27-12-2020, 11:29 AM
"நம்ம கல்யாணம் ரொம்ப அவசரமா நடந்துருச்சு. உங்க வீட்ல மட்டும் உனக்கு கல்யாண ஏற்பாடு செய்யாம இருந்துருந்தால் என்னோட பிளான் வேறயா இருந்துச்சு."
"எப்போ இருந்தாலும் நாம தானே கல்யாணம் பண்ணிக்கப் போறோம். இதனால என்ன ஆகிருச்சு. நமக்கு கல்யாணம் ஆனதுல உங்களுக்கு சந்தோசம் இல்லயா" குழப்பமான முகத்தோடு கேட்டாள்.
"ஹே.. ச்சே.. ச்சே.. அப்படி நான் சொல்லலடி லூசு" அவளுடைய தோளை சுற்றி கையை போட்டுக் கொண்டான்.
"வேற எப்படி சொன்னீங்களாம். என்னால உங்க பிளான் எல்லாம் ஸ்பாயில் ஆயிருச்சுனு தானே சொன்னீங்க" தலையை குனிந்தபடி பொய்க்கோபம் காட்டினாள்.
" லூசு லூசு " செல்லமாக அவளுடைய தலையில் கொட்டினான்.
"உங்கள இழந்துற கூடாதுனு தான் என் அப்பா, அம்மாவ விட்டு வந்தேன். அதனால தான் உங்கள போர்ஸ் பண்ணேன்."
"நான் இப்போ உன்ன எந்த தப்பும் சொல்லலையே. நான் சொல்ல வந்ததை முழுசா கேக்காம நீ பேசுற. எனக்கு ஒரு வேலை கிடைச்சதுக்கு அப்புறம் நம்ம மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருந்தேன். அந்த பிளான் மாறிடுச்சுனு தான் சொன்னேன்."
"உங்களுக்கு வேலை கெடச்சுட்டா மட்டும், எங்க பொண்ண கட்டிக்கோனு சொல்லுவாங்களா.. அப்பவும் நாம இப்படித்தான் கல்யாணம் செய்யனும். அது இப்பவே நடந்துருச்சு அவ்வளவுதானே"
"ஒரு வயசு பையன் வேலைக்கு போகாம அப்பா அம்மா தயவுல சாப்பிட்டா, மத்தவங்க நம்மள ஒரு மாதிரி பேசுவாங்க. அதுவும் கல்யாணம் பண்ணிட்டு வேலைக்கு போகலைனா மத்தவங்க என்ன நினைப்பாங்க. எங்க வீட்டுல என்னைய எதுவும் நினைக்க மாட்டாங்க. அதுக்காக மத்தவங்களும் அதே மாதிரி இருப்பாங்கனு சொல்ல முடியுமா"
இப்போது தான் அவளுக்கு புரிந்தது. இந்த சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு வேலை இல்லையென்றால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் ஒரு ஆணுக்கு வேலை இல்லையென்றால்,
அவன் இந்த சமூகத்தை எதிர்க்கொள்வது பெரும் சவாலாக உள்ளது. வெளியே செல்லும் போது தெரிந்தவர்கள் அவனைப் பார்த்து என்ன வேலைக்கு செல்கிறாய் என்பதே முதல் கேள்வியாய் இருக்கிறது. சில ஆண்களுக்கு சரியான வேலை கிடைக்காமல், குறைந்த சம்பளத்தில் கிடைத்த வேலையை செய்யும் போது, அதை வெளியே சொல்லவும் சங்கடப்படுகிறார்கள். ( இது ஆண் வர்க்கத்துக்கு கிடைத்த சாபம்)
அவனுடைய கையை இறுகப்பற்றிக் கொண்டாள்.
"சாரி.. உங்க ஃபீலிங்ஸ் புரிஞ்சுக்காம பேசிட்டேன்."
"இட்ஸ் ஓகே.. இப்போ நான் சொல்ல போறதையும் புரிஞ்சுக்குவனு நெனக்கிறேன். எனக்கு வேலை கிடைச்சதுக்கு அப்புறம் நம்ம வாழ்க்கையை முழு மனசோட சந்தோசமா ஆரம்பிக்கலாம்னு நெனக்கிறேன். நீ என்ன சொல்ற"
அவளுக்கு இது ஏமாற்றமாக இருந்தாலும், வெளிக்காட்டாமல் பேசினாள்.
"எனக்கு நீங்க சொல்றதுல முழு சம்மதம். இதுல என்ன இருக்கு. நாம வாழ்க்கைல ஒண்ணா ஆயிட்டோம். இனிமே இதை யாராலும் மாத்த முடியாது. மத்ததெல்லாம் நடக்குறதுக்கு நம்ம லைஃப் புல்லா டைம் இருக்கு. உங்க பீலிங்ச நான் புரிஞ்சுக்கிட்டேன்" அவனுடைய தோள் மீது சாய்ந்து கொண்டாள்.
" தாங்ஸ்.."
"புருஷன் பொண்டாட்டிக்குள்ள தாங்ஸ் சொல்லுவாங்களா"
"லவ் யூ பொண்டாட்டி"
"மீ டு புருஷா"
"ஹா.. ஹா.." இருவரும் சிரித்துக் கொண்டனர்.
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் அப்படியே உறங்கிப் போனார்கள்.

All is well