16-12-2020, 02:21 AM
அதே மாதிரிதான், இந்த சிங்ககுட்டியின் கதையும் ஆகப்போகுது, இந்த சிங்கத்து கிட்ட!!" என்று தாக்கர் சுளுரைத்த மறுநாள்.
FG என்ற எழுத்துக்கள் பெரிதாக தாங்கி நின்றது Future Groups-ன் தலைமை அலுவலகம். அந்த பிரமாண்ட கட்டிடம், கோவையின் முதன்மையான அடையாளமாகிப் போனது, கடந்த வருடம் முதல். கட்டிடத்தை விட, அது கட்டிமுடிக்கபட்ட கால அளவே, மிகவும் பிரமாண்டமாக தோன்றியது, அந்நகர மக்களுக்கு. அந்த கட்டிடத்தின் வாயிலில் அந்த கார் நுழைந்த நொடியில், அங்கிருந்த மனிதர்கள் மட்டும் இல்லாமல், உயிரற்ற கான்கிரீட் கூட பரபரப்பு கொண்டது போல ஒரு பிரமை தோன்றும் தொன்று, யாரேனும் கவனித்து பார்த்திருந்தால்.
அந்த தளத்தில், அவன் நுழைந்ததுமே, அதுவரை நிலவி வந்த கலகலப்பான சத்தம் எல்லாம் அடங்க, இவனது காலடிச் சத்தம் மட்டுமே எஞ்சியிருந்தது. அவன் வந்தது தெரிவிக்க பட, மோசஸ், அவனை எதிர்பார்த்து அந்த தளத்தில் காத்திருக்க, வழக்கமான தலையாட்டலில் அவனுக்கு ஏதோ சொன்னவன், தொடர்ந்து வேகமாக நடக்க, அவனது நடையின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், அவன் பின்னால் ஓட்டமும் நடையுமாக, பின் தொடர்ந்தான் மோசஸ். வழியில் தென்பட்டவர் அனைவரும் எழுந்து "குட் மார்னிங் சார்!!" என்று சொல்ல, அப்படி சொன்னவர்கள் அங்கு இருப்பதையே அங்கீகரிக்காதவன், அவர்களின் வணக்கத்துக்கா பதில் சொல்லப் போகிறான். சென்றவன் நேராக அங்கிருந்த கான்பரன்ஸ் ரூமின் கதவை அடையும் முன்னரே, கதவை அவனுக்கு பின்னால் ஓடிவந்த மோசஸ் ஓடிச்சென்று திறக்க, இவன் அந்த அறைக்குள் நுழைந்ததும், அந்த அறையும் சட்டென்று அமைதியானது. இன்று காலை தான் மும்பையில் இருந்து வந்தவனை, இந்த கூட்டத்திற்கு இப்படி வந்து நிற்பான் என்று எதிர் பார்க்கக்வில்லை.
அந்த அறையில் கூடியிருந்த அனைவரும் மரியாதை நிமித்தம்மாக்க எழுந்திருக்க, அவர்களுக்கும் வெளியே "குட் மார்னிங் சார்!!" சொன்னவர்களுக்கு கிடைத்த அதே பதில்தான். உள்ளே நுழைந்தவன், நேராக சென்று "MANIKANDAN, CHAIRMAN” என்று அடையாலம் காட்டப்பட்ட இருக்கையில் அமர்ந்து, நிமிர்ந்து பிரசன்டேஷனை பாதியில் நிறுத்திவிட்டு, இவனைப் பார்த்துக்கொண்டிருந்தவனை பார்க்க, எச்சில் கூட்டி விழுங்கியவன், தான் ஆற்றிக் கொண்டிருந்த உரையை தொடர்ந்தான். கொஞ்சம் சுறுசுறுப்பு குடியிருந்தது அந்த அறையில் இருந்த அனைவருக்கும். முன்னால் இருந்த அந்த காலாண்டுக்கான அறிக்கையை எடுத்து, நடக்கும் கூட்டத்துக்கும் அவனக்கும் சம்பந்தம் இல்லை, என்பதைப் புரட்டிக்கொண்டு இருந்தான்.
இரண்டு நிமிடம் கூட சென்றிருக்காது, ஒரு கையை உயர்த்தினான். மீண்டும் அமைதியானது அந்த அறை.
"what is the year on year growth for the quarter? (கடந்த வருடத்திற்கும், இந்த வருடத்திற்கும் இதே காலாண்டுக்கான வளர்ச்சி விகிதம் என்ன?)” கேள்வியை கேட்டுவிட்டு,
இவன் மீண்டும் கையில் இருந்த அறிக்கையை புரட்டிக் கொண்டிருக்க, அந்த அறையில் இருந்த பாதி பேரின் முகத்தில் கலவர ரேகைகள் என்றால், மீதி பேரின் முகத்தில் பய ரேகைகள். பிரசன்டேஷன் பண்ணிக் கொண்டிருந்தவனிடம் அவனது துறைத்தலைவர், கண் ஜாடை காட்ட
“மைன்ஸ் 12.46% பர்சென்டேஜ்!!” பதில் சொன்னவன், மீண்டும் எச்சில் கூட்டி விழுங்கினான்.
“what about marketing budget Spending? (அதே போல, சந்தபடுத்தற்கு ஆனா செலவின் விகிதம் என்ன?)” கையில் இருந்த அறிக்கையில் இருந்து கன்னெடுக்காமல் கேட்க
“மைனஸ் 6.83% பர்சென்டேஜ்!!” இந்த முறை கையில் இருந்த, குறிப்பை புரட்டிப் பார்த்து பதில் சொன்னான். இந்த முறை நிமிர்ந்து மார்கெட்டிங் மற்றும் சேல்ஸ் துறை தலைவரை பார்த்தான், அவர் பதில் சொல்லம் முன்பே, முந்திக் கொண்டான் பிரசன்டேஷன் பண்ணிக் கொண்டிருந்தவன்
“ஏற்கனவே மொத்த டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரிஸ்-யோட வளர்ச்சி நெகட்டிவ் டிரெண்டில் இருப்பதால், மார்கெட்டிங் பட்ஜெட் ஸ்பெண்டிங் கம்மி பண்ணி, பிராஃபிட் மார்ஜின் கம்மி ஆகாமா....” கையைக்காட்டி போதும் என்று இடைமறித்தவன்.
"கேரி ஆன்!!" எழுந்து வெளியேறினான். ஆங்கிருந்தவர்கள் அதிர்ந்தனர், அதன் பின் கூட்டம் தொடர்ந்ததா இல்லையா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
*************
அன்று மாலை ஃப்யூச்சர் டெக்ஸ்ஸின் பெரும் தலைகள் அனைவரும் குழுமியிருந்த கூட்டத்தின், அவர்களது விளக்கங்களை கேட்டவன்
“அடுத்த காலண்டுக்குள் வளர்ச்சிய தக்க வச்சுக்கிறது என்ன பண்ணலாம்னு பாருங்க!! அத லாபத்த தக்கவச்சுக்கணும்னு, மார்க்கெட்டிங் ஸ்பென்டிங் கட் பண்ணுறது ............. ” என்று நிறுத்தி, தன் ஆற்றாமையை வேகமாக தலையாட்டி உணர்தியவன்.
“G.K!!, நாம தொழில் பண்ணுற முறை இது இல்ல!!” திரும்பி
“T.R, மார்க்கெட்டிங், சேல்ஸ் டீம, மொத்தமா பிரச்சு விட்டுருங்க, மார்கெட்டிங் டீம G.K லீட பண்ணட்டும், சேல்ஸ் டீம்க்கு யாரயாவது பரோமோட் பண்ணமுடியுமானு பாருங்க, இல்லன ஆளு எடுங்க!!............… ஒரு வாரத்துக்குள்ள!!”
“I want results in the next Quarter, இல்லனா மொத்த மார்கெட்டிங் டீம்க்கும் டேர்மிநேஷன் லெட்டர் ரெடி பண்ணுங்க, VP!!” சொன்னவன், எழுந்து அந்த அறையை விட்டு மின்னல் போல வெளியேறினான்.
தாக்கரின் தூண்டுதலால், அந்த மீட்டிங்கில், மணி வெடித்ததின் விளைவாக, அடுத்த ஆறு மாதத்தில், அதுவரை சில்லற வணிகத்தில் ஈடுபடாத அவனது நிறுவனம், சில்லரை வணிகத்திலும் கால் பதிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அடுத்த ஆறு மாதங்களில், தென்னிந்தியாவில் பிரபலமான இருந்த, ஒரு லைஃப் ஸ்டைல் ரீடெயில் கம்பெனி விலைக்கு வாங்கப்பட்டு, பெரிதாக விரிவு படுத்தப்பட்டது.
இப்படித்தான் தன்னை நோக்கி வரும் தாக்குதலைக் கூட, லாவகமாக பற்றிக்கொண்டு, அதன் வீச்சையும், அவன் ஆற்றலை உயர்த்த பயன்படுத்திக் கொள்ளும் தந்திரம் தெரிந்தவன் மணி என்பதை தாக்கர் உணர்திருக்கவில்லை. அன்றே மனதில் தாக்கர் தன் இரையென, சிவப்பு வட்டமிட்டான். தாக்கர் நினைத்ததைப் போல மணி சிங்கமல்ல, அவன் தனித்தியங்கும் ஓநாய் என்று.
***************
கூட்டத்திலிருந்த அனைவரும், தங்கள் கையிலிருந்த கோப்பையில் மதுபானத்தை நிரப்பிக் கொள்ளும் சாக்கில், கிடைக்கும் இடைவெளியில் வாழ்த்துக்களை தெரிவித்தவர்களுக்கு, ஒரு நொடி பார்வையில் நன்றி சொல்லிவிட்டு, தன் பார்வையை, அவினாஷ் தாக்கர் மீது பதித்தவாறு இருந்தான் மணி. அந்த பார்ட்டி ஹால் கொண்டாட்டத்தில் இருந்தாலும், அவர்கள் இருவருக்கும் இடையே, ஒரு பெரும் யுத்தமே நடந்து கொண்டிருந்ததை, சங்கரபாணியை தவிர வேறுயாரும் கவனிக்கவில்லை.
குரைக்கிற நாய்யைப் பார்த்தால் வரும் பயத்தை காட்டிலும், "க்ஹார்" என்று உறுமும் நாய்களிடம், நமக்கு "பக்" என்ற பயம், உடனே ஒட்டிக்கொள்ளும். "க்ஹார்" என்று தெருக்களில், எதிரெதிரே நின்று உருமி கொண்டிருக்கும் நாய்களை, நீங்கள் பார்த்திருக்கலாம், பார்த்ததில்லை என்றால் அப்படி ஒரு வாய்ப்பு எதிர்காலத்தில் அமைந்தால், கண்டிப்பாக உற்று நோக்குங்கள், அது சமூகவியலின் முக்கியமான பாடத்தை உங்களுக்கு கற்றுத் தரலாம். இரு நாய்களுக்கு இடையே நடக்கும் ஆளுமைக்கான, அதிகாரத்துக்கான போர் அது. எதிரெதிரே நின்று உறுமிக் கொண்டு இருக்கும் நாய்கள், கடித்து, சண்டையிட்டுக் கொள்ளும் வாய்ப்பு மிக, மிக, சொற்பம். ஏதோ ஒரு கணத்தில், உறுமிக் கொண்டு இருக்கும் நாய்களில் ஒன்று, அமைதியாகி, தலையைத் தாழ்த்தி, வாலை ஆட்டிக்கொண்டு, எதிரியிடம் சரணடைந்து, அதன் ஆளுமைக்கு அடிபணியும்.
நாய்களுக்கு இடையே இப்படி நடக்கும், ஆளுமைக்கான சண்டை, மனிதர்களிடையே வேறு மாதிரி நடக்கும். பணம், அரசியல் அதிகாரம், அறிவாற்றல், உடல் வலிமை, அழகு என்று தொடங்கி ஜாதி, மதம், நிறம் என வெவ்வேறு உருவங்கள் எடுக்கும், அது. அப்படி ஒரு ஆளுமை போராட்டம் தான் நடந்து கொண்டிருந்தது, மணிக்கும், அவருக்கும். தான், கட்டி எழுப்பிய சாம்ராஜ்யத்தை, பறிகொடுத்த அவிநாசி தாக்கர் மனதில் இறுக்கத்துடன், அருகில் இருந்தவரிடம் பேச்சு கொடுத்தவாறு, பார்வை மட்டும் மணியை திரும்ப திரும்ப தழுவி வந்தது. ஒருமுறை அவனைப் பற்றி பேசியதற்கே, தான் சந்தித்த இழப்பு, அவருக்குள் ஒரு பெரும் நடுக்கத்தை கொடுத்தாலும், அதுதான் இருந்ததையும் கொடுத்தாயிற்றே இன்னும் என்ன இருக்கிறது என்று, இழுத்து பற்றிய உறுதியுடன். அழைப்பு போல் வெளியே தெரிந்தாலும், "குடிக்கலாம் வா!!” என்று தானிட்ட கட்டளைக்கு, பணிந்து போ என்று, தன் பார்வையால் அவரது உறுதியாய் உலுக்கிக் கொண்டிருந்தான், மணி. இரண்டு நிமிடம் கூட தாக்கு பிடிக்காத தன், மனஉறுதியை நொந்து கொண்டு, தளர்ந்த நடையுடன் மணியை நோக்கி நடந்தார் தாக்கர், அவன் உதடுகள், லேசாக விரிந்தது.
"You are a blood sniffing wolf, you bastard!!" அருகில் வந்தவர், அவன் காதோரம் குனிந்து, அவன் ஆளுமைக்கு அடிபணிய
"Chivas regal, double, on the rocks!!" என்று மதுபான கவுண்டரில் இருந்தவரிடம் சொல்லிவிட்டு எழுந்தவன், அவரை நோக்கி கையை நீட்ட கைக்குழுக்கியவாரே
"I take that as a compliment, enjoy your drinks!!" மற்றொரு கையால், அவர் புட்டத்தில் தட்டியவன், தான் நினைத்ததை நடத்தியவன், அங்கிருந்து வெளியேறினான். அவன் வைத்துவிட்டு சென்ற மது கோப்பையில், மது அப்படியே இருந்தது.
அவன் முதுகையே வெறித்துப் பார்த்த, அவினாஷ் தாக்கர், பின் சோர்ந்து, அருகில் இருந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டார். தான் விரும்பி அருந்தும் மதுபானத்தை, தான் விரும்பி குடிக்கும் முறை அறிந்து, அவன் ஆர்டர் செய்த கோப்பை வர, அதில் தன்னை மூழ்கடித்து கொண்டார், அருபத்தைந்து வயதான, கொட்டை தின்று பழம் போட்ட(?), அந்த குஜராத்காரர், அன்று காலை நடந்ததை நினைத்தார்.
கையெழுத்திட்ட தாக்கர், நிமிர்ந்து பார்த்தார். இருக்கிறதா? இல்லையா? என்று கூட தெரியாத ஒரு சிறிய சிரிப்பு, மணியின் உதட்டில். எழுந்தவன் கை கொடுக்க, எதிரில் இருந்த தாக்கரின் கைகள் தானாக நீண்டது. அவர் கண்களில் இருந்தே, நடந்து முடிந்த டீலில் அவருக்கு திருப்திகரமானதாக இல்லை என்பது, அங்கிருந்த அனைவருக்கும் தெளிவாக தெரிந்தது. அவர் கையை விட்ட அடுத்த நொடி, அந்த அறையை விட்டு வெளியேறினான். தான், புசித்து ஏப்பம் விடப்போகிறேன் என்று யாரைப்பார்த்து எள்ளலாக சொன்னாரோ, அவன் இன்று வெறும் எச்சமாக தன்னை மட்டும் விட்டுவிட்டு, மொத்தத்தையும் எடுத்துக்கொண்டு போக, ஒரு பெருமூச்சை விட்டார். அப்பொழுதுதான் தோன்றியது அவருக்கு, தான் நிணைத்து போல மணி, சிங்கமல்ல, அவன் தனித்தியங்கும் ஓநாய் என்று.