அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
(14-12-2020, 11:37 AM)Doyencamphor Wrote: டிஸ்கி

(கதை சொல்லியின் புலம்பல்)

எச்சரிக்கை:

எப்பொழுது பதிப்பின் கடைசியாக, கொத்தமல்லி போல கொசுராக வரும் டிஸ்கி, வரலாற்றில், முதன் முறையாக(ஹி!!ஹி!!) முன்னறிவிப்பாக வருகிறது. இந்த பகுதியை படிக்காமல், பாகம் - 55 படித்தாலும், கதையின் தொடர்ச்சியில் எந்தவித மாற்றமும் இருக்காது.

கதை சொல்லியின் மனசாட்சி : "டேய் கதை எழுதும் போது அதுக்கு தேவையானதை மட்டும்தான் எழுதணும், இப்படி மனசுல தோன்றத எல்லாம் எழுதுறது சரியில்ல. காமக்கதை எழுதிய வந்துட்டு, காதல் கதை எழுதுறதே தப்பு, இதுல உனக்கே சரியா புரியாத அறிவியலை பத்தி எழுதுறது எல்லாம் பெரும் பாவம்" னு நான் எவ்வளவோ சொல்லியும் இவன் கேட்க மாட்டேன் என்கிறான், அதனால இந்த பகுதியை படித்துவிட்டு, வாசகர்கள் கடுப்பானால், கம்பெனி பொருப்பாகாது, என்று சொல்லிக்கொண்டு............................

****************

வாழ்வில், நல்லவன் ஒருவன் துன்பப்பட்டாலும் அல்லது கடைந்தெடுத்த அயோக்கியன் ஒருவனின் வளம் பெற்றாலும், பார்ப்பவர்கள் விரக்தியில் "எல்லாம் தலைஎழுத்து, அவன் விதி படிதான் நடக்கும்" என்பது நமது சமூகத்தில் பொதுவாக வழங்கப்பட்டு வரும் சொல்லாடல். பொதுவாக ஒருவனுக்கு ஏற்படும் வினையின் காரணம், காரியம், புரியாமல் போகும் போது, அதை எல்லாம் கடவுளின் சித்தம் "மனுஷ பய கையில என்ன இருக்கு" என்று கடவுளின் பெயரில் அனைத்தையும் சுமத்திவிட்டு, வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகரும் சமூகக் கூட்டம், நம்முடையது. ஆனால் மதத்தின் மீதும், கடவுள் மீதும், நம்பிக்கை இல்லாத அறிவியல் நம்பிக்கையுள்ள கூட்டம், எதையுமே கடவுளின் சித்தம் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அண்டத்தின், நிகழ்வுகள் அனைத்தும், ஒரு அறிவியல் விதி அல்லது கோட்பாட்டின் படியே நடக்கிறது என்பது அவர்களின் எண்ணம்.

அறிவியல் விதிகள் அல்லது தத்துவங்கள் என்பது பொதுவாக, உலகின் ஏதாவது ஒரு அம்சம் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட விளக்கம் ஆகும். ஆனால் அறிவியல் தத்துவங்கள் பல சமயம், அதுசார்ந்த அம்சத்தை தாண்டி, வாழ்க்கைக்கும் பொருந்தி விடும். அறிவியல் தத்துவங்களின் அழகியலே அதுதான், அதற்கு மிக பிரபலமான எடுத்துக்காட்டு, நியுட்டனின் மூன்றாம் விதி, "எந்த ஒரு விசைக்கும், அதற்க்கு சமமான எதிர் விசை இருக்கும்”. இந்த விதி, அறிவியல் சார்ந்தது, ஒரு பொருளின் மீது, ஒரு விசை தாக்கும் போது, அப்பொருளின் இயக்கத்தில் ஏற்படும் விளைவைப் பற்றிய விதி என்றாலும், அது வாழ்க்கைக்குமான தத்துவமாகவும் பொருந்தும்.

அப்படி இந்த கதையின் ஆசிரியருக்கு (ஹி!!ஹி!!) பிடித்த அறிவியல் ததுவங்களில் ஒன்று Chaos Theory, தமிழில், குழப்ப வீதி அல்லது ஒழுங்கின்மை விதி/கோட்பாடு. பெயரப் போலவே சற்று குழப்பமானதுதான். கணக்கீட்டு, துல்லியமாக வானிலை மாற்றங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட Edward Norton Lorenz, இந்த கோட்பாட்டின் முன்னோடி.

குழப்ப விதி
ஒழுங்கற்ற ஒரு அமைப்பிலோ, ஒரு தொடர் செயற்பாட்டிலோ ஒரு ஒழுங்கை தேடும் இயலை பற்றி விவரிப்பது தான் இந்த ஒழுங்கின்மைக் கோட்பாடு.

ரொம்ப எளிமையா சொல்லணும்னா, அபூர்வ சகோதரர்கள் படத்தில், அப்பு கமல், டெல்லி கணேஷிடம் "இந்த கோலிக்குண்டு தான் நீ செஞ்ச வினை, இப்ப அது செய்யும் விளையாட்டை பாக்குறியா?” என்று கேட்டு, அதை உருட்டி, சங்கிலி தொடராக நடக்கும் அடுத்தடுத்த நிகழ்வுகளின் முடிவில், கொல்லப்படுவார். அந்த படத்தில், அப்பு கமல் ஏன் எதிரிகளை நேரடியாக கொல்லாமல், டிசைன், டிசைனா, திட்டம் போட்டுக் கொல்கிறார்? ஏன்னா, எதிரிகள் கொடுத்த விஷத்தால், முழுமையாக வளர்ச்சியடையாத, அவரது உடல்தான் காரணம் (எங்க யாருக்கும் இது தெரியாதா நீங்க கடுப்பாவது தெரியுது, அதுக்குத்தான் முதல்லயே எச்சரிச்சேன்). அந்தப் படத்தில் அப்பா கமலஹாசன் ஒரு நேர்மையான அதிகாரியாக இருக்காமல் இருந்திருக்கலாம்!! இல்ல, ஸ்ரீவித்யா அந்த விஷம் குடித்ததும் மரணித்திருக்கலாம்!! அது போல் தான் வாழ்க்கையும், இப்படி எத்தனையோ "க்கலாம்-கள் அனைவரது வாழ்விலும் வந்திருக்கும், இனியும் வரும். அறிவியல் கூற்று படி, நடக்கும் எதுவுமே தற்செயலான நிகழ்வு இல்லை, எல்லா நிகழ்வுகளுக்கு பின்னாலும், காரணமும் காரியமும், உண்டு. விஸ்வரூபம் படத்தில் பெருமாள் சிலையை கடலில் போட்டதின் விளைவு தான் கிளைமாக்ஸ் வரைக்குமான காட்சிகள். இதை குழப்பவிதி/ஒழுங்கின்மை கோட்பாட்டின் படி, பட்டாம்பூச்சி விளைவு என்று அறியப்படுகிறது. உலகில் எங்கோ ஒரு மூலையில் தன் சிறகை அசைக்கும் பட்டாம்பூச்சியின் தாக்கத்தால், உலகின் வேறு ஒரு மூலையில் சூறாவளி காற்று உண்டாகும். எல்லா பட்டாம்பூச்சியின் அசைவுக்கும், சூறாவளி காற்று உண்டாகுமா என்றால்? ஆகாது!! ஆனால் அதற்கான விளைவுகள் இருக்கும். காலச் சூழலில் ஏற்படும் ஒரு சின்ன மாற்றம், அதற்கான விளைவுகளை, காலத்தின் போக்கில் நிகழ்த்தி விட்டு செல்லும் என்பது திண்ணம்.

அப்பு கமல், உருட்டிவிட்ட கோலிக்குண்டு, அப்புவின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, தவறி கீழே விழுந்து, டெல்லி கணேஷ் இடம் சென்று இருந்தாலும்!! அல்லது கொஞ்சம் வேகமாக உருண்டு இருந்தாலும்!! அல்லது கொஞ்சம் மெதுவாக உருண்டு இருந்தாலும்!! அல்லது கோலிக்குண்டு தாக்கத்தால், அடுத்தடுத்த தொடர் நிகழ்வுகளில், ஏதேனும் ஒன்றில் தடங்கல் ஏற்பட்டு இருந்தால்!! அந்தப் படத்தின் கதை வேறு மாதிரியாக இருந்திருக்கும். அதே போல் தான் இந்த கதை எழுத ஆரம்பிக்கும்போது, பெற்றோரால் பாசம் காட்டப்படாமல் வளர்க்கப்படும் மணி, தன் தந்தையின் காமுகியையும், அவளது மகளையும் மடக்கி, தாயுடனும் மகளுடனும், ஒன்றாக கூடி, தன் பெற்றோரை அவமானப்படுத்தி, பழிவாங்கும் மணியாக இருந்தவன், கதை ஆசிரியரின் சறுக்கலால், மதுவின் மீது காதல் கொண்டு, காமகதை, காதலில், அதன் நீட்சியான காமத்தில் திளைக்கும் காதலர்களின் கதையாக மாறியது. ஒரு வன்காம கதையாக ஆரம்பிக்கப்பட்ட, பத்து அல்லது பதினைந்து பதிவுகளில் முடிந்திருக்க வேண்டிய கதை, ஐம்பது பதிவுகளையும் தாண்டி, வாசகர்களின் வயிற்றெரிச்சலையும் , சாபத்தையும் வாங்கிக்கொண்டு, இன்னும் ஒரு பத்து பாகங்கள் வரை போகும் போல.

***************

உங்களின் எழுத்து நடையில், காட்சி அமைப்பில், உழைப்பில் நீங்கள் ஒரு கமல் ரசிகன் என்று தெரிகிறது. இன்னும் chaos theory பற்றி எல்லாம் சொல்லி உறுதி செய்து விட்டீர்கள்.

ஒன்று, மேலே தசாவதாரம் என்பதற்கு பதிலாக  விஸ்வரூபம் என  வந்து விட்டது..
[+] 1 user Likes nathan19's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by nathan19 - 14-12-2020, 10:17 PM



Users browsing this thread: 26 Guest(s)