அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 56


நான்கு வருடம் கழித்து, மும்பையில், தாஜ் ஹோட்டல்.

"சத்தியமா, என்னால நம்ப முடியல!! இவ்வளவு சீக்கிரம் டேக்ஓவர் பண்ணுவோம்னு!!" அருகில் இருந்த மணியிடம், தனது மகிழ்ச்சியை, அதற்குமேலும் மறைக்க முடியாதவராய் வாய்விட்டே கூறிவிட்டார், மீர் அலி. (If you want to pursue a carrier in solar, Call me, என்று அறு வருடத்துக்கு முன் மணியிடம் கார்டு கொடுத்தவருக்கு, அவரது கனவை மெய்ப்பிக்கும் carrier , அவன் மூலமே அமைத்து கொடுத்து விதி).

அவரின் மகிழ்ச்சிக்கு, சிறு புன்சிரிப்பை பதிலாக அளித்தவன்.

ஏதோ உங்களுக்கு இதுல சம்பந்தமே இல்லாத மாதிரி சொல்றீங்க?” புரிவத்தை உயர்த்தி கேட்டான், மணி. அவரும் சிரித்தார்.

“Still, really it feels too good to be true!!” சிரித்தார்.

"Proper loading will result in a good serve!! டென்னிஸ்ல சர்வ பண்ணும் போது, பந்து அடிக்கிறதுக்கு முன்னாடி லோடிங் ஒன்னு இருக்கு!! The Stance, The Grip, The back swing and The hitting part. சும்மா ராக்கெட் வச்சு படிச்ச மட்டும் போதாது!! மொத்த உடம்பும் வேலை செய்யணும்!! முதல் மூணு விஷயத்த சரியா பண்ணினா!! தி ஹிட்டிங் இஸ் ஆல் அபௌட் ஃபாலோ த்ரூ!!" அவன் கண்ணில் ஒரு சின்ன புன்னகை, அந்த புன்னகை இவரிடம் பேசும் போது மட்டுமே காணக் கிடைக்கும். எந்த பங்கும் இல்லாவிட்டாலும், அவனது பசுமையான நாட்களின், மிச்சம் இருக்கும் ஒரே நபர் அவர், என்பதால் கூட இருக்கலாம்.

ஏற்கனவே கடந்த பத்து வருடங்களாக லாபம் பெரியதாக இல்லாவிட்டாலும், தொடர்ந்து விரிவாக்கம் செஞ்சு, சந்தையை பிடிச்சாச்சு!! திட்டமிட்டு, இரண்டு வருஷமா, சைனீஸ் லைசென்ஸ்ட் ப்ராடக்ட் வச்சு, அவனோட புரோபிட் மார்ஜின மொத்தமா காலி பண்ணியாச்சு!! அரசாங்க அவனுக்கு வேற வழியும் கிடையாது கம்பெனி கொடுத்தே ஆகணும்!! நம்மள விட்டா வேற யாரும் இல்ல!! இப்ப பண்ணது மணி சொன்ன மாதிரி, ஃபைனல் ஷாட்தான், ஜஸ்ட் ஃபார்மாலிட்டீஸ்!!" என்று நினைத்தார், மீர் அலி.

அவனது பேபர் பிரசெண்டேஷன் ஆகட்டும் அல்லது அவரை அழைத்து "எங்க கம்பெனியில ஜாயின் பண்ணிட்டீங்களா" என்று கேட்டதாகட்டும் அல்லது ஒரு பெரும் ஆபத்திலிருந்து தப்பி வந்தவன், கல்லூரி இறுதியாண்டு படிக்கும் பொழுதே, அவரின் கீழ் இருந்த அவனின் சொந்த நிறுவனத்தில், இரவெல்லாம் வேலை பார்த்ததாகட்டும் அல்லது அடுத்த இரண்டு வருடங்களிலேயே, இக்கட்டான சூழலில், அவனது குழுமத்தின் தலைமையை ஏற்று, அதை இன்று வரை வெற்றிகரமாக, முன்னைக் காட்டிலும் கூடுதல் முனைப்புடன் வெற்றிகரமாக நடத்தி வருவதாகட்டும் அல்லது அவர்களது குழுமத்தின், அடுத்த உயரத்திற்கு எடுத்து செல்லும் ஒரு பெரும் நகர்வை, வெற்றிகரமாக நடத்திவிட்டு, அதற்குப் பின்னாலான சிந்தனையை, சற்று முன் சொன்னேனே, சம்பந்தமே இல்லாத டென்னிஸ்ஸைக் கொண்டு. முத சந்திப்பில் இருந்தே, தொடர்ந்து அவரையே ஆச்சரியத்திற்கு உள்ளாக்கிய வந்துள்ளான், மணி. அவனது வளர்ச்சியில் தனக்கு, ஒரு சிறிய பங்கு இருக்கிறது என்று நினைத்தவர், பெருமை பொங்க பார்த்தார், அவனை.

அவர்களது இரண்டாவது சந்திப்பின் போது “யு ஆர் ரியல்லி எ பிஸினஸ்மேன்ஸ் ட்ரூ ஹியர்!, ஸ்ட்ரைட் டூ த பிஸினஸ்!!” என்று அவனைப் பார்த்து சொன்னது நினைவுக்கு வந்தது. அவனின் நேரடி கேள்வியில் ஆச்சரியம் அடைந்து சொன்னவார்த்தை, இவ்வளவு தூரம் உண்மையாகும், அதுவும் இவ்வளவு சீக்கிரத்தில் என்பதை அவரால் நம்பமுடியவில்லை. அதே நேரத்தில், அந்த சந்திப்பில் அவனது முகத்திலிருந்த சந்தோஷமும், அவருக்கு நன்றாக நினைவில் இருந்தது. அன்று அவர் பார்த்த இளைஞன் ஆறு வருடத்தில், புரிந்துகொள்ள முடியாத மர்மென மாறுவான் என்று யாராவது சொல்லி இருப்பார்கள் என்றால், அப்படிச் சொல்லி அவர்களை நகைத்திருப்பார். தனக்கு உண்டான பொறுப்புடன், அவன் செயல் பட்டாலும், அவன் வாழ்க்கையை, வாழவில்லை என்பது அவரது எண்ணம். இதை சில முறை அவனிடம் சொல்ல வேண்டும் என்று கூட நினைத்திருக்கிறார். ஆனால், அவரது எல்லை என்ன என்பது அவருக்குத் தெரியும். சற்று முன் பெருமையாக பார்த்தாள் அவனை, கொஞ்சம் கருணையுடன் பார்த்தார் அவர். யாராலும், கலைக்க முடியாது அல்லது கலைக்க துணியாத, கை தொடும் தூரத்திலும் இருந்தும், மனதால் தீண்ட முடியாத வெளியில், தனிமையில் இருந்தான் அவன்.
அவர்களது உரையாடலுக்கு பின்னால் நடந்த நிகழ்வுகளைப் பார்ப்போம்.

**************

அன்று மாலை, அதே தாஜ்ஹோட்டல்.

"உங்கள் பாராட்டுக்கு நன்றி!!, நீங்கள் சொன்னதைப்போல, இந்தியாவின் மரபுசாரா மின் உற்பத்தி துறையின் முன்னோடியாக நான் இருந்தாலும், எல்லாவற்றுக்கும் காலம் என்ற ஒன்று உண்டு!!. I think my time is up, its as simple as that!! அதுவும் போக, என்னோட நிறுவனத்தை இழுத்து மூடவில்லை. இன்னைக்கு தேதியில், சூரிய மின்சக்திக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும், இந்தியாவின், மிகப் பெரிய நிறுவனமான, ஃபியூச்சர் பவரிடம், விற்கதான் செய்கிறோம்!! விற்கிறோம் என்பதை காட்டிலும், எங்களை விட பலம் வாய்ந்த கம்பெனிக்கு, மேலும் பலம் சேர்ப்பதாகவே, இந்த பரிவர்த்தனையை, நான் பார்க்கிறேன்!! புதிதாகச் சேர்த்துக்கொண்ட பலத்துடன், நாட்டின் முன்னேற்றத்திற்கு, தேவைக்கு, பியூச்சர் பவர் முன்னை விட, முனைப்புடன் செயல்படும் என்று நம்புகிறேன்!! அதற்கு என்றென்றும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் கூறிக்கொள்கிறேன்!!"

"துறையின் முன்னோடியாகத் திகழ்ந்த நீங்கள், உங்களுக்கு கொடுக்கப்பட்ட தொடர் நெருக்கடியின் காரணமாகத் தான் உங்கள் நிறுவனத்தை, போட்டி நிறுவனத்திற்கு விற்கிறீர்களா?” அந்த செய்தியாளர் சந்திப்பின், கடைசி கேள்வியாக கேட்கப்பட்ட கேள்விக்குத்தான், கனவுகளுடன், தான் கட்டியெழுப்பிய நிறுவனத்தை, தனக்குப் போட்டியாக இருந்த நிறுவனத்திடமே விற்கும் நிலையிலும், வியாபார வட்டங்களில் கிசுகிசுக்கப்பட்டது போல, தனக்கும், தன் நிறுவனத்தை வாங்கும் நிறுவனத்திற்கும், எந்த எந்தவித முரண்பாடுகளும் இல்லை என்பதையும், தான் ஒரு தேர்ந்த, பக்குவப்பட்ட தொழிலதிபர் என்பதையும், நிரூபிக்கும் விதமாக பதில் அளித்தார், அவினாஷ் தாக்கர், இந்தியாவின் மரபுசாரா மின் உற்பத்தி துறையின் முன்னோடி.

"One last thing!! முன்பு, தாக்கர் கிரீன் பவர் லிமிடெட்-க்கு மட்டுமே வழிகாட்டியாக இருந்த திரு. அவினாஷ் தாக்கர் அவர்கள், இன்றிலிருந்து, இந்தியாவின், மிகப்பெரிய மரபுசாரா மின் உற்பத்தி மற்றும் தளவாடங்கள் தயாரிக்கும் கம்பெனியான, ஃப்யூச்சர் பவரு-க்கு வழிகாட்டியாக எப்போதும் இருப்பார் என்பதை இங்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்!! ஃப்யூச்சர் குரூப்ஸ், இதை ஒரு வியாபார பரிவர்த்தனையாக பார்க்காமல், நாட்டின் முன்னேற்றத்திலும், வளர்ச்சியிலும் எங்களுக்கு வலு சேர்க்கும் ஒரு இணைப்பாகவே பார்க்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்!! நன்றி!! Welcome to the futures group!!" என்று சொல்லி, எழுந்தவாறு, சிரித்தபடி, அவினாஷ் தக்காரக்கு கைகொடுத்தார், மீர் அலி, ஃப்யூச்சர் பவரின் இயக்குனர். வியாபார பரிவர்த்தனை நல்ல படியாக நடந்துவிட்டாதின சந்தோஷத்தில், தாக்கர், மீர் அலியை விட பெரிதாக சிரித்தபடி, கையை குலுக்கினார். செய்தியாளர் சந்திப்பில் பலத்த கரகோஷம் கேட்க துவங்கிய வேளையில் தான், அந்த செய்தியாளர் சந்திப்பு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த தொலைக்காட்சி அணைத்தான், மணி.

இந்தியாவின் மரபுசாரா உற்பத்தியில், இரண்டாம் பெரிய கம்பெனியான கிரீன் பவர் லிமிடெட்-டை, ஃப்யூச்சர் பவர்ஸ் கைப்பற்றம், ஒப்பந்தம் கையெழுத்தாகி, அதை முறையான, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்கு நடந்ததுதான், அந்த செய்தியாளர் சந்திப்பு. தாஜ் ஹோட்டலில் ஒரு பிசினஸ் ஹாலில், அந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற, அதே ஓட்டலில் இருந்த, ஒரு சூட் அறையில் அமர்ந்தது அதைப் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தான், மணி.

கடந்த சில வாரங்களாக, வியாபார வட்டத்தில், சூடாக கிசுகிசுக்கப்பட்ட செய்தியை, உறுதி செய்யத்தான் அந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. இது போன்ற செய்திகள் வழக்கமானதுதான் என்றாலும், ஃபியூச்சர் குரூப்ஸ் குழுமத்தின், இது போலான நடவடிக்கைகள், எப்போதுமே கொஞ்சம் அதிகம் கவனம் ஈர்க்கும். கடந்த இரண்டு வருடங்களாகவே, கொஞ்சம் அதீத ஆக்ரோஷத்துடன், அந்தக் குழுமம் செயல்பட்டது ஒரு காரணம் என்றால், அதைத் தலைமை தாங்குபவன், இருபத்தி நான்கே வயதான மணிகண்டன் என்பது, மற்றொரு காரணம்.

*************

"சார் பிரஸ்மீட் முடிஞ்சது!!" கதவை தட்டிக்கொண்டு, உள்ளே வந்த சங்கரபாணி (மணியின் secretary) சொல்ல, ஆட்டினானா? இல்லையா? என்பதே தெரியாத அளவுக்கு தலையைாட்டி, அவருக்கு பதில் அளித்த மணி,

"ஈவினிங், பாட்டிக்கு வரணும்னு, நான் சொன்னதாக, தக்கார் கிட்ட சொல்லிருங்க!!" "வரணும்" என்பதில் அழுத்தம் கொடுத்தவன், அது அழைப்பு அல்ல என்பதை அவருக்குத் தெளிவாக்கிவிட்டு, உள் அறையில் நுழைந்தான்.

***************

ஒரு மணி நேரம் கழித்து, பார்ட்டிக்கு தயாராகியவன், கண்ணாடி முன் நின்று தன்னை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டான். எல்லாம் சரியாக இருப்பதை உறுதி செய்தவன் கடைசியாக, கண்ணாடியில் தெரிந்த தன் கண்களின் பார்வையை பொருத்தினான். அவனது கண் இமைகள், கருவிழியின் மேற்புறத்திலும், கீழ்ப்புறத்திலும், 10 சதவீதத்தை மறைத்திருக்க, வெள்ளை விழிகளை, காட்டிலும் கருவிழியின் சதவீதம் அதிகமாக இருந்தது. அவனது கூர்மையான பார்வை, அகோரப் பசியுடன்,உலகப் பெருவெள்ளம் அனைத்தையும், மொத்தமாகக் இட்டு நிரப்பினாலும், கொடுத்ததெல்லாம் பத்தவில்லை இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்கும், ஒளிகூட தப்பிக்க முடியாத, ஆளி பெருஞ்சுழி போல், அவன் ஆன்மாவை கேட்டது. அண்டவெளியின் நிரந்தரமான, இருளின் பொருள் இதுதான் என்பதைப் போல இருந்தன, அவனது, இரு கண்கள்.

அந்த விபத்துக்கு பின், பழனியில் இருந்து, கோயம்புத்தூர் கிளம்பும் முன்தான், பெரும் பசியுடன், மூர்க்கமாக இருந்த இந்த கண்களை, முதன்முதலாக பார்த்தான், அவன். அதுவரை, அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த மிருகத்தை, வலியை, அவன் வாழ்வின் ஒளியை, மொத்தமாக தின்றுபூசித்து, பெரும்பசியுடன், அவனது ஆன்மாவை கேட்டது,அன்று. இன்றுவரை கேட்டுக் கொண்டிருக்கிறது.

உயிரினங்களின் செயல்பாடுகள், மொத்தமும் பாட்டம்-அப், டாப் - டவுன்,(Bottom-Up, Top-Down) என்ற உடல் பரிவர்த்தனைகள், மூலமே நிகழ்கின்றன. புலன் உறுப்புகளாலும், புலால் உறுப்புகளாலும், ஆனதுதான், அனைத்து உயிரினங்களின் உடல். புற நிகழ்வை உணர்ந்து கொண்டு புலன் உறுப்புகள், அதை மூளைக்குக் கடத்தும், மூளை, அதை பகுத்துப் பார்த்து, புலால் உறுப்புகளுக்கு, என்ன செய்ய வேண்டும் என்ற கட்டளையை இடும். கண், காது, மூக்கு, வாய், தோல் என்ற இந்த ஐந்து புலன் உறுப்புகளில், மிகவும் முக்கியமானது கண். வெப்பத்தால் உடலின் ஏதோ ஒரு பாகம் சூடு பட்டால், உடனே அதிலிருந்து விலகி, எதனால் சூடு பட்டது என்று பார்ப்போம். ஊடலில் ஏற்பட்ட வெப்ப தாக்கத்தால், ஆபத்து என உணர்ந்து, மூளை உடல் பாகங்களை இயக்கியது, ஒரு சின்ன, உடனடி செயல்பாடு தான். அடுத்தடுத்த செயல்பாடுகளை, ஆபத்தின் முழுபரிணாமத்தை தெரிந்து கொள்ள, மற்ற புலன் உறுப்புகளை காட்டிலும், மூளை அதிகமாக நம்புவது கண்களைத்தான். அதனால்தான் கண்கள் புலன் உறுப்புகளில் முக்கியமானது மட்டுமல்ல முதன்மையானது கூட.

உணர்வகளை கண்கள் காட்டிக் கொடுத்துவிடும், கண்கள் பொய் பேசாது என்பார்கள், உண்மைதான். கண்களில் வெளிப்படும் உணர்வுகளை, ஓரளவுக்கு நம்மால் கட்டுப்படுத்த முடிந்தாலும், காதல், காமம், பயம், கோபம் போன்ற அடிப்படை உணர்வுகளை கண்கள் வெளிப்படுத்துவதை, கட்டுப்படுத்துவது இயலாத காரியம். சிலரது பார்வையே பயமுறுத்துவதாக இருக்கும், அப்படியான பார்வைகளை, நாம் அனைவரும் வாழ்க்கையில் சந்தித்திருப்போம். பயம், அந்தப் பார்வையின் காரணமாக வருவது அன்று, அந்தப் பார்வையில் உள்ள உணர்வை, என்னவென்று புரிந்துகொள்ள முடியாததால் வருவது. தனக்கென்று இருப்பதை பாதுகாத்துக் கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும், வெளிப் படுத்திக் கொள்ளவும் நம்மை தூண்டுவதுதான் உணர்வுகள். பாதுகாத்துக் கொள்ளவும், கொடுப்பதற்கும், தன்னிடம் இருப்பதை காட்டிக் கொள்வதற்கு என்று எதுவுமே இல்லை என்ற நிலையில் இருக்கும் மனிதன், உணர்வுகள் அற்றவனாகத்தான் இருப்பான், மணியைப் போல. உணர்வுகள் இல்லாதவன், உயிரற்றவனுக்கு ஒப்பாவான், அப்படிப்பட்டவனின் பார்வையில், உயிர் இருக்காது. அவன் விழிகள் எதுவும் பேசாது. பேச்சற்ற, ஊமை விழிகளின், வெறுமையை, எதைக் கொண்டும் நிரப்ப இயலாது. அது பார்ப்பவர்களுக்கு, திகிலை கொடுக்கும், அகோரப் பசியுடன்தான், எப்பொழுதும் இருக்கும்.

****************

தன்னை தின்னும், தன் விழிகளில் இருந்து, தன்னை விடுவித்துக் கொண்டவன், அறையில் இருந்து வெளியேற,

"சார்!! எல்லாரும் வெயிட்டிங் !!" அவன் நுழைந்ததுமே, எழுந்து நின்ற சங்கரபாணி, அவன் கேட்காமலே சொன்னார். அருகிலேயே, மணியின் தனி உதவியாளர், மோசஸ். மீண்டும், ஆட்டினானா? இல்லையா? என்பதே தெரியாதது போல, ஒரு தலையசைப்பு, அவனிடம்.

மிடுக்காக, கம்பீரமாக, அவன் பார்ட்டி ஹாலுக்குள் நுழைந்ததும், சலசலப்பு குறைந்து, ஒரு நொடி மொத்த கூட்டமும் அவனைப் பார்த்துவிட்டு, தன் இயல்புக்கு திரும்பியது. அந்த அறையில் இருந்த அனைவரும் இயல்புக்குத் திரும்பியது போல் தோன்றினாலும், ஒவ்வொருவருகக்குள்ளும், அவனுடன் அளவளாவும் வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்கா விட்டால், அப்படிஒரு வாய்ப்பை, எப்படி ஏற்படுத்தி கொள்ளலாம் என்ற சிந்தனையை நிறைந்திருந்தது, ஒருவரைத் தவிர. அந்த ஒருவர், வேறு யாருமல்ல, எந்த நெருக்கடியும் இல்லை, தானாக மனமுவந்து, தன் நிறுவனத்தை விற்பதாக, மூச்சுவிடக்கூட முடியாத நெருக்கடிக்கு மேல் நெருக்கடி தவித்த, வேறு வழியே இல்லை என்பதை உணர்ந்து, சிரித்த முகத்துடன் அப்படி சொல்ல பணிக்கப்பட்ட திரு அவினாஷ் தாக்கர் தான். உள்ளே, வந்தவன் நேரடியாக சென்றது அவரிடம் தான். இருவரும், கைகுலுக்கி கொள்ள, மொத்தக் கூட்டமும் கைதட்டியது.

"Come, let's have a drink!!" மறுப்பதற்கு வாய்ப்பு கொடுக்காமல், அடுத்த நொடி மதுபானங்கள் இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்த, மணி, தனக்கென, ஒரு மது கோப்பையை வாங்கி, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு, தாக்கரின் மீது பார்வையைப் பதித்தான்.

*****************

ஒன்றரை வருடத்திற்கு முன்,

இதே பார்ட்டி ஹாலில் நடந்த ஒரு பார்ட்டியில்,

தன் அருகில் இருந்தவரிடம், ஏதோ பேசியவாறே, தன் கையில் இருந்த மது கோப்பையை, உருஞ்சிக் கொண்டிருந்த மணியை, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார், அவினாஷ் தாக்கர். இந்தியவின், மரபுசாரா மின் உற்பத்தியின், முன்னோடி. தனிக்காட்டு ராஜாவாக, அந்தத் துறையில் கொடிகட்டி பறந்தவர். கடந்த சில வருடங்களாக, சிவகுருவின் அயராத உழைப்பால், தனது வியாபார சந்தை குறைந்துவந்த வன்மத்தில் இருந்தவருக்கு, சிவகுருவின் மகன், அந்த நிறுவனத்தின் தலைவராகி விட்டான், அவனது மொத்த பிடியில் தான் அது இயங்குகிறது என்று தெரிந்ததும், மீண்டும் தனியாவர்த்தனம் செய்வதற்கு, இதைவிட ஒரு நல்ல வாய்ப்பு தனக்கு கிடைக்காது என்று கணக்கு போட்டார்.

அவர் கணித்ததற்கு மாறாக, முன்னிலும் முனைப்பாக செயல்பட்டது ஃப்யூச்சர் பவர். நேரில், மணியை ஆழம் பார்க்கவேண்டி, இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்தவர்.

"பச்சா!! ரொம்ப சின்ன பையனா இருக்கான்?" தன், அருகில் நின்றிருந்தவரிடம் கூறியவர், அவரை, அழைத்துக்கொண்டு, மணியை நோக்கி சென்றார்.

"வாழ்த்துக்கள்!!, ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, சின்ன வயசுலேயே, மிகத் திறமையாக செயல்படுறேனு கேள்விப்பட்டேன்!! உன்ன மாதிரி ஆட்கள்தான் நம்ம இன்டஸ்ட்ரி வேணும்!! உன்ன பார்த்த, சின்ன வயசுல என்ன பார்த்தது மாதிரியே இருக்கு!! எனக்கு அப்புறம், நம்ம துறையை, மேலும், மேலும் வளர்ச்சி பாதைக்கு நீ எடுத்துட்டு போகணும்!! வெளிநாட்டு நிறுவனங்கள் எதையும் காலுன்ற விடக்கூடாது!!. அடுத்த அம்பது வருஷம் நீதான்!!" என்றார், வாயெல்லாம் பல்லாக, இதே அவினாஷ் தாக்கர். மணி, அவனது குழுமத்தின், தலைவராக பொறுப்பேற்ற, ஆறு மாதம் கழித்து, அவனை ஆழம் பார்த்தார்.

"நன்றி!!" என்று ஒற்றை வார்த்தையில் முடித்தவன், மதுக் கோப்பையை உறிஞ்ச ஆரம்பித்தான்.

"அப்பா எப்படி இருக்கிறார்?" ஆழம் பார்த்தார்.

"நல்லா இருக்கார்!!" இரண்டு வார்த்தைகளில் முடித்தான்.

"என்ன வயசாகுது உனக்கு?" இன்னும் கொஞ்சம் இறங்கிப் பார்த்தார்.

"இன்னும் அஞ்சு மாசத்துல 23!!" லேசாக உதடு விரித்தான். அப்பொழுது அவனது செகரட்ரி சங்கரபாணி வந்து, அவனிடம் தொலைபேசியை நீட்ட,

"எக்ஸ்க்யூஸ் மீ!!" தாக்கரிடம், விடைபெற்று, அங்கிருந்து நகர்ந்தான்.

"கொஞ்சம் அழுத்தகாரனாத்தான் இருப்பான் போல, சிவகுரு பையனா சும்மாவா!!" தாக்கருடன் வந்தவர், மணியை, சிவகுருவின் மீது, தனக்குள்ள அபிப்ரயாத்தால் எடை போட, அவரைப் பார்த்து சிரித்த தக்கார்.

"நின்னு பேசவே பயந்துக்கிட்டு ஒடுறான் பாரு, சொல்லிவச்சு அவனுக்கு ஃபோன் வந்த மாதிரி இங்க இருந்து எஸ்கேப் ஆயிட்டான்!!" தான் துல்லியமாக கணித்ததை சொன்னார் தாக்கர். பின்,

ஒத்துக்குறேன், சிவகுரு பிசினஸ்ல ஒரு சிங்கம் தான்!! நீ சொல்ற மாதிரி, இவன் சிங்கக்குட்டிவே இருநதிட்டு போகட்டும்!!” என்று நக்கலாக உதடு சுழித்தவர்

"உனக்கு சிங்கத்தோட சர்வைவல் ஸ்டோரி சொல்லுறேன் கேளு!! சிங்கம், மற்றொரு சிங்கக் கூட்டத்தோட ராஜாங்கத்தை பிடிக்கும் போது, பழைய சிங்கத்தோட, குட்டிங்க எல்லாத்தையும், அடிச்சு சாப்பிட்டு விடுமாம்!!. அதே மாதிரிதான், இந்த சிங்ககுட்டியின் கதையும் ஆகப்போகுது, இந்த சிங்கத்து கிட்ட!!" தனக்கு சரிநிகர் போட்டியாக இருந்த, சிவகுருவின் மகனின் தலைமையில் செயல்படும், ஃப்யூச்சர் பவர் என்னும் ராஜ்யத்தை, எளிதாக கைப்பற்றி விடலாம் என்று மனக்கோட்டை கட்டிய அவினாஷ் தக்கார்.

அவினாஷ் தக்காரின் அந்த உரையாடல் அடுத்த இரண்டும் மணி நேரத்தில், சில காதுகளுக்கு தாவி, மணியின் காதை வந்தடைந்தது. சிரித்துக்கொண்டான், ஆனால், அவன் கோபம் வேறு விதமாக வெளிப்பட்டது அடுத்த நாள், கோயம்புத்தூரில், அதற்கு, கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதவர்களிடம்.

*****************
[+] 1 user Likes Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 16-12-2020, 02:13 AM



Users browsing this thread: 27 Guest(s)