Adultery இரண்டாம் முடிச்சு
#29
இந்திராவின் கலகப்பான பேச்சு வீட்டில் அனைவரையும் கவர்ந்தது. வெகு விரைவிலேயே அனைவருடனும் நெருக்கமாகி விட்டாள். கமலும் இந்திராவும் நாளுக்கு நாள் நெருங்கிய நண்பர்களானார்கள். ஆனால் இருவரின் மனதிலும் கடுகளவு கூட தவறான எண்ணம் வரவில்லை. ஜாலியாக பேசினாலும் வரம்புமீறி இருவரும் பேசியது இல்லை. அண்ணி என்கிற மரியாதையுடனே கமல் பழகினான். இந்திராவிற்கு கணவனுடன் தாம்பத்ய வாழ்க்கையை ஆரம்பிக்காத குறையைத் தவிர வேறு எந்தக் குறையும் இல்லை. சங்கரும் வேலைக்கு முயற்சி செய்து கொண்டே நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தான்.


ஆறு மாதங்கள் கடந்து விட்டது. சங்கர் டெல்லியில் இருக்கும் நிறுவனத்தில் வேலைக்கு அப்ளை செய்திருந்தான். அங்கிருந்து இண்டர்வியூ லெட்டர் வந்திருந்தது. ஏற்கனவே ஆன்லைனில் இண்டர்வியூ செய்ததில் அவனுடைய வேலை 99% முடிவாகிவிட்டது. ஜஸ்ட் வெரிபிகேசன் முடித்துவிட்டு, அப்பாயின்மென்ட் லெட்டரை வாங்கி செல்லுமாறு அழைத்தனர். சங்கருக்கு மிகுந்த சந்தோசம். வீட்டில் அனைவரிடம் சொல்லிவிட்டு டெல்லிக்கு கிளம்பினான்.

அவன் கிளம்பிய பின்பு பகல் வேளையில் இந்திரா மாடியில் துணி காயப்போட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய மாமியார் அங்கே வந்தாள்.

"இந்திரா உன்கிட்ட ஒன்னு கேக்கனும்"

"என்ன அத்தே"

" நீ சந்தோசமா இருக்கியா"

"நான் சந்தோசமா தான் இருக்கேன்"

"நான் கேக்குறது புரியுதா.. நீ சங்கர் கூட சந்தோசமா இருக்கியா"

"அது.. சந்தோசமா தான் இருக்கேன் அத்தே"

"என்கிட்ட மறைக்காத இந்திரா. தினமும் காலையில நீ வரும் போது பாத்துகிட்டு தான் இருக்கேன். ரெண்டு பேரும் விரும்பிதானே கல்யாணம் பண்ணிகிட்டீங்க. அப்புறம் என்ன ஆச்சு."


"அத்தே எங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையும் இல்ல. அவருக்கு வேலை கிடைக்கிற வரைக்கும் கொஞ்சம் தள்ளிப் போட்டுருக்கோம்.
நான் குடுத்த நெருக்கடில என்னைய கல்யாணம் பண்ணிக்க வேண்டியதாயிருச்சு. ஆம்பளைக்கு அடையாளமே வேலை தானே. அவருக்குனு ஒரு அடையாளத்தை தேடிக்கிட்டு வாழ்க்கைய ஆரம்பிக்கலாம்னு சொன்னாரு. அதான்..."

"உன்ன நெனச்சா பெருமையா இருக்குமா. சங்கர் டெல்லிக்கு போயிட்டு வேலையோட தான் வரப்போறான். அதுக்கு உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையே."

"இல்ல" சிரித்துக் கொண்டாள்.

" இன்னும் பத்து மாசத்துல ஒரு பேரப்புள்ளய பெத்துக்குடுக்கனும் சரியா"

"ஒன்னு என்ன, ரெண்டாவே பெத்து தரேன். கவலையே படாதீங்க."

ரெண்டு பேரும் சிரித்துக் கொண்டனர்.

சங்கர் டெல்லிக்குச் சென்றான். அங்கு வேலை கன்பர்ம் செய்யப்பட்டது. தனது ஊருக்கு அருகிலேயே உள்ள கிளை நிறுவனத்தில் வேலை கிடைத்ததையும் சந்தோசனுடன் போனில் கூறினான். இதைக் கேட்டு வீட்டில் அனைவரும் சந்தோசப்பட்டனர். இரவு டிரெயினில் கிளம்புவதாக சொல்லிவிட்டு போனை வைத்தான்.


அவர் வரவுக்காக காத்திருந்த அனைவருக்கும் வந்து சேர்ந்தது துயர செய்தி தான். சங்கர் வந்த ரயில் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிட்டதாக தகவல் வந்தது. இந்த செய்தி அனைவரின் தலையிலும் இடியாக இறங்கியது.
All is well
[+] 2 users Like kamappithan's post
Like Reply


Messages In This Thread
RE: இரண்டாம் முடிச்சு - by kamappithan - 30-12-2020, 04:24 PM



Users browsing this thread: 1 Guest(s)