19-03-2019, 05:57 PM
மீண்டும் மாடிப்படியேறி தங்கள் அறைக்கு வந்தாள்.. வந்ததுமே தனது செல்ஃபோனை கையில் எடுத்தாள்.. சிபியின் நம்பருக்கு கால் செய்தாள்..!! அடுத்த முனையில் ரிங் சென்றது.. அதே நேரம்..
"க்க்க்க்ர்ர்ர்ர்ர்.. க்க்க்க்ர்ர்ர்ர்ர்..!!"
என்று அறைக்குள் ஒரு சப்தம்.. தலையணைக்கு அருகில் கிடந்து துடித்துக் கொண்டிருந்தது சிபியின் செல்ஃபோன்..!!
'ப்ச்.. ஃபோனைக்கூட இங்கய போட்டுட்டு எங்க போனாரு..??' ஆதிரா மனதுக்குள்ளேயே அவ்வாறு சலித்துக்கொண்டபோதுதான்..
"டப்.. டப்டப்.. டப்.. டப்டப்..!!!" அவளுக்கு மிக நெருக்கமாக அந்த சப்தம் கேட்டது.
அது என்ன சப்தம் என்று ஆதிராவுக்கு புரியவில்லை..!! முகத்தில் ஒருவித குழப்பரேகைகள் பரவ.. எங்கிருந்து அந்த சப்தம் வருகிறதென்று அந்த அறையை சுற்றி சுற்றி பார்த்தாள்..!! ஒரு சிலவினாடிகள்.. ஆதிராவால் அறைக்குள் எந்த வித்தியாசத்தையும் உணரமுடியவில்லை..!!
"டப்.. டப்டப்.. டப்.. டப்டப்..!!!"
எதுவும் புரியாமல் அப்படியும் இப்படியுமாய் தலையை அசைத்துக்கொண்டிருந்தவளின் கவனத்தை.. எதேச்சையாகத்தான் அந்தப்பொருள் கவர்ந்தது..!! நேற்றிரவு சிபி மூடிப்படுத்த போர்வை இப்போது நீள்வாக்கில் சுருண்டிருக்க.. அதற்குள்ளிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருந்தது அந்தப்புத்தக்கம்..!! புத்தகத்தின் அட்டையில் அதன் தலைப்பு பளிச்சென்று மின்னியது..!!
"கண்ணாமூச்சி ரே ரே..!!"
'இதை அலமாரிலதான வச்சேன்.. இங்க எப்படி வந்துச்சு..??' - குழப்பமாக நெற்றியை பிசைந்தாள் ஆதிரா.
"டப்.. டப்டப்.. டப்.. டப்டப்..!!!"
அந்த சப்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க.. அப்படியும் இப்படியுமாய் திரும்பிய ஆதிராவின் பார்வை, இப்போது சட்டென ஓரிடத்தில் நிலைத்தது.. அப்படியே கவனத்தை குவித்து அந்தஇடத்தை உற்றுப் பார்த்தாள்..!! சுருண்டிருந்த சிபியின் போர்வைக்குள் ஒரு சிறியஅசைவு தெரிந்தது.. உள்ளிருந்து ஏதோ ஒன்று துடிப்பது போல..!! அதனுள் இருந்துதான் சப்தம் வருகிறதென்று தெளிவாக புரிந்தது..!!
"டப்.. டப்டப்.. டப்.. டப்டப்..!!!"
உடலுக்குள் ஏதோ ஒருவித சிலிர்ப்பு பரவ ஆரம்பிக்க.. ஆதிரா தனது கையை மெதுவாக நீட்டினாள்.. அந்தப் போர்வையை மெல்ல நெகிழ்த்தினாள்..!! உள்ளிருந்து படக்கென வெளிப்பட்டது அந்த பட்டாம்பூச்சி.. அழகான தனது சிவப்பு சிறகுகளை பட்பட்டென அசைத்து, அந்த அறைக்குள்ளேயே சுற்றிச்சுற்றி பறக்க ஆரம்பித்தது..!! பறக்கிற அந்த பட்டாம்பூச்சியை பார்க்க பார்க்க.. ஆதிராவின் மனதுக்குள் ஒரு இனம்புரியாத பதற்றம் கிளம்பியது..!!
"அப்படியே அந்த பட்டாம்பூச்சியாவே நானும் மாறிடலாம் போல இருக்கு..!!"
முன்பொருமுறை கன்னத்தில் குழிவிழ கணவன் சொன்னது இப்போது நினைவுக்கு வரவும்.. கண்களில் திகில் கொப்பளிக்க அந்த பட்டாம்பூச்சியையே வெறித்துப் பார்த்தாள் ஆதிரா..!!