அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 52 

பத்து நாள் கழித்து

பழைய டெல்லியின், சாந்தினி சாவுக் பகுதியில் இருந்த ஒரு பிரபலமான பஞ்சாபி ரெஸ்டாரண்டில், அமர்ந்து இருந்தோம் நானும், ரஞ்சிதும்.

"How are you?" வகுப்பறை முடிந்ததும், பத்து நாட்கள் என்னுடன் பேசாமல் இருந்த, ரஞ்சித் திடீரென்று என் நலம் விசாரித்தான். நல்லா இருக்கிறேன் என்பதைப் போல தலையாட்டினேன், உதடுகளை தாண்டாத புன்னகையுடன்.

"உன் கூட கொஞ்சம் பேசணும், வெளிய போலாமா?" அவன் கேட்க, மறுக்க முடியாமல், சரி என்று தலையசைத்தேன்.

இப்போது இங்கே இரவு உணவை முடித்துக் கொண்டு, அவன் ஆர்டர் செய்த "கரக் சாய்"க்காக (வட இந்தியாவின் மசாலா டீ) காத்துக் கொண்டிருக்கிறோம். பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை இருவரும்.

"இவ பேரு வெண்ணிலா!!" திடீர்யென்று, என்னிடம் நீட்டிய அவனது மொபைல் தொடுதிரையில், சினேகமாக புன்னகைத்துக் கொண்டிருந்தாள் ஒரு பெண். கொள்ளை அழகாக இருந்தாள், அவன் குறிப்பிட்ட வெண்ணிலா

[Image: Meghana-Lokesh.jpg]

"நாங்க ரெண்டு பேரும் ஸ்கூல் மேட்ஸ். செகண்ட் ஸ்டாண்டர்ட்ல இருந்து MBBS முடிக்கிற வரைக்கும் ஒன்னாதான் படிச்சோம்!!. 9th ஸ்டாண்டர்டுல இருந்து லவ் பண்ணோம். லவ்வ சொல்லிக்கணும் என்கிற அவசியம் கூட இல்லாத உறவு எங்களோடது!!. என்னோட சைல்ட்ஹுட் க்ரஷ், அப்புறம் குளோஸ் ஃப்ரெண்ட், டீன் ஏஜ்ல லவ், எல்லாமே அவதான்!!. வயசுக்கு ஏத்த மாதிரி, எங்க உறவும் ரெம்ப இயல்பா மாறிக்கிட்டே இருந்துச்சு. its just felt so natural, you know!!. UG முடிச்சதும், அவங்க வீட்ல கல்யாண ஏற்பாடு பண்ணினாங்க, குடும்பத்தோடு போய் பொண்ணு கேட்டோம். நாங்க பஞ்சாபி, அவங்க தமிழ், மதம், மொழி, வசதி, கலாச்சாரம்னு ஆயிரம் காரணம் காட்டி, அவங்க வீட்ல ஒத்துக்கல!!. ஆரம்பத்துல, நாங்க ரெண்டு பேரும் உறுதியாத்தான் இருந்தோம். எப்பொழுதும், எங்களுக்குள்ள வர சின்ன சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங், எங்க ஒருத்தரை ஒருத்தர் இழந்திடுவோமோ என்கிற பயத்துல, சண்டையே போடாம நிறைய விட்டுக்கொடுத்து, அதுவே எங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு பெரிய இடைவெளியே உருவாக்கிடுச்சு!! ஒரு சமயத்துக்கு மேல, சின்ன சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்க வந்தப்ப முன்னாடி போட்டி போட்டு விட்டுக்கொடுத்தது மாதிரி, ஒருத்தொருக்கு, ஒருத்தர் விட்டுக்கொடுத்த போட்டிபோட்டு சொல்லிக்காட்டியே, பெருசாகி, ஒரு கட்டத்துல அவங்க வீட்டுல சொன்ன மாப்பிள்ளை கல்யாணம் பண்ணிட்டு போய்டா!!” தீடிர் என்று அமைதியானான், நான் ஏதோ வசியத்துக்கு கட்டுப்பட்டது போல் இருந்தேன். சில முறை பெரிதாக மூச்சுவிட்டவன், தன் டேபிளில், கைகளை விரித்துவைத்து, அதில் பார்வையை செலுத்தியவன், தொடர்ந்ததான்

“I was her Soul mate and She was mine too, I still believe that. சாகுற வரைக்கும் அது மாறாது!! என்ன பத்தி in and out அவளுக்குத் தெரியும், நீ கூட அன்னைக்கு கேட்டியே, UG முடிச்சதுக்கு அப்புறம் எதுக்கு, ரெண்டு வருஷம் பிரேக் போட்டேன்னு, இது தான் காரணம், அவ தான் காரணம்!!. இப்போ, இந்த வருஷம், நான் படிக்கிறதுக்கும் அவதான் காரணம். DM neurology எடுத்ததுக்கும், அவ தான் காரணம்!! ரெம்ப டிப்ரஸ்ட ஆன நான், PGயும் பண்ணாம, ஒரு டாக்டரா பிராக்டீஸ்சும் பண்ணாம, சும்மா சுத்திக்கீட்டு இருந்தேன்!! காமன் பிரெண்ட்ஸ் மூலமா இத கேள்விப்பட்ட அவ, ஒருநாள் ஃபோன் பண்ணி அழுதா, சரி அவளாவது நிம்மதியா இருக்கட்டும்னு தான், மேனேஜ்மெண்ட் சீட்ல ஜாயின் பண்ணினேன்!!. ஏன்னா, எனக்கும் அவளைப் பற்றி in and out தெரியும், நான் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்குப் போற வரைக்கும், அவளால நிம்மதியா வாழ முடியாதுனு எனக்கு தெரியும்!! அவங்க வீட்ல பார்த்த மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிட்டு போனது, எனக்கு அநியாயமா இருந்தாலும், கண்டிப்பா அவ பக்கம் எங்க சண்டையத்தாண்டி, ஏதோ ஒரு காரணம் இருக்கும்னு எனக்கு அப்பவே தெரியும்!! அதுவும் இப்போ உன்ன பாத்ததுக்கு அப்புறம், அந்த காரணம் கூட நியமானதாதான் இருக்கும்னு தோணுது.

பொதுவா ரெண்டு வார்த்தைக்கு மேல பேசுறதுக்கு, ஆயிரம்முறை யோசிக்கிறவன் நான்!! அவனை நம்ப முடியாமல் நான் பார்க்க,

"என்ன நம்ப முடியலையா?” என்று கேள்வியோடு நிறுத்தி என்னை பார்த்தவன், நான் ஆமோதித்து தலையாட்ட, தொடர்ந்தான்.

"Love will make you do crazy things, மதி!!. அவ நிம்மதியா இருக்கவாச்சும், நான் மாறணும்னு தோணுச்சு!! மனசுல இருக்கிற கஷ்டத்தை மறைக்கத்தான், இப்படி லோட லோடனு எல்லார்கிட்டயும் பேச ஆரம்பிச்சேன்!! உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணுனது கூட, எப்படியாவது அவளைதாண்டி வாழ்க்கைய யோசித்திட முடியாதாங்கிற ஒரு எண்ணத்தில் தான்!!. எப்படியாவது என் காதலை காப்பாற்ற முடியாதாங்கிற ஆற்றாமையில, அவளுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும், வெட்கம், மானம், சூடு, சொரணை, எதுவும் இல்லாமல், அவகிட்ட அழுது கெஞ்சி இருக்கேன்!! எல்லாம் பொய்யானதும், அவளாவது, நிம்மதியா, சந்தோசமா இருக்கணும்னுதான் வாழக்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர, முயற்சி செஞ்சுகிட்டு இருக்கேன்!!

யோசிச்சுப் பார்த்தா, அந்த பையனோட நிலமையிலையும் நான் வாழ்ந்திருக்கிறேன்!!, உன்னோட நிலைமையில் தான் இப்ப நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்!! பொதுவா, நான் எப்போவுமே, யாருக்கும், எந்த அட்வைஸ் பண்ணமாட்டேன்!! சொல்லப்போனா, அப்படி இருந்ததற்காக, சுயநலவாதினு கூட பேரு வாங்கி இருக்கேன்!! அடுத்தவங்க அவங்க வாழ்க்கையை எப்படி வாழனும் என்று மூணாவது மனுஷன் சொல்லக்கூடாதுனு எப்பவுமே நம்புகிறவன்!! நான் சொல்ல போறதை அட்வைஸ்னு எடுத்துக்கிட்டாலும் சரி, இல்ல என்னோட புலம்பல்னு எடுத்துக்கிட்டாலும் சரி!!.

நீ, எடுத்த முடிவுதான், உங்க ரெண்டு பேர் வாழ்க்கைக்கும் சரியானதா கூட இருக்கலாம்!! எதிர்காலத்துல, அவனை கடந்து ஒரு நல்ல நிறைவான, சந்தோஷமான வாழ்க்கையை, நீ வாழலாம், ஆனா, அந்த நம்பிக்கை உனக்கு இருக்கிறத இப்ப எனக்கு தொணல!! ஆனா கண்டிப்பா அவன நினைச்சுக்கிட்டே மீதி வாழ்க்கையை வாழனும்னு நீ முடிவு பண்ணியிருந்தா, தயவு செய்து, அவன பிரிவதற்கு இவ்வளவு யோசிக்கிற நீ, அவன் கூட சேர்ந்து வாழ்வதற்கு ஏதாவது வழியிருக்கிறதா? என்று கொஞ்சம் யோசிச்சுப் பாரு!! வாழ்க்கைல காம்ப்ரமைஸ் கண்டிப்பா பண்ணித்தான் ஆகணும்!! சில சமையம், தூரதிஷ்டவசமா, வாழ்க்கையே இதுதான்னு நாம நம்புற, நம்பிக்கை கூட அதுல அடங்கும்!!. ஆனா, அத தவிர்க்கிறதுக்கு சின்னதா ஒரு சான்ஸ் இருந்தாலும் அத முயற்சி பண்ணி பார்க்கிறதுல தப்பில்லை!!" கொட்டும் மழையென பேசி முடித்தவன், விரித்து வைத்த அவன் உள்ளங் கைகளையே வெறித்திருந்தான்.

அதுவரை அவனைப் பற்றிய சுய விபரங்களை தவிர, பெரிதாக என்னிடம் எதுவும் பகிர்ந்து கொள்ளாத ரஞ்சித், தன் வாழ்வின் பெரும் வலியை என்னிடம் பகிர்ந்து கொள்ள, அதே வலியை அனுபவித்து வந்த நான் மூச்சு விடக்கூட மறந்து போய், அவனை பரிதாபத்துடன் பார்த்தேன். எங்களது நட்பு ரொம்பவும் வித்தியாசமானதுதான். பர்சனலான விஷயங்களை, நான் அடக்கமாட்டாமல் அவனுக்கு சொல்லும்வரை, எதையுமே பகிர்ந்து கொண்டதில்லை நாங்கள். பட்டும் படாமல் டென்னிஸ், படிப்பு, உலகவிஷயம் என்று பேசி வந்தாலும், எங்களுக்கு ஏதோ ஒரு பிணைப்பு இருப்பதை, எப்பொழுதும் நான் உணர்ந்தே இருந்தேன். இது இவ்வளவு ஆத்மார்த்தமாக இருக்கும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டிருக்க, நிமிர்ந்து பார்க்க, கலங்கிய கண்களுடன் அவனைப் பார்த்தேன்.

"இது கூட, உன் மேல உள்ள அக்கறைங்கிறத தாண்டி, நான் இழந்ததை, உனக்கு மீட்டுக்கொடுத்தா, ஏதோ ஒரு வகையில் அடுத்த கட்டத்துக்கு என்ன நான் நகர்த்திக்க, ஒரு பிடி கிடைக்காதா என்கிறது சுயநலம் கூட காரணமா இருக்கலாம்!!" குரல் தழுதழுக்க கூறியவன், சட்டென்று எழுந்து வாஷ் ரூம் சென்று விட்டான்.

"Sorry, I got bit emotional!!" ஐந்து நிமிடம் கழித்து திரும்பி வந்தவன், சிரித்தவாரே மன்னிப்பு கோர, அவன் சிரிப்பில் இருந்த வலிதான் தெரிந்தது என் கண்களுக்கு. அவன் மீதான எனது நட்பும், மரியாதையும், உயர்ந்ததைப் போலவே, அவனைப்பற்றிய விநோதமும் அதிகமானது என் மனதில்.
[+] 7 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 08-12-2020, 11:43 PM



Users browsing this thread: 4 Guest(s)