Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
ஏப்ரல் 12-ம் தேதி ரிலீஸாகிறது ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’?

[Image: gangs-of-madrasjpg]
‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தை, ஏப்ரல் மாதம் 12-ம் தேதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். ‘மாயவன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் தயாரிப்பிலேயே கவனம் செலுத்தி வந்தார்.
இடையே மீண்டும் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ என்று படத்தை இயக்கத் தொடங்கினார். இதன் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜனவரியிலும், டீஸர் பிப்ரவரியிலும் ரிலீஸானது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நாயகியை முன்னிலைப்படுத்திய இந்தப் படத்தில், பிரதான வேடத்தில் பிரயங்கா ருத் நடித்துள்ளார். தமிழில் இவர் அறிமுகமாகும் படம் இது. வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், அசோக் குமார், பகவதி பெருமாள், இயக்குநர் ராமதாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தப் படத்தை வருகிற ஏப்ரல் 12-ம் தேதி வெளியிட படக்குழு முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூடவே, படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
சி.வி.குமாரின் திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்ய, ஹரி டவுசியா இசையமைத்துள்ளார்.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 20-03-2019, 10:54 AM



Users browsing this thread: 2 Guest(s)