22-03-2019, 11:05 AM
நியூசி.,யில் துப்பாக்கி பயன்படுத்த தடை
கிறிஸ்ட்சர்ச் : நியூசிலாந்தில் துப்பாக்கி உள்ளிட்ட அனைத்து வகையான ஆயுதங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவித்துள்ளார்.
நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் மார்ச் 15 அன்று தொழுகை நடை பெற்றபோது, சில நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டுள்ளனர். இதையடுத்து 10 நாட்களுக்குள் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவெடுக்கப்படும் என பிரதமர் ஜெசிந்தா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நியூசி.,ல் அனைத்து விதமான கைதுப்பாக்கிகள், ராணுவத்தில் பயன்படுத்துவது போன்ற ஆட்டோமெடிக், செமி ஆட்டோமெடிக் ரக ஆயுதங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜெசிந்தா அறிவித்துள்ளார். இந்த புதிய சட்டம் ஏப்ரல் 11 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு துறையை சார்ந்தவர்கள் ஆயுதங்கள் வைத்துக் கொள்ள சில விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.