நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#41
“சாருக்கா. வீட்டில் யாரும் வரலையா?”

“அவங்க எல்லாம் வர்றாங்க. நான் நம்ம வீட்டோட சேர்ந்துபோகலாம்னு வந்தேன்.”
அவள் சொல்ல யுகேந்திரன் பல்லைக் கடித்தான்.
‘நம்ம வீடாமே.’

மகேந்திரன் ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்தான். பின்னே உள்ள இருக்கையில் பெரியவர்கள் இருவரும் அமர்ந்துகொள்ள அதற்குப் பின்பக்கம் உள்ள இருக்கையில் சிறியவர்கள் இருவரும் அமர்ந்துகொண்டனர். மகேந்திரன் காரைக் கிளப்பினான்.

ரிசப்சனுக்கு சரியான நேரத்திற்குச் சென்றுவிட்டனர்.

சற்று நேரத்தில் சாருலதாவின் குடும்பத்தினர் வந்துவிட்டனர். அவர்களைக் கண்டதும் சாருமதி முகமலர்ச்சியுடன் ஓடிவந்தாள். கிருஷ்ணவேணியை அணைத்துக்கொண்டாள்.

சாருலதாவின் பெற்றோர் நாடகத்தனமான புன்னகையை சிந்தினர். அனைவரும் ஒரே வரிசையில் அமர்ந்தனர்.

சாருமதி ஓரக்கண்ணால் மகேந்திரனை நோட்டமிட்டாள்.

அதை கிருஷ்ணவேணி கண்டுவிட்டு தனதருகில் அமர்ந்திருந்த யுகேந்திரனின் விலாவில் குத்தி அவன் திரும்பிப்பார்த்த போது ஜாடையாக காட்டினாள்.

அவன் தனக்கு தெரியும் என்று கூறினான்.

சாருமதி நல்லவள். அவள் மகேந்திரனின் மனைவியானால் கூட அவனை நல்லவிதமாக பார்த்துக்கொள்வாள். இந்த சாருலதா அல்லவா அந்த வீட்டிற்குள் நுழைய நினைக்கிறாள்.

பேசாமல் சாருமதியை மகேந்திரன் புரிந்துகொள்ளுமாறு செய்யவேண்டும்.

தனது யோசனையை யுகேந்திரனிடம் கூறினாள்.
அது அவன் காதில் விழுந்ததா? இல்லையா? என்றே தெரியவில்லை

மீண்டும் அவனது விலாவில் இடித்து அவனது கவனத்தை தனது பக்கம் திருப்பினாள்.


அவன் திரும்பிப் பார்த்த பிறகு அவன் பக்கம் சாய்ந்தவள் அவனது காதில் சொன்னாள்.

“யோசனை நல்லாதான் இருக்கு. மதிக்கா வந்தா பின்னேயே அவ குடும்பமும்தானே நம்ம வீட்டுக்கு வரும். அதான் யோசனையா இருக்கு.”

அவர்கள் ரகசியம் பேசுவதை மகேந்திரன் கண்டுவிட்டான்.

எப்போதும் இருவரும் எதையோ பேசி சிரித்தபடிதான் இருக்கிறார்கள்.

அப்படி என்னதான் பேசுவார்களோ? என்று சலிப்பாக வந்தது.

மணமக்களை பார்த்த மகேந்திரன் திடுக்கிட்டான்.

அவனது மனக்கண்ணில் மாடிப்படியில் தேவதை போன்று கிருஷ்ணவேணி இறங்கி வந்த காட்சியே தோன்றியது. சிறிது நேரத்தில் அதுவும் மறைந்தது.

இப்போது மேடையில் இருக்கும் மணமக்களின் இடத்தில் அவர்கள் ஜோடியாக இருப்பது போன்ற ஒரு காட்சி தோன்ற திடுக்கிட்டான்.

திரும்பி கிருஷ்ணவேணியைப் பார்த்தான். இன்னமும் அவர்கள் இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.

தனது மனதில் தோன்றிய எண்ணம் சரியில்லை என்று அவனது அறிவு இடித்துரைத்தது.

அதற்கு மேல் தன்னால் அங்கே இருக்க முடியாது என்று தோன்றியது.

தந்தையிடம் தனக்கு முக்கியமான கால் ஒன்று வந்திருப்பதாக சொல்லிவிட்டு தான் கிளம்புவதையும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

செல்லும் அவனை மற்றவர்கள் யோசனையுடன் பார்த்தனர். ரவிச்சந்திரன் மனைவியிடம் அவன் சொன்ன காரணத்தைச் சொன்னார்.
தன் பார்வையை கிருஷ்ணவேணியும் தனது தம்பியும் இருந்த பக்கம் திருப்பாமல் மண்டபத்தை விட்டு வெளியேறினான்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 20-03-2019, 12:12 PM



Users browsing this thread: 32 Guest(s)