20-03-2019, 10:56 AM
பிக் பாஸ் சீசன் 3 ரெடி! - மாஸ் ஹீரோவிடம் நடக்கும் பேச்சு வார்த்தை
இந்தி சேனலின் பெரும் வரவேற்பு பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி தென்னிந்திய தொலைக்காட்சிகளில் அறிமுகமாகி பெரும் வரவேற்பு பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பெரும் வரவேற்பு பெற்று மக்களின் பேவரை நிகழ்ச்சியாகவும் உருவெடுத்தது.
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு பாகங்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், மூன்றாவது சீசன் தொடங்குவதற்கான எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அதே சமயம், தெலுங்கு பிக் பாஸ் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். ஆனால், இரண்டாம் சீசனில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இதனால் இளம் நடிகர் நானி இரண்டாம் சீசனின் தொகுப்பாளரானார்.
ஜூனியர் என்.டி.ஆர் அளவுக்கு நானியால் போட்டியாளர்களுடன் சரியாக அணுகமுடியாததால், தெலுங்கு பிக் பாஸ் சீசன் 2 தோல்வியிலேயே முடிந்தது.
இந்த நிலையில், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வரும் பிக் பாஸ் குழுவினர் மூன்றாம் சீசனை ஜூனியர் என்.டி.ஆரை வைத்தே நடத்தவும் முடிவு செய்தது. ஆனால், ராஜமெளலி இயக்கத்தி ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் பிஸியாக இருப்பதால் அவருக்கு பதில் வேறு நடிகரை பிக் பாஸ் குழு நாடியுள்ளது.
அந்த நடிகர் தான் தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோவான நாகர்ஜுனா. தற்போது நாகர்ஜுனாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி முடித்துள்ள பிக் பாஸ் குழுவினர், விரைவில் அவரிடம் இருந்து சாதகமான பதில் வரும் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.