Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
மூன்றாவது மாற்றுப்பாதை அமைத்தால், நீலகிரியில் பாலும் தேனும் ஓடும் என்பதுபோல இந்த வாக்குறுதிக்கு வர்ணம் பூசப்படுகிறது. ஆனால், அந்தப்பாதை விரிவாக்கம் செய்யப்பட்டால், இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள சோலைக்காடுகள், புல்வெளிகள், காட்டருவிகள், நீரோடைகள் மற்றும் காட்டுயிர்களுக்கு அழிவு தொடங்கிவிடும் என அச்சப்படுகின்றனர் சூழலியல் ஆர்வலர்கள். அவர்களின் அச்சத்தில் நியாயம் இருக்கிறது. ஏற்கெனவே, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான நீலகிரியில் அணைக்கட்டுகள், நீர்மின் திட்டங்கள், சாலைகள், தேயிலைத் தோட்டங்கள் என்று பல்வேறு காரணங்களுக்காகக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன, துண்டாடப்பட்டிருக்கின்றன.

காடழிப்பாலும், அறுந்துகிடக்கும் வலசைப்பாதைகளாலும் மனித - விலங்கு மோதல் அதிகரித்துவருகிறது. மூன்றாவது மாற்றுப்பாதை அமைத்தால் இந்தப் பிரச்னை மேலும் அதிகரிக்கும். இருப்பினும் எதிர்ப்புகளை மீறியே, இந்தத் திட்டத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.180 கோடியை ஒதுக்கீடு செய்தார். அதன்படி இருவழிப்பாதையாக மாற்றப் பெரிய திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால், சூழலியல் பாதுகாப்பு கருதி, தமிழக வனத்துறையே இந்தத் திட்டத்துக்கு அனுமதி மறுத்துவிட்டது.

[Image: p28a_1552983149.jpg]
அதன்பின்பு, இருக்கும் சாலையின் அகலத்தைச் சற்றே விரிவுபடுத்தி மூன்றாவது மாற்றுப்பாதை அமைக்க முடிவெடுத்து, வெள்ளியங்காடு முதல் மஞ்சூர்வரை மட்டும் சாலை விரிவாக்கத்துக்காக ரூ.47 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. நான்கு ஆண்டுகளாக இதுவும் கிடப்பில் போடப்பட்ட நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பதற்கு சில நாள்களுக்கு முன்பாக, கலெக்டர் தலைமையில் எம்.பி-யான கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் அவசரகதியில் இதற்கான பூமிபூஜை போட்டனர்.  

அழகிய மடிப்பு மலைகளும், பள்ளத்தாக்குகளும், அரியவகைத் தாவரங்களும், ஓரிட வாழ்விகளும் நிறைந்தது கெத்தை வனப்பகுதி. யானை, காட்டுமாடு, புலி, சிறுத்தை, இருவாச்சிப் பறவைகள் என வனவிலங்குகள், பறவைகளை இங்கே காணமுடியும். இத்தகைய வனத்தில், 50 கி.மீ தொலைவுக்கு சாலை விரிவாக்கம் செய்தால், பல ஆயிரம் மரங்களை அழிக்க வேண்டியிருக்கும். 

இதுகுறித்து தேசியப் பசுமைப்படை நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் கூறுகையில், “வனப் பகுதிகளில் சாலை அமைப்பதுதான், இயற்கைச் சீரழிவின் முதல்படி. இதனால், வாகனப்போக்குவரத்து அதிகரிக்கும். பிளாஸ்டிக், மது பாட்டில்கள் காட்டில் குவியும். சாலை விரிவாக்கத்துக்காகப் பல்லாயிரக்கணக்கான மரங்களைப் பிடுங்கி, டன் கணக்கில் மண்ணை அள்ள வேண்டியிருக்கும். கனிம வளங்கள் சூறையாடப்படும். காட்டுயிர் வேட்டை, மரம் கடத்தல் உள்ளிட்ட சமூகவிரோதச் செயல்கள் அதிகரிக்கும். எனவே, இதுபோன்ற அழிவுத் திட்டங்களை நிறைவேற்றவே கூடாது’’ என்றார்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 21-03-2019, 05:30 PM



Users browsing this thread: 101 Guest(s)