20-03-2019, 06:32 PM
``விஜய் சேதுபதி கொடுத்த கார்லதான் மக்களை மீட்கப் போய்ட்டு இருக்கேன்'' - பச்சையம்மாள்!
`எங்கயாவது, மக்கள் கொத்தடிமையா இருக்காங்கன்னு கேள்விப்பட்டா, அவங்களைக் கூட்டிட்டு வர வண்டி புடிக்க ரொம்ப சிரமப்படுவோம். அந்த நேரம் பார்த்து கையில காசும் இருக்காது. இனிமே அந்தக் கவலை இல்லை. எல்லாம் விஜய் சேதுபதி சாரால தான். இப்பக்கூட சார் கொடுத்த கார்லதான் மக்களை மீட்கப் போய்ட்டு இருக்கோம் '' உற்சாகமாகப் பேசுகிறார், விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர் மறுவாழ்வு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பச்சையம்மாள்.
பழங்குடிப் பெண்ணான பச்சையம்மாள், பல வருடங்களாகக் கொத்தடிமையாக இருந்து, சமூக ஆர்வலர்களால் கடந்த 2012-ம் ஆண்டு மீட்கப்பட்டவர். தான் மீண்டதைப்போல இந்த அடிமைத்தனத்திலிருந்து தம் மக்களையும் மீட்க வேண்டும் என ‘விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர் மறுவாழ்வு சங்கம்’ என்கிற அமைப்பைத் தொடங்கி களப்பணி செய்துவருகிறார். தன் அபார முயற்சியால், இதுவரை கொத்தடிமையாக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை மீட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு, ரேஷன் கார்டு வாங்கித்தருவது, ஆதார் கார்டு பெற்றுத் தருவது போன்ற சமூகப் பணிகளையும் மேற்கொண்டுவருகிறார். இந்த ஆண்டில், அவள் விகடன் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, தமிழகத்தின் தலைசிறந்த 10 பெண்களில் பச்சையம்மாளும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வாரங்களுக்கு முன், ஒரு தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் பச்சையம்மாள். அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகர் விஜய் சேதுபதியிடம், கொத்தடிமையாக இருக்கும் மக்களை மீட்பதில் உள்ள சிக்கல்களையும், தன் தேவைகளைப் பற்றியும் உரையாடியிருக்கிறார். இந்த நிலையில், நேற்று திடீரென நடிகர் விஜய் சேதுபதியிடமிருந்து ஒரு காரும், ஐந்து லட்சம் பணமும் வந்து சேர்ந்திருக்கிறது.