14-12-2020, 08:22 PM
பக்கம் - 59
அமைதி பள்ளத்தாக்கு
இந்தப் பள்ளத்தாக்கு பேரிஜம் ஏரி போகும் வழியில இருக்கு. இந்த பள்ளத்தாக்கை பாக்கிறதுக்கு வனத்துறையிடம் அனுமதி வாங்கணும். இந்த இடத்திற்கு அனுமதி கட்டணம் எதுவும் கிடையாது.
இந்த பள்ளத்தாக்கு பார்க்கிறதுக்கு மிகவும் அழகாகவும் பிரம்மிப்பாக இருக்கும். இந்த அமைதிப்பள்ளத்தாக்கு போறவங்க ரொம்ப கவனமாக போகணும். இந்த பள்ளத்தாக்கில் விழுந்துட்டா காப்பாத்தறது ரொம்ப கஷ்டம்
அமைதி பள்ளத்தாக்குல விழுந்தவங்க உடலை எடுப்பதற்கு உள்ளூர்வாசிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளும் உதவி தேவைப்படும். குறைந்தது 5 முதல் 10 லட்சம் வரை பணம் செலவாகும்.
மதிகெட்டான் சோலை வியூ
மதிகெட்டான் சோலை வியூ பாயிண்ட் பேரிஜம் ஏரி போற வழியில் இருக்கு. இந்த மதிகெட்டான் சோலை பார்க்கிறதுக்கு ரொம்ப அழகாக இருக்கும்.
அடர்ந்த காடு, புல்வெளி, மரங்கள், செடி, விலங்குகள் மற்றும் பறவைகள் இந்த காட்டில இருக்கு.
மதிகெட்டான் சோலை மொத்தம் 284 ஏக்கர் பரப்பளவுல இருக்கு. இந்த காட்டுக்குள் யாராவது போய்ட்டா, அவர்கள் மூளை குழம்பி கிறுக்குப் பிடித்த மாதிரி காட்டுக்குள்ளேயே திரிவாங்க. அதனால இந்த காட்டுக்குள்ள போறதுக்கு ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட் தடை செஞ்சிருக்காங்க. இந்த மதிகெட்டான் சோலை யில் போகர் சித்தர் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இந்த காட்டில பல வகையான மூலிகை பொருட்கள் இருக்கு. இந்த காட்டுக்குள் பல இடங்கள்ல சூரிய ஒளியே செல்லாது.
அதனால, இந்த காடு மிகவும் இருட்டா, ஈரப்பதமாக இருக்கும். இதனால இந்த காட்டை தென்மலை ஈரமான காடுன்னு சொல்வாங்க.
பேரிஜம் ஏரி வியூ
பேரிஜம் ஏரி வியூபாயிண்ட் இந்த இடம் பேரிஜம் ஏரி செல்லும் வழியில் இருக்கு. இந்த இடத்தில இருந்து பாத்தா பேரிஜம் ஏரி மிக அழகா தெரியும்.
தீ பார்க்கும் கோபுரம்
இந்த கோபுரம் பேரிஜம் ஏரி வியூ பாயின்ட் பக்கத்துல இருக்கு. இந்த கோபுரத்தை ஃபாரஸ்ட்ல்காரங்க யூஸ் பண்றாங்க. இந்த கோபுரத்திலிருந்து பாத்தா 36 கிலோமீட்டர் தொலைவுல எங்கு தீ பிடிச்சாலும் தெரிஞ்சிடும்
இந்த கோபுரத்தின் முக்கிய நோக்கமே இதுதான். இந்த கோபுரத்தின் அருகில் இருந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
தொப்பி தூக்கி பாறை
தொப்பித் தூக்கிப் பாறை இந்த இடம் பேரிஜம் ஏரி செல்லும் வழியில இருக்கு. இந்த இடம் ஒரு பசுமையான பள்ளத்தாக்கு. இந்த இடத்தில் புவியீர்ப்பு விசை குறைவாக இருக்கிறதனால நம் ஏதோ ஒரு தொப்பியை தூக்கிப் போட்டா அது நம்மை நோக்கி வரும். இதனால இந்த இடத்துக்கு தொப்பி தூக்கி பாறைன்னு பேர் வச்சிருக்காங்க.
லிரில் ஃபால்ஸ்
லிரில் ஃபால்ஸ் அல்லது லிரில் நீர்வீழ்ச்சி இந்த இடம் கொடைக்கானல்ல இருக்கிற சின்ன நீர் வீழ்ச்சி. இந்த இடத்திற்கு அருகில் பல கடைகளும் மற்றும் உணவகங்கள் உள்ளன.
இந்த நீர்விழ்ச்சி பாக்குறதுக்கு ரொம்ப அழகாக இருக்கும். இந்த நீர்வீழ்ச்சியின் மேல் நின்னு புகைப்படம் எடுத்துக்கலாம்..
இந்த இடத்தில லிரில் சோப் விளம்பரப் படம் எடுத்த்தினால இந்த இடத்துக்கு லிரில் ஃபால்ஸ்ன்னு பேர் வந்துச்சு..
பூம்பாறை கிராமம் வியூ
பூம்பாறை கிராமம் கொடைக்கானலில்ல இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தூரத்துல இருக்கு. இந்த கிராமத்துக்கு போக கொடைக்கானலில்ல இருந்து பஸ் இருக்கு மன்னவனூர் போறப்போ இந்த இடத்தையும் பாத்துட்டு வரலாம்.
இந்த கிராமம் பார்ப்பதற்கு ரொம்ப அழகாகவும் பிரமிப்பாக இருக்கும். இந்த கிராமத்தில் பிரதான தொழில் விவசாயம். இந்த கிராமத்தில் சுத்தமான காய்கறிகள் கிடைக்கும்.
பூம்பாறை கிராமம் வியூ
இந்த கிராமத்தில் அருள்மிகு குழந்தை வேலப்பர் கோயில் இருக்கு. இந்தக் கோயிலில் உள்ள முருகன் சிலை போகர் செய்த நவபாஷாண சிலைகளில் ஒன்னுன்னு நம்பறாங்க.