11-12-2020, 12:37 PM
தேவதை பார்க்கும் நேரமிது.
“ நம்ம வாழ்க்கை ஒரு கிறிஸ்டோபர் நோலன் படம் மாதிரி. படம் பார்த்தா ஒண்ணுமே புரியாது, திரும்ப திரும்ப பார்த்தா தான் புரியும். அதுல எமோஷன் இருக்கும். டிவிஸ்ட் இருக்கும், நல்ல கதை இருக்கும். அதே மாதிரி தான் வாழ்க்கையும். அதுக்காக நம்ம வாழ்க்கையை திரும்ப திரும்ப வாழ முடியாது. ஆனா புரியாத இடங்களை நாம திருத்திக்கலாம். “
“ இப்போ என்னடா சொல்ல வர மதி. “
“ உனக்கு புரியலையா. “
“ சத்தியமா ஒன்னும் புரியலடா. “
“ தெளிவா சொல்றேன். புரிஞ்சிக்கோ. நேத்து TENET படம் பார்த்தேன். ஒண்ணுமே புரியல. அதே மாதிரி தான் வாழ்கையும். புரியுதா. “
“ அப்பா சாமி நீ சொல்றது ஒண்ணுமே புரியல. நீ நல்லா பேசினாவே புரியாது. இதுல புத்தக புளுவா இருக்க. உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது. ஆளை விடு. நான் என்ன கேட்குறேன். நீ என்ன சொல்ற. “
“ என்னடா கேட்ட. “
“ நம்ம பண்றது ஒரு கேவலமான தொழில். அதுல எத்தனையோ பொம்பளைங்களை நாம பார்க்குறோம். அதுல ஒருத்திய கூடவே வச்சி நீ வாழணும்னு ஆசைபடுற நீ. உனக்கு என்ன பைத்தியமா. சரி ஒத்துகிடுறேன். அவங்களுக்கு புருஷன் இல்ல தான். ஆனா உனக்கும் அவுங்களுக்கும் வயசு வித்தியாசம் எத்தனைன்னு தெரியுமா. “
“ டேய் மாப்ள சச்சினுக்கும் அஞ்சலிக்கும்... “
“ டேய் பைத்தியம். நீ ஒன்னும் சச்சின் இல்லை. அவங்களும் அஞ்சலி இல்லை. எவ்ளோ எதார்த்தமா பேசுற. உன் வேலை என்ன அவங்க வேலை என்ன. அதுவும் இல்லமா அவங்களோட உடல் தேவைகளை தீர்த்துக்க ஒரு ஆள் தேவைபடுது அவுங்களுக்கு. அதுக்கு நீ மட்டும் தான் இருக்கன்னு நினைக்காத. உன்ன விட்டா இன்னொரு ஆள். உனக்கு அது புரியுதா. “
மதிக்கு வித்யா சொன்ன அதே எதார்த்தத்தை இபோது அம்மாவசையும் சொல்வது சற்று யோசிக்கவே வைத்தது.
“ என்ன பதிலே காணோம். “
விரக்தியாக அவனை பார்த்து சிரித்தான்.
“ மாப்ள இந்த சமுதாயத்துல நாமளா பிளைட் டிக்கெட் மாதிரி. நாம நினைச்சிட்டு இருக்கோம் டிக்கெட் இருந்தா தான் உள்ள போக முடியும்னு. ஆனா உள்ள போனதுக்கு அப்றம் கிழிச்சி குப்பையா மாத்திடுவாங்கடா. நாம வெறும் பேப்பர் தான். அந்த பேப்பர்க்கு வைக்கிற பெயரை பொருத்து தான் அது பணமா குப்பையானு இருக்கு. நமக்குன்னு எங்கையாச்சும் ஒரு கஸ்தூரியோ, ஒரு இசக்கியம்மாவோ, இல்ல ஒரு காமாட்சியோ இருப்பாடா. அந்த டவுன் பஸ்ல ஏறி போயிட்டே இருக்கணும். “
“ ஒன்னு மட்டும் நல்லா புரியுது. “
“ என்ன புரியுது “
“ நேத்து நீ சூரரை போற்று பார்த்துருக்கன்னு. “
“ டேய் .......”
இருவரும் சிரிக்க அப்போது மதியின் போன் ஒலித்தது.
“ டேய் ஹவுஸ் உணர் தாத்தாடா. “
“ எடுத்து பேசு மாப்ள நான் போய் குளிச்சிட்டு வரேன். “
அட்டென் செய்து காதில் வைத்தான். “ சொல்லுங்க தாத்தா .” என்றான்.
“ தம்பி நல்லா இருக்கீங்களா. வேலை எல்லாம் எப்படி போகுது. “
“ நல்லா இருக்கேன் தாத்தா. வேலை நல்லா போகுது. “
“ அப்றம் தம்பி நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணுமே. “
“ சொல்லுங்க தாத்தா என்ன பண்ணனும். “
“ தம்பி கீழ் வீட்டுக்கு எங்க ஊருல இருந்து ஒரு பொன்னும் அவுங்க அம்மாவும் அங்க குடி வராங்க. நீங்க கொஞ்சம் அவுங்களுக்கு கூட இருந்து பொருளை ஏத்தி வீட்ல வச்சி ரெடி பண்ணி கொடுக்கணுமே. “
“ ஒரு பிரச்சனையும் இல்ல தாத்தா. அவுங்க எப்போ வராங்கன்னு மட்டும் சொல்லுங்க. நான் கூட இருந்து செஞ்சி கொடுக்குறேன். “
“ இல்ல தம்பி உங்களுக்கு வேலை எதாச்சும் இருக்குமா “
“ வேலை இல்லை தாத்தா. நீங்க சொல்லுங்க. “
“ அவுங்க இந்நேரம் அங்க வந்து இறங்கிருப்பாங்க. உங்களுக்கு தொந்தரவு இல்லனா இப்போ நீங்க அங்க போகலாமா. “
“ இப்போ வேலை இல்லை. நான் உடனே போய் பார்க்குறேன். “
“ ரொம்ப நன்றி தம்பி. “
“ நான் முடிச்சி கொடுத்துட்டு உங்களுக்கு கால் பண்றேன். “
“ சரிங்க தம்பி. “
அவர் போனை கட் செய்ததும் மணியை அழைத்தான். இருவரும் உடை மாற்றி விட்டு படிக்கட்டு வழியாக கீழே வர அங்கு லாரியில் இருந்து பொருள்கள் இறக்கி வைக்கப்பட்டு இருந்தது.
அங்கு இறக்கி வைத்து கொண்டிருந்த நபர்களிடம் சென்று விபரத்தை சொல்லி விட்டு இருவரும் உதவி செய்து கொண்டிருந்தனர்.
தாத்தா சொன்ன இருவரையும் மதி தேட அவர்கள் வீட்டினுள் இருப்பதாக கூறினார்.
பழைய காலத்து மரத்தினால் செய்த பீரோவை மதி, அம்மாவாசை மற்றும் மற்றொருவர் சேர்ந்து தூக்கி கொண்டு வீட்டினுள் செல்ல அங்கு ஒரு அம்மா நின்று கொண்டு ஒரு இடத்தை காண்பித்து அங்கே இறக்கி வைக்குமாறு கூறினார்.
அவர் சொன்ன இடத்தில் இறக்கி வைத்த பின்பு அவரை பார்க்க “ தம்பி நீங்க ரெண்டு பேரும் “ என்று இழுத்தார்.
“ அம்மா நான் மதி. இவன் மணி. என் பிரண்டு. தாத்தா உங்க கிட்ட சொல்லிருப்பாங்களே. அது நாங்க தான். “
“ ஒஹ்,. சரி சரி. அப்பா சொல்லிருக்காங்க. வாங்க தம்பி. தப்பா எடுத்துக்காதீங்க. இப்போ உங்களுக்கு சாப்பிட எதுவும் கொடுக்க முடியல. “
“ அய்யோ அம்மா. அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. வீடை பார்த்தீங்களா. வீடு பிடிச்சிருக்கா. “
“ நல்லா இருக்கு தம்பி. ஆனா இங்க எந்த பொருள் எங்க வாங்கணும். தண்ணி வசதி எப்படி இதெல்லாம் என்ன பண்றதுன்னே தெரியல. “
“ அம்மா அதை பத்தி நீங்க கவலையே பட வேண்டாம். தண்ணி கேன் போடுறதுக்கு ஆள் இருக்கு. மளிகை பொருள் வாங்க எதிர்த்த வீட்ல இருக்குற கமலா அக்கா கிட்ட சொல்லிடுறேன். அவுங்களை துணைக்கு கூப்பிட்டுகோங்க. நீங்க இங்க எந்த பயமும் இல்லமா நீங்க இருக்கலாம்.”
“ ரொம்ப நன்றி தம்பி. “
“ ஆமா அம்மா ரெண்டு பேரு சொன்னாங்க. நீங்க மட்டும் வந்துருக்கீங்க.”
“ தென்றலை கேக்குறீங்களா. அவ பால் பாக்கெட் வாங்க பக்கத்துல கடைக்கு போயிருக்கா. “
“ உங்க பொண்ணு பேரு தென்றலா. “
“ ஆமா தம்பி. இப்போ வந்துடுவா. “
“ சரிங்கமா. நாங்க மற்ற பொருள்களை இறக்குறோம். நீங்க எடுத்து வைங்க. “
“ சரிங்க தம்பி. “
இருவரும் சென்று மற்ற பொருள்களை இறக்கி கொண்டிருந்தனர். அந்நேரம் அவர்கள் இருவரை பார்த்து கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள்.
உள்ளே சென்றவள் அவள் தாயிடம் பேசும் சத்தம் வெளியே கேட்டது.
“ அம்மா யாரு அது புதுசா ரெண்டு பேர். நேத்தே உன்கிட்ட சொன்னேன்ல. அவுங்களை எல்லாம் கூப்பிட வேண்டாம்னு. அவுங்களை எல்லாம் எதுக்கு வீட்டுக்குள்ள விடுற. “
“ ஏய் சத்தம் போடாதடி. அவுங்க காதுல விழுந்துட போகுது. ஹவுஸ் ஓனர் தான் உதவிக்கு வர சொல்லிருக்காங்க. “
“ அவுங்க வந்தா வாசலையே பேசி அனுப்ப வேண்டியது தான. ஆம்பளைங்க புத்தி தெரிஞ்சும் இப்படி வீட்டுகுள்ள விடுற. “
“ ஸ்ஸ்ஸ்ஸ். கத்தாதடி. ஒரு நிமிஷம் இரு. இதோ வரேன் “ என்று வெளிய வந்து பார்க்க அவர்கள் இருவரும் அந்த இடத்தில் காணவில்லை.
“ அய்யோ அவுங்க காதுல விழுந்துடுச்சு. போய்ட்டாங்க. நீ பாட்டுக்கு பேசிட்ட. ரெண்டு பேரும் நல்லா பசங்களா இருந்தாங்க. பாரு இப்போ இதை எல்லாம் யாரு எடுத்து வைப்பாங்க. “
“ நாம ரெண்டு பேரும் எதுத்து வச்சிகிடுவோம். என்கிட்டே கேட்காம இனிமே யாரையும் உள்ள நடை ஏத்துன அப்றம் நடக்குறதே வேற. “
“ சரிம்மா தாயே கத்தாத. வா வா வந்து எடுத்து வைப்போம். “
அந்நேரம் வாசலில் கமலா வந்து நிற்க இருவரும் அவளை உள்ளே அழைத்து விசாரித்தனர்,
தாத்தாவும் பாட்டியும் கமலாவை பற்றி சொல்லி இருந்ததால் அவளை உள்ளே அழைத்து உதவிக்கு வைத்து கொண்டனர். அப்போது தென்றல் கமலாவிடம் கேட்டாள்.
“ ஆமா அக்கா நீங்க எப்படி இங்க வந்தீங்க. நாங்க உங்களை கூப்பிடவே இல்லையே. “
“ நம்ம மதி தம்பி தான் சொல்லிச்சு. இப்படி கீழ வாடகைக்கு வந்துருக்காங்க. நீங்க போய் கூட கொஞ்சம் ஒத்தாசை பண்ணுங்கன்னு. அதான் வந்தேன். “
“ வேற ஒன்னும் சொல்லலையா. “
“ இல்ல பாப்பா. உன்ன பாப்பானு கூப்பிடலாம்ல. “
“ அய்யோ அக்கா. தாராளமா கூப்பிடலாம். “
அதன் பின் வந்த நேரங்களில் மூவரும் ஒன்றாக சேர்ந்து ஒவ்வொன்றாய் எடுத்து வைக்க வேலை முடிந்தது.
அன்று மாலை பொழுதில் மதி கையில் புத்தகத்துடன் மாடியில் அமர்ந்திருக்க தென்றல் குளித்து முடித்து சேலை அணிந்து வீட்டின் பின் புறம் நின்று நீண்ட அடர்த்தியான கருங்கூந்தல் முன்னால் விட்டு அவள் துவட்டி கொண்டிருந்தாள்.
அப்போது தான் அவளது முகத்தை அவன் கவனித்தான்.
அழகான வட்ட முகம். அதில் சோலி போன்ற கண்கள், கருவளையத்தை சுற்றி அழகாக மையிட்டு, காதில் ஆடும் ஜிமிக்கியுடன், அறிவியலில் முடிவிலி என்று சொல்ல கூடிய அழகுடன் இருந்தாள். ஆனால் அவள் முகத்தின் அழகை கெடுக்கும் வகையில் ஒரு சோகம் இழையோடி கொண்டிருந்தது.
அதை பார்த்து விட்டு மீண்டும் புத்தகத்தில் தான் கவனத்தை செலுத்த மாடியில் நிழல் ஆடுவதை கவனித்த தென்றல் மேலே பார்க்க மதி புத்தகத்தில் பார்வையை செலுத்தியிருந்தான்.
அவனை கண்ட தென்றல் பொருக்கி என்று வாயில் முனுமுனுத்து விட்டு கதவை அடைத்து கொண்டு வீட்டினுள் சென்றாள்.
ஒரு தேவதை பார்க்கின்ற நேரமிது .................
மிக அருகினில் இருந்தும் தூரமிது ...................