அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
மூன்று நாள் முன்புஅவன் சொன்னதும் விடுதிக்குச் சென்ற நான்மறுநாளேஅவனிடம் மொத்தத்தையும் கொட்டித் தீர்த்தேன்எங்கள் பிரிவின் காரணத்தை மட்டும்மணியின் தந்தை மிரட்டினார் என்றும்என் மனதளவில் செத்துவிட்ட என் அம்மாவைஉண்மையாகவே செத்துவிட்டதாகவே மாற்றிச் சொல்லி இருந்தேன்ஆறுதலுக்கு அழுபவர்களிடம் அறிவுரை சொல்லாமல்அவர்களின் வேதனையை மட்டும் கரைக்கும் வித்தை தெரிந்தவன் ரஞ்சித்அனைத்தையும் கேட்டவன்எதுவுமே சொல்லவில்லைஎதுவும் கேட்கவும் இல்லைமற்றவரின் பாவத்தை அள்ளி சுமப்பதற்கே பிறந்தவன் போலநான் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டவன்நான் முடித்துவிட்டேன் என்று தெரிந்ததும்

"Are you feeling better now!!" என்று கேட்டவன்நான் தலையாட்டியதுபோகலாம் என்று கண்ணை காட்டிஎழுந்து கொண்டான்இன்னும் என்னால் புரிந்து கொள்ள முடியாத வினோததிலும் வினோதமானவன்இந்த ரஞ்சித்.

************

இரண்டு நாள் கழித்து,

என்ன பேசவேண்டும் என்பதில் தெளிவு இருந்தாலும்நான் திட்டமிட்ட படியே எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்று நினைத்தத படியேகடவுளை வேண்டிக் கொண்டுலீ மெரிடியனுக்குள் நுழைந்தேன்அங்கே எனக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல்சுமா ஆன்ட்டிமணியைதனியாக அழைத்துக் கொண்டு வருவார்கள் என்ற என் நினைப்புக்கு மாறாகஅங்கே அவனது அப்பாவிற்கான பாராட்டு விழா என்று தெரிந்ததும் அதிர்ச்சியுற்றேன்உடனே அங்கிருந்து வெளியேற எத்தனிக்கும் போதுதான்விழா கூட்டத்தில்என் அம்மாவை கவனித்தேன்உடலெல்லாம் பற்றி எறியும் ஆத்திரத்துடன்அங்கிருந்து வெளியேறினேன்இவ்வளவு நடந்த பின்னும்மணியின் அப்பாவிற்காண பாராட்டு விழாவில்என் அம்மாவும் கலந்து கொண்டதை நினைக்கையில்பற்றிக்கொண்டு வந்தது எனக்குமணியை சுத்தமாக மறந்துவிட்டுஎன் அம்மாவிற்கு ஒரு பாடம் கற்பிப்பது என்று முடிவு செய்துதிரும்பவும் அந்த பாராட்டு விழா நடக்கும் ஹாலுக்குள் நுழைந்தேன்

என் அம்மா என்னை பார்க்கும் படி அவள் முன்னால் செல்லஅவள் கண்டுவிட்டதும்அவளை முறைத்துவிட்டுநேராக மணியின் அப்பாவிடம் சென்றேன்கை கொடுத்துகட்டிப்பிடித்துஅவருடன் நெருக்கமாக நின்று செல்ஃப்பி எடுத்துவிட்டுஎன் அம்மாவை முறைத்தவாறு அங்கிருந்து கிளம்பினேன்நான் எனது காரின் கதவு திறக்கும் போதுஎன்னை நோக்கி ஓடிவந்த என் அம்மா 

பானு!! ஒரு நிமிஷம் நில்லு!! நான் சொல்லுறத மட்டும் கேளு!!” பார்வையால் எரித்துவிட்டு 

நீ என்ன என்னை கூட்டிக் கொடுக்குறது!! நானே போய் படுக்குறேன்!! உனக்கு வேலை மிச்சம்!! அதுக்குத்தான ஆசைப்பட்ட?" கத்திவிட்டுஅவள் அருகில் நிர்ப்பதே பாவம் என்ற எண்ணத்தில்அங்கிருந்து கிளம்பினேன்நெதராவிற்கு அழைத்து அவளை விமான நிலையம் வரச்சொன்னேன்அடுத்த டெல்லி விமானத்திற்கு இன்னும் நான்கு மணி நேரம் இருக்ககோயம்புத்தூரை விட்டு சென்றாள் போதும் என்ற எண்ணத்தில்நேத்ராவிடம் காரை கொடுத்துவிட்டுஎன்ன எது என்று கேட்டவளுக்குடெல்லி சென்றது கால் செய்வதாக சொல்லிவிமான நிலையத்திற்குள் புகுந்து கொண்டேன்

*************

ஒரே பிள்ளையான நான் அவளை விட்டுப் பிரிந்த பின்னும்அதற்கு காரணமான உறவைஇன்னும் அவள் தக்க வைத்திருக்கிறாள் என்பதைஎன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லைஆற்றாமையில் தவித்திருந்த நான்விமான நிலையத்தின் கழிப்பறையில் முடங்கிக் கிடந்தேன்அப்பொழுதுதான் மணியிடம் இருந்து அழைப்பு வந்ததுநான் கொஞ்சமும் எதிர்பார்க்காத அழைப்பு என்றாலும்அவன் பெயரோடு சேர்ந்துபுகைப்படமும் தொடுதுறையில் தெரியகொஞ்சம் ஆறுதல் எனுக்குள்எடுத்திருக்கக் கூடாத அழைப்பை எடுத்தேன்.

"சொல்லு!!” என்றேன்

"மது எங்க இருக்க?” 

"என்ன வேணும்னு சொல்லு?” 

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும்!!” 

"சொல்லு!! கேட்டுகிட்டுதான் இருக்கேன்!!”

"இல்ல!! நேர்ல பேசணும்!!” 

"முடியாது!!” என்று நான் மறுத்தும் அவன் விடுவதாய் இல்லை

"பாப்பா!! என்ன பிரச்சனை இருந்தாலும் நாம சேர்ந்து ஃபேஸ் பண்ணுவோம்!! எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் பாத்துக்கலாம்!! நான் தாத்தாட்ட பேசுறேன்!!” தாத்தா கிட்ட என்ன பேசுவான்?” என்று நினைக்கஅவனது நம்பிக்கையில் சலிப்பானேன் 

"எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை!!” 

"நீ பார்க்கிங்ல ஆண்ட்டி கிட்ட பேசிட்டு இருந்த நான் கேட்டேன்!!” திடுக்கிட்ட நான்எந்த உண்மை அவனுக்கு தெரியக்கூடாது என்று நான் இவ்வளவும் செய்தேனோஅது தெரிந்துவிட்டதோ அவனுக்கு என்ற எண்ணம் கொடுத்த பயம் என்னை ஆட்க்கொள்ளஎன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு அவன் சொன்ன உரையாடலை மீண்டும் என் மனதில் ஒட்டிப்பார்த்துஅதற்கு வாய்ப்பில்லை என்று உணர்ந்ததும்என் சூழநிலைக்கு பொருந்ததாத பெரும் நிம்மதி எனக்குள்

"மது!!”

"சொல்லு!!” 

"என்னால முடியல!!” அவன் கெஞ்சநான் டெல்லியில் இருந்து வந்த போது என்ன திட்டத்தில் வந்தேனோ அதை செயல் படுத்துவது என்று முடிவு செய்தேன்

"சரி!! சொல்றேன்!! குறுக்கே பேசக்கூடாது!! எமோஷன் ஆகக்கூடாது!!
எல்லாத்துக்கும் மேலமுட்டாள்தனமா எதுவும் பண்ணிக்க மாட்டேன்னுஎனக்கு ப்ராமிஸ் பண்ணு!!” 

"ம்ம்!!" 

"தெளிவா வாய தொறந்து சொல்லு!!” அவன் எதுவும் பேசவில்லை

"முதல்ல, I have moved on in my life, அதுதான் உண்மை!!. இப்போ என் வாழ்க்கைல இன்னொருத்தன் இருக்கான்!!. இரண்டாவது எங்க அம்மாகிட்ட நான் போட்ட சண்டைக்கும்,
இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைபுரிஞ்சுக்கோ!! எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன்!!. உன்ன கெஞ்சி கேக்குறேன்முட்டாள்தனமா எதுவும் பண்ணிஎன்ன வாழ்க்கை ஃபுல்லா வருத்தப்பட வச்சிராத!!” அதற்கு மேலும் அவனை காயப்படுத்திஎன்னையும் காயபடுத்த விரும்பாமல் 

"பாய்!!” அழைப்பை துண்டித்தேன்

பத்து நிமிடம் அழைப்பு அவனிடம் இருந்து வர உடனே எடுத்தேன்

"சீக்கிரம் சொல்லு!! டைம் இல்ல எனக்கு!!” என்ன சொல்லுவானோ என்று படபடத்தேன்

"வெளிய வா!! உங்க வீட்டு முன்னாடி தான் இருக்கேன்!! அவன் என் வீட்டின் அருகே நிற்கிறான் என்றதும்சொல்லமுடியா பதட்டம் என்னுள்

"அங்க எதுக்கு போனஅங்க உன்ன போக கூடாதுணு சொல்லி இருக்கேன்ல!!” பதறினேன்.

"சரி!! பக்கத்துல இருக்குற பார்க்குல இருக்கேன் வா!!” 

"நான் வீட்ல இல்ல!! வெளிய இருக்கேன்!!” அவனிடம் பதில் சொன்னாலும்அவனை எப்படியாவது அங்கிருந்து அவன் வீட்டிற்கு செல்ல வைப்பதை பற்றியே இருந்தது என் சிந்தனைநான் சிள்வதை காது கொடுத்து கேட்கும் மனநிலையில் அவன் இல்லை என்பது அவனுடனான அடுத்த இரண்டு நிமிட உரையாடலில் தெரிந்தது

"சரி!! நான் சொல்ற நம்பருக்கு கால் பண்ணி கான்பிரன்ஸ்ல போடு!!” ரஞ்சித்தின் நமபருக்கு அவனை அழைக்க சொன்னேன்நான் கேட்டபோது அரை மனதுடன் ஒத்துக்கொண்ட ரஞ்சித்காண்பரான்ஸ் காலில் முழு மனதுடன் நடித்தான்நான் தான் மணியின் நிலையை எண்ணி சுக்கு நூறாக நொடிந்து போனேன்பின் இதற்கு மேலும் அவனை துன்ப படுத்த கூடாது என்று முடிவு செய்து 

"லைன்ல இருக்கியா?” குரலில் இருந்தா திடம் மனதில் இல்லை எனக்கு

"இன்னும் கால் டிஸ்கனெக்ட் ஆகல!!, அதனால நீ கேட்டுக்கிட்டு கேட்டிருப்பேன் நம்புறேன்!!” 

"சொல்லு!! லைன்ல தான் இருக்கேன்!!” அவன் குரலில் இருந்த உறுதி என்னை ஏதோ செய்தது

"நான் சொன்னது உண்மைனு இப்ப நம்புவன் நினைக்கிறேன்!! உன்ன கஷ்டபடுத்த கூடாதுன்னுதான்நான் இவ்வளவு நாள் ட்ரை பண்ணுனேன்நீ புரிஞ்சுக்கல!! உன்ன கஷ்டபடுத்த வச்சுட்டநீ எவ்வளவோ வருத்தபடுறியோ!! அதைவிட அதிகமாகவே நான் வருத்தப்படுறேன்!!. இதுல உன் மேல தப்பே இல்லஃபர்ஸ்ட் நீ அதை புரிஞ்சுக்கோ!!. தப்பு எல்லாம் என் மேலதான்!!”

"எப்படி மது எனக்கு புரியல?” வந்த அழுகையை கட்டுப்படுத்த முடியாமல்மொபைலை சற்று விலக்கிசில நொடி அழுதுவிட்டுபின் என்ன சமண படுத்திக்கொண்டு 

பற்றி எரியும் தீயினுள் விழ போகும் குழந்தையைஎட்டி உதைத்தது காப்பாற்ற எண்ணும் தாயின் மன நிலையில்தான் நான் இருந்தேன்எட்டி உதைக்கும் போது அவனுக்கு வலிக்கும் என்பதை காட்டிலும்பொசுக்கி சாம்பலாகும் உண்மை என்னும் தீ இடமிருந்து அவளைக் காப்பாற்ற எட்டி உதைப்பதை ஒரே வழி என்று உணர்ந்துவேறு வழி இல்லாமல் உதைத்தேன்.

"உனக்கு தெரியல நீ எவ்வளவு பெரிய பணக்காரன்னு!! அதுவும் இல்லாம என்னோட நாலு வயசு சின்னப் பையன்!! இந்த இரண்டும் ஒரு பொண்ண எவ்வளவு இன்செக்குர்டா பீல் பண்ண வைக்கும்னு உனக்கு தெரியாது!! மறுபடியும் சொல்றேன்தப்பு உன்னோடு கிடையாது!! என்னோடது தா......!!” முடியாமல் மீண்டும் அழுதேன்ஆனால் அவன் விடுவதாய் இல்லை

"நீ நேஷனல் விளையாடுறதற்குமூணு மாசத்துக்கு முன்னாடி இருந்தேஇந்த இன்செக்யூரிட்டி எனக்கு வந்துடுச்சுநீயே யோசிச்சு பாருஅக்கா மாதிரி உன் கூட பழக ஆரம்பிச்சுஇப்போ உன்னை உன்னை லவ் பண்றேன்எனக்கு உன்ன கல்யாணம் பண்ணி வைங்கஅப்படின்னு நான் கேட்டாஉன் காசுக்காகதான் உன்னை மயங்கிட்டேன் ஊர் சொல்லும்!!. ஆனாஉன்னை கஷ்டப்படுத்த என்னால முடியலஅதான் உண்மை!! இதெல்லாம் சரியாயிரும்னுஉனக்குச் சொன்ன மாதிரியேஎனக்கு நானும் சொல்லிக்கிடேன்!!. அது எல்லாமே இங்கே டெல்லி வர்ற வரைக்கும்தான்ரஞ்சூவ பார்க்கிறது வரைக்கும் தான்!!. அவன் கூட பழகுனதுக்கு அதுக்கப்புறம்தான் நமக்குள்ள இருந்தது லவ் இல்லன்னு எனக்கு புரிஞ்சது!!”

"உனக்கே தெரியும் என் தம்பி பொறந்த மூணு மாசத்துலயே இறந்துட்டான்னு!! சிங்கிள் சைல்ட வளர்ந்த எனக்குநீ கிடைச்சதும் உன் மேல பாசம் வச்சேன்!!. திடீர்னு ஜினாலிய லவ் பண்றனு நீ சொன்னதும்எனக்குள் ஒரு பயம்எங்கே நீ யாரையாவது லவ் பண்ணுனாஎன்ன விட்டு விலகி போயிருவியோனு!!. என்ன செய்றதுன்னு தெரியாமஉன் மேல இருந்த பொசசிவ்னஸ் லவ்வுன்னு நானே முடிவு பண்ணிகிட்டேன்!!. அதே மாதிரிதான் உனக்கும்நான் சொல்ற வரைக்கும் நீ என்ன அப்படி பார்த்தது கிடையாதுனு எனக்கு தெரியும்!! தேவையில்லாம நான் தான் உன்னை குழப்பிவிட்டுட்டேன்!!. உண்மையைச் சொல்லணும்னா பிளான் பண்ணி உன்னை என்ன லவ் பண்ண வச்சேன்!! நீ ரெஃப்யூஸ் பண்ணக்கூடாதுனு தான் அன்னைக்கே உன்கூட ...... .” தொடர முடியாமல் அழுதேன்தன் காதலை தானே கொச்சை படுத்திக்கொள்ளும் நிலையை விட கொடுமையானது என்று உலகில் ஒன்று இருக்க முடியாதுகடந்ததுதான் ஆக வேண்டும் என்று எனக்கு நானே கொடுக்க வேண்டும் என்று நினைத்த தநனை நினைவில் நிறுத்திதொடர்ந்தேன்

"அதனால வந்த வினை தான் இதுஉனக்கு தோணும்பின்ன எதுக்கு எங்க அம்மாகூட நான் சண்டைபோட்டேன்னுஃபர்ஸ்ட் நான் டெல்லியில் ஜாயின் பண்ணினது அவங்களுக்கு பிடிக்கலஎங்கே நான் அவங்களை விட்டு விலகிபோயிருவேனோனு பயந்துஎனக்கு உடனே கல்யாணம் பண்ணி வைக்கணும் முடிவு பண்ணிட்டாங்க!!. ரஞ்சூ ஃபேமிலி நிலைமை சரி இல்லைஇப்போதைக்கு கல்யாணம் பண்ண முடியாது!!. அதனால என்ன செய்றதுன்னு தெரியாம அப்படி அம்மாகிட்ட கோபப்பட வேண்டியதாப்போச்சு!!. எனக்கு தெரியுதுநான் ரொம்ப சுயநலம் பிடிச்சவஆனால் உண்மையிலேயே சொல்றேன்உன்ன கஷ்டபடுத்த கூடாதுன்னு தான் நினைச்சேன்!!”

"என்ன தப்பானவளா காட்டிஎன்ன நீ வெறுக்கனும்னு நினைச்சேன்!!. என்ன நீ போர்ஸ் பண்ணு அன்னைக்குகூடஉங்கிட்ட எப்படியாவது உட்கார்ந்து தெளிவா பேசணும்னு நினைச்சு தான் வந்தேன்!!. ஆனா என்னனாமோ நடந்திருச்சு!!. இப்பவும் நான் உன்ன லவ் பண்றேன்!! ஒரு பிரண்டா!! என் வாழ்க்கையில் எப்பவுமே உனக்கு ஒரு ஸ்பெஷலான இடம் இருக்கும்!!. ஏற்கனவே அம்மாவை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்!! நீயும் போய் அவங்ககிட்ட ஏதாவது கேட்டு அவர்களை இன்னும் கஷ்டப்படுத்தாதே!!. ப்ளீஸ் அங்கிருந்து போயிடு!!. வீட்டுக்கு போ!!. சாரி டா!!” என்று குரல் தழுதழுக்க முடித்தாள்

"பாப்பா!!” ஒரே சொல்லில் என் உறுதியை எல்லாம் உடைத்தேன்

"இங்க போடிங் பண்ண கூப்பிடுறாங்க!! கிளம்புறேன்!! டைம் ஆச்சு!!” என் மீதே நம்பிக்கை இல்லாமல்எங்கே உண்மையை எல்லாம் சொல்லிவிடுவேனோ என்ற பயத்தில் அழைப்பை தூண்டிக்க முயன்றேன்

"அவ்வளவுதானா?” அவன் கதற, “ஆண்டவா எங்கள என் இப்படி சித்ரவதை படுததுறஎதுக்கு எங்களுக்கு இப்படி ஒரு தண்டனை என்று!!” என் உள்ளமும் கதறஅவனுடன் சேர்ந்தது வாய்விட்டு அழக்கூட வழி இல்லாமல் அழுதேன்சத்தமில்லாமல்

யாரு உள்ள?” என்று நான் இருந்தா கழிவரையின் கதவு தட்டப்படஅழுகையை அடக்கி

"இட்ஸ் ஓவர் மணிகண்டன்!!. புரிஞ்சுக்கோ!!” துண்டித்தேன்உயிரோடு என்னையிம் அவனையும்கலங்கிய கண்களுடன் வேலயே வந்த என்னை கேள்வியுடன் பார்த்த பணிப்பெண்ணை கண்டு கொள்ளாமல்முகம் கழுவிவிட்டுஅங்கிருந்து கிளம்பினேன்

*************
[+] 2 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 07-12-2020, 11:12 PM



Users browsing this thread: 9 Guest(s)