screw driver ஸ்டோரீஸ்
அத்தியாயம் 22

சிபி காணாமல் போயிருந்தான்.. எங்கு சென்றான் என்கிற சுவடே தெரியாமல் எப்படியோ தொலைந்து போயிருந்தான்..!! அகழி வந்து ஆதிராவுக்கு கிடைத்த உச்சபட்ச அதிர்ச்சி இதுதான் எனலாம்.. தங்கையை தேடவந்து கணவனை தொலைப்போம் என்று கனவிலும் அவள் எண்ணியிருக்கவில்லை..!! 

கணவனின் அணைப்பு தந்த கதகதப்புச்சூடு, அவளைவிட்டு இன்னும் நீங்கியிருக்காத நிலையிலே.. காற்றில் சூடமாய் அவன் கரைந்து போயிருந்ததை, அவளால் எப்படி தாங்கிக்கொள்ள இயலும்..?? முதல்நாள் நேர்ந்த பயங்கரத்தின் பதைபதைப்பு, அவளைவிட்டு இன்னும் அகன்றிருக்காத நிலையிலே.. அடுத்தநாளே இன்னொரு பேரதிர்ச்சியை வாங்கிக்கொள்ள, அவளது இதயத்தில்தான் எத்தனை வலுவிருக்கும்..?? 

அதுவும்.. இன்றுகாலை அகழியைவிட்டு கிளம்பிவிட்டால்.. இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் இறுதிப்புள்ளி வைத்துவிடலாம் என்று அவள் நிம்மதியுற்றிருந்த வேளையில்.. இடியாக இப்படியொரு நிகழ்வு அவளது இதயத்தை இரக்கமில்லாமல் தாக்கினால்..?? அப்படியே உடைந்து.. அணுஅணுவாய் உதிர்ந்து.. சில்லுசில்லாய் சிதறிப்போனாள் என்றுதான் சொல்லவேண்டும்..!!

முதல்நாள்தான் அந்த சிவப்பு அங்கி உருவம் மணிமாறனை தூக்கி சென்றதை கண்கூடாக பார்த்திருக்கிறாள்.. முன்பொருமுறை நீருக்கடியிலும், ஜன்னலுக்கு வெளியிலும் பார்த்த அந்த உருவத்தை, அப்போது மனபிரம்மை என்று ஒதுக்கியிருந்தாலும், இப்போது அவையெல்லாம் அப்பட்டமான நிஜம் என்கிற நம்பிக்கை அவளுக்கு வந்திருந்தது..!! 


எல்லாவற்றையும் நினைக்க நினைக்க.. அவளது இருதயத்தை ஒரு இனம்புரியாத பயம் வந்து கவ்விக்கொண்டிருந்தது.. அந்த உருவம் தன்னிடம் எதையோ எதிர்பார்க்கிறது, தன்னை சீண்டிப்பார்க்கிறது என்று தோன்றியது.. அவளது புத்திக்கும், சக்திக்கும் அப்பாற்பட்ட ஒரு அமானுஷ்யத்தின் இரும்புப்பிடியை அவளால் தெளிவாக உணரமுடிந்தது..!! 

பட்டாம்பூச்சி பறப்பதை பார்த்து மிரண்டு போனவள், பதறியடித்து படிக்கட்டு இறங்கி கீழேவந்தாள்.. பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த வனக்கொடியிடம், பதைபதைப்புடன் அந்தச்செய்தியை சொன்னாள்..!! ஆரம்பத்தில் வனக்கொடிக்கு அந்த விஷயத்தின் தீவிரம் சட்டென்று உறைக்கவில்லை..!!

"ஐயோ.. அழாத ஆதிராம்மா.. நீ பயப்படுற மாதிரி ஒன்னும் இருக்காது..!! தம்பி பக்கத்துலதான் எங்கயாது போயிருக்கும்.. இப்ப வந்துரும் பாரேன்..!!" என்று ஆதிராவை சமாதானப்படுத்தவே முயன்றாள்.

"இ..இல்லம்மா.. இல்ல.. அவர் வரமாட்டாரு.. அ..அவருக்கு ஏதோ ஆய்டுச்சு.. எ..என்னால நல்லா ஃபீல் பண்ணமுடியுது.. அவருக்கு என்னவோ ஆய்ருச்சும்மா..!!"

ஆதிராவின் கண்களில் அதற்குள்ளாகவே தாரைதாரையாய் கண்ணீர்..!! அந்த புத்தகமும் பட்டாம்பூச்சியும் அவளை வெகுவாக திகிலடையச் செய்திருந்தன.. அதனால்தான் அவளுடைய இந்த நம்பிக்கையில்லா பேச்சு..!! கணவனுக்கு ஏதோ ஆபத்து என்று அவளது காதல்மனது உணர்ந்துகொண்டது.. உள்ளத்தில் உறைந்திருந்த ஒருவித பதட்டம், அவளது உதடுகள் சிந்திய வார்த்தைகளிலும் நிறைந்திருந்தது..!!

"சொ..சொல்றதை கேளு ஆதிராம்மா.. தம்பிக்கு ஒன்னும் ஆயிருக்காது.. நீயா எதையாவது நெனச்சு பொலம்பாத..!! இ..இரு.. நான் இந்த கதிர்ப்பயல உடனே வரசொல்றேன்..!!"

வனக்கொடி சொல்லிவிட்டு டெலிஃபோன் நோக்கி ஓடினாள்.. ஆதிரா அப்படியே சோபாவில் சரிந்து அழ ஆரம்பித்தாள்..!!

ஐந்தே நிமிடங்களில் ஆதிராவின் வீட்டுக்கு பரபரப்புடன் வந்து சேர்ந்தான் கதிர்..!! வீட்டை பார்த்துக்கொள்ள தென்றலை பணித்துவிட்டு.. மற்ற மூவரும் காரில்ஏறி சிபியைத்தேடி கிளம்பினார்கள்..!! எப்போதையும் விட அதிவேகத்திலேயே காரை விரட்டினான் கதிர்.. அழுதுகொண்டே வந்த ஆதிராவை நெஞ்சில் சாய்த்து ஆறுதல்படுத்த முயன்றாள் வனக்கொடி..!!

ஒருமணிநேரம்.. ஒருஇடம் விடாமல் ஒட்டுமொத்த அகழியையையும் சலித்து முடித்திருந்தனர் மூவரும்.. சிபி சென்றிருக்க வாய்ப்புள்ள இடங்கள் அனைத்திலும் சல்லடை போட்டுத் தேடியிருந்தனர்..!! எங்குசென்று தேடினாலும் அவர்களுக்கு திரும்பத்திரும்ப கிடைத்தது என்னவோ.. ஏமாற்றம் ஒன்றுதான்..!! கோயில் வளாகம்.. கல் மண்டபம்.. மார்க்கெட் வீதிகள்.. டெலிஃபோன் பூத்.. தேயிலை எஸ்டேட்.. ஆற்றங்கரை புல்வெளி.. அவனுக்கு பழக்கமான சில நண்பர்களின் இல்லங்கள்..!
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 21-03-2019, 10:10 AM



Users browsing this thread: 3 Guest(s)