20-03-2019, 06:46 PM
நேத்து, விஜய் சேதுபதி சார் ரசிகர் மன்றத்துல இருந்து நாலஞ்சு பேர் வந்தாங்க. அவங்ககிட்ட சார் கார் கொடுத்து அனுப்பியிருக்காரு. கூட, அஞ்சு லட்சம் பணமும் கொடுத்தாங்க. சங்கத்து அக்கவுன்ட்ல பணத்த போட்டுட்டேன். ஆபீஸ் கட்டுறதுக்கான வேலைகள ஆரம்பிக்கணும்.
இனிமேல், கொத்தடிமையா மக்கள் எங்க கஷ்டப்பட்டாலும் ஈசியா மீட்டு வந்துடுவோம். இப்பகூட சார் கொடுத்த கார்லதான் மக்கள மீட்க போய்ட்டு இருக்கோம். இந்த கார்ல என் மக்களைகூட்டிட்டு வர ரொம்ப ஆசையா இருக்கு'' வெகு உற்சாகமாகப் பேசுகிறார் பச்சையம்மாள்.