Adultery ஒரு மனைவியின் தவிப்பு
#72
"முதலில் உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். எனக்கு தெரியும் நான் செய்தது ஒரு மன்னிக்க முடியாத செயல், உங்களுக்கு மன்னிக்கவும் மனம் வராது.”


நான் அவள் சொல்வதை வெறுப்போடு கேட்டேன். "இதையெல்லாம் தெரிந்து தானே செய்த," என்று மனதில் அவளை திட்டேனேன்.

"உங்கள் வாழ்க்கையின் நிம்மதியை சீர்குலைத்தத்துக்கு எனக்கு மன்னிப்பு கிடையாது."

இவள் என்ன எதிர்பார்க்கிறாள்? பரவாயில்லை நீ செய்ததை எல்லாம் மறந்துட்டேன் என்று சொல்வேன் என்ற நினைக்கிறாளா? எனக்கு மட்டும் சொந்தமானவன் என்று நினைத்த என் புருஷனை நீ வழித்து போட்டிகிட்டேயே.

"ஆனால் இதில் முழுக்க முழுக்க என் தப்பு தான், மகேஷ் தப்பு கிடையாது."

இப்போது தான் கோபமாக அவள் பக்கம் திரும்பி சொன்னேன்,"அவர் என்ன அவருக்கு உன்னை வக்காலத்து வாங்க சொன்னாரா?"

அவள் முகத்தில் வருத்தம், தவிப்பு இரண்டும் கலந்து இருந்தது.

"நோ நோ, மகேஷ் என்னிடம் எதுவும் சொல்லவில்லை, இன் பாக்ட், அன்றில் இருந்து அவர் என்னிடம் பேசுவது கூட கிடையாது."

அவள் முகத்தை இப்போது தான் நேரடியாக உத்து பார்த்தேன், அதில் அவள் உண்மையையே தான் சொல்கிறாள் என்று புரிந்தது.

"இருந்தாலும் நடந்தது நடந்தது தானே, அவர் தெரிந்து தான் எனக்கு துரோகம் செய்தார்," என் வார்த்தைகளில் என் கடுப்பு தெளிவாக தெரிந்தது.

இப்படி நான் சொன்னாலும் கூட நானும் அதே தப்பை தான் தெரிந்து செய்திருக்கேன் என்று என் மனதில் ஒரு பக்கம் உறுத்தியது.

"அவர் தப்பு செய்வதுக்கு நான் தான் காரணம், அவர் செய்த தப்புக்கு எப்படி துடித்தார் என்று எனக்கு தெரியும்," அவள் கண்கள் கலங்கி இருந்தது.

"எனக்கும் என் புருஷனுக்கும் இருக்கும் பிரச்னைக்கு வீணாக மகேஷ் அவர்களை சம்பந்தப்படுத்தி, உங்கள் மணவாழ்க்கையை சீரழித்து விட்டேன் என்ற குற்ற உணர்வு என்னை கொல்லுது."

விட்டால் அங்கேயே அழுதுவிடுவாள் போலிருந்தது. என் மனம் கொஞ்சம் இளகியது.

"மகேஷ் எவ்வளோவோ என்னை தவிர்க்க பார்த்தார். நான் தான் விடாப்பிடியாக அவரை பின் தொடர்ந்தேன்."

இப்போ எனக்கு அவள் மேல் இன்னும் கோபம் வந்தது.
மிக மெதுவாக ஆனால் மிக கடுப்புடன் சொன்னேன்,"ஏண்டி எத்தனை ஆண்கள் இருக்காங்க, அதுவும் மணமாகாத பயல்களும் உண்டு, உனக்கு என் புருஷன் தான் கிடைத்தானா?"

"அதற்க்கு காரணம் என் சுயநலமும், மஹேஷும் தான்."

அவள் சொல்வதை கேட்டு அவள் முகத்தை கோபத்தோடு முறைத்து பார்த்தேன்.

"முதலில் அவர் தப்பு செய்ததுக்கு நீ தான் காரணம் என்று சொல்லிவிட்டு இப்போ அவரும் காரணம் என்று ஒப்புக்கொள்கிறாய்," என்று வெடித்தேன்.

"நீங்க நினைக்கிற மாதிரி அவர் காரணம் கிடையாது," என்றாள்.

குழம்பிய நிலையில் அவள் முகத்தை பார்த்தேன்.

"மகேஷ் எப்போவும் மிகவும் கண்ணியமாக பெண்களுடன் நடந்து கொள்வர். பிற ஆண்கள் போல் பெண்களிடம் ஜொல் விட மாட்டார். மற்ற பெண்களை சைட் அடித்தது கூட கிடையாது."

என் முகத்தை பார்த்து கொண்டே பேசினாள். நான் மெளனமாக அவள் சொல்வதை கேட்டேன்.

"கண்ணியம், அழகு, நல்ல குணம் எல்லாம் அவரிடம் இருந்தது. அதனால் தான் நான் அவரை தேர்ந்தெடுத்தேன்."

ஆவேசத்தோடு நான் என் கோபத்தை வெளிப்படுத்த என் வாயை திறந்த போது அவள் தடுத்தாள்.

"ப்ளீஸ் உங்கள் கோபம் புரியுது, நான் சொல்லவந்ததை நான் முதலில் சொல்லிவிடுகிறேன்."

வாயை திறந்த நான் ஒன்னும் சொல்லாமல் நிறுத்திவிட்டேன்.

"நான் கல்யாணம் ஆனவள், சாதாரண ஆணுடன் உறவு வைத்திருந்தால், அதை அவன் ஊர் புரா தம்பட்டம் அடித்தால் என் மானம் தான் போய்விடும். அதே நேரத்தில் என் காம வேதனையும் நாளுக்கு நாள் அதிகரித்து போனது."

இதை சொன்ன அவள் அவள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த சில வினாடிகளுக்கு மெளனமாக போராடினாள்.

"நீயே வலிய போனாலும் அவருக்கு எங்க போனது புத்தி," என்றேன்.

இவள் சொல்லும் காரணம் இவள் தரப்பில் சரியாக இருக்கலாம் அனால் அவர் செய்த தப்புக்கு இது சாக்காக இருக்க முடியாது.

"உண்மை தான். அனால் ஒரு ஆண் எத்தனை நாள் தான் ஒரு பெண்ணின் தூண்டுதலை தவிர்ப்பான்." "அப்படி இருந்தும் ஒரு பெண்ணின் கடைசி ஆயுதத்தை பயன்படுத்தி தான் மகேஷை கவுத்தேன்."

அவள் ஆழமாக மூச்சு இழுத்து தொடர்ந்தாள்.
Like Reply


Messages In This Thread
RE: ஒரு மனைவியின் தவிப்பு - by game40it - 22-03-2019, 04:40 PM



Users browsing this thread: 6 Guest(s)