நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#40
“அம்மாகிட்ட எதுவும் உளறி வைக்கலையே?”

அவள் பாவமாக பார்த்தாள்.
“நீ வரமாட்டேன்னு சொல்வேன்னு கொஞ்சம் கூட சந்தேகப் படாம உனக்காக டிரஸ் எடுத்து வச்சிருக்காங்க பார்த்தியா?”
அவள் தலையாட்டினாள்.

கல்லூரியில் இருந்து கிளம்பும்போது அவள் தயக்கத்துடன்தான் அந்த ரிசப்சனுக்கு வர விருப்பம் இல்லை என்று தெரிவித்தாள்.

அவர்கள் குடும்பத்தினருக்கு தெரிந்தவர்கள். அவர்கள் வீட்டு விசேசத்திற்கு தான் எப்படி செல்ல முடியும்?

அவன் அவளைத் திட்டினான்.

“உன்னை நாங்க பிரிச்சே பார்க்கலை. நீ இன்னமும் எங்களை மனதளவில் வேற்றாளாய்தான் பார்க்கிறே?”

அது அவளைச் சுட்டது.

“கீர்த்திவாசன் அங்கிள் எங்களுக்குப் பழக்கமானவர்தான். கிராமத்தை விட்டு பட்டணத்து வாழ்க்கைக்கு வந்தபிறகு பழக்கப்பட்டவங்கதான் சொந்தக்காரங்கன்னு அம்மா சொன்னாங்க. அதனால்தான் அம்மா குடும்பத்தோட போகனும்னு சொல்றாங்க. அவங்க குடும்பம்னு சொன்னதில் நீயும் அடக்கம். இப்ப புரியுதா?”

“ம்.” அவள் தலையாட்டினாள்.

“போய் கிளம்பு.”

அவள் தனது அறைக்குச் சென்றுவிட்டாள்.

குளித்துக்கிளம்பியவள் அந்தப்புடவையை நேர்த்தியாய் கட்டி முடித்தாள்.
கிளம்பி முடித்த பிறகு தனது பெட்டியைத் திறந்தாள்.
அடியில் ஒரு துணியில் முடிந்து வைத்திருந்த நகைகளை எடுத்தாள்.

அந்த நகையை தொட்டு பார்க்கும்போது  தன் அம்மாவே கூட இருப்பது போல் தோன்றியது.

தான் கட்டியிருந்த புடவைக்குப் பொருத்தமான நகையை எடுத்து அணிந்தாள்.

எளிமையான நகைதான். ஆனாலும் அவளது அழகை தூக்கலாகக் காட்டியது.

கிளம்பியவள் கீழே இறங்கினாள். அப்போதுதான் மகேந்திரன் உள்ளே நுழைந்தான். மாடிப்படியில் தேவதை போன்று இறங்கி வந்தவளை கண்களை இமைக்காமல் பார்த்தான். நல்லவேளை அவள் அவனைப் பார்க்கவில்லை. பட்டுப்புடவை கட்டிக்கொண்டு படியில் இறங்கியதால் கவனமாக இறங்கினாள்.

“வாவ்.”
யுகேந்திரனின் ஆச்சர்யக் குரல் மகேந்திரனைக் கலைத்தது. என்ன வேலை செய்துவிட்டேன் என்று தன்னைத் திட்டிக்கொண்டவன் மாடியில் ஏறும்போது கவனமாக அவள் பக்கம் திரும்பாமல் சென்றான்.

யுகேந்திரனின் ஆச்சர்யப் பார்வை அவளுக்கு வெட்கத்தை தந்தது.


“போடா. கிண்டல் பண்றே. நான் அத்தைக்கிட்ட சொல்றேன்.”

வனிதாமணியுமே அவளை கண்ணை விலக்க முடியாமல் பார்த்தார்.

அவளது கன்னத்தில் வழித்தெடுத்து திருஷ்டி கழித்தாள்.

“இந்தப் புடவை உனக்கே நெய்த மாதிரி இருக்கு.”

“எங்களை கிளம்ப சொல்லிட்டு நீங்க இன்னும் இங்கேயே இருக்கீங்களே அத்தே?”

“இதோ கிளம்பறேன்மா.”

அப்போதுதான் அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று பார்த்தாள்.

“என்ன அத்தே? நாமதான் ரிசப்சனுக்குப் போறோமே. நீங்க ஏன் சப்பாத்தி செய்யறீங்க?”

அவர் சிரித்துக்கொண்டே “அதுக்குக் காரணம் இருக்கும்மா. உனக்கே புரியும். நான் போய் கிளம்பறேன்.”

“யுகா. நீயும் போய் கிளம்பு.”

அவர்கள் கிளம்பி வந்தபோது அவள் திகைத்துப்போனாள். எல்லோரும் அவள் வாங்கிக்கொடுத்த உடையை அணிந்திருந்தனர்.

அவளுக்கு கண்ணீரே வந்துவிட்டது.

அவள் வாங்கிக்கொடுத்தது சற்று எளிமையான உடைதான். அதை ஒரு விழாவுக்கு கட்டி வருவார்கள் என அவள் நினைக்கவேயில்லை.

“அத்தை.”

நெகிழ்ச்சியுடன் அழைத்தாள்.

“என்னம்மா? எப்படியிருக்கு? நல்லாருக்கா?”

அவள் தலையாட்டினாள்.

மகேந்திரனும் வர காருக்குச் சென்றனர்.

அப்போது சாருலதாவும் வந்துவிட்டாள்.

“சரியான நேரத்திற்கு வந்துட்டேனா?”



கேட்டுக்கொண்டே வழக்கம்போல் முன்சீட்டில் ஏறி அமர்ந்துவிட்டாள்.
வனிதாமணி தனது கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் தவித்தார்.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 20-03-2019, 12:01 PM



Users browsing this thread: 9 Guest(s)