07-12-2020, 11:11 PM
பாகம் - 51
யார் இவன்? ஃப்ரெண்ட்லியா பழகிட்டிருக்கும் போது, திடீர்னு லவ் பண்றேன்னு சொன்னான்? எனக்கு கல்யாணம் ஆயிடிச்சு என்று சொன்னததும், கல்யாணப்பரிசு கொண்டு வந்து நீட்டுகிறான்? மனசுல தோணுச்சு அதனால சொன்னேன், ஆனா அதுக்காக உன் நட்பை இழக்க விரும்பல்லனு சொல்றான்? உண்மையிலேயே அவன் என்ன லவ் பண்ணினானா? நான் அவன் லவ்வ மறுத்தது அவனுக்கு வலிக்கலையா? இல்ல, அந்த வலியிலிருந்து அவ்வளவு சீக்கிரம் ஒருத்தரால வெளிவந்திட முடியுமா? ஜஸ்ட் லைக் தட் என்று ஒரு லவ் பண்ணுவது சாத்தியமா? என்று பலவிதமான கேள்விகள், கோயம்புத்தூர் நோக்கி விமானத்தைல பறந்துகொண்டிருந்த மதுவின் மனதில். ரஞ்சித்தை எந்த வகையில் சேர்ப்பது என்று குழம்பி போனாள், பின் அவளின் ஆரம்ப கால நெருடல் நினைவுக்கு வர, அவனிடம் கொஞ்சம் இடைவெளியை கடைப்பிடிப்பது நல்லது என்று முடிவுசெய்தவள், அடுத்தடுத்த நாட்களில் அவனை தவிர்க்கவே கோயம்புத்தூர்க்கு கிளம்பினாள், கிராஜுவேஷனுக்கு.
***************
மதுவின் பார்வையில்
கோயம்புத்தூரை அடைந்ததுமே, மனதில் பாரம் ஏறியது போல் இருக்க, காணும் இடங்களில் எல்லாம் அவனுடன் இருந்த ஞாபகம் மட்டுமே எனக்கு. எங்கள் நட்பு வட்டத்தில் அனைவரும் வந்திருக்க, அவர்களின் மகிழ்ச்சியை குலைக்க வேண்டாம் என்று எண்ணி, போலியான புன்னைகை ஒன்றை பூசிக்கொண்டேன், நாள் முழுவதும். பிரதீப்பையும், நேத்ராவையும் தவிர அனைவரும் வெவ்வேறு ஊர்களில் தனியார் மருத்தவமனையில் பணி புரிந்தவாரே, முதுகலை படிப்பிற்கான நுழைவு தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்க, பிரதீப்பும், நேத்ராவும், அரசு மருத்தவராகி, பிரதீப் குன்னூர் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையித்தில் பணி புரிய, நேத்ரா, சுந்தராபுரம் ஆரம்ப சுகாதார நிலையித்தில் பணி புரிந்தது வந்தாள். பட்டமளிப்பு விழா முடிந்ததும் அனைவரும் ரெஸிடென்சி பப் செல்வது பின் பிரதீப்பின் பொள்ளாச்சி பண்ணை வீட்டில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு, பிரிந்து செல்வது என்று திடீர் திட்டத்தில் மானமில்லாவிட்டாலும், என் வலியை புரிந்துகொண்டு அந்த திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்த நேத்ராவை சமாதானப் படுத்த, நானும் மகிழ்ச்சியாக இருப்பது போல் நேத்ராவிடம் காட்டிக்கொள்ள, நான் அந்த திட்டத்திற்கு ஒத்துக்கொள்ள, வேறு வழி இல்லாமல் நேத்ராவும் ஒத்துக்கொண்டாள்.
*******************
“தேவை இல்லாம எதுக்கு இந்த டிராமா?” ரேஷிண்டேன்சி பப் வந்து இரண்டு மணி நேராமாக, சந்தோஷமாக இருப்பது போல் நடிக்கவும் இயலாமல், நண்பர்களின் மகிழ்ச்சியை கெடுக்கவும் விரும்பாமல், தவித்துக் கொண்டிருந்த என்னை கடிந்தது கொண்டாள் நேத்ரா.
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல!! இங்க வந்ததுல இருந்து எனக்கு அவன பாக்கணும் போல இருக்கு!! நாளைக்கு அவன எங்கையாச்சும் வரச்சொல்லி கூப்படுறியா? நான் தள்ளி நின்னு பாத்துக்கிறேன்!!” என்ற என்னை பரிதாபமாக பார்த்தவள், பின் சரி என தலையாட்டினாள். அப்பொழுத்துதான்
"இங்க பாருங்க, கிராஜூவேஷன் பார்ட்டி ஸ்பெஷல் கெஸ்ட்" திடீர் என்று மணியை அழைத்து வந்த பிரதீப், எனக்கு எதிர்ல இருந்தா இருக்கையில் அமரவைத்தான். என் கையை பற்றிய நேத்ரா பதற, அவளை காட்டிலும் அதிக பதற்றம் என்னை தொற்றிக்கொண்டது. அவனை காண வேண்டும் என்று துடித்து கொண்டிருந்த இதயம், அவன் என் கண்களுக்கு முன் வந்து நிற்கையில், துடிப்பதை சில நொடிகள் நிறுத்தி விட்டது.
ரத்தமும், சதையுமாக, என் முன்னே என் உயிரே நிற்கையில், அவனை அனைத்துக்கொண்டு, என் துன்பத்தை எல்லாம் அவனை முத்தமிட்டே தீர்க்க வேண்டும் என்று பரிதவித்த மனதை இழுத்துப் பிடிக்க, அது கண்ணீராய் வெளிப்பட்டது என் கண்களின் வழியே.
“அப்புறம் பானு! எப்படி இருக்க!” நாக்கலாக கேட்கிறேன் என்று அவன் என்னை பானு என்று அழைக்க, அவனின் வலியே தெரிந்தது எனக்கு.
“அவளுக்கு என்ன, அவ நல்லா இருக்க!, நீ மூடிக்கிட்டு, மொதல்ல இங்கிருந்து கிளம்பு!” நேத்ரா சூடாக கேட்க, அவள் கைபற்றி வேண்டாம் என்று நான் கண்களால் கெஞ்சிக் கொண்டிருக்கையில், கோபத்தில் எழுந்து அவன், வழியில் வந்து கொண்டிருந்த ஒருவன் இடித்து, "சாரி" கேட்டவனை, “fuck your, sorry “ என்று அடிக்க, அவனின் மூர்க்க தனத்தில் ஒரு நிமிடம் உறைந்துவிட்டேன். அந்த கைகலப்பில் அவன் அடிபட்டு மயங்கி சரிய,
"ஐய்யோ!!” என்ற என் அலறலில் அந்த பப்பே ஒரு நிமிடம் இயக்கத்தை நிறுத்தி என்னை வேடிக்கை பார்த்தது.
விழுந்து கிடந்தவனை வாரி எடுத்து என் மடியில் போட்டு, "பாப்பா!!பாப்பா!!" அழைக்க, மூர்ச்சை இல்லாமல் இருந்த அவனை கண்டதும் உயிரே போய்விட்டது எனக்கு. என்ன செய்வதுதென்று அறியாமல், அவன் கன்னத்தில் தட்டியாவாறு நான் இருக்க, சுதாகரித்து கொண்ட நேத்ரா, அவன் முகத்தில் தண்ணீர் தெளிக்க, சில நொடியில் அவன் விழித்ததும் தான் சென்ற உயிர் திரும்பி வந்தது எனக்கு. அவன் கன்னத்தை தடவிய படி நான் அழுதுகொண்டிருக்க எழுந்து அமர்ந்தவன், என்ன யோசித்தானவ காற்றை கிழித்துக் கொண்டு வெளியேறினான் அங்கிருந்து.
அவனை பின் தொடர்ந்து நான் செல்ல, என்னை பின் தொடர்ந்தனர் அனைவரும். பாரக்கிங் சென்றவன் தள்ளாடியா படியே பைக்கை எடுக்க, பதறிய நான், அதற்குள் காரை எடுத்துக்கொண்டு வந்த பிரதீப்பைப் பார்த்தேன். என் மனதை உணர்ந்து கொண்டவன், “வா, நான் டிராப் பண்ணுறேன்!” சொல்லி முடிக்க, அதற்குள் பைக்கோடு சேர்ந்தது கீழே விழுதான். பதறிய நான் அவனை நோக்கி ஓட, என் கைபிடித்து வேண்டாம் என்று தடுத்த
நேத்ரா,
“பிரதீப் பாத்துக்குவான்!!” வலுக்கட்டாயமாக என்னை காரின் பின் சீட்டில் தள்ளினாள்.
பைக்கை தூக்க முயன்றவன், முடியாமல் கீழே போட்டு, விரக்தியில் பைக்கின் கண்ணாடியை எட்டி உதைக்க, அது உடைந்து பறந்து சென்றது. மீண்டும் அழைத்தான் பிரதீப், கனுக்கொள்ளாமல் மீண்டும் பைக்கை எட்டி உதைத்தான். காரில் இருந்து இறங்கிய பிரதீப், அவனை பிடித்து இழுத்து, வலுக்கட்டாயமாக காருக்குள் தினித்தான். மணி காரில் எறியதும், பிரதீப் ஏறுவதற்கு முன் டிரைவர் சீட்டில் சென்று அமர்ந்தேன். பின்னாடி திரும்பி நேத்ரவை பார்க்க, என் என்ன ஓட்டம் புரிந்துகொண்டு இறங்கிக் கொண்டாள். டிராப் செய்துவிட்டு வருய்றேன் என்று இருவரிடமும் கண்களால் சொல்லிவிட்டு, காரை எடுக்க, கோபப்படுவான் என்ற என் எதிர்பார்ப்புக்கு மாறாக அமைதியாய் இருந்தான். காதலே கசிந்துருகி, காந்த பார்வையில் கட்டுண்டு, மோகத் தீ வளர்த்து, அதில் காதல் குளிர் காய்ந்த எங்கள் கார் பயணங்கள், ஏதோ போன ஜென்மத்து நினைவுகள் போல் தோன்ற, மூச்சு முட்டும் அடர்த்தியுடன் வேதனையை நிறைத்துக் கொண்டு பதினைந்து நிமிடம் கார் பயணம்.
அவன் வீட்டின் முன் நிற்க, இறங்கப் போனவனின் கையை தன்னிச்சையாக பிடித்தேன், நான் என் வாழ்க்கையில் செய்த பெரும் தவறு அது.
“சாரிடா" அவனின் துன்பங்களுக்கு எல்லாம் காரணம் நான் தான் என்ற குற்ற உணர்ச்சியில் மன்றாடிய என்னை, விரகத்தியாய் பார்த்து சிரித்தவன், வேறு எதுவும் பேசவில்லை.
அதற்கு மேலும் பொறுக்க மாட்டாமல் அழுதேன், அவனை அனைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றிய என்னை கட்டுப்படுத்திக் கொள்ள ஸ்டேயாரிங்கை இருக பற்றிக்கொண்டேன். “அவனை ஒரே ஒருமுறை அணைத்துக்கொள்!!” என்று பிதற்றிய மனதை கட்டுப்படுத்த முடியாமல், அவனை இழுத்து, அவன் தோளில் சாய்ந்து கொண்டு அழத்தொடங்கினேன். நான் செய்த இரண்டாவது மிகப் பெரிய தவறு அது. அதுவரை அமைதியாய் என் அழுகையை வேடிக்கை பார்த்தவன், அவனை கட்டிக் கொண்டு நான் அழ, அடுத்த நொடி என்னை இருக்கிக்கொண்டு அவனும் அழ ஆரம்பித்தான். எனக்கு நானே ஏற்படுத்திக் கொண்ட காயத்திற்கு ஆறுதல் தேடி அவன் தோளில் நான் தஞ்சமடைய, என்னால் ஏற்பட்ட காயத்திற்கு அவன் என்னிடமே தஞ்சம் புகுந்து ஆறுதல் தேடினான்.
அவன் என்னை அனைத்துக்கொண்டு அழ ஆரம்பித்ததுமே, நான் செய்து கொண்டிருக்கும் தவறை உணர்ந்தேன், அவனது அணைப்பில் இருந்து கொண்டே, அவனிடம் விலகுவது எப்படி என்பதை என் மூளை, என்னை கேட்காமலே யோசிக்க ஆரம்பித்திருந்தது. சுருசுருப்பாய் இயங்கிய மூளை கொடுத்த எண்ணம், என்னையே, ஒரு நிமிடம் திடுக்கிட வைத்தது. ஆனால் உண்மையான காரணத்தை சொல்வதை விடவும், அனைத்து பழியையும் நானே ஏற்றுக் கொண்டாலே ஒழிய, இவன் என்னை மறப்பது நாடவாத காரியம் என்று உனமையை உணர்ந்தேன். தெரிந்தே, என் மனதில் தோன்றிய விஷத்திற்கு ஒப்பான எண்ணத்தை, நானும் அருந்தி, அவனுக்கும் கொடுத்து, எங்கள் காதலை கொலை செய்ய முடிவு செய்தேன்.
“என்ன சொன்னாலும் செய்வியா?” இல்லாத திடத்தை எல்லாம் இழுத்துப் பிடித்து, அவன் கண்களப் பார்த்து கேட்க
“நான் வேணா செத்துறட்டுமா?” குழைந்தை என என்னிடம் குழைந்தவன் அழுதான்,
“அத விட மோசமான ஒண்ணு, எனக்காக செய்வியா?” சாகட்டுமா? என்று அவன் வாயால் கேட்டும், என் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும் உயிரை நிந்தித்து அழுதேன்.
“நீ என்ன சொன்னாலும் செய்யுறேன்!!, நீ என் கூட மட்டும் இரு!!” "இவன் என்னை காதலிக்க மாட்டானா?” என்று ஏங்கி நான் தவித்த தருணங்கள் எண்ண நினைவுக்கு வர
“எங்......!!" என்று பேச ஆரம்பித்து முடியாமல் போக, உடைந்து அழுதேன்.
“என்ன மறந்துரு!! நான் உனக்கு சரியானவ இல்ல!!” நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உடைந்து அழ ஆரம்பித்தான். என்னை இழுத்து அனைத்து
“சாரி பாப்பா!! நான் பண்ணுணது எல்லாம் தப்புதான்!! ஏதோ கோவத்துல பண்ணிட்டேன்!! இனி நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்!! பிளீஸ்!! இந்த மாதிரி எல்லாம் பேசாதே!!” அழுகையின் ஏக்கங்களுக்கு இடையில், என்னிடம் அவன் கெஞ்ச, அவனை அணைத்தபடியே இந்த உயிர் இந்த நொடியே என்னை விட்டு நீங்காதா என்ற ஏக்கத்தில் நானும் அழுதேன். பின் என் எண்ணத்தின் முட்டாள்தனத்தை உணர்ந்தது, அவனை விலக்கி
“என்ன சொன்னாலும் செய்வியா?” கெஞ்சினேன், அழுதுவடியும் கண்களில் பெரும் பயம் அப்பியிருக்க முடியாதென்று அவன் தலையாட்ட
"ஐ ஹாட் அன் அப்பைர்!!!, வித் சம் ஒன்!!” முகத்தை மூடிக்கொண்டு, எங்கே நான் சொன்னதை நம்பிவிடுவானோ என்று ஏதோ ஒரு ஓரத்தில், என் உள்ளம் பதறி துடிக்க, அப்படி நினைக்க மாட்டான் என்று தெரிந்தும் அழுதேன்.
“பிளீஸ் மது!! நீ என்ன சொன்னாலும் செய்றேன்!! நான் பண்ணதெல்லாம் தப்புதான்!!” அவன் நம்பவில்லை என்பதை உணர்ந்ததும், கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன்.
“sorry!! I slept with someone!!” வேறு வழியே இல்லை என்பதை உணர்ந்து, அழுகையுடன் நான் கூற, அவன் கண்களில் வழிந்த கண்ணீர் சட்டென்று நின்றது, அவன் முகம் நான் இதுவரை பார்த்திராத ஒன்றாய் மாறியது. எதுவும் சொல்லாமல் சிலையாய் அவன் காரில் இருந்து இறங்கி வீட்டை நோக்கி நடக்க, மரணத்தின் இழப்பை முதல் முறையாக உணர்ந்தேன் நான். ஆனால் அது என்னுடைய மரணமா? அவனுடைய மரணமா? அல்லது எங்களது காதலின் மரணமா? என்பது தெரியவில்லை.
********************
குழப்பமான மனதிற்கு ஆறுதலாக இருக்கும் என்று கோயம்புத்தூர் சென்ற நான், தாங்க முடியாத துயரத்துடன் அடுத்த நாளே டெல்லி திரும்பினேன். செய்முறை வகுப்பிற்கு செல்ல மனமில்லாமல், தனியாக வகுப்பில் அமர்ந்திருந்தேன். எண்ணமெல்லாம் அவன் கண்களே நிறைத்து இருக்க, அதில் நான் கண்ட பயம், என்னை மிச்சமில்லாமல் தின்று செறித்துக் கொண்டிருந்தது. உயிர் போகப் போகிறது என்று தெரிந்த ஒரு ஒருவன், உயிர் வாழவேண்டும் என்று பேராசையோடு, எப்படியாவது என்னைக் காப்பாற்றி விடு என்று கடவுளையோ, கடவுள் நம்பிக்கை இல்லாதவன் மருத்துவரையோ, பார்த்து கெஞ்சும் உயிர் வலியின், பயம் அது.
கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை, அப்படி ஒரு பயத்தை நான் அவனுக்கு கொடுப்பேன் என்று. அப்படி ஒரு பயத்தை அவன் கண்களில் கண்ட பின்பும், எப்படி என் உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று நினைக்க, உடலோடு சேர்ந்து உயிரும் கூசியது எனக்கு. குதூகலமே வடிவாய், உற்சாகம் உருவம் கொண்டது போல், மாயக் குழந்தையென, எங்கள் அகாடமியில் துள்ளித்திரிந்தவனை, காதல் என்னும் என் சுயநலத்தால், வேறு வாய்ப்புகளை வழங்காது, காதலிக்க வைத்தது தவறு என்று முதல் முறையாக எண்ணினேன். பாசத்துக்கு ஏங்கி தவித்த அவனுக்கு எல்லாமாய் இருக்கிறேன் என்று நம்பிக்கையூட்டி, எதுவுமே இல்லாமல் நிற்கதியாய் அவனை நிற்கவிட்டு பிரிந்ததை நினைக்க நினைக்க, என் வேதனை மொத்தமும் என் அம்மாவின் மீது ஆத்திரமாய் மாறியது. சுய கழிவிரக்கத்தை போல ஒரு மனிதனுக்கு வேறு எதிரி எதுவும் இல்லை, அடுத்தவர்களால் தனக்கு ஏற்படும் துன்பத்திற்கும், தன்னை குற்றம் சாட்டும் கொடூர அரக்கன் அது.
"இங்கதான் இருக்கியா?" வேதனையின் பிடியில் இருந்த என்னை உலுக்கியது ரஞ்சித்தின் குரல். குரல் வந்த திசையை நோக்கி நிமிர்ந்து பார்க்க
"எப்படி போச்சு கிராஜுவேஷன்?" சிரித்தவாறு கேட்டுக்கொண்டு வந்தவனின் முகம் சட்டென சீரியசான அரிதாரம் பூசிக் கொண்டது. என் முகத்தில் தெரிந்த வேதனையை கவனித்திருப்பான் போலும்.
நான் இருந்த வேதனையில், ஒரு வாரத்திற்கு முன் எனக்கு ப்ரொபோஸ் செய்தவன், எதுவுமே நடக்காதது போல இயல்பாக பேசுபவனை, எரிச்சலுடன் பார்க்க, எதுவும் சொல்லாமல் எனக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமைதியாக அமர்ந்து கொண்டான். அவனது ஊடுருவும் பார்வை என்னை துளைப்பது போல் இருக்க, அதற்கு மேலும் அடக்க மாட்டாமல், முன்னால் இருந்த டேபிளில் அடுத்து உடைந்து அழ ஆரம்பித்தேன்.
******************
அரை மணி நேரம் கழித்து
"இத குடி, யூ வில் பில் பெட்டர்!!" என்னை நோக்கி ஒரு காபி குவளையை நீட்டினாள் ரஞ்சித். நான் உடைந்து அழ ஆரம்பித்து, பின் அந்த அழுகை விசும்பலாய் மாரி, அதுவும் ஓயும் வரை, ஆறுதல் கூட சொல்லாமல் அமைதியாக இருந்தவன், எங்கே சென்று விட்டானோ? என்று நான் நிமிர்ந்து பார்க்க, போகலாம் என்று கண்ணை காட்டினான். ஏனோ அவனது அழைப்பிற்கு கட்டுண்டது போல, அவனைப் பின் தொடர, கல்லூரியின் கேன்டீனுக்கு அழைத்து வந்தவன்தான், இப்பொழுது காபி கப்பை என்னை நோக்கி நீட்டிக் கொண்டிருக்கிறான். அமைதியாக அவன் நீட்டிய கப்பை வாங்கி பருகினேன், அவன் சொன்னது போலவே, உள்ளே சென்ற காபியின் வெப்பம், என் உள்ள வெப்பத்தை கொஞ்சம் தனித்து ஆறுதல் படுத்தியது என்று சொல்ல வேண்டும்.
"போய் ரெஸ்ட் எடு!! நாளைக்கு பேசலாம்!!" ஏன் அழுதேன் என்று காரணம் கூட கேட்காமல், என்னை விடுதிக்கு போகச் சொல்ல, ஏனோ மறுப்பு எதுவும் சொல்லாமல், அவன் சொன்னதை செய்தேன்.
***************
மூன்று நாள் கழித்து,
"This is complete stupidity!! absurdity!!" நான் சொன்னதை நம்ப முடியாமல், இடதும் வலதுமாக தலையை ஆட்டிய ரஞ்சித், ஓரிடத்தில் நிற்க முடியாமல், அங்கும் இங்கும் நடந்தவன்
"நீ பண்றது முட்டாள்தனம், டோன்ட் பி சில்லி!!" மீண்டும் நான் சொன்னதை ஜீரணிக்க முடியாமல் புலம்பினான்.
"நான் உன்கிட்ட அறிவுரை கேட்கல, உதவி தான் கேட்டேன், பண்ண முடியுமா? முடியாதா?" அவனின் வார்த்தைகளை கொஞ்சும் மதிக்காமல், நான் பிடித்த பிடியாய் இருக்க, தன் கழுத்தை முடிந்த மட்டிலும் பின்னால் வளைத்து வானம் பார்த்தவன், "ஊ"
சத்தமிட்டு வாயினால் காற்றை ஊதி தள்ளிவன்
"பாவம் யா, அந்தப் பையன்!!" மணியின் மீது அவன் இறக்கப்பட, என் கண்களில் அரும்பிய கண்ணீரை, வலதுபுறம் திரும்பி துடைத்துக் கொண்டேன்.
"தேங்க்ஸ்!!" அவன் முகம் பாராமல் சொல்லிவிட்டு, விடுதியை நோக்கி நடந்தேன்.
******************
இன்று காலையில் எழுந்ததுமே, எனக்கு மணியின் அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அவன் பித்துப் பிடித்ததுபோல் இருப்பதாக சும்மா ஆன்ட்டி சொல்ல துடித்துப்போனேன். மனதை கட்டுப்படுத்தியவாறு அவர்களிடம் பேச, அவனுக்கு என்ன பிரச்சனை என்று எனக்கு ஏதாவது தெரியுமா? என்று கேட்டவர்களிடம், எதுவும் தெரியாது என்று பொய் சொன்னேன். எதுவும் பேசாமல் எப்பொழுதும் அவன் அமைதியாகவே இருப்பதாகவும், நான் வந்து பேச முடியுமா? இன்று அவர்கள் கேட்க, மறுக்க முடியாமல் வருகிறேன் என்றேன். அவனை எங்காவது வெளியில் அழைத்து வர முடியுமா? அவர்கள் வீட்டிற்கு செல்ல மனமில்லாமல் விண்ணப்பம் வைக்க, நாளை மறுநாள் லீமெரிடியன் அழைத்து வருவதாக சொன்னார்கள். அவர்கள் அழைப்பை தூண்டித்த அடுத்த நொடி, அடைக்கி வைத்த கண்ணீர் அருவியென கொட்ட, கடைசியா அவனைப் பார்த்த நொடி என் நினைவை நிரப்பிக்கொண்டது.
சிறு குழந்தையென துள்ளித்திரிந்தவனை, என் உடலின், உயிரின், நீட்சியாக என்னை ஒட்டிக்கொண்டு திரிந்தவனின், உயிரை மொத்தமாக உருவி எடுத்து, வெறும் ரத்தமும், சதையுமாய், உணர்வுகளற்ற மனித கூடாய், நடந்து சென்றவனை பார்த்த நானும், ஒரு பிணம் அங்கிருந்து கிளம்பியது நினைவில் வர, அவன் இன்னும் அப்படியேதான் இருக்கிறான் என்று அறிந்ததும், தீயில் இட்ட புழுவாய் துடித்துப் போனேன். கொடிய விஷத்துடன் கொத்திய பாம்பிடமே, விஷத்தை எடுக்கச்சொல்லி மன்றாடும் சுமா ஆண்ட்டியை நினைத்து அழுவதா, இல்லை இறக்கமே இல்லாமல் என்னை இப்படி செயல்பட வைக்கும் என் விதியை நினைத்து அழுவதா என்று தெரியாமல் அழுது தீர்த்தேன். பின் புலிவால் பிடித்த கதையாக, எதைச் சொல்லி அவனிடம், உயிர் பயத்தை பார்த்தேனோ, அதையே பிடித்துக் கொண்டு, அதை உண்மை என அவனை நம்ப வைக்க, என் மனதில் ஒரு திட்டத்தை தீட்டி, செயல்படுத்தவே ரஞ்சித்திடம் உதவி கேட்டேன்.