26-12-2020, 09:07 PM
(26-12-2020, 08:13 PM)Doyencamphor Wrote: தொடர்ச்சி
***************
"கோயம்புத்தூர் கிளம்பலாம் தாத்தா" தன் பெரியப்பாவின் சாமதியில் இருந்து வீட்டிற்கு வந்ததுமே, தாத்தாவிடம் சொன்னான், மணி.
"என்னாச்சுப்பா, ரெண்டு நாள் இருந்துட்டு போலாம்னு நீதான சொன்ன?" சிவகுருவின் சாமர்த்தியமான காய் நகர்த்தல் சோர்வுற்று இருந்த மணி, இரண்டு நாள் பழனியிலே இருக்கலாம் என்று இன்று காலைதான், தன் தாத்தாவிடம் சொல்லியிருந்தான்.
"இல்ல தாத்தா, கம்பெனி லிஸ்டிங்க்கு, இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு!! நிறைய வேலை இருக்கும்!! என்னால இங்க ரெண்டு நாள் சும்மா இருக்க முடியாது!!” இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்றும் இரண்டு நாட்களுக்கு, முன் கெஞ்சியை பேரனின் புது உத்வேகத்தைப் பார்த்து சந்தோஷம் கொண்ட மணியின் தாத்தா.
"இப்ப தாண்டா ராஜா நீ நான் வளர்த்த புள்ள!!" பெருமைப் பட்டுக்கொண்டார்.
நீண்ட நாட்களுக்குப்பின் பழனி வந்ததால், மணியைப் பெற்றோருடன் கோயம்புத்தூர் அனுப்பிவிட்டு, மூன்று நாள் கழித்து வருவதாக சொல்லி, பெரியவர்கள் மூவரும் பழனியில் கொண்டார்கள். முன்னால், சிவகுரு அமர்ந்திருக்க, பின்னால் அவனும், சுமாவும் அமர்ந்திருந்தனர் காரில். சுமா கொஞ்சம் நகர்ந்து, தன் மகனுக்கும் தனக்கும் இருக்கும் இடைவெளியை குறைக்க, தலை சாய்ந்து அமர்திருந்தவன், அப்படியே தூங்கி சரிய, அவனை ஒட்டி அமர்ந்த சுமா, மகனை தன் தோள்களில் சரித்துக்கொண்டாள்.
"இறங்கி அடிக்க துணிஞ்சிட்டா,
இரக்கம் பாக்குறது மடத்தனம்,
அந்த மூடத்தனத்தை பண்ணிப்பூட்டா
மண்ணுக்குள்ள தான் போவணும்"
தன் பெரியப்பாவின் சமாதியின் வாயிலை அவன் நெருங்க, அந்த பிச்சைக்கார சாமியார், பெருங்குரல் எடுத்து, ராகமிட்டு பாடியது கேட்டது, வசதியாக படுத்துக் கொண்டவனின் கனவில்.
************
இரண்டு நாள் கழித்து,
பழனியிலிருந்து உத்வேகத்துடன் வந்திருந்தாலும், தன் மூளையை கசக்கிப் பிழிந்த போதும், வழி ஏதும் புலப்படாமல் தவிர்த்திருந்தான் மணி. அவனுக்கான நேரம் மிகவும் குறைவாகவே இருந்தது. தங்கள் நிறுவனத்தை, பங்குச்சந்தையில், பட்டியலிடுவதற்கான செயல்முறைகள் மற்றும் பதிவு செய்வதற்கு, தேவையான வழிமுறைகளில், தனக்கு எதுவாக, ஏதாவது வாய்ப்பு இருக்குமா? என்று ஆராய்ந்து கொண்டிருந்தான், தன் அலுவலக அறையில். டேபிளில் இருந்த தொலைபேசி அழைப்பு அவனது கவனத்தை, தன்பக்கம் ஈர்த்தது.
அதை எடுத்து காது கொடுக்க
"சார்!! பிரதீப்னு ஒருத்தர், உங்கள பார்க்கிறதுக்கு வந்திருக்கார்!!, உங்க பிரண்டுனு சொல்றார்!!.... " என்று சொல்லப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே ,
"உடனே உள்ள அனுப்புங்க!!" இடைமறித்து சொன்னவன், பிரதீப்பின், திடீர் வருகையால் இன்னதென்று சொல்ல முடியாத ஏதோ ஒரு உணர்வால் ஆட்கொள்ளப்பட்டான்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரதீப்பை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை அவனுக்கு. கதவு திறக்கப்பட்டதும், ஒரு சின்னப் புன்னகையுடன் நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ச்சியுற்றான்.
பிரதீப்பை பின் தொடர்ந்து, மீண்டும் அவன் வாழ்வில் வந்தாள் மது.
*********
Madhu invitation kondu varuvalo