Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ஓட்டு வாங்க... காட்டை அழிக்கலாமா? - ஊட்டி மூன்றாம் சாலை சர்ச்சை.

தேர்தல் வரும் பின்னே, வாக்குறுதிகள் புதுப்பிக்கப்படும் முன்னே. இப்படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் ஒரு வாக்குறுதிதான், நீலகிரிக்கான மூன்றாவது மாற்றுப்பாதை. கோவையிலிருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் நுழைய மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் சாலை,  கோத்தகிரி சாலை என இரு மலைப்பாதைகள் உள்ளன. இவற்றில் 24 மணி நேரமும் போக்குவரத்து நடக்கிறது. நிலச்சரிவு போன்ற இயற்கைப்பேரிடர் காலங்களில், இரு வழிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். 

இந்த இரு பாதைகளையும் தவிர்த்து, கோவை மாவட்டம் காரமடை, வெள்ளியங்காடு, கெத்தை வழியாக 46 கொண்டை ஊசி வளைவுகளைக்கொண்ட கெத்தை மலைப்பாதை, மூன்றாவது பாதையாக உள்ளது. ஆனால், முறையான பாதை அல்ல இது. வனச்சோதனைச் சாவடியைக் கடந்து, அடர் வனப்பகுதிகளின் ஊடாகச் செல்லும் இந்தப் பாதை, குறுகலானது; ஆபத்துகள் நிறைந்தது. இந்த வழியில், அரசுப் பேருந்தும், சொற்ப வாகனங்களும் சென்றுவருகின்றன. இந்த வழியில்தான் ‘மூன்றாவது மாற்றுப்பாதையை அமைப்போம்’ என்று கடந்த கால்நூற்றாண்டாகத் தேர்தல்களில் வாக்குறுதியை வழங்கிவருகின்றனர் அரசியல் கட்சியினர்.

[Image: p28_1552983130.jpg]
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 21-03-2019, 05:29 PM



Users browsing this thread: 103 Guest(s)