அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 53


சுத்தமாக, தூக்கம் தொலைத்த இரவாகி போனது அன்று எனக்கு. கொட்டும் மழையென தன் வலியை கொட்டித் தீர்த்தவன், அதற்காக என்னிடம் மன்னிப்பும் கேட்டவன், அதன் பின்பு எதுவுமே பேசவில்லை. கல்லூரி விடுதியின் வாயிலில் வைத்து அவனுக்கு நான் நன்றி சொல்ல.

"ஆக்சுவலா, நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்!! Infact, I feel better now!! ரெம்ப நாளுக்கு அப்புறம்" என்றவன், சிரித்துக்கொண்டே சென்றுவிட்டான்.

அவன் சிரிப்பில் இன்னும், வலியின் மிச்சம் ஒட்டிகொண்டிருந்தது. ஏனோ, அதுவரை பார்த்திராத வெண்ணிலாவின் மேல், கடும் கோபம் வந்தது எனக்கு. எங்களை போலவே, இன்னொரு பரிதாபகரமான ஜீவனாகவே தோன்றினான் ரஞ்சித். இவ்வளவு வலியை தாங்கிக் கொண்டிருந்தவன், அவள் மீது துளி கோபம் கொள்ளாமல், தன்னை விட்டுச் சென்றவள் நிம்மதியாக, சந்தோஷமாக வாழ்வதற்கு, தன்னை வருத்திக் கொண்டிருக்கும் ரஞ்சித், உண்மையிலேயே ஒரு புரியாத புதிர் தான்.

முன்னிரவு மொத்தமும், ரஞ்சித்தை பற்றிய சிந்தனைகளில் தூக்கம் தொலைத்து இருந்தேன் என்றால், மீதி இரவை, அவனின் "சேர்த்து வாழ்வதற்கு ஏதாவது வழி" என்ற சொற்கள், என்னை தூங்க விடவில்லை. மணியுடன் சேர்ந்து வாழ்வதற்கான சாத்தியங்களை யோசித்து, ஒன்றும் புலப்படாமல் போக, தவிப்பாய் இருந்தாலும், அது பற்றிய சிந்தனையே என்னை உணர்ச்சிப் பிழம்பாய் மாற்றியிருந்தது. அவனை கடும் துன்பத்திற்கு உள்ளாக்கிய குற்ற உணர்ச்சியோ இல்லை ரஞ்சித்தின் தூண்டுதல் வார்த்தைகளோ, அவனுடன் சேர்ந்து வாழ்வதற்கான, கடுகிலும் கடுகளவாக, ஒரு வாய்ப்பு இருந்தாலும், அதை முயற்சி செய்வது என்று உறுதி கொண்டேன். உண்மையிலேயே என் வாழ்க்கையில் நிகழ்ந்த அதிசயம் தான் இந்த ரஞ்சித்.

**************

இரண்டு வாரங்களுக்குப் பின், டென்னிஸ் விளையாடி விட்டு, என் விடுதியை நோக்கி நடந்து கொண்டிருந்தோம் நானும் ரஞ்சித்.

"இந்தியாவில் எந்த மூலையில் நாங்க ஒளிஞ்சு இருந்தாலும், ரெண்டே நாள்ல கண்டுபிடிச்சுடுவாங்க!!" அந்த ரெஸ்டாரண்ட்டில் பேசுயதற்கு பின், அந்தப் பேச்சை எடுக்காமல் இருந்த ரஞ்சித், திடீரென்று "ஏன் நாங்க கல்யாணம் செய்து கொண்டு வடகிழக்கு மாநிலங்களில், ஏதாவது பெயர் தெரியாத ஊருக்கு சென்றுவிட கூடாது" ரஞ்சித் ஐடியா கொடுக்க, அதை மறுத்தேன் நான்.

"அப்போ எங்காவது வெளிநாடு போயிருங்க?" இயல்பாய் அவன் சொல்ல, அதுவரை நான் அப்படி யோசித்து இருக்கவே இல்லை.

அவன், அம்மா, கோயம்புத்தூர், அதைத்தாண்டிய ஒரு வாழ்வினை யோசிக்க வேண்டிய தேவை, அந்த ட்ரெயின் நிகழ்விற்கு முன் எனக்கு வந்ததே இல்லை. என் அம்மாவின் துரோகத்தால் விலக இருக்க வேண்டும் என்று நினைத்தபோது கூட, அதிகபட்சமாக டெல்லி வரை தான் என்னால் யோசிக்க முடிந்தது. ரஞ்சித் அப்படி சொன்னதுமே அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய,

"அவங்க ரெம்ப பெரிய ஆளுங்க, இன்ஃப்ளூயென்ஸ் யூஸ் பண்ணி, எங்கள் திரும்ப இந்தியா கொண்டு வந்துருவாங்க!!" ஒரு நிமிடம், நம்பிக்கை அளித்த அவனது எண்ணம், இந்தியாவிற்கு திரும்பி கொண்டுவதுவிட்டாள், என் தாயின் முகத்தையும் அவனது தந்தையின் முகததையும், பார்த்துக் கொண்டு வாழ்வது என்னால் இயலாது என்பதை உணர்ந்தேன்.

"See, இந்தியா கூட நடுகடத்தும் ஒப்பந்தம் இல்லாத நாட்ல இருந்து, உங்களோட சம்மதம் இல்லாமல் திருப்பி அனுப்ப மாட்டாங்க!!" அவன் நம்பிக்கை விதைத்தான்.

வாழ்க்கையின் பெரும் சோதனைகளுக்கான விடைகள் எல்லாம் மிக எளிதானதாகவே இருக்கும். சூழ்நிலையின் காரணமாக, உணர்ச்சிக் கொந்தளிப்பின் காரணமாக, எளிதாக சிந்திக்கும் திறனை இழந்து, ஒரு பிரச்சனையை அணுகும் போது, அந்தப் பிரச்சினையின் உண்மை தன்மையை காட்டிலும், அது பெரிதாகவும், குழப்பமானதாக, தீர்க்க முடியாத சிக்கல் வாய்ந்ததாகவும் தோன்றலாம்.

***************

அதன் பின்னான நாட்களில், என்னைக்காட்டிலும், எனக்காக அதிகம் சிந்தித்தான் ரஞ்சித். வாழ்க்கையின் அத்தனை நெருக்கடியிலும், என்னை தாங்கி, தூக்கிவிடும் நண்பர்கள் வாய்க்கப் பெற்றது எனது வாழ்வின் கொடுப்பினை. நேத்ரா, பிரதீப் என்று கோயம்புத்தூரிலும், இப்போது இங்கே ரஞ்சித்.

அவனது திட்டப்படி தான், ஐரோப்பிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் நான் படிப்பை தொடர்வதும், அதற்கு முன், எந்தவித சான்றுகளும் தேவைப்படாத டென்மார்க்கில் கல்யாணம் செய்து கொள்வது என்றும் திட்டமிட்டோம் (நிறைய நாடுகளில், தங்கள் நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்கள் செய்து கொள்ள, பின் சார்ந்த நாட்டின், வெளியுறவு துறை அமைச்சகத்திடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டியது அவசியம்). என் அம்மா, நான் உபயோகப்படுத்திய வங்கி கணக்கில், இன்னமும், ஒவ்வொரு மாதமும் பணம் போட்டு வந்தாலும், அதை உபயோகப்படுத்த கூடாது என்ற முடிவில், என் பெயரில் இருந்த, வைப்பு தொகையை கணக்கை, உடைத்துத்தான், என் செலவுகளை பார்த்துக் கொண்டிருந்தேன். மணிக்கு, ஏற்கனவே ஐரோப்பிய யூனியனின் விசா எடுத்திருந்ததால், திரும்ப எடுப்பது மிகவும் எளிதான காரியம் என்பதால், முதலில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஏதேனும் ஒரு கல்லூரியில், எனக்கான அட்மிஷன் பெற்றுக் கொண்டு, அதைவைத்தே, எளிதாக எனக்கான விசா எடுத்தவுடன், மணிக்கு மொத்த விபரங்களையும் சொல்லி, இந்தியாவை விட்டு பறந்து விடுவது, என்பதுதான் எங்கள் திட்டம்.

ஒரு மாதத்திற்கு முன், அவன்னுடனான வாழ்க்கை என்பது, இந்த பிறப்பில் எனக்கு விதிக்கவில்லை என்று உறுதியாக நம்பிய நான், கைகூட போகும் என் காதலை, எண்ணி பூரித்துப் போயிருந்தேன். எனக்கு இருந்த ஒரே ஒரு சின்ன நெருடல், கையில் இருந்த பணத்தில், என் படிப்பு செலவு போக, அதிகபட்சம் நான்கு வருடங்கள் தாக்கு பிடிக்கலாம். அதற்குள் தகுதித் தேர்வுகள் எழுதி, மருத்துவராக பயிற்சி செய்வதற்கு லைசன்ஸ் வாங்கி விட்டால், ஆடம்பர வாழ்க்கை வாழ விட்டாலும், மகிழ்ச்சிக்கு குறைவில்லாத ஒரு வாழ்க்கையை வாழ முடியும் என்ற நம்பிக்கை இருந்தாலும், அவனது கனவை கண்டிப்பாக தியாகம் செய்யத்தான் வேண்டும்.

ஸ்பான்சர் இல்லாமல் தொழில்முறை டென்னிஸ் ஆடுவதற்கு, குறைந்தபட்சம் நாற்பதில் இருந்து அறுபது லட்சங்கள் வரை, வருடத்திற்கு செலவு செய்ய வேண்டும். எனக்காக அவன் அந்தத் தியாகத்தை செய்ய சிறுதும் தயங்கமாட்டான் என்று எனக்கு தெரிந்திருந்தாலும், ஒரு சின்ன நெருடல். அந்த நெருடலை என் சுயநலத்தை கொண்டு, துடைத்தெறிந்து. அந்த நெருடல் தான் இப்படியான ஒரு யோசனையை, முடிவை, யாருடைய தூண்டுதலும் இல்லாமல் என்னால் எடுக்க முடியாமல் போனதற்கு காரணமாக இருக்குமோ என்று கூட தோன்றியது.

********************

மணியுடன் வாழ்வதற்கான வாய்ப்புகளை ஆராயும் பொழுதே, உணர்ச்சிப் பிழம்பாய் இருந்த நான், அதற்கான வழி தெரிந்ததும், அவனைப் பார்க்காமல், அவனுடன் பேசாமல் இருப்பது மூச்சுக் கூட விடமுடியாத இன்ப அழுத்தத்தில் தவித்தேன். என் உணர்வுகளின் பிடியில் நானும், என் பிடியில், என் உணர்வுகளும் இல்லாமல், கனவிலும் கற்பனையிலுமே வாழ்ந்திருந்தேன்.

"என்ன மேடம், டூயட் ட்ரீமா?" எதுவும் பேசாமல், டென்னிஸ் விளையாடிவிட்டு, என் விடுதியை நோக்கி நடந்து கொண்டிருக்க, நெடுநேரம் கவனித்திருப்பான் போல, சிரித்துக் கொண்டே கேட்டான் ரஞ்சித். வழிந்தேன்.

"அவன் கிட்ட பேசாம, ரொம்ப கஷ்டமா இருக்கு!!" நான் என் உணர்வைச் சொல்ல

"அந்த "அவனோட" பெயர் என்னன்னு சொன்னா நல்லா இருக்கும்!!" நக்கல் அடித்த அவனிடம், பதில் சொல்ல வாய்யெடுக்க, எனது மொபைல் சத்தமிட்டது.

"ஹலோ!!" தெரியாத எண்ணில் இருந்து வந்த அழைப்பை எடுத்து காதுக்கு கொடுக்க, எங்கள் ஆடிட்டர் தான் பேசினார். அவரிடம் பேசிவிட்டு வைத்தவுடன், என் முக மாறுதலை கவனித்த ரஞ்சித்,

"என்ன? ஏதும் ப்ராப்ளமா?" கேட்டவனிடம், இல்லை என்று தலையாட்டி விட்டு, விடுதியை நோக்கி நடந்தோம்.

*****************

"பட்ட காலிலேயே படும்" என்பதற்கு ஒப்பாக, கிட்டத்தட்ட, கடந்த ஒரு வருடமாக வாழ்வில்  கொடும் துன்பத்தை மட்டுமே  அனுபவித்து வந் எனக்கு, "கொடுக்கிற தெய்வம் கூரைய பிச்சுகிட்டு கொடுக்கும்" என்பதைப் போல தோன்றியது ஆடிட்டரிடமிருந்து வந்தத, அந்த அழைப்பு.

எப்பொழுதும் முன்கூட்டியே வருமான வரி செலுத்தும் பழக்கம், என் அம்மாவிற்கு இருந்தது. அடுத்த வருடத்திற்கான, என் பெயரில் உள்ள சொத்துக்களுக்கும் முதலீடுகளுக்குமான வருமான வரி செலுத்துவதற்குத்தான், அவர் அழைத்திருந்தார். கோயம்புத்தூருக்கு வர முடியுமா? என்று கேட்டவரிடம், எனது முகவரியை கொடுத்து, நான் கையெழுத்து போட வேண்டிய படிவங்களை அனுப்பச் சொன்னேன். அவரும் அவ்வாறே செய்திருந்தார், அவர் அனுப்பிய படிவங்களில் கையெழுத்திட்டு முடித்தபின் தான், எனக்கு அந்த யோசனை தோன்றியது. ஏன், என் பெயரில் இருக்கும் ஏதாவது ஒரு சொத்தை விற்று, அதை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தோன்ற, அதற்கான வேளைகளில் இறங்கினேன்.

ஆடிட்டர் அனுப்பிய கணக்கு வழக்குகளை, ரஞ்சித்தின் உதவியோடு, இங்குள்ள ஒரு ஆடிட்டரிடம் கொடுத்து அலசிணோம். மணியின் குழுமத்திள் ஒரு அங்கமாக இருக்கும் கார்மெண்ட்ஸ் தொழிலில் 6 சதவீத பங்குகள் என் பெயரில் இருந்தது. அதைத்தான் இருப்பதிலேயே, நல்ல தொகைக்கு விற்கமுடியும் என்று தெரிந்ததும், பிரதீப்பிடம் பேசி, வெளியில் யாருக்கும் தெரியாமல் அதைச் செய்துமுடிக்க தேவையான நடவடிக்கைகளில் இறங்கினேன். பிரதீப்பும், அவன் அப்பாவிற்கு தெரிந்தவர்கள் மூலம், விஷயம் வெளிய தெரியாமல், மணியின் அப்பாவின், தொழில் போட்டியாளர் ஒருவரிடமே, விற்பதற்கு ஏற்பாடு செய்ய, பேரம் படியாமல் கொஞ்ச நாள் இழுத்துக் கொண்டிருந்தது. அவர் கேட்ட விளைக்கே கொடுத்து விடலாம் என்று முடிவு செய்து, அந்த சொத்திற்கான டாக்குமெண்டை எப்படி எடுப்பது என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுதுதான், வருமான வரித்துறை சோதனையில் என் அம்மா சிக்கி, தலைமறைவாக இருந்தாள். அவளது கஷ்டம், எனக்கு துன்பத்தையும் கொடுக்கவில்லை, இன்பத்தையும் கொடுக்கவில்லை. மாறாக, அவளுக்கு வந்த சோதனை, எனக்கு அதிர்ஷ்ட கதவுகளைத் திறந்துவிட்டது. அவள், தலைமறைவாய் இருந்த சமயத்தை உபயோகப்படுத்திக் கொண்டு, வீட்டுக்குச் சென்று, எனக்கு தேவையான டாக்குமென்ட்களை, எந்த சந்தேகமும் வராதபடி எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். எடுத்துக்கொண்டு வந்த சில நாட்களிலேயே, ஒரு வாரத்தில் எழுதிக்கொடுக்க முடிந்தால், நாங்கள் பேரம் பேசிய தொகையை விடவும், அதிகமாக 5% சதவீதத்திற்கு வாங்கிக்கொள்ள, நாங்களும் பேரம் பேசிக் கொண்டிருந்தவர் சம்மதிக்க, அதிர்ஷ்டத்திற்கு மேல் அதிர்ஷ்டம் அடித்தது எனக்கு. எனக்கும், என்னவனுக்கும் இழைத்த அநியாயத்திற்கு, துன்பத்திற்கு, கடவுளே பரிகாரம் செய்கிறார் என்று நினைத்துக்கொண்டேன்.

*******************

எங்கள் மொத்த திட்டமும் மாறியிருந்தது. மூன்று நாட்களில், பங்குகளை எழுதிக் கொடுப்பது என்று முடிவு செய்து, அதற்கான அக்ரிமண்ட் அடுத்த நாளே தயாரிக்கப்பட்டு, பிரதீப் அவன் பங்கிற்கு அவனுக்குத் தெரிந்த வக்கீல் மூலம் சரிபார்க்க, ரஞ்சித், அவனது அண்ணன் கம்பெனியின், லீகல் டீமிடம் கொடுத்து, அவன் பங்கிற்கு, அதை சரி பார்த்தான். மணி பயிற்சி பெற்ற ஸ்பெயின் அக்காடமியிலேயே அவனை பயிற்சி பெறவைக்கும் நோக்கத்தோடு, ஸ்பெயினிலேயே, ஏதாவது ஒரு கல்லூரியில், நானும் படிப்பது என்று முடிவு செய்து, எனக்கான ஆறுமாத சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பமும் கொடுத்தாகிவிட்டது. 15 நாட்களுக்குள் கண்டிப்பாக வீசா வந்துவிடும் என்று, டிராவல்ஸ் ஆட்களும் உறுதி சொல்ல, மிஞ்சிப் போனால் இன்னும் ஒரு மாதம்தான், நானும் மணியும், கணவன் மனைவியாக, ஐரோப்பாவில் இருப்போம் என்ற கனவுடன், கோயம்புத்தூர் பறந்து கொண்டு இருந்தேன் நான்.

எனது அலைபேசியின் தொடுதிரையில், என் கழுத்தை கட்டிக் கொண்டு, கள்ளம் கபடமில்லாமல் சிரித்துக்கொண்டிருந்தான், பதினானக்கே வயதான மணி. டெல்லியில், நாங்கள் கலந்துகொண்ட ஜூனியர் நேஷனல்ஸின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தில். தொடுதிரையில் இருந்த, அவன் முகத்தின் மீது, பெருவிரலால் நீவிக்கொண்டே, அவனை கொஞ்சிக் கொண்டிருந்தேன் கண்களால்.

"பேசாம, நாளைக்கே உன்னை என் கூட கூட்டிட்டு போய்டவா?"

"என் கழுத்துல இருக்கற தாலியப் பார்த்தா, என்ன செய்வே?"

"உன்ன கூட்டிட்டு ஓடிப்போனதும், ஒரு பத்து நாள், இல்ல!! இல்ல!! போதும்!! போதும்னு, தோணுற வரைக்கும் இருக்க கட்டிப்புடிச்சுக்கணும்!! உன் வாசத்த அப்படியே நுகர்ந்தது என் உடலின் ஒவ்வொரு செல்லிலும் அடச்சு வச்சுக்கணும்!!"

"உன்னை, கண்ட இடத்துல எல்லாம் கடிச்சு வைக்கப் போறேன்!!"

"நீ டென்னிஸில பெரிய ஆள் ஆகிறாய்யோ, இல்லையோ!!, நான் படிக்கிறனோ, இல்லையோ, அங்க போன உடனே இரண்டு குழந்தை பெத்துக்கணும்!!" என்று ஆசை தீர அவனை கொஞ்சி கொண்டிருந்தாலும்

"ப்ளீஸ் பாப்பா!! நல்ல வலிக்கிற மாதிரி, ஒரு பத்து அடியாவது, அடி!!" அவனுக்கு நான் தந்த வேதனைகளை, அவன் கையால் திரும்பப் பெறாமல், எனது காயம் ஆறவே ஆறாது. அவன் என்னை காயப்படுத்துவது நடக்கவே, நடக்காது என்று தெரிந்தும், மனம் அவனிடம் மன்றாடிக் கொண்டிருந்தது. கண்களைப் போலவே, என் இதயமும் ஈரம் செறிந்த இருக்க, வருத்தமும், குற்றஉணர்வும் இருந்தாலும், அதயெல்லாம் தாண்டிய, அவன் மேலான காதலில், திளைத்துக் கிடந்தேன்.

"விமானம் இன்னும் சற்று நேரத்தில் கோயம்புத்தூரில் தரை இறங்கப்போகிறது" என்ற அறிவிப்பு, என்னை, மோன நிலையிலிருந்து வெளிக்கொணர, கை கால்கள் பரபரத்தது, அதைவிட அதிகமாக, என் உள்ளம் பரபரத்தது. வந்தது, வியாபார நோக்கமாக இருந்தாலும், அதை முடித்துவிட்டு, "எப்படா அவனை கண்குளிர பார்ப்பேன்!!" என உள்ளம் துடித்து கிடந்தது.

விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்ததும் "டிங்" என்று என் மொபைல் சத்தம் எழுப்ப, பிரதீப்பாய்த் தான் இருக்கும் என்று நினைத்தவாறு, மொபைலை நோண்டினேன், தெரியாத எண்ணில் இருந்து மெசேஜ் வந்திருந்தது.

"The sun doesn't rise and set on your ass!!" மெசேஜைப் படித்ததுமே, என் இதயத் துடிப்பு எகிற, பதட்டம் தொற்றிக்கொண்டது. என் மூளை ஏதோ அபாயம் என்று உணர்த்த, உள்ளங்கைகள் வேர்த்தது. மீண்டும் "டிங்" என்ற சத்தத்துடன், அதே எண்ணிலிருந்து, ஒரு வீடியோ வர, அதைத் தொடர்ந்து Enjoy” என்ற மெசேஜும் வந்தது. இதயத்தின் துடிப்பு, என் காதுகளுக்கு கேட்க, ஆளை விழுங்கும் பயம் என்னை அப்பிக்கொண்டது. "அந்த வீடியோவ பிளே பண்ணாத!! டெலிட் பண்ணு!!அந்த நம்பரை பிளாக் பண்ணு!!" என்று என் உள்ளுணர்வு சொல்ல, அருகிலிருந்த கழிப்பறைக்குள் நுழைந்தேன் நான்.

உடம்பெல்லாம் வேர்க்க துவங்கியிருந்தது, கையிலிருந்து மொபைல் நழுவுவது போல் இருக்க, அதை இறுகப் பற்றிக்கொண்டு, அந்த வீடியோவை பிளே செய்த, அடுத்த நொடி, என் வாழ்வு, இருண்டுவிட்டது.

***************
[+] 6 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 09-12-2020, 10:14 PM



Users browsing this thread: 12 Guest(s)