோ சார்!! ப்ளீஸ் உட்காருங்க!!" கோபாலகிருஷ்ணனைப் பார்த்ததும், சிரித்துக்கொண்டே சொன்னாள், மது.
"தாங்யு!! மா!!" அமர்ந்தவர், உணவருந்த தொடங்கினார்.
"இட்ஸ் அண்பேர் சார்!! Dr.சிங்தான் மேக்ஸிமம் எஃபாட் போட்டாரு!! அவர் இருக்கும்போதே, எல்லா கிரெடிட்டையும் எனக்கு கொடுத்தது!!.இட்ஸ் அண்பேர் சார்!!" இரண்டு நாட்களாக சொல்ல வேண்டும் என்று மனதில் இருந்ததை, நேரம் வாய்த்ததும் சொல்லிவிட்டாள், மது. நிமிர்ந்து பார்த்து லேசாக சிரித்தவர்,
"இந்த ரெண்டு வருஷத்துல, இந்த மாதிரி எத்தனை கேஸ் நீ பார்த்து இருக்க?" மதுவைப் பார்த்துக் கேட்டார்.
"ஒரு...... இருபது.... இருபத்தைந்து கேஸ் இருக்கும்!!" திடீர் கேள்வியில் குழம்பினாலும், பதில் அளித்தாள் அது
"நான் ஹெட் இஞ்சுரி கேஸ் கேட்கலா மா!!, கண்காஷன் கேஸ், எத்தனை அட்டென்ட் பண்ணி இருக்க?" தன் கேள்வியை தெளிவாக்கினார்
"இதுதான் பர்ஸ்ட்!!" சில நொடிகள் யோசித்தவள், உதடு பிதுக்கினாள்.
"நானும், Dr. சிங்கும், எங்க சர்வீஸ்ல, இத மாதிரி எத்தனை கேஸ் பார்த்திருப்போம்னு நினைக்கிற?" அடுத்த கேள்வியைக் கேட்டார்.
"................" மீண்டும் உதடு பிதுக்கியவள், "எனக்கு எப்படித் தெரியும்?" என்பது போல் தோள்களை உயர்த்தினாள்
"ஜஸ்ட், த்ரோ மீ சம் நம்பர்?"
"ஒரு... அம்பது... அறுபது!!" குத்துமதிப்பாக சொன்னால் மது.
"இட்ஸ் ஜீரோ!!, சீ, ஹெட் இஞ்சுரி ரொம்ப ரெகுலரான ஒன்னு!! நான் உன் வயசுல இருக்கிறப்ப, வருசத்துக்கு, முப்பது, நாற்பது கேஸ் பார்த்திருப்பேன்!! பட், கண்காஷன் எனக்கும் சரி, நீ சொன்ன Dr.சிங்குக்கும் சரி, இதுதான் பர்ஸ்ட் டைம்!! அண்ட், உனக்கே தெரியும், நான் சும்மா பேசணும்னு பேசுற ஆள் கிடையாது!! அதுவும் போக, டாக்டர் சிங், என்கிட்ட சொன்னதத்தான் , நான் அந்த பையனோட, பரேண்டஸ் கிட்ட சொன்னேன்!!. நீயும் தமிழங்கிரதால இல்ல!!. You deserve it. Characters are not made in crisis, they are exhibited!!. You exhibited your talent in a crisis. That's it!! இன்னும், அந்த பாராட்டுக்களுக்கு, தகுதி இல்லை உனக்கு தோணுச்சுன்னா, ஐ டேக் பேக் மை வேர்டஸ்!!" என்றவர், எழுந்து கை கழுவச் சென்றார். சுய கழிவிரக்கத்தில் இருந்து, தன்னை மீட்டுக்கொள்ள, போராடிக்கொண்டிருந்த மதுவிற்கு, பெரும் தாக்கத்தைத் அந்த தருணம் அது.
****************
இரண்டு வாரங்கள் கழித்து,
"நான் எப்ப? திரும்பவும் கிரிக்கெட் விளையாட முடியும்?" எப்பொழுதும் போல் தினசரி பரிசோதனைக்கு சென்றிருந்த மதுவைப் பார்த்து, சாவை நெருங்கி, தொட்டுவிட்டு, அதன் பிடியில் இருந்து, தப்பிவந்த அந்த சிறுவன் கேட்டான். கொஞ்சம் உடல்நிலை தேறியதும், அவன் கேட்ட கேள்வியில், மதுவும் திகைத்துத்தான் போனாள். சமாளித்துக்கொண்டு.
"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்!!" என்றவள், அவன் தலையை வாஞ்சையுடன் தடவி கொடுத்தாள்.
அந்தச் சிறுவனின் அன்னையோ, எரித்துவிடுவது போல் தன் மகனை முறைத்துக் கொண்டிருந்தாள். அன்றைய பரிசோதனை சுற்றை முடித்து கொண்டு, தனது அறைக்கு வந்த மதுவின் நினைவில் அந்தச் சிறுவன் கேட்ட கேள்வியும், அதற்கு, அவனது அம்மா கொடுத்த எதிர்வினையும் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. கள்ளம் கபடமில்லாத சிறுவர்களின் உலகம் மிகவும் அலாதியானதுதான் என்ற எண்ணம் அவளுக்கு தோன்ற, தனக்குள் சிரித்தவள், அந்தச் சிறுவனின் அம்மா முறைத்தது நினைவுக்கு வர, தான் அந்த அறையை விட்டு வெளியே வந்ததும் என்ன நடந்திருக்கும் என்று யோசித்தவள், அடக்க மாட்டாமல் வாய்விட்டு சிரித்தாள். அவளின் சிரிப்பை இடையூறு செய்தது, தொலைபேசி அழைப்பு. ரஞ்சித் தான் அழைத்திருந்தான். அழைப்பை எடுத்து தொலைபேசியை காதுக்கு கொடுத்தவள்,
"இன்னும் ஹாஸ்பிடல்ல தான இருக்க?" ஹலோ என்று சொல்வதற்கு முன்னமே, ரஞ்சித் கேட்க, அப்பொழுததான் அவளுக்கு நினைவுக்கு வந்தது, அவன் டெல்லி வருகிறேன் என்று சொன்னது, மதுவுக்கு.
"இல்லையே!! வீட்டுக்கு வந்துட்டேன்!!" சமாளித்தாள்.
"தேங்க் காட்!!, கதவ திற!!, நான் வெளியே தான் வெயிட் பண்றேன்!!" என்று ரஞ்சித்து சொல்லவும், நன்றாக மாட்டிக் கொண்டோம் என்பதை உணர்ந்த மது
"ஒரு, 5 மினிட்ஸ் வெயிட் பண்ணுறியா?" "என்ன சொல்லி சமாளிக்கலாம்" என்று யோசித்தாள்.
"இன்னும் ஹாஸ்பிடல்ல தான் இருக்க?" நான்கு வருட நட்பில், மதுவை முழுதாக புரிந்து வைத்திருந்தான் ரஞ்சித்.
"சாரி டா!! சாரி டா!!" என்று வழிந்தாள்.
"பொய் சொன்னதுக்கும், என்ன வெயிட் பண்ண வச்சதுக்கும், உனக்கு என்ன பனிஷ்மெண்ட் கொடுக்கலாம்னு, நான் யோசிச்சு முடிக்கிறதுக்குள்ள, ஒழுங்கா வந்து சேரு!!" என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டான்.
மது வேலைபார்த்த ஹாஸ்பிடல் அருகே, மிகவும் பாதுகாப்பான, ஒரு கேட்டட் கம்யூனிட்டி அப்பார்ட்மெண்ட் ஒன்றில்தான் வசித்து வந்தாள். குடியிருப்பவர்களையும், அவர்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட நபர்களைத் தவிர, வேறு யாரையும் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். சிங்கப்பூரில் படிப்பை முடித்தவன், இந்தியா வந்து இரண்டு மாதங்களுக்கு பின், இப்பொழுதுதான் மதுவைப் பார்க்க டெல்லி வருகிறான், ரஞ்சித்.
*********************
20 நிமிடம் கழித்து,
அப்பார்ட்மெண்ட் வாயிலில், ஆட்டோவில் வந்து இறங்கினாள், மது.
"மேடம்!! உங்கள பாக்குறதுக்கு விசிட்டர் வந்து இருக்காங்க!!" மதுவை கவனித்துவிட்ட காவலாளி, அவளிடம் ஓடி வந்து சொன்னார்.
இரண்டு நாட்களுக்கு முன் ரஞ்சித், அப்புறம், இங்கு மருத்துவமனையில் வேலை பார்க்க ஆரம்பித்த பின், புதிதாக நடப்பு வட்டத்தில் சேர்ந்த இரண்டு மூன்று நபர்களை மட்டுமே, தன்னை பார்க்கவரும் விருந்தினர்களாக பதிவு செய்திருந்தாள் மது. "எதுக்காக ரஞ்சித் விசிட்டர் ரூம்ல வெயிட் பண்ணனும்" என்ற சிந்தனையுடனே, வாயில் கதவின் அருகிலேயே இருந்த விசிட்டர் அறைக்குள் நுழைந்தவள், ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போனாள். பின் சுதாகரித்துக் கொண்டவள்,
"இவங்க யாருன்னு எனக்குத் தெரியாது??" என்றவள், விறுவிறுவென்று தனது அப்பார்ட்ஸ்மெண்டை நோக்கி நடந்தாள்.
"பானு மா!! பானு மா!! ப்ளீஸ்!! பானு மா!!" என்ற சிவகாமியின் கெஞ்சல், அவள் நடையின் வேகத்தை கூட்டியது. முதலில் வேகமாக நடக்க ஆரம்பித்தவள், சிவகாமியை உள்ளே அனுமதிக்க மறுத்த காவலாளிகளிடம், அவள் கெஞ்சுவது காதில் விழ, ஓட ஆரம்பித்தாள்.
அப்பார்ட்மெண்டில் நுழைந்தவள், தன் தோள் பையை சோபாவில் எறிந்தாள். கைகளால் முகத்தை மூடிக்கொண்டு, அமைதியாக அமர்ந்தாள். அவள் அப்படி அமர்ந்து, இரண்டு நிமிடம் கூட இருக்காது, அவளது தொலைபேசி அடித்தது, அதை எடுத்து காதுக்கு கொடுக்க,
"மேடம், உங்கள பாக்க வந்தத விசிட்டர், மயங்கி விழுந்துட்டாங்க!!" காவலாளி அறையில் ஒருவர் பேச, அவள் உள்ளம் முரண்டு பிடித்தாலும், கால்கள் ஏனோ வாயிற்கதவை நோக்கி விரைந்தது. எதிரே வந்து கொண்டிருந்த, ரஞ்சித்தை கவனியாமல் ஓட்டமும் நடையுமாக பதட்டமாக கடந்து சென்று அவளை கேள்வியாக பார்த்தவன், பின் அவள் பின்னால் சென்றான். பார்வையாளர் அறையிலிருந்த ஷோபாவில் படுக்க வைக்கப்பட்டு இருந்தாள் சிவகாமி. ஏற்கனவே தண்ணீர் தெளிக்கப்பட்டு இருந்ததற்கான தடயங்கள் இருந்தது முகத்தில். ஒரு நிமிடம் தன் தாயின் நிலையை நினைத்து கலங்கித்தான் போனாள் மது.
"ஆம்புலன்ஸ்க்கு சொன்னீங்களா?" சிவகாமியைப் பரிசோதித்தவள், வாயில் காவலர்களிடம் வினவினார். அவர்கள் இல்லை என்று தலையசைக்க, அவள் ஆம்புலன்சுக்கு அழைக்க முயற்சிக்கையில் தான்
"வேண்டாம், கார்ல கொண்டு போகலாம்!!" என்ற ரஞ்சித்தின் சத்தம் கேட்டு அவனை பார்த்தாள்.
அடுத்த அரை மணி நேரத்தில், மது வேலை செய்யும் மருத்துவமனையிலேயே, அட்மிட் செய்யப்பட்டிருந்தாள் சிவகாமி. மருத்துவமனையில் நுழைந்ததும், அட்மிட் செய்வதற்கான படிவம் ரஞ்சித்தின் கைகளில் கொடுக்கப்பட, அவனோ, செய்வதறியாது முழித்துக் கொண்டிருக்க, அவன் கையிலிருந்து அதை வாங்கிய மது கடகடவென பூர்த்தி செய்து கொடுத்தாள். ஏதோ ஒரு அவசர நிலைக்கு உதவுகிறாள் என்றுதான் அதுவரை நினைத்திருந்தால் ரஞ்சித், பின் கடந்த இரண்டு வருடத்தில் பழகிய நபராக இருக்கக்கூடும் என்று நினைத்தான்.
பத்து நிமிடம் கழித்து,
"கவலைப்படுவதற்கு ஒண்ணுமில்ல!!, ஹைபர்தென்ஷன், ஹை B.P.!! செட்டேட் கொடுத்திருக்கோம்!! இப்போதைக்கு ரெஸ்ட் எடுக்கட்டும், நாளைக்கு வரைக்கும் அபசர்வேசன்ல்அ வச்சிருக்கலாம்!!, ஸ்டேபில இருந்தா, நாளை டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்!!" என்ற, மருத்துவர், அந்த அறையிலிருந்து வெளியேறினார்.
மருத்துவர் சென்றதும், சிவகாமியின் அருகில் அமர்ந்தவள், தன் அன்னையைப் பார்த்தாள். அவள் மறக்க நினைத்த வாழ்வின் எண்ணங்கள், மனதை நிரப்பிக்கொள்ள, மதுவின் மனதோ, உலைகலன்யென, பலதரப்பட்ட உணர்ச்சிகளால் கொந்தளித்துக் கிடந்தது. தன் எண்ணங்களிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டவள், உறங்கிக் கொண்டிருக்கும், தன் தாயை நிமிர்ந்து பார்த்தாள். கடைசியாகப் பார்ப்பதைக் காட்டிலும், சற்று மெலிந்து இருந்தால், தோலின் மினுமினுப்பு காணாமல் போயிருந்தது, முடிகளில் பாதி நரைத்திருந்தது. சிவகாமியை யார் என்று தெரியாது என்று சொல்லிவிட்டு சென்ற பொழுது, "பானு மா!! பானு மா!! ப்ளீஸ்!!" என்ற தன் தாயின் வார்த்தைகளில் இருந்த வலி, இப்போதுதான் மதுவின் மனதை எட்டியது. மனதை எட்டிய வலி, கண்ணீராக, கண்களின் வழியே வலிய, துடைத்துக் கொண்டுவளை
"யாரு இவங்க?" ரஞ்சித்தின் கேள்வி, அவளை நிஜ உலகிற்கு கொண்டு வந்தது. மதுவின் கண்களில் வழிந்த கண்ணீர், ரஞ்சித்தின் அமைதியையும் கலைத்திருந்தது.
"அம்மா!!" கண்களில் இருந்து மீண்டும் கண் நீர் வெளியேறியது.
முதலில் அதிர்ச்சி அடைந்த ரஞ்சித்தின் மனதில் ஆயிரம் கேள்விகள். ஆனால் சூழ்நிலை கருதி, தக்க சமயம் வரும்பொழுது கேட்டுக்கொள்ளலாம் என்று அமைதியானான்.
************
தொடர்ச்சி......