09-12-2020, 10:17 PM
பக்கம் - 54
வெயிட்டிங் ரூமில், ராகவியோடு படிக்கும் பிரியா, ஆனந்தி, ஜெயஸ்ரீ, கௌதமி ஆகியோர் அவர்களின் பாதுகாப்புக்காக வந்தவர்களுடன் உட்கார்ந்திருந்தனர்.
ராகவி அவர்களைப் பார்த்த்தும் சந்தோஷமாக, “என்னோட ஃப்ரண்ட்ஸ் வந்திருக்காங்க. வாங்க அங்கே போகலாம்” என்று சொல்லி அவர்கள் அருகே எங்களை அழைத்துக்கொண்டு போனாள்.
ராகவியை முதலில் பார்த்த பிரியா, முகமெங்கும் சந்தோஷப் பூக்கள் பூக்க,...
“ஏய்,… ராகவி வந்துட்டியா? எங்கே இன்னும் காணோம்னு பேசிக்கிட்டு இருந்தோம்” என்று பேசிபடியே என்னை குறு குறுவென்று பார்த்துவிட்டு, சுதாகரையும், அவன் மனைவி மாலதியையும் பார்த்து, கண்களாலேயே, ‘இவங்க எல்லாம் யாருடி?’ என்பது போல ராகவியைப் பார்க்க,… மற்ற தோழிகளோடு பேசிக்கொண்டிருந்தவள், “ஆங்,… சொல்ல மறந்துட்டேன். (என்னை கை காட்டி), இவர் என் அண்ணன்.என்று ஆள்காட்டி விரல் நீட்டி சுட்டிக்காட்டிவிட்டு, மாலதியையும் அவள் கணவரையும் காட்டி, நான் சொன்னேனில்லையா இது எங்க புது பிரண்ட் மாலதி, அது அவளோட கணவர் சுதாகர்.”
ராகவி எங்களை அவர்களிடம் அறிமுகப்படுத்த, அவளது தோழிகள், அவரவர் ஸ்டைலில் எங்களுக்கு சிரித்தபடி ‘ஹாய்’ சொன்னார்கள்.
அவர்களிடம், பர்மிஷன் வாங்கிக்கொண்டு, நாங்களும் பிரியாவும் கொஞ்சம் தள்ளி குரூப்பாக உட்கார்ந்தோம்.
“என்னடி ராகவி?!!!. அண்ணனோட வந்திருக்கே!!!. அட்மிஷன் கார்ட் எல்லாம் மறக்காம எடுத்து வந்திருக்கியா?” என்று கிண்டலாக பிரியா கேட்டாள்.
“ஏய்,… எல்லாம் எடுத்து வந்திருக்கேன். ஆமாம்,… நீ யாரோடு வந்திருக்கே?”
“நான் யாரோட வருவேன். பத்திரமா, பாதுகாப்பா கூட்டிகிட்டு வர, எனக்கென்ன உன்னை மாதிரி அண்ணனா இருக்கார். அப்பாவோடுதான் வந்திருக்கேன்.”
இதைக் கேட்ட்தும் ராகவியின் இதழோரம் ஒரு மாதிரி புன்னகை எட்டிப் பார்க்க,… அதை மறைத்து, “எங்கேடி ஆளைக் காணோம்?.”
“வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வர கேன்டீன் பக்கம் போறேன்னு போனார். இப்ப வந்திடுவார்.”
ராகவிக்கு மட்டுமல்ல, எனக்கும் பிரியாவின் அப்பாவைப் பார்க்க ஆவலாக இருந்தது.
கொஞ்ச நேரத்தில் பிரியாவின் அப்பா அங்கே வந்து நிற்க,… பிரியா அவரை எங்களுக்கும், எங்களுக்கு அவரையும் அறிமுகப் படுத்தினாள். நானும், சுதாகரும் அவரிடம் கை குலுக்கி அறிமுகப்படுத்திக்கொண்டோம்.
பிரியாவின் அப்பா, பார்க்க பிரியாவுக்கு அண்ணன் போலதான் இருந்தார். மாநிறமாக, காதோரம் மட்டும் முடி கொஞ்சம் நரைத்திருக்க,… உடம்பை ட்ரிம்மாக வைத்திருந்தார்.
அனைவரும் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க, அரை மணி நேரம் போனதே தெரியவில்லை.
ஒரு ஸ்டாஃப் வந்து, “செமினாருக்கு வந்தவங்க மட்டும் போய் செமினார் ஹால்ல உட்காருங்க. மத்தவங்க சாயந்திரம் நாலு மணிக்கு வந்தா போதும்” என்று சொல்ல, நானும், சுதாகரும் ராகவிக்கு பெஸ்ட் ஆஃப் லக் சொல்லி கை அசைத்து வழி அனுப்ப, பிரியாவின் அப்பா, பிரியாவுக்கு பெஸ்ட் ஆஃப் லக் சொல்லி கை அசைத்து வழி அனுப்பினார்.
நால்வரும் பேரும் பேசிக்கொண்டே வெளியே வந்தோம். டைம் பாஸ் பண்ண எங்கே போகலாம் என்று டிஸ்கஸ் செய்து கடைசியில் பக்கத்தில் இருக்கும் பார்க்கில் உட்கார்ந்து காலத்தை ஓட்டுவது என்று முடிவு செய்து, பக்கத்திலிருந்த பார்க்குக்குப் போனோம்.
பூங்கா, பல வித கண் கவர் மலர்ச் செடிகளோடும், கொடிகளோடும், வானுயர்ந்த சில்வர் ஓக் மரங்களோடும் பச்சைப் பசேலென்று இருக்க,… கை நீட்டி தொடும் உயரத்தில் தவழ்ந்த மேகம் ஜில்லென்ற காற்றைத் தென்றலாக பரப்பிக்கொண்டிருந்தது.
பூங்காவில் ஆங்காங்கே குழுவாகவும், தனித்தும் ஆண்களும் பெண்களுமாக பூங்காவைச் சுற்றி வந்து பூங்காவின் அழகை ரசித்துக்கொண்டிருந்தனர்
பூங்காவின் நடை பாதையில் நால்வரும் பேசியபடியே நடந்து அங்கே இருந்த மலர்ச் செடிகளின் அழகையும், இயற்கையின் பசுந்தாவரங்களின் அழகையும் ரசித்து, ஏதேதோ பேசியபடி, குளிர்ந்த காற்றை நுரையீரலுக்குள் சுவாசித்து வாங்கி, இதமான வெப்பக் காற்றை வெளியே விட்டபடி சுற்றி வந்தோம்.
பூங்காவின் ஒரு பக்கம் வட்டமாக ஒரு சிமென்ட் மேஜை இருக்க, அதைச் சுற்றி நான்கு சிமெண்ட் நாற்காலிகள் இருந்தன. பக்கத்தில் க்ரோட்டன்ஸ் செடிகள் அழகாக வளர்க்கப்பட்டு நேர்த்தியாக ட்ரிம் செய்யப்பட்டிருந்த்து.
நால்வரும் பேசியபடியே சிமெண்ட் நாற்காலியில் உட்கார்ந்தோம். பிரியாவின் அப்பா, அவர் கொண்டு வந்திருந்த ஹேண்ட் பேக்கிலிருந்து ஒரு நியூஸ் பேப்பரை விரித்து வைத்து, மீண்டும் ஹேண்ட் பேக்கில்ல் கையை நுழைத்து ஒரு பொட்டலத்தை எடுத்து அதிலிருந்ததை நியூஸ் பேப்பரின் மேல் கொட்டினார்.
வேர்க்கடலை.